இந்தியாவைச் சூழும் பேராபத்து?



31சத விகித வாக்குகளைப் பெற்றாலும் 282 இடங்களைப் பெற்றுபாஜகவுக்கு தனி மெஜாரிட்டி. 
காங்கிர சுக்கு எதிர் கட்சி அந்தஸ்துகூட எட்ட வில்லை. இடதுசாரிகளோ வரலாறுகாணாத அளவுக்கு குறைவான இடங் களில் முந்தைய பா.ஜ.க. கூட்டணி ஆட்சிபோலில்லாமல் தனித்து கிடைத்த பெரும்பான்மை. 
இனிமேல் மறைமுக அஜண்டாஅவசியமில்லை. 
எல்லாமே வெளிப்ப டையாகச் செய்யலாம் என்ற திமிரோடு பா.ஜ.க. ஆட்சி சக்கரவர்த்தி மோடி தலை மையில்.தாராளமயக் கொள்கை குறித்து பா.ஜ. கவின் கடந்த கால முழக்கமெல்லாம் காற்றில் கரைந்தது. வேகமோ வேகம். படு வேகம். கார்ப்பரேட்டுகளுக்கும், பெருமுத லாளிகளுக்கும் கொண்டாட்டம். சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதாள நிலைக்கு குறைந்தாலும் அதற் கேற்ப மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலைகுறைப்பில்லை. 
பெட்ரோலியப் பொருட் கள் மீதான வரி உயர்த்தப்பட்டு அரசு கஜானா நிரப்பப்பட்டது. கல்விக்கும், சுகா தாரத்திற்கும் நிதி ஒதுக்கீடு வெட்டிக் குறைக்கப்பட்டது. அங்கன்வாடி மூலம் ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கும் மோடி முடிவு கட்ட முடிவு செய்து விட்டார்.
திட்டக்குழுவுக்கு சமாதி கட்டப்பட்டது. 
விலை வாசி உயர்ந்தால் பருப்புவிலை (மாட்டு இறைச்சிக்குப் பதிலாக மக்களுக்கு புரதம் குறைந்த செலவில் தரும் உணவு) ரூ. 240 ஐ த்தாண்டிஎகிறுகிறது. அது குறித்த எந்த கவலையும் இல்லை. பொறுப்பை தட்டிக் கழித்து தனது அரசின் முன்பேர வர்த்தக சூதாடித் தனத்தினால் பெரு நிறுவனங்களின் கொள்ளையால் ஏற்பட்டது என்பதை மறைத்து மாநில அரசுகளின் பக்கம் பொறுப்பைத் தட்டி விடுகிறார். 
பெருமுதலாளிகளுக்கு ஒவ்வொரு பட்ஜெட் டிலும் அள்ளி கொடுப்பதோ பல்லாயிரம் கோடி. 
மோடி முந்தைய காலத்தில் தனக்கு விசா மறுத்தற்கு எதிர்வினை என்பது போல் பெரும்பாலும் வெளிநாடுகளில். அமெரிக்காவுக்கு இது போன்ற ஒரு செல்லப்பிள்ளை என்றைக்கும் இந்திய ஆட்சி பீடத்தில் அமர்ந்ததில்லை. 
செல்கின்ற நாடுகளிலெல்லாம் அந்நிய கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங் கும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள்.
ஆனால் அதன் ஷரத்துக்களை அறிய இந்திய மக்களுக்கு அருகதை யில்லை. எனவே மூடி மறைப்பு. ஒவ்வொரு பயணத்திலும் பெருமுதலாளிகளின் படையே அவருடன் பயணிக்கிறது. எல் லாம் கல்லாவை நிரப்பும் கனவுகளுடன் தான்.இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்போதே ஆர்.எஸ்.எஸ். பிரச்சார மோடியின்மூலம் நாட்டின் ஆட்சியை தங்கள் வசப் படுத்திக் கொண்டது. 
அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பிதாமகர்களைச் சந்தித்து புரோக்ரஸ் ரிப்போர்ட் வழங்கும் பிரதமரும், அமைச்சர் பெருமக்களும். உண்மையில் ஆட்சி அதிகாரம் தில்லி செங்கோட்டையிலோ அல்லது நாடாளுமன்ற கட்டடத்திலோ அல் லது நார்த் பிளாக், சவுத் பிளாக் போன்ற அதிகார மையங்களிலோ இல்லை. மாறாக நாக் பூரிலிருந்து அனுப்பப்படும் ரிமோட் சிக்னல் தான் ஆட்சியின் அனைத்து அசை வையும் தீர்மானிக்கிறதுஆட்சி துவங்கியவுடனேயே மக்களை பிளவு படுத்தும் சங் பரிவாரத்தின் ஆட்ட மும் துவங்கியது.
===============================================================உலகத்திலேயே அதிகமான மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் 65 லட்சம் டன் மாட்டு இறைச்சி அரசின் அனுமதியோடு ஏற்றுமதியாகிறது. மாடுகளை கொல்லாமலா இது நடக்கிறது. இதற்கு மோடி அரசும் அனுமதி அளித்துதானே வருகிறது .
===============================================================
லவ் ஜிகாத்என்ற பெயரால் படுகொலைகள் அராஜகங்கள் முசாபர் நகரில்.பல்லாயிரம் இஸ்லாமியர் கள் இன்றைக்கும் அகதிகள் முகாமில். பதற்றத்தை ஏற்படுத்த கர் வாப்ஸி என்ற பெயரால் மதமாற்ற நிகழ்ச்சிகள். பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண் டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு. 
உத்தரப்பிரதேச பா.ஜ.க தலைவர் லஷ்மி காந்தவாஜ்பாய் தாஜ்மகால் சிவன் கோயில்இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்றுகுண்டை தூக்கிபோட்டார். இஸ்லாமியஇளைஞன் ஒரு இந்து பெண்ணை திருமணம் செய் தால் இந்து இளைஞர்கள் 100 இஸ்லாமிய பெண்களை திருமணம்செய்ய வேண்டுமென்று பா.ஜ.க. எம்.பி யோகி ஆதித்யநாத் கூறினார். 
மோடிக்குஎதிரானவர்கள் பாகிஸ்தானுக்கு தான் செல்ல வேண்டும் என்று எம்.பி. கிரதாஸ் சிங். இவ்வாறு தொடர்ந்து வெறியூட்டும் வார்த்தைகளைக் கொட்டினாலும் மோடி அதை ரசித்துக் கொண்டிருந்தார்.
காரணம் அவரால் பிரதமராக இருந்து கூற முடியாதவற்றை அவரது அடிபொடிகள் அன்றாடம் கூறிக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் தான் தாத்ரி சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28 இரவில் மேற்கு உத்தரப்பிரதேசம் பிசாரா பகுதிக்குட்பட்ட தாத்ரி எனும் குக்கிராமத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றது. 
முகம்மது இக்லாக் என்பவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் பசுஒன்றை கொன்று உணவாக்கி கொண்டார் என்ற புரளி கிராமக் கோயிலில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இந்தஅறிவிப்பை கேட்ட கும்பல் ஒன்று இக்லாக் கின் வீட்டை நோக்கி சென்றது.
 அங்கு சென்ற கும்பல் அங்கிருந்த இக்லாக்கை கொடூரமாக தாக்கி கொன்றதுடன் இக்லாக் கின் மகன் தனீஸையும் கடுமையாகத் தாக்கியது. இதில் கடுமையான காயங்கள் அடைந்த தனீஸ் அன்றிரவே தலையில் இரு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இக்கிராமத்தில் சுமார் 18,000 மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களில் முஸ்லிம்கள் வெறும்300 பேர் தான். 
முஸ்லிம்கள் பெரும்பாலும் நிலமற்ற கைவினைஞர்கள். இந்த கொலை திட்டமிட்ட முறையில் நடைபெற் றுள்ளது என்பதை அங்கு நேரடியாகச் சென்றுவிசாரித்தறிந்த உண்மை அறியும் குழு தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. முசாபர் நகர் கலவரப் புகழ மீரத் சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் மேலும்கலவரத்தை தூண்டும் வகையில் தாத்ரி சென்றுள்ளார். 
