ஸ்வச் பாரத், ? மேக் இன் இந்தியா,? ஸ்கில் இந்தியா;? ‘டிஜிட்டல் இந்தியா’.

‘டிஜிட்டல் இந்தியா’ - 
இந்தத் திட்டத்திற்குத் தற்பொழுது எழுந்துள்ள வரவேற்பும், அதற்காக இந்திய அரசு செய்யும் பெரும் விளம்பரங்களும், இத்திட்டத்திற்காகப் பிரதமர் வெளிநாடுகள் சென்று செய்யும் பரப்புரைகளும், இதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரும் ஆரவாரங்களும், கார்ப்ப ரேட் முதலாளிகள் சூட்டும் புகழாரமும் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தவே செய்கின்றன. 
அதுவும், சமீபத்தில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துத் தன் ஃபேஸ்புக் பக்கப் படத்தில் மூவண்ணக் கொடியைச் சேர்த்து மாற்றினார். 
மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதற்கு, ஃபேஸ்புக் முனைப்பாக ப்ரொபைல் படம் மாற்றும் கருவியையும் உருவாக்கியது. அதனை மார்க் பகிர்ந்து, எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டினார். இந்தியாவின் முன்னேற்றத்தின் மீதான அவரது அக்கறையைக் கண்டு எல்லோரும் வியந்தனர். ஏற்கனவே தன்  சேவை, இந்திய நாட்டின் ஏழைமீனவர்களின் உதவிக்கு என்று சொல்லி அனைவரையும் உணர்ச்சி வசப்படச் செய்தவர் மார்க் என்பது நினைவு கூரத்தக்கது.
இப்படி மார்க் தன் புகைப்படத்தை மாற்றியவுடனேயே நம் நாட்டு  இலட்சக்கணக்கான பேர் தங்கள் நாட்டுப்பற்றைப் பறை சாற்றத் தங்கள் படங்களையும் அவ்வாறே மாற்றினர். 
வாழ்க டிஜிட்டல் இந்தியா! வளர்க நம் மோடி! வாழ்க‘மார்க்’ என்றெல்லாம் கூவினார்கள். 
‘அப்போ, டிஜிட்டல் இந்தியா என்பது நல்ல ஒரு திட்டம்தானே, இத்தனை லட்சம் பேர் பாராட்டும் ஒரு திட்டத்தில் என்ன குறை சொல்ல போறீங்க’ என்று பலருக்கும் கேள்வி எழும். இப்படிக் கேட்பவர்களுக்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்ஜோஸ் நகரில் நடைபெற்ற  விருந்தில் நம் பிரதமர் உரை ஆற்றியபோது சில முத்துக்களை உதிர்த்தார்.‘
 அரங்கில் ஒரே சிரிப்பொலி. 120 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டின் பிரதமர், அதிலும் 18-29 வயதுடைய இளைஞர்களில் 12.9 சதவிகிதத்தினர் வேலைவாய்ப் பைப் பெற முடியாத சூழல் உள்ள ஒரு நாட்டின் பிரதமர், இந்த நாட்டுஇளைஞர்களின் ‘அடிப்படை விவாதமே’ எந்த ஸ்மார்ட் போன் வாங்குவது என்பதுதான் என்று வேடிக்கைக்காகச் சொல்வதாகக் கூறினால் கூட அது எவ்வளவு பெரிய துரோகம்? மேலும் அவர் சில வைரங்களையும் உதிர்த்தார்:“டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் இன்று இந்தியாவில் ஒரு மலைவாழ் தாய் தன் குழந்தையைப் பத்திரமாகப் பெற்றெடுப்பதாகவும், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் குழந்தை சரியாகக் கல்வி பெற முடிகிறது என்றும், ஒரு விவசாயி மன தைரியத்தோடு தன் விவசாயத்தை மேற்கொள்வதாகவும் கூறினார். 
இதற்கு ஆரவாரங்களும் கைதட்டல்களும் அந்த அரங்கில். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்னவோ ஜூலை 1, 2015இல்தான். 
மூன்று மாதத்தில் இப்படிப்பட்ட சாதனைகளை இத்திட்டம் படைத்திருப்பதாகக் கூறுவது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?
சரி, யதார்த்த இந்தியாவுக்கு வருவோம்.இந்தியாவில் 1 லட்சம் தாய்மார்களில் 190 பேர் ஆண்டு தோறும் இறக்கின்றனர். 
இன்னமும் பல மலைவாழ் கிராமங் களில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல், நிறைமாத கர்ப்பிணிகளைக் கட்டிலில் சுமந்து, ஆறுகளைக் கடந்து வந்து மருத்துவ மனையில் சேர்க்கின்றனர். 
அதேபோல் இந்தியாவின் 98 சதவிகித குடியிருப்புகளில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளிஅமைக்கப்பட்டுவிட்டன என்று அரசு கூறினாலும், அப்பள்ளிகளில் இருந்து 5ஆம் வகுப்பைக் கூட முடிக்காமல் வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை 29 சதவிகிதமாக உள்ளது. 
விவசாயத்திற்கு வருவோம். மத்திய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் , 2011-2013 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 10,000 விவசாயிகள் ‘விவ சாயம் நலிவுற்ற’ காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறுகிறது. இதில் பதிவு செய்யப்படாத தற்கொலைகளைக் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயரும். 


