"மேக் இன் இந்தியா"



மோடியின் பணமதிப்பிழப்பு,மாட்டிறைசி ஆகியவைகளையும்,அதிமுக நாளொரு அணி,தினமொரு வேடிக்கை பேச்சு போன்றவைகளை வடிக்கையானவை என்று தள்ளிவிடுமளவு மக்களை இப்போது போட்டு குடைவது பிளாஸ்டிக் அரிசி வரவுதான்.

பளிச் என்று அழகாக இருந்தாலே அது பிளாஸ்டிக் அரிசியா என்ற சந்தேகம்.இனி கொஞ்சம் மங்கலாகவும் தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்காமல் இருப்பதிலும்,விவசாயிகளை ஓய்க்கும் திட்டங்களை போடுவதிலும் இந்த பிளாஸ்டிக் அரிசி இருக்கும் தைரியம்தான் பின்னணியில் இருக்குமோ?

கார்ப்பரேட்களுக்கே விவசாய நிலங்களை மோடி அரசு தாரை வார்க்க திட்டம் போட்டு செயலாக்குகிறதே அரிசியை என்ன கார்ப்பரேட் தொழிற்சாலையிலா உற்பத்தி செய்ய முடியும்? என்ற வினாவை மோடியை பார்த்து கேட்டு கெட்டவர்கள்தானே நாம்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு தயாரான இந்த பிளாஸ்டிக் அரிசி அங்கிருந்துதான் பிளாஸ்டிக்  முட்டை க்குப்பின்னர் இந்தியாவுக்கு அதன் உடன் பிறப்பாக கள்ளத்தனமாக வந்தது.

ஆனால் அப்படி வந்த போது நம் வியாபாரிகள் காசு சேர்க்க அலைந்தாலும் ,சில கலப்படங்களை செய்தாலும் துட்டுக்காக பிளாஸ்டிக் அரிசியை எல்லாம் கலந்து விற்கும் அளவுக்கு மனசாட்சி  இல்லாதவர்கள் அல்ல என்றுதான் முதலில் எண்ணம் வந்தது.

ஆனால் நம் வியாபாரிகளோ பெங்களூரிலும்,மும்பையிலும் "மேக் இன்  இந்தியா" என்று பிளாஸ்டிக் அரிசியை தயாரிக்க ஆரம்பித்து குமரி வரை மக்களுக்கு வஞ்சனை இல்லாமல் விற்க ஆரம்பித்துள்ளது கேட்டு "என்ன காந்தியை சுட்டுக்கொன்று விட்டார்களா?அதிர்சி மட்டும் தான்.

மாங்காய் வரத்து அதிகம் இருக்கும் போதே வாங்கும் மக்கள் உடல்நலத்தை பாதிக்கும் என்று தெரிந்தே கார்பைடை வைத்து ஒருநாள் முன்னதாகவே விற்று பணம் பார்க்கும் வியாபாரிகள் திறமையை,நம்பிக்கை,நாணயத்தை நாம் குறைவாக எடை போட்டு விட்டோம் என்றே தோன்றியது. 

இயற்கையாக  மாங்காய்  பழுக்கும்வரை இயலாதபடி பதட்டத்தில் கார்பைடை வைப்பது எதற்காக?வாழை தாரை புகை போட்டு பழுக்க வைக்காமல் அதற்கும் ரசாயன தெளிப்பு செய்து மக்கள் நலத்துடன் விளையாடுவதும் எதற்காக?
இந்த  மக்களை உயிர் விளையாட்டை விளையாடுவது சில்லறை கடை வைத்து பிழைக்கும் சிறு வியாபாரிகள் செய்வதல்ல.உற்பத்தி செய்யும் விவசாயிகளும் செய்வதில்லை.

இடையில் உற்பத்தி பொருளையும் ,சில்லறை வியாபாரிகளையும் பார்க்காமல் பணத்தை மட்டுமே போட்டு எடுக்கும் மொத்த வியாபாரிகள் கிடங்குகளில் தான்  இந்த அரிசி ,முட்டை,வாழை,மாங்காய் களுக்கு  ரசாயன ஞானஸ்தானம் செய்யப்படுகிறது.

இவர்களை ஆட்சியாளர்களுக்கு,பெரும் அதிகாரிகளுக்கு  தெரியாது,கண்டு பிடிக்க முடியாது என்றால் நீங்கள் இந்தியாவில் இருக்க தகுதியானவர்களே இல்லை.

நம்மை இந்த மத்திய ,மாநில அரசுகள் காப்பாற்றாது என்பதுதான் இன்றுவரை நமக்கு அவர்கள் ஆட்சி முறை கட்டிய பதில்.

