இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 24 அக்டோபர், 2015

ஒளிர்கிறது நிகழ் காலம்,மிளிர்கிறது வருங்காலம்?ஒளிர்கிறது நிகழ் காலம்,மிளிர்கிறது வருங்காலம்?
ஸ்டாலினின்"முடியட்டும்,விடியட்டும் " வாசகங்களுக்கு பதில் தருவதாக நினைத்து அதிமுக உருவாக்கியுள்ள வாசகங்கள் இவை.
 ஆனால் ஒளிர்வதும்,மிளிர்வதும் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் அதிமுக கட்சியின் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் மட்டும்தான் என்பதே தமிழ் நாடறிந்த உண்மையாகி விட்டது.


தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரியது போக்கு வரத்து துறையாகும். 
16,000 பேருந்துகள், 1. 25 லட்சம் தொழிலாளர்கள் என சிறப்போடு செயல்பட்ட நிறுவனம் அம்மா வின் ஆட்சியில் சீரழிந்து கிடக்கிறது. 
தமிழகம் முழுவதும் காயலான் கடைக்கு போக வேண்டிய பேருந்துகளே பெரிதும் பயணிகளின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. 
அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் 100 சதம்கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் வயிற்றில் அடித்து, போக்குவரத்துக் கழகத்தின் கொள்ளை லாபத்திற்கு வழிவகுத் தார். ஆனால், இந்த கட்டண உயர்வால் கிடைத்த லாபம் போக்குவரத்துக் கழ கங்களின் தொழிலாளர்களுக்கோ, பேருந்துகளின் பராமரிப்பிற்கு செலவு செய்யப் பட்டதாகத் தெரியவில்லை.
ஏனெனில், ஓய்வுபெற்ற தொழி லாளர்கள் பணிப்பலன்கள் கிடைக்காமல் பட்டினி வாழ்க்கை வாழ்வது ஊரறிந்த ரகசியம். அதற்கு தீர்வுகாண அம்மாவின் அரசுக்கு நேரமில்லை.
பராமரிக்கப்படாத பேருந்துகளால் சமீபகாலமாக பொதுமக்கள் படும் அவஸ் தைக்கு எல்லையே இல்லை. அத்தோடு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
 சரியான உதிரிபாகங்கள் பொருத்தி பேருந்துகள் இயக்கப்படாததால் நடுரோட்டில் அவை நிற்பதும், ஓட்டுநரும், நடத்துனரும் கெஞ்சி கூத்தாடி பொதுமக்கள் துணையோடு பேருந்துகளை தள்ளிக்கொண்டு போவதும் வாடிக்கையாகிவிட்டது.
சமீபத்தில் வேலூருக்கு பக்கத்தில் இப்படி ஒரு பேருந்து நிற்க, ஓட்டுநர், நடத்துநர் பொதுமக்களை அழைக்க - அவர்கள் மறுக்க - முடிவில் கோழிபிரியாணி வாங்கித் தருவதாகச் சொல்லி பொது மக்களைக் கொண்டு நடுரோட்டில் நின்றபேருந்தை பணிமனைக்கு தள்ளிக் கொண்டு போயிருக்கிறார்கள் நடத்துநரும் சொன்ன சொல்லை காப்பாற்றும்விதத்தில் பேருந்து தள்ளிய பொதுமக்களுக்கு பிரியாணி வாங்கிக்கொடுத்திருக் கிறார் தனது சொந்த பணத்தில். 
இதனுடைய உச்சக்கட்டம் தான் கடந்த 21ம் தேதி திருச்சி அருகே நடை பெற்ற கோர விபத்தில் 9 பேர் மரணம்.
பல பேர் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு அவலம் நடந்தேறியது. விபத்திற்கான காரணங்களைப் பற்றி நாளிதழ்களில் வந்திருக்கக் கூடிய செய்தி இந்த அரசாங்கம் வெட்கி தலைகுனிய வேண்டியதாகும்.பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் பார்க்க வேண்டும். இதுவே பேருந்தில் பயணம் செய்யும் பணி களின் உயிருக்கு உத்தரவாதம் தரும். 
