மன அழுத்தத்தை அகற்ற அடித்து நொறுக்குங்கள்.?


இன்றைய அவசர உலகில் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

மன அழுத்தத்தில் இருந்து விடுபட ரஷ்யாவில் ‘டேபோஷ்’ என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது ஓர் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி, அலமாரி, அலங்காரப் பொருட்கள், மேஜை எல்லாம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 

கவச ஆடையை அணிந்துகொண்டு, ஒரு பெரிய சுத்தியலுடன் அறைக்குள் செல்ல வேண்டும். 
விரும்பும் வரை பொருட்களை சுத்தியலால் அடித்து நொறுக்க வேண்டும்.


 இப்படிப் பொருட்களை நொறுக்கும்போது மன அழுத்தம் குறைந்து, சாதாரணமாகி விடுவார்கள். உடைத்திருக்கும் பொருட்களின் அளவுக்கு ஏற்ப 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். 


மாஸ்கோவில் ஆரம்பித்த இந்தத் திட்டம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அழிக்கப்படும் அமராவதி!


“பொன்விளையும் எங்கள் பூமியை பறித்துக்கொண்டு கேவலம் வெறும் 2,500 ரூபாய் ‘ஓய்வூதியம்‘ தருவதாக அரசாங்கம் சொல்வதை ஏற்றுக் கொண்டு எங்களால் எப்படி போக முடியும்“.“அரசாங்கத்தின் நிலம் கையகப்படுத்தும் எந்த திட்டத்தையும் ஏற்க முடி யாது.வளமான எங்கள் நிலத்தின் ஒரு சிறுபகுதியைக் கூட தர முடியாது”.“
வாழ்நாள் முழுவதும் உணவளிக்கும் தெய்வ மாம் இந்த நிலத்தைவிட்டு நாங் கள் வேறு எங்கு செல்வது?”“முதலில் பிரம்மாண்டமாக பேசி மயக் கினார்கள்; 
இப்போது எங்களுக்கு ஏதும் கிடையாது என்கிறார்கள்”.- உலகப் புகழ்பெற்ற நகரமாக - இன்னு மொரு சிங்கப்பூராக உருவாக்கப் போகி றேன் என்று மார்தட்டிக் கொண்டு தனது கனவுக் கோட்டையை நிஜக் கோட்டை யாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய தலைநகராம் ‘அமராவதி’ அமையவுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை - எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கூக்குரல் இது.அமராவதி.வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர்.
பரந்துவிரிந்து பாய்ந்தோடும் கிருஷ்ணா நதி யின் கரைகளில் அமைந்திருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை விழுங்கி, பிரம்மாண்டமாக எழ இருக்கும் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம்.
நாளையதினம் (அக்டோபர் 22) அமராவதிக்கான அடிக்கல் நாட்டுவிழா வை வெகுவிமரிசையாக நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு. நம்மூர் தலைவர்களும் கூடமகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்தி ருக்கிறார்கள்.அந்த அமராவதி அமர இருக்கும் இடம், விவசாயிகளின் வியர்வையும், ரத்தமும் நிறைந்த பூமி.ஆந்திரா, தெலுங்கானா என்று இரண் டாக பிரிந்த பின்பு, புதிய தலைநகரத்தை கண்டறிய வேண்டிய கட்டாயம் சந்திர பாபு நாயுடு தலைமையிலான ஆந்திர தெலுங் குதேசம் கட்சி அரசுக்கு ஏற்பட்டது. 
இருக்கும் நகரங்களில் ஒன்றை தேர்வு செய்து அதை இன்னும் மேம்படுத்தி, அதைச்சுற்றி தொழில்வளர்ச்சியையும், கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதைவிடுத்து புதிதாக, பிரம் மாண்டமாக ஒரு பெரிய கனவு நகரத்தை வடிவமைக்கப் போகிறேன் என்று சந்திரபாபு களத்தில் இறங்கிவிட்டார். அந்த கனவு நகரம்தான் அமராவதி.
கிருஷ்ணா நதியின் தெற்குக் கரையில் குண்டூருக்கு அருகே வளங்கொழிக்கும் நிலத்தை அழித்து அந்த மாபெரும் நகரத்தை உருவாக்குவதென முடிவு செய்தார்.இதற்காக சிங்கப்பூர் அரசுடன் பேசி, சிங்கப்பூரில் இயங்கும் பெரும் பன்னாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு திட்ட வரையறைகள் மேற்கொள்ளப்பட்டன. 
3 கட்டங்களாக அமரா வதி நகரை வடிவமைப்பதென மிகப் பெரும் மாஸ்டர் பிளான் தயாரானது. இதற்காக சந்திரபாபு பலமுறை சிங்கப்பூருக்கு சென்று வந்தார். அந்நாட்டு அமைச்சர் ஈஸ்வரன் என்பாரும் ஆந்திராவுக்கு விஜயம் மேற்கொண்டார். 
இறுதியில் திட்டப் பணி உறுதி செய்யப்பட்டது.ர 3 கட்டங்களில் முதல் கட்டத் திற்கு மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் நிலத் தை கையகப்படுத்துவது என முடிவு செய் யப்பட்டது. இதில் இவர்கள் குறிவைத்த சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலம் முற்றிலும் வளம் நிறைந்த விவசாய பூமி. இந்த பூமி என்றைக்காவது ஒருநாள் விவசாயத்தை இழந்து கட்டிடங்களாக மாறும் என்று இந்தப் பகுதியின் விவசாயிகள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு போதும் பொய்த்துப்போகாத பூமி அது.ர கிருஷ்ணா நதியின் கரைகளில் அமைந்த வளம் நிறைந்த அந்த விவ சாய நிலத்தில் வருடம் முழுவதும் சாகுபடிநடந்து கொண்டே இருக்கும்.
கிட்டத் தட்ட 120 வகையான பயிர் ரகங்கள் விளைவிக்கப்பட்ட வண்ணம் இருக்கிற அற்புத பூமி அது.ர விவசாயிகளின் மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தபோதிலும் அராஜகமான முறையில் அந்த நிலங்களை பறிப்பது எனசந்திரபாபு அரசு முடிவு செய்தது. 
