ஆண்டராய்ட் போன்:சில ஆபத்துகள்.
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது போலவே அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகமாகவே இருக்கின்றன.
ஒரு பொருளின் உபயோகம் அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும். ஆண்ட்ராய்டின் அடுத்தடுத்த பதிப்புகளில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பல வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதில் முக்கியமான சில பாதுகாப்பு வசதிகளைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.ஆப்ஸ் அப்டேட்போனில் உள்ள ஆப்ஸ்களில் லான்சர், பிரௌசர், மெசன்ஜர் போன்ற அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
இண்டெர்நெட் டேட்டா அதிகமாக செலவாகிறது என்பவர்கள் மாதம் ஒருமுறையாவது அப்டேட் செய்து கொள்ளவேண்டும்.
புதிது புதிதாக வெளிவரும் எண் ணற்ற ஆப்ஸ்களை எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இன்ஸ்டால் செய்வது நல்லதல்ல.
எந்த ஒரு ஆப்ஸையும் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகபெறுவதே சிறந்தது.
பிறருடைய போன் மூலமாகவோ, கணினியிலிருந்தோ பதிவிறக்கம் செய்வது பல நேரங்களில் தொல்லையாக முடியலாம்.
வேறு மொபைல்களிலிருந்தோ கணினி மற்றும் இணையதளங்களிலிருந்து பகிரப்படும் ஆப்ஸ்களில் போலிகளோ அல்லது நம் தகவல்களைத் திருடும் வைரஸ் இணைக்கப்பட்ட ஆப்ஸாகவோ இருக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.
அதேபோல வங்கி மற்றும் இதர பணப் பரிவர்த்தனை சேவைகளுக்கான ஆப்ஸ் பயன்படுத்துபவர்கள் இத்தகைய ஆப்ஸ்களை வேறு இணைய தளங்களிலிருந்து பதிவிறக்காதீர்.
அங்கீகரிக்கப்பட்ட வங்கி இணையதளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்குவதே சிறந்தது. அத்துடன் இந்த ஆப்களைத் தவிர்த்து பிரௌசர்கள் மூலமாக கணக்கு விபரங்களை அளிப்பவர்கள் வேலை முடிந்ததும் பிரௌசரின் ஹிஸ்டரியை அளித்துவிடவும். அத்துடன் போனில் உள்ள கிளீனரைப் பயன்படுத்தி குக்கீ, டெம்ப் டேட்டாக்களை அளித்துவிடுவதும் நல்லது.
உங்கள் போனை எங்கேனும் தொலைத்துவிட்டால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களது ஜிமெயில், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிடுங்கள்.போன் தொலைந்துபோனாலோ அல்லது ஏதேனும் பிரச்சனை காரணமாக சர்வீஸ் சென்டரில் கொடுக்க வேண்டியிருந்தாலோ அதிலுள்ள தகவல்களை அழித்துவிட்டுக் கொடுக்கவும்.
அழிக்க முடியாத பட்சத்தில் கீழ்காணும் ஒரு சில வழிமுறைகளை பயன்பாட்டில் வைத்திருங்கள்.
போன் காணாமல் போனாலோ அல்லது மறந்து வேறு இடங்களில் வைத்துவிட்டு வந்துவிட்டாலோ போனை மற்றவர் உபயோகிப்பதை தடை செய்ய இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வசதி அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் பேட்டர்ன், பின், பாஸ்வேர்டு என மூன்று வகையாக லாக் செய்யும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் ஏதேனும் ஒன்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்தவும்.
போனின் லாக் நீக்கப்பட்டாலும் அதனுள்ளிருக்கும் முக்கியமான தகவல்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்க என்கிரிப்ட் செய்யும்படியான ஒரு வசதி உள்ளது. இதுவும் செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்கள் அனைத்தையும் என்கிரிப்ட் செய்துவிடலாம். போனை ஆன் செய்யும்போது டிகிரிப்ட் செய்து திறந்தால் மட்டுமே பார்க்க முடியும்.
