கேவலமான கொள்(ளை) கை

 ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கிலிருந்து எஸ்.பி.ஐ வங்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஐ.ஐ.டி மும்பை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 


-----------------------++-----------------------

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகில் உள்ள ஞான்வாபி மசூதி நிலப் பிரச்னை வழக்கில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த கீழமை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 
முகலாய மன்னா் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதா் கோயிலின் பகுதியை அகற்றி விட்டே மசூதியைக் கட்டினார். அதனால் தற்போது  ஞான்வாபி மசூதி இருக்கும் நிலம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமானது என வழக்குரைஞா் விஜய் சங்கா் ரஸ்தோகி வழக்கு தொடர்ந்திருந்தார். 

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 'வேறு ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டு ஞான்வாபி மசூதி கட்டுப்பட்டுள்ளதா என்பது குறித்து உத்தர பிரதேச அரசு  இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் ஐந்து போ் கொண்ட நிபுணா் குழுவை நியமித்து ஆய்வு நடத்த வேண்டும். இந்த  குழுவில் குறைந்தது இரண்டு நபா்களாவது சிறுபான்மையினராக இருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என உத்தர பிரதேச சன்னி மத்திய வஃக்பு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.------------------------------+-------------------------------

சரமாரி, பொய்மாரி...மேற்குவங்க மாநிலத்தில் நான்கு கட்டத் தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் நான்கு கட்டத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் படுதீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆளும் மாநிலத்தைஆளத் துடிக்கும் பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்.ஆயினும் பொய்யான தகவல்களையும் வாக்குறுதிகளையும் சரமாரி பொழிகின்றனர் பாஜகவினர். இதில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்களத்தில் உள்ளனர்; கொரோனா விதிமுறைகள் பற்றி கவலைப்படுவதில்லை.அதை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்வதில்லை.

மக்களைப் பிளவுபடுத்துவதாக மம்தாபானர்ஜி மீது மோடியும் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது என்று மம்தாவும்மாறிமாறி குறை கூறுகின்றனர். 

ஜெய் ஸ்ரீராம் என்று பாஜகவினரும் ஜெய் காளி என்று திரிணாமுல்காரர்களும் கூவிக் கொண்டே ஒருவரை ஒருவர்குற்றம் சாட்டுவது நகைப்புக்குரியதாகவே உள்ளது.பாஜவினர் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாகக்கொண்டு வருவோம் என்பதுதான் தேர்தல் பிரச்சாரமாக அண்மையில் தேர்தல் நடந்த மாநிலங்களில் பாஜகவால் நடத்தப்பட்டது. மேற்குவங்கத்திலும் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படி தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்தப்பட்டாலும் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அமித்ஷா தலையில்அ அடித்துச் சத்தியம்செய்யாத குறையாகக் கூறுகிறார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?