இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 28 ஜனவரி, 2016

இது ஜிகாத் இல்லை."ஜிகா".

கொசுக்கள் மூலம் பரவும் 'ஜிகா' என்ற புதிய வைரஸ், 25 நாடுகளை மிரட்டத் தொடங்கி உள்ளது. கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளை சமீப காலமாக மிரட்டி வருகிறது இந்த வைரஸ். 
'ஜிகா' என பெயரிடப்பட்ட இந்த வைரசால் தாக்கப்பட்டால், கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு நரம்பியல் தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. 
உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) இதற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 
கரீபியன் நாடுகளுக்கு செல்வோர் உஷாராக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களை பரப்பும் 'குடும்பத்தை' சேர்ந்தது ஜிகா வைரசும். 
பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பராகுவே, அமெரிக்க வர்ஜின் தீவுகள், வெனிசூலா ஆகிய நாடுகளும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த நோய்க்கான  எதிர்ப்பு சக்திஇயற்கையிலே  இந்தியர்களுக்கு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.அந்த அளவுக்கு நமது சுகாதாரத்துறை நம்மை சுகாதார சீர்கேட்டுகளுக்கிடையே வாழ வைத்து எதிர்ப்பு சக்தியைஉண்டாக்கியுள்ளது. . 

டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் தான் இதற்கும். 
காய்ச்சல், தலைவலி, சிவந்த கண்கள் போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.
ஜிகா வைரஸ் தாக்கினால் லேசான காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். 
 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தெரியாது. 
அதுவும்  கர்ப்பிணி பெண்களுளால் ஜிகா வைரஸ் தாக்குதல் பாதிப்பை கண்டுபிடிப்பது சிரமம். 
ஆனால் பாதிப்பு தீவிரம். இந்த வைரஸ் பற்றி ஆய்வுகள்  இப்போதுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஜிகா காய்ச்சல் எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் பற்றியும்  இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 
ஆனால் இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் ‘மைக்ரோசெபாலி’ பாதிப்புடன் பிறக்குமா என்ற ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மைக்ரோசெபாலி பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும். 
இதை வாழ்நாள் முழுவதும் சிகிச்சையால் சரி செய்யவே முடியாது.  பாதிப்பு தீவிரமாக இருந்தால், அந்த குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை அளிக்க வேண்டியிருக்கும். 
இதனால் எல் சல்வடார் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் பெண்கள் இன்னும் 2 ஆண்டுகளுக்கு கருத்தரிப்பதை தவிர்க்கும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
உலகம் முழுவதும் ஜிகா வைரசால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கெடுக்கப்படவில்லை என உலக சுகாதார  நிறுவனம் தெரிவித்துள்ளது


=========================================================================================
இன்று,
ஜனவரி-28.


  • சர்வதேச தொழுநோய் தினம்
  • அர்மேனியா ராணுவ தினம்
  • சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
  • இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
  • அலெக்சாண்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)

=========================================================================================

கருப்பை புற்றுநோய் 

-குணமாக்கும் "ஓலாபாரிப்"

புகையிலை பழக்கத்துக்கு ஆளான ஆண்களைக் காட்டிலும் அதிகமான பெண்கள் மார்பகம் மற்றும் கருப்பை சார்ந்த புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். உலகுக்கு புதிய உயிர்களை அறிமுகப்படுத்தும் தாய்மார்களின் கருவறை புற்றுநோயின் தாக்கத்தால் கரையானால் அரிக்கப்பட்ட மரப்பொருட்களாக அழிந்து, சிதைந்துப் போக நேரிடுகிறது.
இதற்கு ஒரே தீர்வாக கருப்பையை முழுமையாக அகற்றி விடுவதே வாடிக்கையாக உள்ள நிலையில் இந்நோயை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ வேறு வழியில்லை என்ற நிலைதான் நீடித்து வருகின்றது. இதை தவிர்க்கும் வகையில் உலகிலுள்ள பல்வேறு முன்னணி மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்திவந்தன.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்ராஜெனெகா நிறுவனம் கருப்பை புற்றுநோயின் தாக்கம் மேலும் பரவாமல் தடுக்கும் புதியவகை மருந்து ஒன்றை கண்டுபிடித்தது.
ஓலாபாரிப் (olaparib) என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தின் மாதிரியை அந்நாட்டின் மருந்து கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பி வைத்தது. இது புற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாம்கட்ட வளர்ச்சியை 82 சதவீதம் கட்டுப்படுத்தும் என மதிப்பிடப்பட்ட நிலையில் விலை சற்று அதிகமாக இருந்ததால் ஆஸ்ராஜெனெகா நிறுவனத்துடன் அரசு அதிகாரிகள் இதுதொடர்பாக விவாதித்து வந்தனர்.
இறுதியாக, இதில் உடன்பாடு ஏற்படவே, ஓலாபாரிப் மாத்திரைகளை விற்பனை செய்ய இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. கதிர்வீச்சு சிகிச்சைக்கு பின்னரும், அறுவை சிகிச்சைக்கு முன்பும் இரண்டாம்கட்ட சிகிச்சை தேவைப்படும் பெண்களுக்கு இந்த மாத்திரைகளை பரிந்துரைக்கலாம் என இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த அனுமதியானது உலகம் முழுவதும் கருப்பை புற்றுநோயுடன் போராடிவரும் லட்சக்கணக்கான பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
=================================================================================================

