இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 12 ஜூன், 2017

மதவெறியும் தாராளமயமும்

 நாணயத்தின் இரு பக்கங்கள்பாஜகவும், ஆர்எஸ்எஸ்-உம் மதவெறியையும், தேசிய வெறியையும் விசிறிவிடுவதோடு மட்டும் அல்லாமல், நவீன தாராளமயத்தை நோக்கிச்செல்வதற்கும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

 மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் மதவெறி மற்றும்தேசியவெறியை முன்னுக்குக் கொண்டு வருவதுபோல் இருப்பதால், அவற்றிற்கு எதிராக நாடுமுழுதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த அரசாங்கம் நவீன தாராளமயக் கொள்கையுடன் வைத்துக்கொண்டுள்ள நேரடியான தொடர்பு குறித்த விமர்சனங்கள் இதன் காரணமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டன.

உண்மையில் அதுதான் மிகவும் முக்கியமானதாகும்.கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்ன நடந்திருக்கிறது என்று ஆராய்ந்தோமானால் மத்திய அரசு அது குறித்து எவ்விதமான அக்கறையோ, ஆர்வமோஇல்லாமல் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். 

விரக்திநிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ்நாட்டு விவசாயிகள், புதுதில்லியில் இரண்டு வாரங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபின்னரும் மத்திய அரசு எவ்விதமான நட வடிக்கையும் எடுக்க முன்வராத நிலையில், இதன்பின்னர் பிரதமர் முன்பாக தங்களை நிர் வாணப்படுத்திக்கொள்ளக்கூடிய நிலைக்குச் சென்றபோதும், அவருக்கு முன்னால் தங்கள் சிறுநீரைக் குடித்தபோதும்கூட அவர்களின் நிலைமைகள் குறித்து பரிசீலித்திட எவ்விதநடவடிக்கையையும் மோடி அரசு எடுத்திட ல்லை.

வேளாண்மைத்துறையில் என்ன நடந்திருக்கிறது? 

என்ன நடந்திருக்கிறது என்றால், விவசாயத்துறையும் பண்ணைத் தொழிலும் லாபகரமானதாக இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கம் திட்டமிட்டே செய்துகொண்டிருக்கிறது என்பதேயாகும். அப்போதுதான் விவசாயி களில் பெரும்பாலானவர்கள், தாங்கள்உயிர்வாழ்வதற்காகவும் தங்கள் வாழ் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் வேறு வேலைகளைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். 
இவ்வாறு விவசாயிகள் வேறு வேலைகளைத் தேடிச் சென்றபின் பண்ணை வேலைகளை மிகப்பெரிய அளவில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக்கொள்வது எளிதாகி விடுகின்றன. 

நாட்டின் நலனுக்கு இது அவசியம் என்ற பெயரில் அரசாங்கத்தின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைக்கின்றன. உயிர்வாழ உணவு அவசியம். உணவை உற்பத்தி செய்து வந்த விவசாயிகள் விவ சாயத்தை விட்டு வெளியே சென்ற பின், உணவை உற்பத்தி செய்வது யார் என்ற கேள்விஎழுகிறது. இவ்வாறு கேள்வி எழும்போது இதைச் செய்ய முன்வருகிற பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் அதைச் செய்திட அனுமதிக்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபடு பவர்களுக்கு எப்படி அரசாங்க மானியங்கள் அளிக்கப்படுகிறதோ அதேபோன்று விவசாயத்தைமேற்கொள்ள வரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மானியங்கள்அளிக்கப்படும். 
இப்போது விவசாயத்தில்ஈடுபட்டு தாங்கள் மேற்கொண்ட விவசாயத் தால்ஏற்பட்ட கடன்வலையிலிருந்துமீள விவ சாயிகளுக்கு எவ்விதமான உதவியையும் செய்யாத, செய்ய மறுத்துவரும், இதே அரசாங்கம்தான், அவர்களில் லட்சக்கணக் கானவர்கள் தற்கொலை செய்துகொண்ட போதிலும், சிறிதும் கவலைப்படாத இதேஅரசாங்கம்தான், இத்தகைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானியங் களைக் கொட்டிக்கொடுக்கும். 

இவ்வாறு உணவு உற்பத்தியைப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யத்தொடங்கியபின், வேலைதேடி அலைந்துவரும் முன்னாள் விவசாயிகள் மீண்டும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் பண்ணையாட்களாக வேலை செய்திட அமர்த்தப்படுவார்கள். 

இவ்வாறு நிலப்பிரபுத்துவம் மீண்டும் ஒரு புதிய வடிவத்தில் வந்துகொண்டிருக்கிறது.பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேளா ண்மையைக் கையில் எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகிக் கொண்டிருப்பதுடன் மட்டுமல்ல, அவை கால்நடை பராமரிப்பு மற்றும் வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் பணிகளையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் நிலைமைகளும் உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. 

பதஞ்சலி போன்றநிறுவனங்கள் மோடி அரசாங்கத்தின் அரவணைப்புடன் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருப்பது மட்டுமல்ல, இது போன்று பல நிறுவனங்கள் முளைக்கத் தொடங்கி இருக்கின்றன. 

குறிப்பாக கால்நடை வர்த்தகம் தொடர்பாக மோடி அரசாங்கம் சமீபத்தில் தடை விதித்து அறிவிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து சாதாரண விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில், கால்நடை பராமரிப்புத்துறையிலும் எண்ணற்ற நிறுவனங்கள் வரவிருக்கின்றன. 

