இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 16 ஜனவரி, 2016

கோல்கேட் ;தரும் புற்று நோய் அதிர்ச்சி,உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழிகளுள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒன்று தான் தமிழ்மொழி. 
இதனை உணர்த்தும் விதமாக உலகின் பல இடங்களில் தமிழ்மொழியின் வடிவத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல கிடைத்துள்ளன. 
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. 
ஆகவே தமிழ்மொழியானது சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முன்பிருந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 
இதுப்போன்று இன்னும் ஏராளமான சிறப்புக்களைக் கொண்டிருப்பது தான் தமிழ்மொழி. 

உலகில் சுமார் 72 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமிழ்மொழியை பேசுகின்றனர்.

தற்போது உலகத்தில் தமிழ் பேசும் மக்களில் கால் அளவு மக்களுக்கு தமிழைப் படிக்கவோ, எழுதவோ தெரியாது.

நம் தமிழ்மொழி திராவிட குடும்பத்தை உருவாக்கிய  ஓர் முதன் மொழியாகும்.

தமிழ்மொழி தமிழ்நாடு தவிர இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா  மற்றும் பாண்டிச்சேரிகளில்  அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

மேலும் இப்பகுதிகளில் தமிழ்மொழியே அரசு அலுவல் மொழியாக உள்ளது.

உலகில் 6809 மொழிகள் உள்ளன. அதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700, தனி எழுத்துக்களைக் கொண்ட மொழிகள் 100. அதில் ஆறு பொது மொழிகள். அவை ஹிப்ரூ, கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம், சீன மற்றும் தமிழ். 

ஆனால் அதில் தமிழ், சீன மற்றும் ஹிப்ரூ மொழிகள் தான் இன்று வரை பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றது.சமஸ்கிருதம் இந்தியாவில் கோயில்களில் பூசை செய்ய மட்டுமே அந்தண்ரகளால் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

உலகில் மனிதர்களுக்கு தெரிந்த முதல் மொழி தமிழ் என்பதை ஆய்வாளர் அலெக்ஸ் கோலியர் கூறுயிருக்கிறார்.

தமிழ்மொழியானது கிட்டத்தட்ட 22 விதமாக மக்களால் பேசப்பட்டு வருகிறது.

உலகிலேயே இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் மட்டும் தான். எப்படி தமிழ் எழுதப்பட்டதோ, அதேப் போல் தான் இன்று பல மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன.

இதுவரை இந்தியாவில் கிடைத்த 1 லட்சம் கல்வெட்டுக்களில் 60,000-த்திற்கும் அதிகமானவை தமிழிலும், மற்ற மொழிகள் 5 சதவீதத்திற்கும் குறைவான கல்வெட்டுக்களையும் கொண்டுள்ளன. இதிலிருந்து குமரி கண்டத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்று கூறலாம்.

தமிழ் மொழியைக் கற்கும் போது, முதலில் நாம் கற்கும் எழுத்து அ, அதேப் போல் முதற்சொல் 'அம்மா'. இதை யாராலும் மறுக்க முடியாது. இச்சொல் தமிழ் கோட்பாட்டைப் பிரதிபலிக்கிறது. எப்படியெனில், அ என்னும் எழுத்து உயிர் எழுத்தையும், ம் என்னும் எழுத்து மெய் எழுத்தையும், மா என்னும் எழுத்து உயிர்மெய் எழுத்தையும் குறிக்கிறது.

ஆனால் சில அரசியல்வா[வியா]திகளால் இன்று அந்த அருமையான சொல் அதிகமாக வேறு  அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டு மற்றவர்கள் அதை பயன் படுத்த யோசிக்கும் அளவு அசிங்கப்படுத்தப்பட்டு உள்ளது.
==================================================================================================

பாகற்காய்

பரபரப்பான வாழ்வில், உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிடும் போது, உடல் ஆரோக்கியம் நிலையாக இருக்கும். 
இனிப்பு.எரிப்பு,உவர்ப்பு சுவைகளை அன்றாடம் உண்ணும் நாம் கசப்பு சுவையை சேர்ப்பதில்லை.ஆனால் அச்சுவை மிக்க உணவுப்பொருட்கள்தான் உடல் ஆரோக்கியத்தை கொண்டு வருகிறது.
உடலில் சர்க்கரை நோய் போன்ற நோய்கள்  உண்டாக்காமல் செய்கிறது.
இதில், பாகற்காய், உடலுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. 
சிலர் இதனை கசப்பு காய் என்று ஒதுக்கி வைப்பது வழக்கம். குழந்தைகளும் தயக்கம் இல்லாமல் பாகற்காயை சாப்பிட வேண்டும். 

