மாடு அரசியல்?
ஆளும்கட்சிகளும்,அதன் அடிமைத் தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களும் மக்கள் இயல்பு வாழ்க்கையில் அத்து மீறி குழப்பம் செய்கின்றனர்.
மக்கள் தாங்கள் விரும்பிய உணவுகளை கூட உண்ண முடியாத நிலை இங்கு.
ஏதோ ஐ.எஸ்.,தாலிபான்கள் கட்டுப்பட்டில் உள்ள மக்கள் நிலை.
சட்டத்திற்கு சவால்விடும் வகையில் அதிகாரத் திற்கு அப்பாற்பட்ட ஒரு வட்டாரம் இயங்கிவருகிறது.
சமண மதத்தவரின் மதச்சடங்குகளை காரணம் காட்டி ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவாரத்திற்கு மாட்டிறைச்சி உள்பட அனைத்து இறைச்சி விற் பனைக்கும் அந்த மாநில அரசுகள் தடைவிதித்தன.
சமண மதத்தவரின் மதச்சடங்குகளை காரணம் காட்டி ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவாரத்திற்கு மாட்டிறைச்சி உள்பட அனைத்து இறைச்சி விற் பனைக்கும் அந்த மாநில அரசுகள் தடைவிதித்தன.
இதற்கு ஒரு படி மேலே ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் மாட்டிறைச்சி விற்பனைக்கே தடை விதித்துவிட்டது. அந்தத் தடையை நீக்கவேண்டும் என்று அந்தமாநில அரசு விடுத்த கோரிக்கையை கூடஅதுஏற்கவில்லை.
இந்தியாவில் அரசு எடுத்த புள்ளிவிவரப்படி 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இறைச்சி உண்பவர்கள்.அசைவம் உண்பவர்களில் கூட 26 விழுக்காட்டினர் மீன் உண்பவர்களே.மீனுக்கு அடுத்தபடி யாக கோழியையும் கடைசியாக சிறு பகுதியினர் மட்டுமே மாட்டிறைச்சியையும் சாப்பிடுகிறார்கள்.ஆனால் மாட்டிறைச்சியை தடை செய்யவேண்டும் என்று கொக்கரிக்கும் கூட்டம் போடும் ஆட்டத்தை பார்த்தால் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள்மாட்டிறைச்சியை சாப்பிடுவதைப் போன்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
அப்படியே சாப்பிட்டாலும் அதில் தலையிட இவர்கள் யார் ?
மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்று உத்தர விடுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டில் மாட்டிறைச்சி இருப்பதாக காவிகும்பல் கிளப்பிய புரளியால் அப்பாவி முஸ்லிம் ஒருவரின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.
மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்று உத்தர விடுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டில் மாட்டிறைச்சி இருப்பதாக காவிகும்பல் கிளப்பிய புரளியால் அப்பாவி முஸ்லிம் ஒருவரின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.
உண்மையில் அவர் வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ஆட்டிறைச்சியைதான் வாங்கி வைத்துள்ளனர்.ஆனால் வேண்டுமென்றே பொய் யான தகவல் பரப்பப்பட்டது.
சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கி மக்களிடையே மதவாத அரசியல் நிகழ்ச்சிநிரலைக் கொண்டு செல்ல முயற்சிக்கும் காவிகும் பல் தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறது. அடுத்தவர் வீட்டில் என்ன சாப்பிடுகிறார்கள் என்று எட்டிப்பார்க்கும் அளவுக்கு இந்த கும்பல் இழிசெயலில் இறங்கியுள்ளது.
இதுவும் ஒருவகையான வன்முறை கலாச்சாரம்தான்.
இந்தப்பிரச்சனை ஒருசில மாநிலங்களோடு முடிந்துவிடவில்லை. இறைச்சி தீண்டாமை என்ற புதிய வன்கொடுமை நாடு முழுவதும் பரப்பப்படுகிறது.
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒருதனியார் பொறியியல் கல்லூரியில் கூட மாணவர்கள் அசைவ சாப்பாடு கொண்டு வரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. நமது நாடு மதச்சார்பற்ற நாடு.சகிப்புத்தன்மை உள்ள நாடு என்று சொல்லப்படுகிறது.