==================================================================================================

கட்சிக்கொள்கைகளுக்கு மாறாக [?]நடந்ததால் பழ.கருப்பையா 
 அதிமுகவில் இருந்து நீக்கம்.
============================================================================================
பருத்தி. ‘வெள்ளை தங்கம்’ 
இந்தியாவில் பண்டைய காலந்தொட்டு நெடுங்காலமாக பயிரிடப்பட்டு வரும் பயிர் பருத்தி. அதுமட்டுமல்லாமல் பணப்பயிர் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பருத்தி. ‘வெள்ளை தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி நல்ல லாபத்தை கொடுப்பதால் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மத்திய இந்திய பகுதிகளிலும் தென் இந்திய பகுதிகளிலும் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. விதவிதமான ஆடைகள் தயாரிக்க இதன் தேவையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உலக அளவில் பருத்தி உற்பத்தியை பற்றி சில தகவல்கள்…


பருத்தியை 7,000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மெக்ர்காக் என்று புதிய கற்காலத்தில் பருத்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. பருத்தி துணிகளை முதன்முதலில் மெக்ஸிகோ நாட்டில்தான் கண்டுபிடித்துள்ளனர். தொழில் புரட்சிக்கு பிறகு இங்கிலாந்தில் பருத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதையொட்டி அதிக டெக்ஸ்டைல் நிறுவனங்களும் வரத் தொடங்கின. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அதிக அளவு பருத்தி இந்தியாவிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆங்கிலேயர்கள் பருத்தி ஆடைகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய பலத் தடைகளை விதித்தனர். உற்பத்தி செய்யப்படும் பருத்தியை இங்கிலாந்திற்கு அனுப்பினர். இதை எதிர்த்த மகாத்மா காந்தி பருத்தி ஆடைகள் இந்தியாவின் பாரம்பரியம் என்று காதி இயக்கத்தை கொண்டுவந்தார். அதன் பிறகு பருத்தி ஆடைகளை இந்தியர்கள் பயன்படுத்த தொடங்கினர். சுதந்திரம் பெற்ற பிறகு பருத்தி உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு வரும் அளவிற்கு உற்பத்தி வளர்ந்துள்ளது.
தொழிற் புரட்சி காலத்தில் பருத்தி ஆலையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை காட்சிக்கும் வைத்திருக்கிறார் உற்பத்தியாளர்.
இப்போது நாம் பயன்படுத்தும் ஆடை வகைகளில் மரபணு மாற்றப்பட்ட பி.டி.காட்டன் பருத்தி வகைதான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பி.டி.காட்டன் என்பது பேசிலஸ் துரின்ஜினீஸ் என்ற பாக்டீரியத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பருத்தி விதை. அதிக மகசூலை ஈட்டுவதற்காக இந்த மரபணு மாற்றப்பட்ட விதையை மான்சாண்டோ நிறுவனம் கண்டுபிடித்தது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேக்யோ என்ற பயோடெக்னாலாஜி நிறுவனம் மான்சாண்டோ விதையை விநியோகம் செய்து வந்தது. பின்பு சுற்றுச்சூழலுக்கு கேடு என்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து பி.டி.காட்டன் விதைகளுக்கு மகாராஷ்டிர அரசு தடை விதித்து நாட்டு விதைகளை ஊக்குவித்தது. பின்பு 2013-ம் ஆண்டு அந்த தடையை நீக்கியது.