ஆனால், பேருந்துகளில் ஏற்படும் பழுது களை பராமரிக்காமல் அப்படியே தொடர்ந்து இயக்குவதனாலேயே நடுரோட்டில் பேருந்துகள் நிற்பதும், புளியமரத்தில் போய் மோதுவதும், அன்றாடம் பல பேர் செத்து மடிவதும், பேருந்துக்குள் இருக்கை உடைந்து பயணி நடுரோட்டில் கீழே விழுவதுமான சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 
இந்தியா விலேயே சாலை விபத்தில் அதிகமானோர் இறப்பதும் தமிழகத்தில்தான்.
போக்குவரத்துக் கழகங்களில் வேலைக்கு தேவையான தொழிலாளர் களை முழுமையான எண்ணிக்கையில் நிர்வாகங்கள் தேர்வு செய்வதில்லை. அப்படியே தேர்வு செய்தாலும் பொருத்தமான வேலைக்கு அவர்களை பயன்படுத்து வதில்லை. 
குறிப்பாக பராமரிப்புப் பணியில் உள்ள தொழிலாளர்களை வேறு வே லைக்கு மாற்றிவிடுகிறார்கள். ஒவ்வொரு பணிமனையிலும் உள்ள பராமரிப்பு தொழிலாளிகளை உபகரணங்கள் உள்ளஸ்டோர்களுக்கு வேலைக்கு அனுப்புவ தும், அலுவல்சார்ந்த பணிக்கு அனுப்புவதும், பராமரிப்புகள் முறையாக செய்யப் படாததற்கு காரணமாக அமைந்துவிடு கிறது. 
அத்தோடு, ஆளுங்கட்சியை சேர்ந்த வர்கள் வேலை பார்க்காமலேயே சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு பணிமனையிலும் 10 பேரை வெளி வேலைக்கு அனுப்புவதால் பராமரிப்பு தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பராமரிப்பு ப் பணிகள் செய்யப்படுவதில்லை.
பணிமனைகளில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உதிரிபாகங்களும் வாங்கி வைக்கப்படுவ தில்லை. 
நவீனமான பேருந்துகள். எனவே பராமரிப்பு தேவையில்லை என்று இதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதும் அடங்கும்.பழுதாகி நிற்கும் வண்டிகளில் உள்ள பாடாவதியான உதிரிபாகங்களை எடுத்து இயங்கிக்கொண்டிருக்கும் பேருந்து களில் பொருத்துவதும் இந்த விபத்து களுக்கு ஒரு முக்கிய காரணம். குறிப்பாக,ஓட்டுநருக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய கண்ணாடியிலிருந்து, தகுதியற்றஸ்பிரிங் பட்டைகள் வரை சர்வசாதாரண மாக கழட்டி மாற்றப்படுவதும் முக்கிய மான காரணமாகும்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பானது திருச்சியில் விபத்திற்குள்ளான பேருந்தின் அவலமாகும். அந்தப் பேருந்தில் கடந்த ஒரு மாதமாக உயரழுத்தம் வெளிச்சம் தரும் விளக்கு (பிரைட் லைட்) எரிய வில்லையாம். டிம் லைட்டின் வெளிச்சம் சில அடி தூரம் தான் தெரியும். வெளிச்சம் தராத ஒரு பேருந்தை நெடுஞ்சாலைகளில் நள்ளிரவு நேரத்தில் ஓட்டி வருவது பாதுகாப்பானதா என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருமாதகாலமாக உள்ள இந்த கோளாறை ஓட்டுநர் பதிவுச்சீட்டில் பதியாமலா இருந்திருப்பார்? அதிகாரிகளிடம் வாய்மொழியாக சொல்லாமலா இருந் திருப்பார்?தொழிலாளிகள் இதுபோன்ற புகார்களை கூறும்போது, அதிகார வர்க்கம் காட்டும் அலட்சியமே தனிரகம். இது போக, ஒவ்வொரு ஓட்டுநரும் 24 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறார். 
உதாரணத்திற்கு மதுரையிலிருந்து புறப்பட்டு கொடைக்கானல் போய், அங்கிருந்து திரும்பி மதுரை வந்து, திரும்ப மதுரையிலிருந்து கோயம்புத்தூர் போய் அங்கிருந்து திரும்ப மதுரை வர வேண்டும். இதேபோல், மதுரையிலிருந்து திருப்பூர் போய், திருப்பூரிலிருந்து மதுரை வந்து, இங்கிருந்து நாகர்கோவில் போய் அங்கிருந்து திரும்பி வர வேண்டும்.விபத்து என்பது கண்சிமிட்டும் நேரத் தில் நடக்கக்கூடியது. இப்படி 24 மணி நேர மும் கண் அயராமல் வேலை பார்க்கும் திறன் மனித உடலுக்கு இருக்கிறதா? 
