வாட்ஸ்ஆப் vs டெலிகிராம்

 எது சிறந்தது?

வாட்ஸ் ஆப் செயலிக்கு போட்டியாக வளர்ந்துவருவது டெலிகிராம் செயலி. 
வாட்ஸ்ஆப் செயலி வெளியிடப்பட்டது 2009ஆம் ஆண்டில். ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக வளர்ந்து வந்த சூழலில் 2014ல் ஃபேஸ்புக் நிறுவனம் அந்த வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்களுக்கு விலைக்கு வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இந்த பரிவர்த்தனை நடந்த 2013 காலகட்டத்தில்தான் டெலிகிராம் செயலியும் வெளியானது. ஜெர்மனியைத் தாயகமாகக் கொண்டு வெளியான இச்செயலியை உருவாக்கியவர்கள் ரஷ்யாவின் நிகோலாய் மற்றும் பவல் டுரவ்சகோதரர்கள்.
ஐரோப்பிய நாடுகளில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிகம் பயன்பாட்டில் இருக்கும் விகே எனும் சமூக வலைத்தளத்தை உருவாக்கி நிர்வகித்து வருவது இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் இவர்களின் டெலிகிராம் செயலிதான் வாட்ஸ்ஆப்பை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளது.
வெளியிடப்பட்ட காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 1 லட்சம் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தினர். 
இதன் வசதிகளால் கவரப்பட்டு தற்போது 5 கோடி பேருக்கும் மேலானவர்களால் உபயோகிக்கும் செயலியாக வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த செயலி ஒப்பன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது. 
இதன் பாதுகாப்புத் திறன் தற்போது பயன்பாட்டிலிருக்கும் வாட்ஸ்ஆப், ஹேங்அவுட், லைன் மெஸன்ஜர் போன்றவற்றைவிட பல மடங்கு அதிகமானது. டெலிகிராம் செயலியின் பாதுகாப்பில் குறை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் டாலர்கள் பரிசு வழங்குவதாக பவல் டுரவ் அறிவித்துள்ளார்.
வாட்ஸ்ஆப் - டெலிகிராம் ஒப்பீடுவாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் இரண்டிலும் நம்முடைய மொபைல் எண்ணைக் கொண்டே உள் நுழைய முடியும். 
வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் வருடம் மட்டுமே இலவசம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் இந்த மென்பொருளை உபயோகப்படுத்த 1 டாலர் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருளை முற்றிலும் இலவசமாகும். டெலிகிராம் சர்வர் கட்டமைப்பிற்கான செலவை தற்போது பவுல் டுரவ் சகோதரர்களே அளித்துவருகின்றனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில் அனுப்பப்பட்ட தகவல்களை அனுப்பியவர் அழித்தால், அனுப்பப்பட்டவரின் மொபைல் போனில் அப்படியே இருக்கும். 
ஆனால் டெலிகிராமில் ஒருவர் அழித்த செய்தி, மற்றொருவர் மொபைலிலும் அதே நேரத்தில் அழிந்துவிடும். 
இதனால் தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழிக்க முடியும்.வாட்ஸ்ஆப்பில் பிரபலமாக இருக்கும் குரூப் சேவை இதிலும் உள்ளது. வாட்ஸ்ஆப் குரூப்பில் 50 நபர்களை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் டெலிகிராமில் 200 நபர்கள் வரை குரூப் சேர்த்து செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோ ஆகியவற்றை மட்டும் தான் அனுப்பமுடியும். ஆனால் டெலிகிராமில் வீடியோ, ஆடியோ, போட்டோவுடன் பிடிஎப், டாகுமெண்ட், ஃபிளாஸ் போன்ற பல விதமான ஃபைல்களையும் அனுப்பலாம். 
அத்துடன் ஜியோ டேக் எனப்படும் மேப் வசதி மூலமாக இருப்பிடத்தை அறிய உதவும் புவிசார் குறியீட்டு எண்ணையும் இச்செயலியில் பகிர்ந்து கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன் மற்றும் இணைய பிரௌசர் மூலமாக பயன்படுத்தலாம். ஆனால், வாட்ஸ்ஆப்பை இணையதளம் வழியாக பார்க்கும்போது உங்கள் ஸ்மார்ட்போனிலும் இணைய இணைப்பு தொடர்பிலிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
டெலிகிராம் மென்பொருளை விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய கணினி இயங்கு தளங்களிலும், ஃபயர்பாக்ஸ், குரோம் இணைய உலாவிகளில் ஆட்ஆன் மென்பொருளாகவும் கிடைக்கிறது. 
இதன் மொபைல் செயலியை ஆண்ட்ராய்ட், ஐபோன், ஃபயர்பாக்ஸ், விண்டோஸ் இயங்குதள போன்களிலும், டேப்லட்களிலும் பயன்படுத்தலாம். இந்த பன்முகத்தன்மை கொண்ட வசதியின் மூலமாக எங்கிருந்தாலும் டெலிகிராம் செயலி வழியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. வாட்ஸ்ஆப் மென்பொருளில் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
ஆனால் டெலிகிராம் மென்பொருளில் உங்கள் புகைப்படங்களை உங்கள் விருப்பம் இல்லாமல் வேறு யாரும் பார்க்கமுடியாது. 
அதேபோல இதிலுள்ள சீக்ரெட் மெசேஜ் வசதியின் மூலம் அனுப்பப்படும் செய்தியை குறிப்பிட்ட நேரத்திலோ, பார்த்தவுடனோ அழிந்துவிடும் வகை யில் வசதி தரப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. 
ஆனால் டெலிகிராம் மென்பொருள் ஆங்கிலம், ஸ்பானிஸ், ஜெர்மன், ரஷ்யன், டச்சு, கொரியன், இத்தாலியன், அரபிக் ஆகிய பல மொழிகளில் தேவையானதைத் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.வாட்ஸ்ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோக்களைப் பகிரும் அளவு ஒரு கோப்பிற்கு அதிகபட்சம் 20 எம்பி ஆகும். 
அதற்கு மேலான அளவுள்ள ஃபைல்களைப் பகிர முடியாது. இதுவே டெலிகிராம் செயலியில் ஒரு கோப்பின் அதிகபட்ச அளவு 1.5 ஜிபி வரை பகிர முடியும். பகிரப்படும் கோப்புகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
ஆனால், வாட்ஸ்ஆப்பில் பழைய கோப்புகளை சேமிக்க வசதியில்லை. 
தற்போதுதான் கூகுள் டிரைவில் சேமிக்கும் வசதியை வழங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
====================================================================================
வாட்ஸ் அப்,