இதில் வேடிக்கை என்னவென்றால் பா.ஜ.க.எம்.எல்.ஏ. ஆன அவர் அல் துவா எனும் (?) மாட்டிறைச்சி பதப் படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத் தின் உரிமையாளர். இவர் மட்டுமல்ல பா.ஜ.கவுடன் தொடர்புள்ள பல இந்துக்கள் தான் மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் என்பது ஆச்சர்யப்படுத்தும் உண்மையாகும்.
மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் சதிஷ் சர்மா மற்றும் சபர்வால் நிறுவனத்தின் பெயர் அல் கபீர். அல் நூர் எக்ஸ்போர்ட்ஸ் எனும் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் சுனிஸ் சுட் மற்றும் அனில் சுட். 
அரேபியா எக்ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவன அதிபர் சுனில் கபூர்.
முஸ்லீம் சார்புடைய நிறுவனம் போல் தோற்றமளிக்க பெயர்களை அல் மற்றும் முஸ்லிம் தொடர்புடையதாக வைத் துள்ளனர். இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்தி வந்து காந்தியைச் சுட்டுகக் கொன்ற கோட்சேயின் வாரிசுகளல்லவா? 
எவ்வளவு குள்ளநரித் தனத்துடன் அரேபிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து கோடி, கோடியாக சம்பாதிக்கும் இவர்கள் பா.ஜ.க.வின் விசுவாசிகள். 
சமீபத்தில் சீன நாட்டுடன் பிரதமர்மோடி 2 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டு வந்துள்ளார். 
உலகத்திலேயே அதிகமான மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் 65 லட்சம்டன் மாட்டு இறைச்சி அரசின் அனுமதி யோடு ஏற்றுமதியாகிறது. மாடுகளை கொல்லாமலா இது நடக்கிறது. 
இதற்கு மோடி அரசும் அனுமதி அளித்து தானேவருகிறது .இந்நிலையில் தான் மாட்டு இறைச்சி விவகாரத்தை கையிலெடுத்து மதக் கலவரங்களை உருவாக்க பா.ஜ.க.வும், அதன் சங் பரிவாரங்களும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஆசம்கர் பகுதியில் பா.ஜ.க.வைச் சார்ந்த ஒருவர் ஒரு கோயிலுக்குள் பசு இறைச்சியை வீசிய போது கையும்களவுமாக பிடிபட்டதும், ஒரு சங் பரிவாரத் தை நபர் பர்தா அணிந்து முஸ்லிம் பெண் போன்று வேடமிட்டு மாட்டுக்கறியுடன் சென்ற போது பிடிபட்டதும் இவர்களது குள்ளநரித்தனத்தை அம்பலப்படுத்தக் கூடியவை.மாட்டு இறைச்சி உண்பவர்கள் யார்? முஸ்லீம்கள் மட்டுமா? 
கேரளாவில் பெரும்பாலான இந்துக்கள் மாட்டுக் கறியைதங்களது முக்கிய உணவாக கொள்கின்ற னர்.கேரளாவில் மாட்டு இறைச்சி ரெடி எனும் போர்டை தினமும் அசைவ கடை களில் தொங்க விடுகின்றனர். கேரள சமூகத்தில் முக்கிய அங்கமாக உள்ள இந்துஈழவ அமைப்பின்( எஸ்.என்.டி.பி) தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசன் சமீபத்தில்தான் மாட்டுக்கறி உண்டு வருவதாக கூறினார். இது ஊடகங்களில் வெளிவந்தது. 
வெள்ளாப்பள்ளி நடேசன் பா.ஜ.க.வின் கூட்டாளிகளில் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது. உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக்கறியை தின்ன அனுமதிக்க வேண்டுமென்றார் விவேகா னந்தர்.( விவேகானந்தர் உரை தொகுப்புதொகுதி 4). 
ஒரு காலத்தில் பிராமணர்கள்மாட்டிறைச்சி தின்றார்கள் (விவேகானந் தர் உரை தொகுப்பு தொகுதி 9). நமது பழங்கால வழக்கப்படி மாட்டுக்கறி சாப்பிடாத வன் நல்ல இந்து அல்ல ( விவேகானந்தர் கலிபோர்னியாவில் ஷேக்ஸ்பியர் கிளப் பில் 1900 பிப்ரவிரி 2 ல் ஆற்றிய உரை. 
விவேகானந்தர் உரை தொகுதி 3). 
