நன்றி மறந்த கமல்ஹாசன்
இன்றைய தேதியில் பர,பர செய்தி நடிகர்கள் சங்கத் தேர்தல்தான்.
மாமா,மச்சானும் பதவியில் இருந்து கொண்டு செய்த பணிகளை[?] இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த நடிகர்கள் தங்கள் சங்கக் கட்டிடமே இடம் விற்கப்பட்டு இடிக்கப்பட்டதும் முழித்துக் கொண்டனர்.
அதை முன்பே நடிகர்கள் பூச்சி முருகன்,குமரி முத்து போன்றவர்கள் சரத் குமார் ,ராதாரவி ஆகியோரிடம் தட்டிக்கேட்டதால் சங்கத்தை விட்டே விரட்டப்பட்டதும் நடிகர்களை உசுப்பி விட்டது.
அதை மேலும் விசிறி விட்டது உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளியானதில் உண்டான சிக்கல்கள்.அரசு தடைகோருபவர்களுக்கு ஆதரவாக செயல் பட்டதும்தான்.
ஆனால் அங்கு செயல் படவேண்டிய நடிகர் சங்கம் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.
காரணம் .ராதாரவியும்,சரத்குமாரும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள்.
அம்மாவுக்கு பயந்த பிள்ளைகள் .
கமல் ஹாசனுக்கு ஆதரவாக மற்ற மொழி நடிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டும்,செயல்பட்டுக்கொண்டும் இருக்கையில் இந்த மாமா,மச்சான்கள் சங்கம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது.
அதைத்தான் நடிகர் விஷால் 'நடிகர் சங்கம் இந்த பிரச்னையில் தலையிட்டு செயல்படவேண்டும்.இதை செய்யாத சங்கம் எதற்காக இருக்கிறது" என்று கோபமாக பேட்டி கொடுத்தார்.
இதுதான் சரத்,ராதா ரவி,ராதிகாவை உசுப்பி விட்டது.
தாங்கள் விஸ்வரூபம் வெளியாக செய்ததை [?] சொல்லாமல் விஷால் வாய் கொழுப்பாக பேசுவதாக அறிக்கை விட்டனர்.
அதன் பின்தான் மற்ற முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்களுக்கு ஆதரவாக செயல்பட நடிகர் சங்க ஊழல்கள் ஒவ்வொன்றாக இளம் நடிகர்களால் கிளறப்பட்டது.
அவர்களை சமாதானம் செய்ய முடியாத அளவு சங்க இடம் விற்பனையில் முறைகேடுகள் நடந்திருப்பதால் ராதாரவியும்,சரத் குமாரும் சக நடிகர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் துவங்கி தவளை போல் தங்கள் வாயாலேயே மாட்டிக்கொண்டு விஷால்-நாசர் அணிக்கு வலு சேர்த்து தேர்தலில் மகா வெற்றிப் பெறும் வகையில் கொண்டுவந்து விட்டுள்ளனர்.
விஷால் அணியில் நாசர்,ரோகிணி ,ராஜேஷ் போன்றவர்கள் இருப்பதை பார்க்கையிலேயே அந்த அணி கமல்ஹாசன் ஆதரவுடன் உள்ளது என்று பத்திரிகையாளர்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.அதைப்போலவே சரத்,ரவி கமல்ஹாசனை நன்றி மறந்தவர் என்று திட்ட நாசரை கமல்ஹாசன் முன் மொழிந்து விண்ணப்பம் தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.கமல்ஹாசனைப்போல் ரஜினி தைரியமாக செயல்படுபவர அல்ல.பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி ஏமாற்றி நட்பு கொள்ளும் விலாங்கு மீன்.
அதற்கு மேல் நடிகர் ரஜினிகாந்தைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை.அவர் குழப்பமாகவே பேசி கடைசியில் தான் வென்ற அணிக்கு ஆதரவாக இருந்ததாக பேர்வாங்கிக்கொள்ளுவார்.அதைத்தான் அவர் அரசியலிலும் செய்து கொண்டிருக்கிறார்.
