விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்?



செயற்கையாக விலை உயர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அதிகளவு ஜவ்வரிசியை, நாமக்கல் மாவட்ட ஆளும் அதிமுக கட்சி  தலைவர் ஒருவர் அதிக ளவில் , பதுக்கி வைத்திருப்பதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது.
 இதனால், மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில், நாமக்கல், சேலம் உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில், 44.4 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. 
ஆண்டுக்கு, ஒரு லட்சம் டன் மரவள்ளி உற்பத்தியாகிறது. இவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, 350 சேகோ ஆலைகளில், கிழங்கு மாவாகவும், சில ஆலைகளில் ஜவ்வரிசியாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், மரவள்ளிகிழங்கு விலை குறைந்து வருவதால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்க, நாமக்கல் மாவட்ட தலைவர் குமார் கூறியதாவது:
கடந்தாண்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இந்த தொகையை சேகோ ஆலைகள் தருவதில்லை. இதனால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
எனவே, மரவள்ளி கிழங்கில் இருந்து, குளுக்கோஸ் தயாரிக்கும் ஆலையை, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு சார்ந்து, இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சேலத்தை சேர்ந்த சேகோ ஆலை நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 2000ல், 1,350 ஆக இருந்த சேகோ ஆலைகளின் எண்ணிக்கை, தற்போது, 350ஆக குறைந்துவிட்டது. தொழில் நலிவு; பெரிய தொழிற்சாலைகளின் ஆளுமை ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணம். 
கிழங்கு விலை நிர்ணயமே, அதிகமாக விற்கும் ஜவ்வரிசி விலையை வைத்து தான் முடிவு செய்யப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி அதிமுக பிரமுகரின் தலையீடும், விலை குறைய காரணமாக உள்ளது. அந்த அதிமுக பிரமுகர் ஆதிகாரிகளின் ஆதரவுடன் , அதிகளவு ஜவ்வரிசி இருப்பு வைத்திருப்பதால், விலையை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே, கிழங்கு விலையை குறைப்பது, உணவு பாதுகாப்பு துறை மூலம், சேகோ தொழிற்சாலைகளை மூடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.
பருப்பு விலையில் இருந்து அனைத்து விலைகளும் உயர ஆளும் அதிமுக ,பாஜக போன்ற  அரசியல்வாதிகள் தலையீடும் , பெரிய நிறுவனங்களின் ஆதிக்கமே விலை ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம்.வியாபாரிகள் அல்ல.
என்று, அவர்கள் கூறினர்.
=====================================================================================
வாய் கொப்பளித்தால் ஆரோக்கியம்!
எண்ணெய்களை கொண்டு வாய் கொப்பளித்தால் நுண்ணுயிரிகள் வெளியேறி வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

இதுவரை நல்லெண்ணெய்யில் மட்டுமே வாய் கொப்பளித்து வந்தோம், தற்போது தேங்காய் எண்ணெய்யில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்,
சுத்தமான தேங்காய் எண்ணெய்யை 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம்.
பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் நீங்கும்.
ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனையை சரிசெய்யும்.
பற்களில் ஏதேனும் கறை இருந்தால் தேங்காய் எண்ணெய்யால் வாய்கொப்பளிப்பதன் மூலம் பற்கள் வெண்மையாகும்.
டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் ஆரோக்கியத்துடனும், பிரகாசமாகவும் இருக்கும்.
தலைவலியிலிருந்து மற்றும் சுவாசப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
=============================================================================================
கற்பூரவள்ளி 
மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. 
கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல தூவிகளைக் கொண்டிருக்கும். 
இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. 
கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. 
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். 
சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும். 
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறு எடுத்து 2 மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி குறையும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. 
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். 
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். 
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. 
மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். 
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. 
இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். 
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள்.
 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். 
குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
====================================================================================
இன்று,
அக்டோபர்-22.

  • இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1828)
  • அர்ஜெண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
  • இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)
  • பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
  • மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960)

====================================================================================

206 சிலிண்டர்களும் , 72000 ரூபாய் மானியமும் பெறும் ஜெயலலிதா =
கடந்த வருடத்தில் ஜெயா வாங்கிய

கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு


தெரியுமா ??
206 சிலிண்டர்கள் , அதற்கு அரசு
மானியமாக பெற்ற சப்சிடி
தொகை மட்டும் 72000 ரூபாய் இது
கடந்த வருடம் மட்டும்..
இந்த வருடம் இது வரை ஜெயா
வாங்கிய சிலிண்டர்கள் 132.
அதற்கு மானியமாக 30000 ரூபாய்
பெற்றிருக்கிறார் !

..

இவ்வளவு கேவலமான ஒரு முதல்வர்
எங்காவது இருப்பார்களா ??
ஏழை எளிய மக்களுக்கான சப்சிடி
தொகையை மாட மாளிகைக்குள் அதுவும்
கணக்கு வழக்கில்லாம ஒரு நாளைக்கு
ஒன்றரை சிலிண்டர் என உபயோகிக்கிறது என்ன
கணக்கு ? எவன் அப்பன் வீட்டு காசு ?
மோடி இந்தம்மாவிடம் மானியத்தை திருப்பி கேட்க
மறந்து விட்டாரா ?
.

எல்லாம் விடுங்க.. ஒரு நாளைக்கு ஒன்றரை
சிலிண்டர் யூஸ் பண்ண ..
உள்ளே ஏதும் இட்லிக்கடை போட்ருக்கா ?
கோகுல இந்திரா இதுவரை 44 சிலிண்டர் . 17000
மானிய தொகை !!!
அசிங்கமாக இல்லையா இந்த
ஜெயாவுக்கும் அடிமைகளுக்கும் ?
========================================================================================


\

                                   1930 ல் லாஸ் எஞ்சல் நகராட்சி விமானத்தளம்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?