இவ்வாறு விவசாயத்துறையிலும் கால்நடைபராமரிப்பிலும் இதுகாறும் செயல்பட்டுவந்த சாதாரண விவசாயிகளை, மதவெறித் தீயையும், இனவெறித் தீயையும் விசிறி விட்டு அவர்களை அவற்றிலிருந்து அப்புறப் படுத்தியபின்பு, இதுபோன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த வேலைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சர்வதேச நிதிமூலதனத்துடன் இணை ந்துள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் நாட்டின் விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பதப்படுத்தும் தொழில்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டபின், அரசாங்கத்தின் தாக்குதலால் வேலையிழந்து வாழவழியின்றி நிர்க்கதியாய் நிற்கும் மக்களை இவை மீண்டும் தங்களிடம் வேலை செய்ய நியமித்துக் கொள்ளும். எப்படி, விடுதலைப் போராட்டக் காலத்தில் சங் பரிவாரக்கூட்டத்தினர் பிரிட்டிஷாரை ஆதரித்தனரோ, அதேபோன்று இப்போது அவர்கள் பெரும் கார்ப்பரேட்நிறுவனங்களின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர். 

இவ்வாறு நம் விவசாயத்திலும், அதனைச் சார்ந்த தொழில்களிலும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதற்கு ஆதரவாக ஆட்சியாளர்கள் தேசியவாதம் என்கிற சொற்றொடரைத் துஷ்பிரயோகம் செய்து பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

வங்கி அமைப்புமுறையுடனும் வலுக்கட்டாயமாக இணைப்புஇவற்றிற்காக மக்கள் மிகவும் வலுக்கட்டா யமான முறையில் வங்கி அமைப்புமுறையுடன் ஆதார் மற்றும் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு போன்றவற்றால் ஏற்கெனவே நன்கு இணைக்கப்பட்டுவிட்டனர். 

ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்மூலம் நாட்டு மக்கள் அனைவருமே வலுக்கட்டாயமாக வங்கி அமைப்புமுறையுடன் இணைக்கப்பட்டுவிட்டதோடு மட்டு மல்லாமல், கார்ப்பரேட்டுகளின் கடன்களை ரத்துசெய்ததன் மூலம் திவால்நிலைக்குச் சென்றுகொண்டிருந்த நம் வங்கிகள் மீண்டும் எழுந்து நிற்பதற்கும் வழிசெய்து தரப் பட்டிருக்கிறது. 


அதுமட்டுமல்ல, ரொக்கமற்ற சேவை என்ற பெயரால் பே டிஎம் போன்ற தனியார் நிறுவனங்கள் கொழுக்கவும் வகை செய்துதரப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் மிகவும் வலுவான நிலையிலிருந்த நம் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களைத் திரும்பப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை களை எடுத்திட ஆட்சியாளர்கள் அனு மதிக்காததால் இன்றைய தினம் மண்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. 

அதே சமயத்தில் சர்வதேச நிதிமூலதனத்தின் அங்கங்களாகத் திகழும் தனியார் வங்கிகள் நம் வங்கி அமைப்புமுறையை விழுங்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றன. 
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்திலேயே ஆதார் திட்டத்தை அமல்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆதாரில்கண்டுள்ள விவரங்கள் அதன் உரிமை யாளர்களுக்குத் தெரியாமலேயே பல சமயங்களில் வெளியாருக்குக் கசிய அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. வங்கிக் கணக்கு டன் ஆதார் இணைக்கப்படுவதால், நம் சொந்த நிதி நிலைமைகளை சர்வதேச நிதி மூலதனம் அறிந்துகொள்வதற்கு வழிசெய்து தரப்பட்டிருக்கிறது.

இப்போது நம் வங்கி அமைப்பு முறை, விவசாயம், தொழில்துறை என நம் நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்துத்துறைகளும், சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நவீன தாராளமயம் மற்றும் முதலாளித் துவத்துடன் நன்கு இணைக்கப்படுவதற்குத் தயாராகிவிட்டன.

இவ்வாறு இணைக்கப்படுவதை எளிதாக்குவதற்காக ஆட்சியாளர்களால் மதவெறித்தீயும், இனவெறித் தீயும், சாதி வெறித்தீயும் அந்தந்த பிராந்தி யங்களின் தனித்தன்மைகளுக்கேற்ப மிகவும் இலாவகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
இதுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் உண்மை சொரூபம் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது நம் கடமையாகும். 

மதவெறியும் நவீன தாராளமயமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன. 

எனவே, இவற்றில் ஒன்றை மட்டும் தனியே நாம் எதிர்த்துப் போராட முடியாது. 
இவை இர ண்டையும் இணைத்தே போராட வேண்டியது அவசியமாகும். 

ஏனெனில் இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.                                                                                              நன்றி:தீக்கதிர்                                                                                                                                                                தமிழில் ச.வீரமணி
========================================================================================
ன்று,
ஜூன்-12.
  • உலக  குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
  • பிலிப்பைன்ஸ் விடுதலை தினம்
  • கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது(2006)

==========================================================================================
 இந்தி படிச்ச எச்ச ராஜா,எஸ்.வி.சேகர்,ஆடிட்டர குருமூர்த்தி,தமிழ்ஹிசை,பொன்னர்,மாலன்,தந்தி பாண்டே,தினத்தந்தி,தந்தி டிவி அதிபர் பாலசுப்பிரமணியன்   மாமன், மச்சான், அங்காளி, பங்காளிகள்.

எல்லோரும் இப்போது இஸ்ரோ வில் ராக்கட் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ராக்கெட் விட்ட  நேரம்போக தமிழ் நாட்டில் தெருத்தெருவாக இந்தியை வளர்த்துக்கொண்டு அப்படியே பானிபூரி ,பீடா விற்கிறார்கள்.
இவர்களிடம் பானி பூரி வாங்கித்தின்ன இனி ஆதார அட்டையும்,இந்தி படிச்ச சான்று அவசியமாம்.