விஷால்,ராதாரவி இரு அணிக்குமே தனது ராகவேந்திரா மண்டபத்தில் கூட்டம் நடத்த வாடகைக்கு கொடுத்துள்ளார்.
தற்போது கமல்ஹாசனை திட்டும் ராதாரவி அணி ரஜினிகாந்த் தங்களுக்கு ஆதரவு தருவதாக சொல்லித்திரிகின்றனராம்.
விஷால்,நாசர் களின் பாண்டவர் அணி கூட்டத்துக்கு வந்திருந்த நடிகர்கள் கூட்டத்தைப் பார்க்கையில் பாண்டவர்கள் வெல்லுவது உறுதி செய்யப்பட்டு விட்டது.
இனி ரஜினி ஆதரவு தந்தாலும் ராதாரவி அணி வெல்வது ரஜினியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விடும்.எனவே ரஜினி வாய்ஸ் இனி ராதா,சரத் ,ராதிகா அணிக்குஆதரவாக வருவது சந்தேகமே.காரணம் ரஜினி திரைக்கு வெளியேயும் நன்கு நடிக்கத்தெரிந்தவர்.
நன்றி மறந்த கமல்ஹாசன் ராதா ரவி,சரத்குமார் ,ராதிகா குடும்ப அணிக்கு நன்றி என்றால் என்ன என்பதை சொல்லிக்கொடுப்பார் என்றே இன்றைய நிலவரம் காட்டுகிறது.
ராதாரவியை கே.பாலச்சந்தரிடம் கொண்டுபோய் நிறுத்தி மன்மதலீலை,தண்ணீர்,தண்ணீரில் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தவர் கமல் என்பதை ராதாரவி மறந்துவிட்டு நன்றியைப்பற்றி பேசுகிறார்.
இனி கமல்ஹாசனின் லீலையையும்,அவர் ராதா ரவி,சரத்குமார் அணிக்கு தண்ணீர்,தண்னீர் காட்டுவதுதான் பாக்கி.
===================================================================================

விஸ்வரூபம் வர இவரும்,நடிகர் சங்கமும் எடுத்த ஒரு முயற்சியை சொல்ல முடியுமா சரத்தால்?நடிகர் சங்கம் ஒன்றும் செய்யவில்லையே என்று விஷால் கேட்டதில் இருந்துதானே இந்த தகராறே உண்டானது.விஜயகாந்துக்குப் பின்னர் நடிகர் சங்கம் நடத்திய போராட்டங்கள் எல்லாமும் ஜெயலலிதா உள்ளெ போனதுக்கும், வெளியெ வந்ததுக்கும்தானே ?கமல் போன்றபெரிய நடிகர்கள் படம் வெளி வர தேவையற்ற பிரச்னைகளை எதிர் கொண்ட போது ராதா ரவியும்,சரத்குமாரும் புடிங்கிய ஆணிகள் எத்தனை என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும்!அதெல்லாம் இருக்கட்டும் ஒரு தேர்தல் என்று வந்தால் எதிர் அணி உண்டாகத்தானே செய்யும் ?எதிர்ப்பே இல்லாமல் தலைவராக நடிகர் சங்கம் என்ன ச.ம.கட்சியா?
மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை.
மாட்டிறைச்சி உண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ஒரு முஸ்லிமை அடித்து கொன்றுள்ளது இந்துத்துவ கும்பல். உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியில் வசித்து வரும் முகமது அக்லாக் தான் கொல்லப்பட்டவர். கடந்த 28-ம் தேதி இரவு அவர் வீடு புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுள்ளது. பின்னர் தடிகளாலும், கற்களாலும் தாக்கியதில் அக்லாக் உடல் சிதைந்து இறந்துள்ளார். அவரது மகன் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் தாத்ரியின் அருகாமை கிராமமான பிசாராவில் ஒரு கோயிலின் மைக்கில் அக்லாக் குடும்பம் மாட்டிறைச்சி வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
அக்லாக்கின் மகள் சஜிதாவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது இந்துத்துவ கும்பல். பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேரை கைது செய்தது போலீஸ். கொலையாளிகளில் சிலர் கைது செய்யப்பட்ட தகவல் பரவிய உடனே ‘மாட்டிறைச்சி உண்ட’ அக்லாக் குடும்பத்தினருக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி இந்துக்களை சாலை மறியலில் ஈடுபட வைத்திருக்கின்றனர் இந்து மதவெறியர்கள்.