ஆனால் கடந்தசில மாதங்களாக நடந்துவரும் நிகழ்வுகள் சகிப்புத் தன்மைக்கு வேட்டுவைப்பதாக உள்ளது. எனவே மாட்டிறைச்சி உள்பட எந்த ஒரு இறைச்சியையும் சாப்பிடும் மக்களை கொடூரர்களாகவும் இழிவான வர்களாகவும் சித்தரிக்கும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.பீகார் மாநில தேர்தலையடுத்து, அடுத்த ஆண்டு மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் இந்துமத அடையாளத்தில் மக்க ளின் வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜக காய்நகர்த்துகிறது. அதற்கு ஏற்ற வகையில் அதன் பரிவாரங்கள் தங்கள் பங்கிற்கு இறைச்சி அரசியல் நடத்தி அப்பாவி மக்களைக் கொல்கின்றன.
அச்சுறுத்துகின்றன.
இந்த அரசியல் வெறித்தனம் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டும்.
==================================================================================
நம்ம உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. அதுல 300 - 350 மிலி ரத்தம் தரலாம். 5 நிமிடம் கொடுக்கும் ரத்தம் சிறிது நேரத்திலேயே உற்பத்தியாகிடும்.
எனவே ரத்ததானம் செய்ய அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.
மற்ற உடல் உறுப்புகளை ஒரு முறை தான் தானம் செய்ய முடியும்.
ஆனால் ரத்த தானம் எனப்து 18 வயது முதல் 65 வயது வரை செய்யலாம்.
தானம் கொடுப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
காய், கனி, கீரைகள் என சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஆனால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உட்பட பல்வேறு வியாதிகள் உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய கூடாது.
இன்று,
அக்டோபர்-02.
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்.
- இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா இறந்த தினம்(1906)
- சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினம்
- இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)
முதல்வர் ஜெயலலிதாவை தினத்தந்தி உரிமையாளர் பாலசுப்பிரமணியன் தனது மகனுடன் சந்தித்து வந்த மறு நாள் இப்படி தந்தி தொ.கா.வில் செய்தி வருகிறதே. ஜெ ..க்கு சலிக்காமல் சிங்கியடிக்கும் தந்திக்கு என்ன நடந்தது.
==================================================================================
படங்களில் மட்டுமே தேசப்பற்று ?
நடிகர் விஜய் நடிப்பில் உருவான புலி படத்திற்கு முறையாக வருமானவரி செலுத்தப்படவில்லை என வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது..
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்பட பைனான்சியர் ரமேஷ், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட 10 பேர் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட 10 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்றது.
மொத்தத்தில் புலிக்குழுவினர் 25 கோடி ருபாய் அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 35 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் புலி பட குழுவினர் வீடுகளில் இருந்து மொத்தமாக 2 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
அதே போன்று சில ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
நடிகர் விஜய் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட பைனான்சியர்கள் 6 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படங்களில் அநியாயத்தை கண்டு பொங்கி எழுந்து பஞ்ச் வசனங்கள் பேசும் நடிகர் பின்னால் இவ்வாளவு முறைகேடுகள்.
புலி படத்தையே அவரிடம் மாத சம்பளம் வாங்கும் அவரின் செயலர்தான் 120 கோடிகளில் தயாரித்துள்ளார்.
அரசியலில் குதிக்க முழு தகுதி அவருக்கு வந்து விட்டது.
தைரியமா குதிங்கண்ணா!
இப்படி எல்லாம் கவர்ச்சியா பார்த்தா வருமாணவரிக்காரங்க ஏமாந்திடு வாங்களா என்ன?அதான் நீங்க இல்லாத நேரமா பார்த்து வந்திருக்காங்க!
திமுக அரசாக இருந்தால் மேடை ஏறி மைக் புடிச்சு "மெரட்டுராங்க"ன்னு கலைஞர் முன்னாடியே பேசமுடியும்!
இப்ப பேசுனா இப்படிதான் இந்த சிறுத்தை மாதிரி மாட்டிகிட்டு முழிக்குது புலி!
Charles Mjs
Manoharan Karthik
முதியோர் தினத்தில் உரையாற்றிய வடமத்திய மாகாண ஆளுநர் மயங்கி வீழ்ந்தார்!