விவேகானந் தரை விட மோகன் பகவத்தும் அவரது வகையறாக்களும் இந்து மத விற்பன்னர்களா? வெறும் பிளவு வாத அரசியலுக்காகவும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக வும் தற்போது மாட்டை கையிலெடுத்துள்ளனர்.அவர்களது இலக்கு பெரும்பாலும் இஸ்லாமியர்களை குறிவைத்தே இருக்கிறது. 
பசு கொல்லப்படுவதை தடைசெய்து உத்தரப்பிரதேச மாநிலம் உட்பட பல மாநிலங்களில் சட்டங்கள் உள்ளன. ஆனால் மாட்டு இறைச்சி உண்ணுவ தை தடை செய்து எந்த சட்டமும் இல்லை. மாட்டு இறைச்சி ஏற்றுமதியை தடை செய் யாதவர்கள் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்பவர்கள் தங்கள் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் மாட்டு இறைச்சியை வைத்து மக்களை பிளவுபடுத்தும், கல வரங்களை உருவாக்கும் சிறுபான்மை மக்களை குறி வைத்து தாக்கும் சம்பவங் களில் ஈடுபடுகின்றனர். 
மாட்டு இறைச்சிசாப்பிடுபவர்களுக்கு எதிராக வசை மாரிபொழியும் இவர்கள் நமது நாட்டில் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட பழங்குடி யைச் சார்ந்த இந்துக்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்பதையும், கேரளா போன்றமாநிலங்களில் கணிசமான இந்துக்களின் உணவில் முக்கிய பங்கு மாட்டுக் கறி வகிக் கிறது என்பதையும் வசதியாக மறந்து விடுகின்றனர். 
சமீப காலமாக மூட நம்பிக்கைக்கு எதிரான முற்போக்கு கருத்துக்களை பேசி வந் துள்ள எழுதி வந்துள்ள எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் கோவிந்த பன்சாரே,நரேந்திர தபோல்கர், கல்புர்கி ஆகியோர்கொடூரமான முறையில் கொல்லபட்ட நிகழ்வுகள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 
இதற்கு எழுத்தாளர் கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மத வெறி கும்பல் திட்ட மிட்டு இத்தகைய தாக்குதல்களை நடத்திவருவதனாலும், மத்திய அரசு இதற்கு உடந்தையாக இருப்பதனாலும் வருத்த முற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதுவரையிலும் 40 க்கு மேற்பட்ட எழுத் தாளர்கள் இலக்கியவாதிகள் தங்களது சாகித்ய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளனர். சிலர் சாகித்ய அகாடமி பொதுக்குழுவிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். பல எழுத்தாளர்களும் அறிஞர் களும் கண்டன கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதற்கு பிறகு தான் மோடிவாய்திறந்தார்.
 ஆனால் அவர் கூறிய தென்ன,? 
இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராகவும் சண்டை போடாதீர்கள். வறுமைக்கு எதிராக சண்டை போடுங்கள் என்றார். இந்த வார்த்தைகளின் பின்ன ணியில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. 
குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் காரர்களால் நடை பெறும் வன்முறைகளை மூடி மறைக்க மொத்த இந்துக்களின் மீது பழி போடு கிறார். இத்தகைய கொடுமைகள் மீது கண்டனம் தெரிவிக்கக் கூட மனமின்றி துர திர்ஷ்டவசமானது என்கிறார். 
தான் முத லில் ஆர்.எஸ்.எஸ். ஊழியன். இரண்டாம் பட்சம் தான் பிரதமர் என்ற அவரது வாக்கு மூலத்துக்கு ஏற்பவே அவரது செயல்கள் உள்ளன.
சங் பரிவாரம் அதன்தலைமையிலான பா.ஜ.க. அரசின் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டிய காலமிது. 
மத வேறு பாடுகளின்றி ஓங்கிய குரல்கள் ஒலிக்க துவங்கியிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அது தொடரட்டும்.
எஸ்.நூர் முகமது,
கட்டுரையாளர்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்.
====================================================================================
இன்று,
அக்டோபர்-23.
  • லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சிஆரம்பம்.(1917)
  • ஹங்கேரி தேசிய தினம்
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)
  • ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
  • முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)
  • ====================================================================================










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?