இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 12 அக்டோபர், 2015

நிலக்கரிச் சாம்பல்நிலக்கரிச் சாம்பல் என்ற கழிவு...

கழிவுகள் என்றாலே எல்லோருக்கும் அலட்சியம். அதனால் என்ன பயன் என்பதுஅனைவரின் எண்ணத்தில் பொதிந்துள்ள ஒரு கருத்தாகும். 
அந்தச்சொல் உணர்த் தும் பொருள்தான் அதற்கு காரணம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.மனிதகுலவளர்ச்சியில் நாகரீகம்வளரவளர கழிவுகளும் சேரத்தொடங்கி விட்டன. அதைப்பயன்படுத்திட வேண் டாமா? 
கழிவுகளை பயன்படுத்துவதா என்று அசூசை அடைந்தவர்கள் உண்டு.அனல் மின்சாரம் என்றால் நிலக்கரியை எரிபொருளாகக்கொண்டு நீரை ஆவியாக்கி அதன் அழுத்தம் மூலம் ஜென ரேட்டரை இயக்கவைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.உலகத்தில் பெரும்பான்மையான மின் சாரத் தேவை அனல் மின்சாரம் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது.
சீனா தான்12 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக் கின்றது. 
இதில் 70 சதவீதம் அனல் மின்சா ரம் தான்.இந்தியாவில் அனல் மின்சாரம் மூலம் 60 சதவீதம் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது,இதற்கு தேவையான எரிபொருள் பூமிக்கடியில் கிடைக்கும் நிலக் கரி கனிமம் ஆகும்.நிலக்கரி எரிந்தால் சாம்பல் கிடைக்கும். வெப்பத்தை அளித்துவிட்டு கழிவு ஆகஉள்ள சாம்பலை என்ன செய்வது? 
அதுவும் இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரி இதர நாடுகளில் கிடைக்கும் நிலக்கரியை விடகுறைந்த வெப்ப சக்தி உடையது. 
அத னால் சாம்பல் கழிவு அதிகமாக விழும்.இந்தச் சாம்பலை நிலக்கரி வெட்டி எடுத்த பள்ளத்தில் கொண்டுபோய் கொட்டி நிரப்ப முடியாது. காரணம் நிலக்கரி கிடைக்கும் இடத்திற்கும் மின்நிலை யங்கள் அமைந்துள்ள இடத்திற்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் உள் ளது.
நிலக்கரியை அனல் மின்நிலையத் திற்கு கொண்டு வந்து சேர்ப்பது ரயில்வே துறையின் வேகன் மூலம் தான். அதுவும் பற்றாக்குறையாக உள்ளது.
ஒரு டன்னா இரண்டு டன்னா சாம் பலை அலட்சியப்படுத்திட, இந்தியாவில் 2010 ஆம்ஆண்டில் மட்டும் 30 கோடி டன் நிலக்கரியை அனல் மின்நிலையங்கள் எரித்ததில் 11 கோடி டன் சாம்பல் கிடைத் துள்ளது. தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் நிலக்கரி எரிக்கப்படுகின்றது என்றால் அதில் 35 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் டன் வரை சாம்பல் விழுகின்றது.உலகத்தில் கிடைக்கும் நிலக்கரி இருப்புகளில் 4 வது இடத்தில் இந்தியா இருக்கின்றது.
 இந்தியாவில் 200 பில்லி யன் டன் வரை நிலக்கரி பூமியில் உள்ளது. ஆண்டுக்கு 60 கோடி டன் வரை நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றது. 
அது வெப்ப சக்தி குறைவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் பொதுத்துறையான பெல் நிறுவனம் அனல் மின் நிலையத்திற்கான கொதிகலனை தயாரிக் கின்றது.
