இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 10 அக்டோபர், 2015

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்

உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??
அனேகமாக  மாரடைப்பு ஏற்ட்டு இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவர்களாகத்தான்  உள்ளனர் ! 
தனியாக இருக்கும் உங்கள்[அப்படி நடக்க வேண்டாம் .ஆனாலும் இன்றைய உலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கிறது.நம் உணவு முறையும்,உணவுப்பொருட்களில் ரசாயன கலப்புகளும் அந்நிலையை உண்டாக்கி விட்டன] இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. 
இந்நிலையில் நீங்கள் செய்ய வெண்டியது என்ன?
முதலில் மனதில் இருந்து பயத்தை போக்குங்கள் .ஒன்றும்  ஆகி விடாது.இந்நிலையை நீங்களே சமாளித்து விடலாம்.என்ற மனபலத்தை உண்டாக்குங்கள்.
அடுத்து  நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், 
அத்துடன் ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , 
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது .
 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இதயம் சீரடைந்ததாகவும்,மார்பில் வலி குறைந்ததாகவும்,இயல்பு நிலை வந்து விட்டதாகவும் நீங்கள் உணர்ந்ததும் உடனே அருகில்  உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
இது பலர் செயல்படுத்தி பார்த்து அதிக அளவு பயனளித்த முறை.
இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது கூறுங்கள்..
தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் நண்பர்களே!
நன்றி:மருத்துவ குறிப்புகள்.
=================================================================================
இன்று,
அக்டோபர்-11.
  • உலக பெண் குழந்தைகள் தினம்
  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)
  • ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)
  • ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியூயார்க்கிற்கும் நியூஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது(1811)
  • நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)

 மனோரமா.........................

ஆச்சி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, நடிகை மனோரமா( வயது 78) 10.10.2015 நள்ளிரவு 12 மணிக்கு மேல் காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்சினிமாவின் தன்னிகரற்ற நடிகை மனோரமா, 1,500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் விழாவில் பங்கேற்கும் அளவிற்கு உடல் நலம் பெற்றிருந்தார். மீண்டும் சினிமாக்களில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித் தார். இந்நிலையில் அவர் மறைந்தது கலைத்துறையினரையும், ரசிகர்களையும் வருத்தப் பட வைத்திருக்கிறது.

மனோரமா! இவரது இயற்பெயர் கோபிசாந்தா. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 26.5.1943 ல் பிறந்தார். இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமாவின் குடும்பத்தினர், அவர் சிறு வயதாக இருக்கும்போதே காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர். நாடகங்களில் நடித்து அதன் மூலமாக திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வந்தார்.

ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் மனோரமா. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் மனோரமா. 2002ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 1988ம் ஆண்டு, புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை என்று தேசிய திரைப்பட விருது பெற்றார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, பிலிம்பேரின் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். 
தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். 
ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.
ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். 
அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். 
இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.
திரைப்படத்துறையில் அவரது பயணம்
அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 
அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். 
இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.

கலையுலக வெற்றிப் பயணம்
தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.

1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். 
இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,  எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.

தனிப்பட்ட வாழ்க்கை
சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும்

தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். ரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். 
குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.


நடித்த சில முக்கியபடங்கள்:

5 தலைமுறை நடிகை

*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )
*தில்லானா மேகனம்பாள்
*களத்தூர் கண்ணம்மா
*திருவிளையாடல்
*அன்பேவா
*கந்தன் கருணை
*கலாட்டா கல்யாணம்
*காசேதான் கடவுளடா
*முகமது பின் துக்ளக்
*அனுபவி ராஜா அனுபவி
*பாட்டி சொல்லை தட்டாதே
*சம்சாரம் அது மின்சாரம்
*சின்னக்கவுன்டர்
*அபூர்வ சகேதாரர்கள்
*எஜமான்
*மன்னன்
*அண்ணாமலை
*ரசிகன்
*சின்னதம்பி
*சூரியன்
*கிழக்கு வாசல்
========================================================================================
                       மாட்டை அடிக்கக் கூடாது,மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது .இப்படியே போனால் 
                                                       இப்படி ஒரு நிலை ஏன் வராது?

=================================================================================

கேழ்வரகு.

மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம். பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது மற்றும் இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர்.

ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களிலேயே சத்து அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும். பரவலாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பொதுவாக தென் இந்தியாவின் அனைத்து பகுதியினர் அடுப்பங்கரையிலும் இருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும்.

இந்தியா முழுவதும் பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இது தான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது.

இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. ஆகவே க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ் வரகு மிகவும் சத்தான தானி யங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும். அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது. இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

எடை இழக்க :
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது. இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.

ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.

நீரிழிவு நோயைக் குணப்படுத்த :
கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.


ரத்தத்தில் கொழுப்பை குறைக்க :
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

ரத்த சோகையைக் குணப்படுத்த :
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

சோர்வைப் போக்க :
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

புரதச்சத்து/அமினோ அமிலங்கள் :
உடலின் இயல்பான செயல் பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.

பிற ஆரோக்கிய நிலைமைகள் :
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த :
கேழ்வரகை வறுத்து உண வோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.

இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது. ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கிறான். அதனை கவுரமாகவும் எடுத்துக்கொள்ளும் கட்டாயத்திலும் இன்றைய மனித வாழ்க்கை முறை மாறி வருகிறது.

அதனால் ஏற்படும் மாற்றம் நோய் :
எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்திக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் “வைரமுத்து சிறுகதைகள்” நூலினை கலைஞர் வெளியிட உலகநாயகன் பெற்றுக் கொண்டார்.