இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 7 அக்டோபர், 2015

தலைவலிக்கான 10 காரணிகள்


இப்போ பெண்கள் சரி ஆண்கள் சரி அடிக்கடி துன்பப்படும் ஒரு விடயம் தலைவலி தான். பெரிய பெரிய வருத்தங்களை கூடதாங்கலாம் ஆனால் நாளுக்கு நாள் வருகின்ற இந்த தலைவலியை தாங்க முடியவில்லை என்று புலம்பியவாறே தயிலத்தினையோ பரிசிற்றமோலினையோ போட்டு உடனடி நிவாரனத்தை பெற்றுக் கொள்கின்றோம். ஆனால் எந்த ஒரு விடயமும் எதனால் ஏற்ப்படுகின்றது என்று நிதானமாக யோசித்து அந்த ஆபத்தில் இருந்து எம்மை பாதுகாக்கும் பொழுது தான் சீரான நிவாரணம் கிடைக்கப் பெறும்.

அந்த வகையில் எமக்கெல்லாம் ஏன் அடிக்கடி தலை வலிக்கிறது என்றால். பொதுவாக 10 காரணங்கள் உள்ளது.

1- அதிக வேலைப் பளு :- காலையில் எழுந்தது தொடக்கம் நித்திரைக்கு போகும் வரைக்கும் உங்களுக்கு மாறி மாறி வேலைகள் உள்ளதா? நிச்சயம் தலை வலி ஏற்படத் தான் செய்யும். சற்று ஓய்வு கொடுத்து பாருங்கள் தலை வலி குறைந்து விடும்.

2-சரியான தூக்கமின்மை:- நீங்கள் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு சரியாக தூங்காமல் விடலாம். ஆனால் மறு நாள் உங்களை எந்த வேலையும் செய்ய விடாமல் தலை வலி குடி கொண்டு விடும்.

3- அதிகம் கோபம் கொண்டால்:- நீங்கள் மற்றவர்கள் மீது உள்ள கோபங்களை அடக்கி வைத்து கொண்டு மனதுக்குள் கொந்தளித்து கொள்பவரா? நிச்சயம் உங்களுக்கு அன்று முழுதும் தலையிடி தான்.

4- பொய் சொன்னால்:- இது அனுபவித்தால் புரியும். ஏதோ ஒரு காரணத்திற்காக தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் நீங்கள் சொன்னது பொய் அது தவறு என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு தலையிடி தான்.

5- காலநிலை மாற்றம்:- இயற்கையாக எமது கால நிலை வெய்யிலில் இருந்நு பனிக்கோ பனியில் இருந்து மழைக்கோ மாறும் பொழுது தலைவலி சிலருக்கு ஏற்படலாம்.

6- சீரான உணவுப்பழக்கமின்மை:- நீங்கள் சத்தான உணவுகளையும் அந்த அந்த நேரத்துக்கு உணவுப்பழக்கத்தையும் கடைப்பிடிக்காமல் விட்டால் நிச்சயம் தலையிடி இருக்கும்.

7- பதற்றத்தின் பொழுது:- ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு விடயத்திற்காக பதற்றப்படும் பொழுது நிச்சயம் ஏற்படும்.

8- அதி உச்ச சந்தோசம் :- சிலருக்கு அதிகமாக சிரித்தாலோ இல்லை அதிகமாக ஆனந்தக் கண்ணீர் விட்டாலோ கூட தலைவலி ஓடி வந்து விடும்.

9- அதிக சிந்தனை:- எந்த நேரமும் ஏதாவது ஒன்றை பற்றி யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுதும் தலைவலி வரக் கூடும். பெண்களுக்கு இதனால் தான் அதிகம் தலையிடி ஏற்படுகின்றது.10- கவலை:- நீங்கள் உங்களுக்கு ஏற்ப்படும் துன்பங்களை நினைத்து எப்பொழுதும் பீல் பண்ணிற்று இருந்தால் கூட தலையவலி வரக்கூடும்.=====================================================================================
இன்று,
அக்டோபர்-08.
  • இந்திய விமானப் படை தினம்
  • பெரு கடற்படை தினம்
  • கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)
  • இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)
  • ஜெர்மனி, மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது(1939)

:திரை இசையில், அழகு தமிழ் கொஞ்சி விளையாடிய காலத்தில், அதில், மக்கள் தமிழைப் புகுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!கடந்த, 1930ல், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, செங்கப்படுத்தான்காடு கிராமத்தில், அருணாச்சலம் -- விசாலாட்சி தம்பதிக்கு இளைய மகனாக பிறந்தவர் கல்யாணசுந்தரம்.உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில், இரண்டாம் வகுப்பு வரை படித்தார். விவசாயி, மாட்டு வியாபாரி, இட்லி வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, நடிகர் என, பல தொழில் புரிந்தவர், இறுதியில் கவிஞர் கல்யாணசுந்தரமானார்!புதுச்சேரி சென்று, பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். இவர், 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார்; அவை அனைத்துமே, காலத்தின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டவை!மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், 1959ல், இதே நாளில் இறந்தார்!

=====================================================================================

பொலிவான முக அழகு வேண்டுமா?
சில பேஸ்பேக்

பெண்களைமட்டுமல்ல ஆண்களையும்  அழகாக காட்டுவது முகம்தான்.