அனல் மின்நிலைய சாம்பல் என்பது 90 சதவீதம் வரை எரிந்த சாம்பல். அதன் குரு ணை உருளைபோன்று 05 மைக்ரான் அளவிற்கு இருக்கும். எனவே இந்த சாம்பலை செயற்கை ஏரி அமைத்து அதில் தான் சேமித்து வைக்கமுடியும். அதையும் சரிவர பராமரிக்க வில்லை என்றால் சாம்பல் புயல் கிளம்பி டும். 

அனல் மின்நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளிகள் தான் இந்த சாம்பல் எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சாம்பல் தூசியினால் நேரடியாக பாதிக்கப்படும் தொழிலாளிக்கு வழங்கப்படும் ஊதியமோ மிக குறைவானது,சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டிய மின்சார வாரியம் அதிலும் தவறியிருக்கின்றது.
உலகம் முழுவதுமே இது தீராத தலைவலி. இத்தலைவலியைப்போக்கிட கண்டு பிடிக்கப்பட்டது தான் அச்சாம்பலை பயன்படுத்த முடியும் என்பதாகும். முதலில் சாலை அமைத்திடவும் பிறகு கட்டுமானகற்கள் தயாரித்திடவும் பயன்பட்ட நிலை மாறி தற்போது சிமெண்ட் தயாரிக்கும் தொழிலில் பயன்படுத்திட முடிவு செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் அனல் மின்நிலையங்களின் சாம்பல் சிமெண்ட் தொழிலில் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. 
உலகின் இதர நாடுகளில் கிடைக்கும் நிலக்கரிச் சாம்பலை விட இந்திய மண்ணில் கிடைக்கும் சாம்பல் அதிக மகத்து வம் கொண்டது. இந்தியாவில் மக்களின் ஆன்மீகத்திற்கு உதவுவதும் திருநீறு என்ற சாம்பல் தான்.இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரிச் சாம்பலில் இல்லாத கனிமங்களே கிடை யாது.
அலுமினியத்தாது 10 முதல் 15 சதவீதம் வரை உள்ளது. 
சிலிகா என்ற மணல், சுண்ணாம்புச்சத்து, கந்தகம், பாதரசம், காட்மியம், குரோமியம், ஆண்டி மோனி, ஈயம், மக்னீசியம், இரும்பு, டின், மாலிப்டினியம் என்று நிலத்தில் கிடைக் கும் 92 தனிமங்கள் இதில் உள்ளன.ஆனால் சாம்பல் என்பதும் அதனால் வெளியேற்றப்படும் புளுகேஸ் என்ற புகையும் கடுமையாக மக்களுக்கும் விவசாயத்திற்கும் மரங்களுக்கும் தாவரங் களுக்கும் ஆபத்தானது. 
ஏன் பூமிக்கும் ஆபத்தானது. சிறு குருணை போன்ற துகள் நுரையீரலில் சென்று தங்கி பல ஆபத்துக்களை உருவாக்கும். 
நுரையீரல் புற்றுநோய்,பிரான்கிடிஸ் போன்ற நோய் கள் வரும்.இருந்தாலும் இது வாழ்க்கை என்ற வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது.புளுகேஸில் வெளியேறும் சாம்பல்துகள்கள் எரிமலையில் வெளியேறும்துகள் போன்று 100 கி.மீ வரையில்பறந்து செல்லும் வல்லமை படைத்தது.
அனல் மின் நிலையங்கள் அமைந்துள்ளபகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு நுரையீரல் சம் பந்தப்பட்ட நோய்களுக்கும் சுகாதாரக் கேடுகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
 கடலில் விழும் சாம்பல் நீரினால் ஏற்படும் மாசுவினால் மீன், இறால் போன்ற உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
அதே சமயத்தில் நிலக்கரிச்சாம்பல் வியாபாரப்பொருளாக மாறிவிட்டது. 