இப்போ என்ன செய்வீங்க?

தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று காலை வாட்ஸ்அப்பில் வேகமாக பரவிய ஆடியோ ஒன்று   ஆளும் அதிமுக இடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு அமைச்சர் ஒருவரின் பிஏ லஞ்சம் வாங்கியது தொடர்பாக அவருடன்  போலீஸ்காரர் ஒருவர் பேசும் ஆடியோதான் அது. 
வாட்ஸ்அப் ஆடியோ பேச்சு விவரம் 
காவலர்: ஹலோ வணக்கம் சார், நான் கச்சிராயபாளையம் போலீஸ் பேசறேன் சார்.
மினிஸ்டர் பிஏ: யாரது சொல்லுங்க.
காவலர்: அருண் என்பவருக்கு ராஜா பணம் கொடுத்தானே, என்ன ஆச்சு.
பிஏ: சிறிதுநேரம் யோசித்தபடி, ஓ அதுவா.
காவலர்: போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு பணம் கொடுத்திருந்தானே சார். 
பிஏ: 15ம் தேதிக்குள் ெரடியாகும்.
காவலர்: 15ம் தேதிதான் ரெடியாகுமா
பிஏ: வெயிட் பண்ணுங்க. 
காவலர்: காசு கொடுத்து 3 மாசம் ஆயிருச்சு. அதனாலதான் கேட்கிறேன். காசு கொடுத்தவன் என்ன கேட்கிறான். அதனாலதான் சார். ராஜாகிட்ட  கேட்டா பதில் சொல்லல. 
பிஏ: மினிஸ்டர் டேபிளில் பைல் இருக்கு. 113 கையெழுத்து போட வேண்டும். கையெழுத்துதான் பாக்கி.
காவலர்: ராஜா பணம் கொடுத்து விட்டானா.
பிஏ: பணம் வந்துருச்சு.
காவலர்: இதுவரை எவ்வளவு கொடுத்தான்
பிஏ: என்கிட்ட 5 பேருக்கு ₹9 லட்சம் கொடுத்திருக்கான்.
காவலர்: அப்படியா சார்.
பிஏ: ஆமா 5 பேருக்கு.
காவலர்: இந்த மாதத்திற்குள் முடிஞ்சிடுமா.
பிஏ: கையெழுத்து போட்டா, நாளைக்கே முடிஞ்சிடும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எல்லோரும் பிசியா இருக்காங்க. 
காவலர்: சீக்கிரம் முடிஞ்சிருமா.
பிஏ: இன்று கையெழுத்து போட்டால் நாளைக்கே முடிஞ்சிரும். பணம் வந்துவிட்டது. 
காவலர்: சரிங்க சார். ஓகே. பணம் வந்துட்டுல்ல சார்.
பிஏ: நமக்கு பாக்கி அமொண்ட் வரணும். முடிச்சிட்டு சொல்றேன்.
காவலர்: அவனே கஷ்டத்தில் இருக்கிறான். நான் வாங்கி ஏதோ எடுத்துக்கிட்டதா ஊரில் ஒரு மாதிரியாக நினைக்கிறாங்க.
பிஏ: என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்.
காவலர்: ராஜா தான் கொடுத்தான். எனக்கு திருக்கோவிலூர்தான். சபரீசன், சந்தோஷ்,  (இளைஞர் பாசறை) என் கிளாஸ்மேட்தான். ராஜா இங்கு  சரியில்லாத வேலை செய்கிறான். 
பிஏ: யாரு.
காவலர்: ராஜாதான் சார். நேற்று கூட இன்ஸ்பெக்டர் சொல்றார். பழகியவன் என்பதால் விடுகிறேன், என்று சொன்னார். 
பிஏ: போனில் டீலிங் செய்ய வேண்டாம். இதுவீட்டு நம்பர். நேரில் சென்னைக்கு வாங்க பேசலாம். 
காவலர்: நேற்றிரவு ஊருக்கு வந்துவிட்டதாக ராஜா கூறினான்.
பிஏ: வந்துவிட்டு கிளம்பிவிட்டேன். உங்க பேரு 
காவலர்: மகேஷ்.
பிஏ: நேம் லிஸ்ட் கவர்ல போட்டு கொடுத்து உள்ளான். 76 கையெழுத்து போட்டாக வேண்டும்.
காவலர்: ஓகே, ஓகே. கொஞ்சம் முன்கூட்டியே வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும்.
பிஏ: மொத்தமாக அமொண்ட் கொடுத்து இருக்கான். பெரிய தெய்வத்தை கவனித்து விட்டனர். குட்டி தெய்வத்தை கவனிக்க வேண்டாமா. 
காவலர்: என்ன அமொண்ட் சொல்லுங்க.
பிஏ: கவனிச்சா நல்லாயிருக்கும்.
காவலர்: இந்த நபருக்கு ஆர்டர் ரெடியாயிட்டுன்னு சொல்லுங்க, நானே சென்னைக்கு வரேன். இல்லை தம்பிய அனுப்புறேன். 
பிஏ: ராஜாகிட்ட எவ்வளவு கொடுத்தீங்க.
காவலர்: 1.80 லட்சம் கொடுத்து இருக்கேன்.
பிஏ: எங்கிட்ட ரூ.9 லட்சத்து சில்லரை கொடுத்திருக்கான். மொத்தமாக கொடுத்திருக்கிறான்.
காவலர்: சரிங்க சார்.
பிஏ: இந்த பைலுக்கு 6 பேர் கணக்குனு மினிஸ்டர் சொல்லியிருக்கார்.
காவலர்: வணக்கம் சார் . 