இப்படித்தான் அமைச்சர்கள் வேலை பார்த் துக் கொண்டிருக்கிறார்களா? 
ஒரு அரசு துறை நிறுவனத்தில் மனித உடலுக்கு சாத் தியமற்ற முறையில் வேலை வாங்குவது நியாயம் தானா?
இதுமாதிரி சென்னையிலிருந்து குமரி வரையிலும், நீலகிரியிலிருந்து நாகப் பட்டினம் வரையிலும் இடைவிடாது சென்று வரக்கூடிய பேருந்துகளும், ஓட்டுநர்களும் உண்டு. 
சில நூறு ரூபாய் பெறக்கூடிய இந்தவிளக்குகளை கூட வாங்கி பொருத்து வதற்கு வக்கற்ற, வகையற்ற நிலையில், போக்குவரத்து நிறுவனங்கள் அம்மா வின் ஆட்சியில் மாறி நிற்கிறது. இதனால்விலைமதிப்பற்ற 9 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
 பல பேர் ஆயுள்காலஊனமுற்றவர்களாக மாறியிருக்கிறார் கள். 
இறந்தவர்களுக்கு தலைக்கு ஒரு லட்சம் ரூபாயும், அனுதாபமும் போது மா? 
போக்குவரத்து மந்திரி வாய் திறக்க வில்லை. 
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை? 
எய்தவனை விட்டுவிட்டு அம்பை நொந்து என்ன பயன்? 
தமிழகத்தின் மிக முக்கியமான போக்குவரத்து துறையின் லட்சணமே இதுதான்என்றால் இதர துறைகளின் லட்சணம்என்னவென்று தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள். 
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம். 
ஆனால், இப்படிப் பட்ட அவலங்களை மறைப்பதற்காக ஆளும் அரசு தங்களது சாதனை என்றபெயரில் வெற்று தம்பட்டம் அடிக் கும் வகையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டியழுது சாதனை வாகனங்களை தமிழகம் முழுவதும் சுற்றவிட்டிருக்கிறார்கள். 
ஆனால் தமிழக மக்களுக்கு தெரியும் ஜெயலலிதா நடத்தும்   ஆட்சி சாதனையா, வேதனையா என்று.
இதில் அடிக்கடி ஓய்வு வேறு !
                                                                                                                                                                                            -இரா.ஜோதிராம்

===================================================================================
மஞ்சள் காமாலை

பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.


சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.
=================================================================================
இன்று,
அக்டோபர்-24.


'மருது சகோதரர்கள்' துாக்கிலடப்பட்ட நாள் இன்று..


ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பாளையகாரர்களை ஒரு அணியில் திரட்டிய சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்கள் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் நாள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் ஆங்கிலேயர்களால் துாக்கிலடபட்டார்கள். அவர்கள் துாக்கிலடப்பட்ட நாள் இன்று.=================================================================================