கசப்பு சுவை மிகுந்த இந்த பாகற்காயை, குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில், துவையல், வத்தல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 
இதில், வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா- கரோட்டின் போன்ற ப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. 
சுவாசக்கோளாறுகள் நீங்கும்: 
பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில், மிகச்சிறந்த 
நிவாரணியாகப் பயன்படுகிறது. 
கல்லீரலை வலுப்படுத்தும் .

தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய் சாற்றை அருந்தி வந்தால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். 
அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம். 
 பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 
பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். 

பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில், 6 மாதம் அருந்தி வந்தால், பலனை கண்கூடாக காணலாம். 
நீரிழிவு நோய்: டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள, சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப் பொருள், இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. 
பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது.

 இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. 
சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது. 
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் பெருகும்.
=======================================================================================================
இன்று,

ஜனவரி-16.


  • தாய்லாந்து ஆசிரியர் தினம்
  • இஸ்ரேல் கொடி நாள்


  • கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது(2003)


  • வெர்மொண்ட், நியூயார்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது(1777)


  • பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர்(1761)

=======================================================================================================
கோல்கேட் இரசாயனம் 
புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது 
– ஆய்வில் அதிர்ச்சி!! 
உலக அளவில் பெரும் முன்னணி டூத்பேஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது கோல்கேட். பெரும்பாலான மக்கள் இந்த டூத் பேஸ்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். 
ஆனால், கடந்த வருடம் நச்சுயியல் ஆய்வு கழகத்தினால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கோல்கேட் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் ஆனது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது, துணி துவைக்கும் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைக்ளோசான்(triclosan) எனப்படும் இந்த இரசாயனம் குறித்த ஆய்வுகள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

பயங்கரமான இரசாயனம்
ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் மிகவும் பயங்கரமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது டியோடிரன்ட், ஆன்டிசெப்டிக், மற்றும் கை கழுவும் திரவங்கள் போன்றவற்றில் பரவலாக சேர்க்கப்படும் இரசாயனம் என்று கூறப்படுகிறது. மேலும் சில வகையான துணி துவைக்கும் சலவை சோப்புகளிலும் கூட இது சேர்க்கப்படுகிறது.

நச்சுயியல் ஆய்வு கழகம் (Chemical Research in Toxicology) வெளியிட்ட ஆய்வறிக்கையில் , இந்த இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இந்த தீங்கு விளைவிக்கும் மூலப்பொருள், சருமத்தை ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஹார்மோன் சமநிலையை சீர்குலைந்து போக செய்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கனடாவில் தடை

உலகிலேயே கனடாவில் மட்டும் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் இதன் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்ட கனடா அரசு பின்னாளில் மொத்தமாக தடை செய்தது.

ஆதாரங்களும், ஆய்வாளர்களும் இவ்வாறு கூற, வழக்கம் போல் கோல்கேட் தரப்பு, தங்கள் தயாரிப்பு பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்று அவர்களது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.
கனடா  தடையை அடுத்து மேலைய,அமெரிக்க நாடுகள் தடை செய்ய ஆய்வு செய்து வருகின்றன.
ஆனால் இந்தியாவில் அது நடக்கும் என்று தெரியவில்லை.
மேகி ஆபத்து என்று நிறுபனமாகி  தடை போட்டார்கள்.ஆனால் இன்று ?இந்திய மக்கள் ஆய்வுக்கான எலிகள்,தவளைகள்தான்.அதைத்தான் மேகி,கோக்ககோலா ,பெப்சி போன்றவைகள் நிருபித்துள்ளன.
====================================================================================================-
மீண்டு வந்துள்ள 'சோ'மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்றிருக்கிறாரே ?
ஜெயலலிதாவின் பினாமியாக மிடாஸ் சாராய தொழிற்சாலையில் இருப்பவர் தனது தொழில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைப்பது சாதாரணமானதுதானே ?