இந்தியாவில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்கள் விவசாயிகள் தற்கொலைகளில் போட்டி போட்டுக் கொண்டு முதல் 5 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. 
தேசிய குற்ற ஆவண ஆணையம் தரும் தரவுகளை ஆராய்ந்துபார்த்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை யில் விவசாயிகள் மட்டுமே 47 சதவிகிதத்தினர் என்று தெரிய வருகிறது. இதையெல்லாம் மோடி அரசு ஒரே நாளில் அல்லது ஆட்சி மாற்றம் நடைபெற்ற உடனேயே சரி செய்ய வேண்டும் என்று எவரும் நினைத்து இவர்களுக்குப் பெருவாரி ஆதரவு தரவில்லை. குறைந்தபட்ச மாற்றத்தையாவது படிப்படியாக இவர்கள் கொண்டு வருவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார்கள். 
ஆனால் இப்படி விளம்பரம் மட்டுமே செய்துகொண்டு ‘டிஜிட்டல்இந்தியா’ என்ற ‘ஒற்றைக் காரணி’ மட்டுமே முழு வளர்ச்சியையும் தந்துவிடும், தந்துவிட்டது என்றும் வறுமையை ஒழித்துவிடும் என்றும் கூறி ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது.
டிஜிட்டல் இந்தியா எப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என்ற கேள்விக்கும் சான்ஜோஸ் நகரில் நடைபெற்ற விழாவில் பேசியவர்களே விடை அளித்துள்ளனர். அதாவது மைக்ரோசாஃப்ட், கூகுள், குவால்காம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவை யான சில சேவைகளைத் தருமென்று. 
இதுவும் கேட்க மிகவும் இனிப்பான செய்தியாகவே பலருக்கும் தோன்றும்.இந்தியா இந்தத் தொழில் வளர்ச்சியைப் பெறக்கூடாது என்பதல்ல நாம் சொல்வது. 
இதில் பிரச்சனை என்னவெனில், இது பெருவாரியான மக்களுக்குப் பயன்தரக் கூடிய ஒன்றா? 
இது உண்மையான வளர்ச்சியைத் தருமா? 
இந்நிறுவனங்கள் ஏழை இந்தியாவுக்காக இத்திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறுவதன் உண்மைத் தன்மை என்ன? 
இணையத்தின் வழியே மேலும் நாம் மூன்றாம் நிலை நாடாக மாறுவதற்கு இது ஒரு வித்தா? 
என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
டிஜிட்டல் இந்தியாவால் பெருவாரியான மக்கள் பயனடைவார்களா?
இந்திய கிராமங்களின் வளர்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், ஃபேஸ்புக் நிறுவனமும் இணையச் சேவையைத் தொடங்கவிருப்பதாகக் கூறியுள்ளன. 
இதற்கு முதலில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குப் பொருளாதார வளர்ச்சிஏற்பட வேண்டும். அதாவது அங்கே விவசாயம் செழிக்க வேண்டும். 
ஆனால் விவசாயிகளின் தற்கொலை அவலத்தை இப்பொழுதுதான் மேலே அலசினோம். மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் வளர்ச்சி வரும் என்று கூறினாலும் அதுவும் சேவைத்துறையை மட்டுமே வளர்க்கும் என்பதே உண்மை. இந்தியாவில் சேவைத் துறையை நாடியிருப்பவர்கள் வெறும் 20 சதவிகிதத்தினர் மட்டுமே. மீதமுள்ளோர் விவசாயம் மற்றும் விவசாயத் தொழிலைச் சார்ந்த பணிகளிலுள்ளவர்களே.
மேலும், அகன்ற கற்றை இணையச் சேவையை ரயில்நிலை யங்களில் கொண்டு வருதல், ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குதல் போன்றவையெல்லாம் நடுத்தர மக்களுக்கு வேண்டுமானால் ஒரு சொற்ப மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் நடுத்தர மக்கள் பெரிதும் பயன்படுத்தும் ரயில் சேவையில் அவர்கள் கேட்பது இணையச் சேவையல்ல, பாதுகாப்பான ரயில் பயணம் தான். 
பெரும் உயிர்ப்பலி ஏற்படும் ரயில் விபத்துக்களைத் தடுப்ப தற்குத் தேவையான தொழில்நுட்பங்களை அரசு உருவாக்கவோ அல்லது இறக்குமதி செய்யவோ முயற்சி ஏதாவது எடுத்தால் நாம் பாராட்டலாம். எனவே இது நிச்சயமாகப் பெரும்பான்மை மக்களுக்கு உதவப் போவதில்லை.
அரிசி ,கோதுமை டிஜிடலில் இணையத்தில்
டவுன்லோட் செய்யமுடியுமா.
மேலும், அரசின் அனைத்துச் சேவைகளையும் இணையம் அல்லது மொபைல் சேவை வழியே என்று மாற்றுவதினால் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவர். ஆனால் அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடும் கிராமப்புற இந்தியா, இந்த ஃபேஸ்புக், மைக்ரோசாஃட் போன்ற நிறுவனங்களின் வாடிக்கை யாளர்களாக மாறினால் மட்டுமே அவர்களால் அரசிடமிருந்து அவர்கள் பெற வேண்டிய அடிப்படைச் சேவைகளைப் பெற முடியும் என்பது எதிர்காலம் சந்திக்கவிருக்கும் உண்மை.
கட்டற்ற மென்பொருளை ஊக்குவித்தால் என்ன? 
அது மட்டுமல்லாமல் இந்த நிறுவனங்கள் அரசின் சேவை களுக்காகச் செய்து தரக்கூடிய செயலிகளுக்கெல்லாம் பல மடங்கு பணத்தை நம் அரசு செலவிடும். 
ஆனால் அச்செயலிகளை இலவசமாக, கட்டற்ற மென்பொருளாகச் செய்து தருவதற்குஇந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். 
இந்திய அரசு சுயதொழிலை ஊக்குவிப்பதற்கு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டால் அதை மனதாரப் பாராட்டலாம். உலகம்முழுவதும் கட்டற்ற மென்பொருளுக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவரும் நிலையில், குறிப்பாக இந்தியாவில் அரசு சேவைகளைக் கட்டற்ற மென்பொருள் வழியே மக்களிடம் சேர்த்தால்தான் அது மக்களிடமே இருக்கும். 
அரசு ஏன் இதைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?
ஏழை இந்தியாவின் மீதுள்ள பரிதாபம் ஏன்?
மார்க்கின் ஏழை மீனவன் கதை, சத்யா நாதெல்லாவின் நலிந்த ஆசிரியர்களின் கதை, சுந்தர் பிச்சை கூகுளின் நல்லெண்ணத்தைக் கூறிய கதை இவையெல்லாம் ஏழை இந்தியாவுக்காக இவர்கள் உதவ நினைக்கிறார்கள் என்னும் தோற்றத்தை உருவாக்குகின்றன. 
ஆனால் இது காலனிய காலத்தில், ‘இந்தியாவை நாகரிகமாக மாற்றுவதற்காகத்தான் இந்தியாவை ஆள வந்தோம்‘ என்ற ஆங்கிலேயர்களின் கூற்றுபோல் உள்ளது. ஏழைஇந்தியாவைப் பற்றிக் கவலைப்படுகிறோம் என்னும் போர்வை யில் 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் டிஜிட்டல் சந்தையைப் பிடிப்பதற்கான முயற்சியே இது. 
சமநிலை இணையமும் மூன்றாம் உலகமும்  திட்டத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் இணையச் சேவையை வழங்க இருப்பதாக ஃபேஸ்புக் கூறுகிறது. 