அதிமுக அமைச்சர்கள் தலையிட்டு தனக்கு சாம்பல் வியாபாரத்தை அளித்திட வேண் டும் என்று மின்வாரியத்தை நிர்ப்பந்தப் படுத்தும் அளவிற்கு இதன் மகத்துவம் மாறிவிட்டது.இன்றைய நிலவரப்படி இந்தியாவில் உள்ள அனைத்து சிமெண்ட் ஆலைகளும் நிலக்கரிச்சாம்பலை பயன்படுத்து கின்றன. தமிழகத்தில் உள்ள ராம்கோ, ஜூவாரி, இந்தியா சிமெண்ட், ஜேபிசி மெண்ட், அரசு சிமெண்ட், ஏசிசி, அல்ட்ராடெக், கிராசிம், செட்டிநாடு போன்ற கம்பெனிகள் இதில் அடக்கம். 
விவசாயத்திற் கும் உரமாக ஒருசிறிய அளவு பயன்படுத்தப்படுகின்றது.
சுவற்றுக்கான டிஸ்டெம்பருக்கும் ஆஸ் பெஸ்டாஸ் செய்திட வும் உதவுகின்றது.சிமெண்டில் உள்ளிடைப்பொருளாக இந்த சாம்பல் 35 சதவீதம் வரை சேர்க் கப்படுகின்றது. துவக்கத்தில் ரூ. 80 என்றுஒரு டன் சாம்பல் விலைக்கு எடுத்துச் செல்லும் நிலை இருந்தது. இன்றைய நிலவரப்படி சாம்பல் லாரிகளில் எடுத்துச்செல்லும் வாடகை இல்லா மல் ஒரு டன் சாம்பல் ஆனது ரூ. 500 லிருந்து 850 வரை மின்வாரியத்திற்கு விலையாக கிடைக்கின்றது.
தமிழகத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் சாம்பலை எடுத்துச்செல்கின்றன. இதில் இதையொட்டி நான்காயிரம் தொழி லாளர்கள் வரை வேலைசெய்கின்றனர். இந்தச்சாம்பலை சிமெண்ட் ஆலைகள் எடுத்துச்செல்லவில்லை என்றால் அதை நீருடன் கலந்து குழாய் மூலம் சாம்பல் ஏரிக்கு கொண்டுசென்று சேமித்து வைக்கவேண்டும். 
ஒரு டன் சாம்பல் வெளியேற்ற 10 யூனிட் மின்சாரம் செலவாகும். ஆனால் சிமெண்ட் தயாரிக்கப் பயன் படுத்துவதால் மின்சாரம் செலவாவது தவிர்க்கப்படுகின்றது.மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஒருநாளைக்கு 4 ஆயிரம் டன் சாம்பல் வருகின்றது என்றால் 42 ஆயிரம் யூனிட் மின்சாரம் மிச்சமாகின்றது.
இதேபோன்று தமிழகத்தின் அனைத்து மின்நிலையங்களிலும் கணக்கு செய்தால் அனல் மின்நிலையத்தின் உற்பத்தியில் தன்தேவைக்கு செலவிடப்படும் மின்சாரத்தின் அளவு ஒரு சதவீதம் குறை கின்றது. இது போக சாம்பல் ஏரிகளில் சாம்பல் சேமித்து வைத்து பராமரித்திட ஒரு டன்னுக்கு ஓர் ஆண்டிற்கு ரூ.140 வரை ஆகும்.இவை அத்தனையும் வாரியத்திற்கு உண்டான செலவுகள். சிமெண்ட் ஆலை கள் சாம்பலை விலை கொடுத்து எடுத்துச் செல்வதால் மின்வாரியத்தின் செலவு குறைகின்றது. இதனால் வாரி யத்திற்கு வருமானம் வருகின்றது.
ஓராண்டில் சாம்பல் விற்பது உட்பட மறைமுகச்செலவுகள் இல்லாத காரணத்தினால் மின்வாரியத்திற்கு 300 கோடியி லிருந்து 350 கோடி ரூபாய் வரையில் வரு மானம் வருகின்றது. இந்த வருமானம் வாரியத்திற்கு எதிர்பார்க்காமல் வருகின்ற வரு மானம்.மத்திய அரசானது அனல் மின்நிலையத் தின் சாம்பலை இலவசமாக சிறு தொழிற் சாலைகளுக்கும் மக்களுக்கும் வழங்கிடவேண்டும் என்று சட்டத்தை இயற்றியுள்ளது. 
இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிலை என்ன? அனல் மின்நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளிகள் தான் இந்த சாம்பல் எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சாம்பல் தூசியினால் நேரடி யாக பாதிக்கப்படும் தொழிலாளிக்கு வழங் கப்படும் ஊதியமோ மிக குறைவானது.சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டிய மின்சாரவாரியம் அதிலும்தவறியிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். அனல் மின்நிலையத்தின் சாம்பல் சுகாதாரக்கேடுகளை உரு வாக்கி வருகின்றது. 
தாவரங்களின் இலைகள் மீது சாம்பல் படிந்து ஒளிச்சேர்க்கை செய்வதற்கு வாய்ப்பில்லாத காரணத்தி னால் உணவு தயாரிக்க முடியாமல் தாவரங்களின் வளர்ச்சி குன்றுதல் உட்பட உணவுஉற்பத்தியையும் பாதிக்கின்றது.
இந்த பாதிப்புகள் அனல் மின்நிலையம் இருக்கும் சுற்று வட்டார மக்களுக்கு அளிக்கும் பரிசாக உள்ளது. இந்த சாம்பல் கழிவு சமூகத்திற்கு பல்வேறு துன்பங்களை உருவாக்கி வருகின்றது. இந்தச் சூழலை ஓரளவு சமூக அக்கறையுடன் மின்வாரியம் பார்ப்பது நல்லது. தமிழக அரசு இதற்கான வழிகாட்டுதலை உருவாக்கவேண்டும். 
சாம்பலை விற்று அதன் மூலம் எதிர் பார்க்காமல் வருகின்ற வருமானத்தை சாம்பல் மாசுவினால் பாதிக்கப்படும் மக்க ளுக்கே செலவிடுவது சரியாக இருக்கும்.வடசென்னை அனல் மின்நிலையம் இருக்கிறது என்றால் அருகிலேயே எண் ணூ ர், வல்லூர் அனல் மின்நிலையமும் உள்ளன. ஒரே இடத்தில் 3700 மெகா வாட் மின்நிலையம் உற்பத்தி செய்யும் சாம்பலினாலும் அதற்கு தேவையான நீர்எடுப்பதினாலும் அப்பகுதியே சுற்றுப்புறச் சூழலினால் நாசமாகி வருகின்றது. அப்பகுதி வாழ்வதற்கே தகுதியற்ற பகுதியாகசிறுகச் சிறுக மாறிவருவது கவலைக்குரிய ஒன்று. 
இதனால் அப்பகுதி மக்களுக்கு நல்ல குடிநீரை ஏற்பாடு செய்வது. இப்பகுதிகளில் புற்று நோய் பாதிப்பிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சாம்பல்ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. அதற்கேற்ற சிறப்பானமருத்துவமனை அமைத்துக்கொடுப்பது, சாலைகள் மற்றும் நீர் நிலைகளை பாது காப்பது,கல்வி நிலையங்கள் அமைத்துக் கொடுப்பது,குழந்தைகளுக்கும் கர்ப் பிணிப் பெண்களுக்கும் ஊட்டச்சத்து வழங்குவது போன்ற சமூக நடவடிக்கை களை எடுப்பது சரியாக இருக்கும். 
இதே போன்று அனல் மின்நிலையங்கள் அமைந் துள்ள துhத்துக்குடி, மேட்டூர் பகுதிகளிலும் இதற்கான முயற்சி எடுத்தல் நல்லது. 
                                                                                                                                 -கே .விஜயன்,
கட்டுரையாளர்:தலைவர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு
==================================================================================
இன்று,
அக்டோபர்-12.
  • ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
  • கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
  • சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)==================================================================================