அப்போது அமலில் இருந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்படி மாநில அரசு நிலத் தொகுப்பு திட்டம் என்ற ஒரு மோசடி திட்டத்தை அறிவித்தது. அதன்படி கையகப்படுத்தப்படும் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற் கும் கைமாறாக அதே நிலப் பகுதியில் 1000 சதுர மீட்டர் அளவிற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு குடியிருப்பு வசதி, 300 சதுர மீட்டர் அளவிற்கு அந்த விவசாயிகளுக்கு வணிக வளாக கட்டிட வசதி. இதுதவிர இழப்பீடாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம்என்ற வகையில் பத்தாண்டு காலத்திற்கு வழங்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப் பட்டது. இது முதலில் ஆர்வத்தை தூண் டும் அறிவிப்பை போல விவசாயிகளுக்கு ப்பட்டது.ர இந்த அறிவிப்பின்படி கிருஷ்ணா நதியின் இருமருங்கிலும் சுமார் 50 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படத் துவங்கின.
 குண்டூர் மாவட் டத்தின் 29 கிராமங்கள் முற்றாக விவசாய நிலங்களை இழந்தன.ர இந்த அனைத்துக் கிராமங்களிலும் கடந்த சுமார் 10 மாத காலமாக தெலுங்கு தேசக் கட்சி அரசின் 2 மூத்த அமைச்சர்கள் கிடையாகக் கிடந்து விவசாயிகளை வீடு வீடாகச் சந்தித்து நேரடியாகவே நிலங்களை எழுதி வாங்கினார்கள்.ர அமராவதி உருவாகிவிட்டால் இந்த விவசாயிகளின் வாழ்வு சொர்க்கமாகிவிடும் என பேசிக் கொண்டே இருந்தார்கள்.ர இப்படியாக 33 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கும் விவசாயிகளிடம் ஒப்புதல் பெற்றார்கள்.ஆனால், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக அதே விவசாயிகள்உண்மையை உணரத் துவங்கினார்கள்.இவர்களில் 16 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் சொந்தக் காரர்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு நிலத்தை ஒப்படைத் தார்கள். 
இன்று வரையிலும் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவசாயிகள் நிலத்தை ஒப்படைக்கவில்லை. ஒப் படைக்க முடியாது என்று மறுக்கிறார்கள். அவர்களை மிரட்டிப் பணிய வைக்க அரசுமுயன்றது. அதை எதிர்த்து சிலர் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். உயர் நீதிமன்றம், விவசாயிகள் தங்களது நிலங் களை உழுது பயிரிடலாம் என அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.இதனால் ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு அரசு, வலுக்கட்டாயமாக அந்த நிலங்களைப் பறிக்க தீர்மானித்தது. 
அந்த சமயத்தில்தான் மத்தியில் உள்ள மோடி அரசு நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தை முதன்முறையாக பிறப்பித்தது. உடனடியாக அந்த வாய்ப்பினைப்பயன் படுத்தி மேற்படி நிலம் அனைத்தை யும் சந்திரபாபு நாயுடு அரசு ஒரு அரசாணை பிறப்பித்து பலவந்தமாகப் பறித்துவிட்டது.அதுமட்டுமல்ல, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முதலில் சொன்னது போல நிவாரணம் எதையாவது கொடுத்ததா என்றால் அதுவும் இல்லை. நகரம் உருவா கட்டும்; அதை முற்றிலும் அழகுப்படுத்திய பிறகுதான் உங்களைப் பற்றி கவலைப்பட முடியும் என்று அராஜகமான முறையில் சந்திரபாபு நாயுடு அரசு கூறிவிட்டது.வருடம் முழுவதும் விளைந்து கொண்டிருந்த அந்த மகத்தான பூமி இப்போது கோல்ப் மைதானங்களாக, கிரிக்கெட் ஸ்டேடியமாக, விளையாட்டுப் பூங்காக் களாக, அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாறஇருக்கிறது.
வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம்வரை ஒவ்வொரு விவசாயத் தொழிலாளிக்கும் வருமானம் வந்து கொண்டிருந்த இந்த விவ சாய நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர் களுக்கும் வேலை கொடுத்து வந்தது. 
சராசரியாக மாதம் ஒன்றுக்கு விவசாயத் தொழிலாளியின் குடும் பம் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வந்தது.இப்போது இது எதுவும் இல்லை. அரசு கூறிய ரூ.2500 மாதாந்திர ஓய்வூதி யமும் இப்போதைக்கு வந்து சேரப் போவதில்லை.உருவாவதற்கு முன்பு வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறார்கள் அமராவதியின் மக்கள். விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் மட்டுமல்ல; குத்தகை உழவடைதாரர்கள், விவசாயம்சார்ந்த கைவினைஞர்கள் உள்பட பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருந்தவர் கள் முற்றாக வேலை இழந்துள்ளனர். 
இவர்களுக்கு எந்தவிதமான நிவாரணத் தையும் சந்திரபாபு நாயுடுஅரசு முன்வைக்கவில்லை.இதை எதிர்த்து கடந்த 6 மாத காலமாக மிகப் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அமராவதியின் கிராமங்களில் செங்கொடி ஏந்தி அனு தினமும் ஊர்வலமும், பேரணியும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்தியாவின் பெரும்பாலானஊடகங்கள் இந்த உண்மைகளைச்சொல்லவில்லை. ஏனென்றால், சந்திரபாபுவின்அமராவதி இந்த எளிய மனிதர்களுக் கானதல்ல; 
அது, அனைத்தையும் வாரிச் சுருட்டும் பகாசுர முதலாளி களுக்கானது.
==================================================================================