இதனால் இணையத்தின் சமநிலைத் தன்மை மாறி, சில தகவல்கள் கட்டணத்துடனும், சில சேவைகள் அல்லதுதகவல்களை இலவசமாக்குவதால், நமக்கு எந்தத் தகவல்கள் வந்து சேர வேண்டும் என்பதை இந்நிறுவனங்களே தீர்மானிக்கும் நிலை ஏற்படும். 
‘தகவல் உலகத்தில்’ வாழும் நாம், இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டால் கண்டிப்பாக தொடர்ந்து மூன்றாம் உலக நாடாகவே இருப்போம் என்பதே எதிர்கால உண்மை. டிஜிட்டல் இந்தியாவா? 
மக்களுக்கான இந்தியாவா?நம் நாட்டு மக்களைப் பீடித்திருக்கும் மிகக் கொடூரமான நோய் ஒன்று உள்ளது. 
அது தான் ‘மறதி’. 
நேற்று ஜன்தன் யோஜனா,
ஸ்வச் பாரத், 
மேக் இன் இந்தியா, 
ஸ்கில் இந்தியா; 
இன்று ‘டிஜிட்டல் இந்தியா’. 
இவற்றில் ஏதாவது ஒரு திட்டம் நம் ஏழை பாழைகளின் அடிப்படைத் தேவைகளைப் பெற உதவியதா என்றால் இல்லை. 
இந்த மறதி என்னும் நோயில் இருந்து மக்கள் மீண்டு, தங்கள் அடிப்படை உரிமைகளை, தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான டிஜிட்டல் சேவையைப் பெறும் உரிமையையும் சேர்த்துப் பெறுவதற்கு ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும்.
===============================================================================

சளியை வெளியேற்ற.....,

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். 
பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

================================================================================


                                                      பஞ்சாப் கலவரம்.முழக்கம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?