மேற்கண்ட இரண்டு வசதிகளுடன் கூடுதலாக இருக்கும் வசதி டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் வசதியாகும். போனைப் பாதுகாக்க இதிலும் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
செக்யூரிட்டி பகுதியில் இருக்கும் இவ்வசதியை செயல்படுத்துவதன் மூலம் போன் காணாமல் போனால் இணைய முகவரிக்குச் சென்று, போனில் நீங்கள் பதிந்துள்ள ஜிமெயில் முகவரி பாஸ்வேர்டை கொடுத்தால் உங்கள் போன் கடைசியாக எந்த இடத்தில் இருந்தது என்பதையும், சில நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்யவோ அல்லது போன் லாக் ஆகும்படியோ அல்லது போனில் உள்ள தகவல்களை அழித்துவிடவோ செய்ய முடியும்.
மேற்கூறிய செயல்பாடுகளை மேற்கொள்ள உங்கள் போன் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும் அத்துடன் இணைய இணைப்பு செயல்பாட்டில் இருக்கவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பல பொது இடங்களில் வை-ஃபை சிக்னல்கள் இலவசமாகக் கிடைப்பதால் பலரும் பயன்படுத்துகின்ற னர்.
இத்தகைய பொதுப் பயன்பாட்டில் பல் வேறு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய வசதிகளைப் பயன்படுத்தும் போன் மட்டுமல்லாது லேப்டாப் கணினிகளிலும் தகவல் திருடுவது எளிதாக இருப்பதாக இந் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொது இடங்களில் இலவச வை-ஃபை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய சாதனங்களில் தனிப்பட்ட மற்றும் பாது காக்கப்பட்ட தகவல்களை பதியாமல் இருப் பது நல்லது.
=====================================================================================
உடனடி உற்சாகம் பெற....,
காரணமே இல்லாமல் திடீரென ஏற்படும் சோகம், மன அழுத்தம் இவற்றால் தவிக்கிறீர்களா? உடனே அக்குபங்சர் போல, உடலின் சில பாகங்களில் உங்கள் விரல்களால் தொட்டு மெல்லிய அழுத்தம் கொடுத்துப் பாருங்களேன்... இன்ஸ்டன்ட்டாக சோகம் காணாமல் போகும் மேஜிக் நிகழும்! நம்ப முடியவில்லையா? தொட்டுதான் பாருங்களேன்!
நீங்கள் சோகமாக உணரும் நேரங்களில், படத்தில் காட்டியுள்ள வரிசைப்படி அந்தந்த புள்ளிகளில் உங்கள் விரல் நுனியால் லேசாக அழுத்திக் கொடுங்கள். இங்கே தொடங்குங்கள்... இந்த வரிசைப்படி அழுத்தத் தொடங்குங்கள்…
நீங்கள் சோகமாக உணரும் நேரங்களில், படத்தில் காட்டியுள்ள வரிசைப்படி அந்தந்த புள்ளிகளில் உங்கள் விரல் நுனியால் லேசாக அழுத்திக் கொடுங்கள். இங்கே தொடங்குங்கள்... இந்த வரிசைப்படி அழுத்தத் தொடங்குங்கள்…
1. இரண்டு விரல்களுக்கு நடுவே...
2. உச்சந்தலையில்
3. புருவத்தில்
4. கண்களின் பக்கவாட்டில்
5. கண்களின் கீழ்புறத்தில்
6. மூக்கின் அடிப்பாகத்தில்
7. தாடையில்
8. கழுத்துப்பட்டை எலும்பில்
9. அக்குளில்
இதேபோல, 5 முதல் 7 முறைகளோ உங்களை மகிழ்ச்சி மீண்டும் தொற்றிக் கொள்ளும் வரையிலோ செய்யலாம்.
2. உச்சந்தலையில்
3. புருவத்தில்
4. கண்களின் பக்கவாட்டில்
5. கண்களின் கீழ்புறத்தில்
6. மூக்கின் அடிப்பாகத்தில்
7. தாடையில்
8. கழுத்துப்பட்டை எலும்பில்
9. அக்குளில்
இதேபோல, 5 முதல் 7 முறைகளோ உங்களை மகிழ்ச்சி மீண்டும் தொற்றிக் கொள்ளும் வரையிலோ செய்யலாம்.
=====================================================================================
இன்று,அக்டோபர்-28.
- செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
- முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)
- கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
- ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)
முகனூல்.
முதல்ல சர்பத்குமாரு, இப்ப இந்த வேல்முருகன், அடுத்து கொங்கு தனியரசுதான்னு நெனைக்கிறேன்-முருகன் துபாய். |