செங்கோல் எரிந்த கதை
ஈக்குவடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்லவிசென்சியோ பிரச்சாரத்தின் போது சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து ராகுல் காந்தியின் சில பேச்சு நீக்கப்பட்டுள்ளது. நரேந்திரமோடி குறித்து ராகுல் காந்தி பேசிய அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தியின் பேச்சில் 23 பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. நீரின்றி குறுவை சாகுபடி பயிர்கள் வாடியிருந்த நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகாலை கனமழை பெய்து வருகிறது.
மணிப்பூர் விவகாரத்தில் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று மோடி பேசுகிறார்.
செங்கோல் எரிந்த கதை தெரியுமா?
“எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும்”
மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி,
"இந்த சுதந்திரம் நம் மீது பெரும் பொறுப்புகளை எறிந்துவிட்டு சென்றுள்ளது. ஏதேனும் தவறு நேர்ந்தால் இதற்கு பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் காரணமாகமாட்டார்கள் என்ற டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் கருத்துடன் இந்த பேச்சை தொடங்குகிறேன்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இந்திய கூட்டணி சார்பிலும் நான் சார்ந்துள்ள திமுக சார்பிலும் ஆதரிக்கிறேன். இந்த அரசு மணிப்பூரில் இரட்டை இஞ்சின் ஆட்சி நடந்து வருவதாக பெருமையுடன் கூறுகிறது. ஆனால் இந்த இரட்டை இஞ்சின் அரசு அம்மாநில மக்களுக்கு எதிரான இரட்டை ஆயுதமாக மாறி உள்ளது. இரட்டை பேரழிவாகவும் இரட்டை பிளவாகவும் மணிப்பூர் மாறி உள்ளது.
தனது வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் மிகவும் அரிதாக பிரதமர் மோடி ஊடகங்களை சந்தித்தார். ஆனால் நாடாளுமன்றத்திற்குள் வந்து சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச மறந்துவிட்டார்.
“ஜனநாயகம் என்பது நாடாளுமன்ற கட்டத்தின் அழகால் வரையறுக்கவில்லை. விவாதங்களின் தரத்தாலும் தேசிய பிரச்னைகளில் ஒருமித்த குரலில் பேசும் குரலாலும்தான் சிறப்பு அடைகிறது” என மூத்த அரசியல் தலைவர் ஜஸ்வந்த் சின்ஹா நேற்று முன் தினம் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில் கூறி உள்ளார்.
மணிப்பூரில் 170 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கோனோர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் நடக்கும் வன்முறையை இந்த இரட்டை இஞ்சின் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சோழர் மரபு என்று சொல்லி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பெரும் ஆடம்பரத்துடன் செங்கோல் வைத்தீர்கள். உங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாக தெரியாது. பாண்டியன் செங்கோலை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? சாமானியர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதால் பாண்டியனின் செங்கோல் எரிந்த கண்ணகி குறித்த கதை உங்களுக்கு தெரியுமா?
எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும்" என கனிமொழி பேசினார்.