"நமக்கு நாமே"என்று "வரும் முன் காப்போம்"திட்டப்படி செயல் படுவதை விட  வேறு வழியே இந்திய தமிழர்களான  நமக்கு இல்லை.


அதன்படி பிளாஸ்டிக் உணவுப் பொருட்களை பிரித்துணரும் தன்மையை அன்னப்பறவை போல் நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்.


 பிளாஸ்டிக் அரிசி என்று சந்தேகம் இருந்தால் மூன்று வழிகளில் சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

1. அரிசியை நீரில் போடும் போது மிதந்தால், மிதக்கும் அரிசி பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம்.

2.நீரில் மிதக்கும் அரிசி பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் .அதை எடுத்து  கடித்துப் பார்த்தால் உடையாது.அது பிளாஸ்டிக்தான்.துப்பி விடுங்கள்.

3.கொதிக்கும் உலை நீரில் அரிசியை போட்டால்  பிளாஸ்டிக் அரிசி உருக ஆரம் பித்து விடும்.


பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தி சூப் செய்தால், அதன்மேலே மெல்லிய பிளாஸ்டிக் படலம்  படரும். இந்த படலத்தை  எடுத்து வெயிலில் காயவைத்தால்,  உங்களுக்கு பிளாஸ்டிக் கிடைக்கும்.
 இதில் தீயை வைத்தால் எளிதாக உருகி தீ பற்றிக்கொள்ளும்.

ஆனால் தற்போது 3:1 என்ற அளவில் வயக்காட்டு அரிசி,தொழிற்சாலை(பிளாஸ்டிக்) அரிசி கலப்படம் இருப்பதால் சற்று சிரமம்,குழப்பம் உண்டாகலாம் . அவ்வாறு சந்தேகம் ,குழப்பம் இருப்பின்  9444042322 என்ற எண்ணில்  பேசி குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ளலாம்.. 

பிளாஸ்டிக்கு அரிசி,முட்டை, வரிசையில் தற்போதைய பெருமைமிகு வரவு சீனி .

இனி கடையில் வாங்கினாலும் ,எதை சாப்பிட்டாலும் அது பிளாஸ்டிக்கா னு கண்டுபிடிக்க கருவிகளை கையோடு எடுத்து போகணும் போல .
==============================================================================================
ன்று,
ஜூன்-10.
  • ஜோர்டான் ராணுவ தினம்
  • போர்ச்சுக்கல் தேசிய தினம்
  • உலகின் முதல் எந்திர வாகனங்கள் பழுது நீக்கும் கடை திறக்கப்பட்டது(1947)
  • நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)

===============================================================================================

சீன  யாங்சி க்கு அடுத்தா கங்கா மாதாஜி .
உலகில் பாயும் நதிகளிலே அசுத்தமான நதிகள் பட்டியலில் இந்தியாவின் கங்கை நதி இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இந்தப் பட்டியலில் சீனாவில் யாங்சி நதி முதலிடத்தில் உள்ளது. 
ஒவ்வொரு ஆண்டும் 30 கோடி கிலோ அளவில் குப்பை யாங்சி நதியில் கலக்கிறது. 

2007 வெளியான பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த கங்கை நதி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது

2014ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்த திட்டங்களில் மிக முக்கியமான திட்டம் கங்கை நதியைச் சுத்தம் செய்யும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 


சில தினங்களுக்கு முன் கங்கை நதியைச் சுத்தம் செய்ய பத்து வருடங்கள் எடுக்கும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிந்திருந்தார். 
கங்கை நதியைச் சுத்தம் செய்ய 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கங்கை நதியைச் சுத்தம் செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு ஆண்டும் 10.5 கோடி கிலோ அளவில் பிளாடிக் குப்பை கங்கை நதியில் கலக்கிறது. 

இந்தக் குப்பைகளை மட்டும் அள்ளுவதற்கு சுமார் 1 லட்சம் குப்பை லாரிகள் தேவைப்படும் எனவும் தெரிகிறது. 

கடலில் சேரும் குப்பைகளில் மூன்றில் இரண்டு பங்கு உலகிலுள்ள நதிகள் மூலமாகவே கடலில் கலக்கப்படுகின்றன.

மாட்டை  கோமாதா  என்று கூறி இறைச்சிக்கு தடை போட்டு கோமாதாவை காப்பற்றிய பாஜக இந்த கங்கா மாதாவை ஏன் குப்பை போட்டால் மரணதண்டனை என்று காப்பாற்றக்கூடாது.
உயிர்கள் வாழ  மாட்டிறைச்சியை விட தண்ணீர் முக்கியமல்லவா?அந்த கோமாதா உடன்பட.
================================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?