இன்று,
அக்டோபர்-21.
  • பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
  • ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)
  • தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
  • நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)


             கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், கேரள மாநில எதிர்க்கட்சித்                                                தலைவருமானவி.எஸ்.அச்சுதானந்தன்,  தனது 93வது வயதை எட்டினார். 
                                                                 வாழ்த்துகள் 

 தேங்காய் சீனிவாசன் பிறந்த தினம்

=================================================================================


டிகர் சங்கத்துக்கு சொந்தமாக, 18 கிரவுண்ட், 2,061 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, அடுக்குமாடி தியேட்டர் வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார், பொதுச் செயலராக இருந்த ராதாரவி ஆகியோர் மட்டும் ரகசியமாக எடுத்த  இந்த முடிவால், நடிகர்களிடம் சர்ச்சை வெடித்தது.
இது தொடர்பாக, நடிகர் சங்க உறுப்பினர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. சரத்குமார் அணியின் இந்த முடிவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கிய விஷால் அணி, சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றது. 
ஆதார கடிதம்இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகம் விஷால் அணி கைக்கு மாறி உள்ளது. 

தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமார், நேற்று முன்தினம், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் சங்க நிலத்தில் புதிய கட்டடம் கட்ட, எஸ்.பி.ஐ., சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தவறு இருப்பதாக விஷால் அணியினர் கூறிவரும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். 
மேலும், சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தத்தை செப்., 29ம் தேதியே ரத்து செய்து விட்டதாக கூறி, அதற்கு ஆதாரமாக, ஒரு கடிதத்தையும் செய்தியாளர்களிடம் 
காட்டினார்.

ஆனால்  பதிவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது கடந்த, 2010 நவம்பர், 25ம் தேதி, நடிகர் சங்க, 'சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில், எஸ்.பி.ஐ., சினிமாஸ் நிறுவனம் பெயருக்கு, நடிகர் சங்க நிலம், 30 ஆண்டு குத்தகைக்கு அளிக்கப்படுவதாக ஆவணம் பதிவு செய்யப்பட்டது.
தி.நகர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான ஆவணம் பதிவானது. 

இரு தரப்பினரும் ஒப்பந்தத்ததை ரத்து செய்வதாக இருந்தால், இதற்கான ரத்து ஆவணத்தில் கையெழுத்திட்டு பதிவு செய்ய வேண்டும். 
அப்போது தான் குத்தகை ஒப்பந்தம் முறைப்படி ரத்தாகும். எனவே, தற்போதைய நிலவரப்படி, இத்தகைய ரத்து ஆவணம் எதுவும் இன்னும் பதிவாகவில்லை. 
எனவே, நிலத்தின் மீதான குத்தகை உரிமை, தனியார் நிறுவனம் பெயரிலேயே உள்ளது.
என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆக சரத்குமார் தானாகே ஒரு ஒப்பந்தம் தயாரித்து கையெழத் திட்டு செப்., 29ம் தேதியேஒப்பந்தம் ரத்து என்று பேட்டியளித்துள்ளார்.அது முறையாக ரத்து செய்யப்பட ஒப்பந்த பத்திரம் இல்லை.
அதற்குள் அண்ணி ராதிகா சரத்குமாரை பற்றி பெருமைப்படுவதாகவும்,மாற்று அணியினர் இதற்காக அவமானப்பட வெண்டும் என்றும் டுவிட்டியுள்ளார்.
சரத்குமாரின் இந்த போர்ஜரி வேலைக்காக யார் அவமானப்பட வேண்டும் ?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?