முகம் அழகாக இருந்தாலே, உடம்பையும் அழகாக காட்டும்.

இதோ முகத்திற்கான சில பேஸ்பேக்

1. முக அலங்காரம்

ஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய ஓட்ஸ் பௌடர் ஆகிய மூன்றையும் குழைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து, இந்த கலவை முகத்தில் படிந்து ஒரு இறுக்கத்தைக் கொடுக்கும் அதன் பின்னால், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பின்னர், ஒரு தேக்கரண்டி தயிருடன் அரை தேகக்ரண்டி எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் பூசி அது காய்ந்ததும் கழுவிவிடலாம்.

மேலும், கடலை மாவில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரும் ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவிய பின்பு 20 நிமிடங்கள் கழித்து அதைக் கழுவிவிடலாம்.

உளுந்தை நன்றாக அரைத்து அத்துடன் சம அளவு பால் மற்றும் தேன் கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவுவதும், சிறந்த பேஸ்பேக் முறை ஆகும்

2. கால், பாதங்களுக்கு மென்மையும் பொலிவும் ஏற்பட:

ஐந்து மேஜைக்கரண்டி ரவையை நீரில் குழைத்து கால் மற்றும் பாதங்களில் தடவியபின், 30 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.

ஆறு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் இரண்டு ஸ்பூன் கிளிஸரின், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து இரு வாரங்களுக்கு ஒருமுறை கால்களில் தடவி அரை மணி நேரம் சென்றதும் கழுவி விடலாம்.

3. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க:

குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்ணிமைக்கு மேலாக வைத்து அரை மணி நேரம் ஓய்வெடுக்கவும். பின்பு தேங்காய்ப் பாலினைத் தொட்டு உங்கள் மோதிர விரலால், கண்ணைச் சுற்றி மஸாஜ் செய்யவும்.

4. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க:

எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில், இரவு ஊற வைத்து, மறுநாள் காலை அதை அரைத்து, ஒரு தேக்கரண்டி பாலுடன் கலந்து முகத்தில் பூசினால், கரும்புள்ளிகள் மறையும். மிகவும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு பாதாம் மாஸ்க் நல்லது.
                                                        பயங்கரமான அழகு 

                                         அன்பு மணி மீது சிபிஐ வழக்கு பதிய அனுமதி.

எவ்வளவு பெரிய மோசடி? ஒரு அரசாங்கமே இப்படிப்பட்ட மோசடியைச் செய்யலாமா?
அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா சிறுதாவூரில் ஓய்வெடுப்ப தாகச் செய்தி வந்துள்ளது. ஆனால் 3ஆம் தேதியன்று சிங்காரவேலர் - ஜீவரத்தினம் மணி மண்டபங்களையும், வேறு சில கட்டிடங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா; அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்ததாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தின் சார்பில் 3ஆம் தேதி தரப்பட்ட செய்திக் குறிப்பு. ஆளுங்கட்சி நாளேட்டிலேயே 4ஆம் தேதி காலையில் தான் வந்துள்ளது. அந்த ஏட்டில் "முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 29-9-2015 அன்று தலைமைச் செயலகத்தில்" இந்தக் கட்டிடங்களை யெல்லாம் திறந்து வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் அந்தச் செய்தி 30ஆம் தேதி ஏடுகளிலே வெளிவரவே இல்லை. செய்தித் துறை சார்பில் செய்திக் குறிப்பும் தரப்படவில்லை. ஆனால் 3ஆம் தேதி தான், அதாவது முதல் அமைச்சர் தலைமைச் செயலகத்திற்கே வராத நாளில், அவர் ஏதோ வந்ததைப் போலவும், இந்த மணி மண்டபங்களைத் திறந்து வைத்ததைப் போலவும் மக்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக, தமிழக அரசின் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய மோசடி?
ஒரு அரசாங்கமே இப்படிப்பட்ட மோசடியைச் செய்யலாமா? தனிப்பட்ட நபர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் தவறு செய்வதே கூடாது எனும்போது, அரசின் பெயரிலேயே இப்படிப்பட்ட தவறுகள் - பொதுமக்களைத் திசை திருப்பித் தவறாக வழி நடத்தும் நிகழ்வுகள் நடக்கலாமா? 4ஆம் தேதியன்று காலையில் வெளிவந்த அனைத்து நாளேடுகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது. இந்த மோசடிக்கு மூலக் காரணம் யார்? உண்மையில் முதல் அமைச்சர் அந்தக் கட்டிடங்களைத் திறந்து வைத்தது எப்போது? எந்த நாளில்? முதலமைச்சர் திறந்து வைத்த நாளிலேயே அந்தச் செய்தியை வெளியிடாமல் இருந்தது ஏன்? அதற்காகத்தான் முதலமைச்சரின் காணொலிக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு அரசின் புகைப்படக்காரரைத் தவிர மற்ற ஊடகங்களை அனுமதிப்பதில்லையா? அதுபற்றி எந்த ஊடகங் களும் தங்களை அனுமதிக்காதது பற்றி கேள்வி எழுப் பாதது ஏன்? செய்தித் துறையின் செயலாளரும், இயக்குனரும்தான் இதற்குக் காரணமா? இதற்கு அரசின் நேரடியான பதில் என்ன?
                                                                                                                                      -- கலைஞர் 
=========================================================================================