போலீஸ் வந்து விசாரித்த போது அது ஈத் பெருநாளுக்காக வாங்கிய ஆட்டிறைச்சி என்று அக்லாக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தங்கள் நடவடிக்கையில் ‘நடுநிலையை பேண’ விரும்பிய போலீஸ் அக்லாக் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.
‘தங்கள் வீட்டில் கைப்பற்றியது மாட்டிறைச்சி இல்லை என்றால் தனது தந்தையின் உயிரை திரும்ப பெற்று தருவார்களா?’ என்று கேட்கிறார், சஜிதா.
ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் பசுவை வைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முன்னெடுக்கும் அரசியல் தொடர் நிகழ்வின் ஒரு பகுதி. 1996-ம் வருடம் இயற்றப்பட்டு கிடப்பில் கிடந்த மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை கடந்த மார்ச் மாதத்தில் புத்துயிரூட்டியது மகராஷ்டிர பா.ஜ.க. அரசு. அதனை தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி அரசு ஆளும் காஷ்மீரிலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டதை எதிர்த்து அந்த மாநில மக்கள் செப்டம்பர் 25-ம் தேதி பக்ரீத் தொழுகை முடிந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘மாட்டிறைச்சிக்கு தானே தடை; நாம் தான் அதனை உண்பதில்லையே’ என்று இருந்து விடலாமா என்றால் அதற்கும் சோதனையை ஏற்படுத்தியது மகராஷ்டிரா அரசு. ஜைனர்களின் மதவிழா ஒன்றை காரணம் காட்டி செப்டம்பர் 14-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை சிக்கன், மட்டனுக்கு தடை விதித்தது மகராஷ்டிர பா.ஜ.க அரசு.
உலகமே தின்னும் மாட்டிறைச்சியை கொலைக்கான தண்டனையாக வைத்திருப்பது மனுநீதியின் பிறப்பிடமான இந்தியாவில் மட்டும்தான். பல்வேறு நாடுகளில் விபத்துக்களால், போர்களால், குடும்ப வன்முறைகளால் மக்கள் இறக்கின்றனர். மதவெறியாலும் கூட இறக்கின்றனர். ஆனால் ஒரு உணவுப் பொருளால் கொல்லப்படும் இந்துமதவெறிக்கு இணை எதுவுமில்லை. இதைவிட காட்டுமிராண்டித்தனமும், அநாகரிகமும் எங்காவது உள்ளதா? இல்லை அசைவ உணவு உண்போருக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வெளிப்படையாக பலகை போடும் அசிங்கம்தான் இந்தியா அன்றி எங்கேயாவது கேள்விப்பட முடியுமா?
வேண்டாம் வம்பு என்று ஒதுங்கி செல்ல நினைத்தாலும் கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துமதவெறியால் பாதிக்கப்பட்டு வருகிறது. ‘அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை’ என்ற ‘நற்சான்றிதழுடன்’ அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது. இந்த கையறு நிலை உங்களை உறுத்தவில்லை என்றால் பார்ப்பன இந்துமதவெறியின் பலிபீடத்தில் நமது அரசியல், பண்பாட்டு உரிமைகளை நாம் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும்.
– சம்புகன்
இந்த இடத்துலதான் நடிகர்சங்கக் கட்டிடம் இருந்துச்சுன்னு வடிவேலு கம்ளையண்ட் பண்ணியிருக்காரு.
நல்லா தேடிப்பாருங்கப்பா.
========================================================================