இந்த வாட்ஸ்அப் ஆடியோ குறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்ட போது, ஆடியோவில் பெயர் கூறப்பட்ட   மகேஷ்  என்ற காவலரை விசாரணைக்கு எஸ்பி  நரேந்திரன்நாயர் அழைத்து உள்ளார். 
விசாரணைக்கு பிறகே உண்மை என்ன என்பது தெரிய வரும், என்றனர்.  
அரசு போக்குவரத்து கழக டிரைவர்  பணிக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக அவரது பிஏ, காவலருடன் பேசும் ஆடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.
பைக் விபத்தில் காவலர் படுகாயம்

வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் காவல்நிலைய காவலர் மகேஷ்(35) என்பவரிடம் உயர் அதிகாரிகள்  பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அவர் காவல்நிலையத்தில் இருந்து பைக்கில் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்தபோது,  சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு போக்குவரத்து  பேருந்து  பைக் மீது மோதியது. 
இதில் மகேஷ் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார்.  
போலீசார் அவரை மீட்டு,  விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது பற்றி ஊடகங்கள் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.அவைகள் அனைத்தும் ஸ்டாலின் பின்னே அவரை மாட்டி விடும் செய்திக்காக அல்லவா அழைந்து கொண்டிருக்கின்றன.

===================================================================================
இன்று,
அக்டோபர்-14.

  • உலக தர நிர்ணய தினம்

  • இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
  • சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
  • விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)

===================================================================================
தமிழக அரசு முதல் இடத்தில் உள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ? 
சென்னை ஐகோர்ட் டில் கடந்த 2010 முதல் 14ம் ஆண்டு வரை 12 ஆயிரத்து 527 கோர்ட் அவமதிப்பு வழக்குகளும் மதுரை உயர்நீதிமன்றத்தில் 8 ஆயிரத்து 475 அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்றேன். சென்னை, மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழக அரசு அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை. இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்துவிட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுத்துவிட்டு சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தமிழக தலைமைச் செயலாளர் விரைவாக முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட பின்னரும் அமல்படுத்தவில்லை. அவமதிப்பு வழக்கை அமல்படுத்தாக அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்ட பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இவ்வாறு  ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளார். 
மனுவை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் இன்று விசாரித்தனர். அரசு வக்கீல் மூர்த்தி ஆஜராகி, ‘‘அவமதிப்பு வழக்கில் அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறது. எல்லாத்துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்’’ என்றார்.

 நீதிபதிகள் கூறியதாவது: 
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கும் தினந்தோறும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் நீதிமன்றத்தில் பணி பளு அதிகமாகி வருகிறது. 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு முதல் இடத்தில் உள்ளதாக தோன்றுகிறது. 
நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அப்படியிருந்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் தயங்குகின்றனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். 

எனவே, தலைமை செயலாளர் கடந்த ஓராண்டில் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத எத்தனை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். எத்தனை உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமல் உள்ளது. எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற விவரங்களை சேகரித்து அடுத்த மாதம் 23ம் தேதி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஐகோர்டில் எத்தனை அவதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற விவரங்களை ஐகோர்ட் பதிவாளர் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?