பொதுவான பெயர்களுடன்

மருந்துகளுடைய பொதுவான பெயர்களை மட்டுமே குறிப்புச் சீட்டில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் செய்து மருத்துவர் தொழிலின் சேவைகளைப் பற்றிய விதிமுறைகளில் திருத்தம் செய்து கடந்த 2016 ஆம் வருடம் உத்தரவு வெளியிடப்பட்டது. 

இதற்குப் பிறகும் மருந்துகளைத் தயாரிக்கும் தயாரிப்புக் கம்பெனிகளின் ப்ராண்டுகளுடைய பெயர்களையே மருத்துவர்கள் குறிப்புச்சீட்டில் எழுதித் தருகிறார்கள் என்ற புகார் பெருமளவில் வந்ததால் சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் (Medical Counsil Of India) இது குறித்த புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது. 

மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரை செய்யும்போது மருந்துகளுடையப் பொதுவான பெயர்களை மட்டுமே மருந்துச்சீட்டில் எழுதித் தரவேண்டும் என்று இந்தப் புதிய திருத்தம் கூறுகிறது.

ஜெனரிக் மருந்துகள் அல்லது பொதுவான பெயர்களுடன் மருந்துகள் (Generic medicines) என்றால் என்ன? மருந்துகளுக்குப் பொதுவாக மூன்றுவிதமான பெயர்கள் உண்டு. 

மருந்துகளின் ரசாயனப் பெயர்கள், அதனுடைய பொதுவான பெயர்கள் (generic names) மற்றும் அவற்றைத் தயாரிக்கும் கம்பெனிகளுடைய அவை வைக்கும் ப்ராண்டின் பெயர்கள் (branded names) என்பவையே அவை. 


உதாரணமாக அசிட்டைல் பாலிசிக் ஆசிட் என்பது ஒரு ரசாயனப் பெயர் ஆகும். இதே மருந்துடைய பொதுப்பெயர்தான் ஆஸ்ப்ரின் . இதே மருந்து ஆஸ்ப்ரோ, எக்கோஸ்பிரின் என்று வெவ்வேறு பெயர்களில் அந்தக் கம்பெனிகளுடைய ப்ராண்டுகளுடைய பெயர்களில் வருகின்றன.

மருந்துக் கம்பெனிகள் ஒரே மருந்தை வெவ்வேறான அவரவர்களுடைய ப்ராண்டுகளின் பெயர்களிலேயே விற்கின்றன. ஒரே பொதுவான பெயருடன் இருக்கும் ஒரே மருந்தை ஆயிரக்கணக்கான ப்ராண்டுகளில் விற்கின்றன. இந்தப் ப்ராண்டுகளிடையே விலையிலும் அதிகமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன. விலை குறைந்தவையும் இருக்கின்றன. விலை அதிகமானவையும் இருக்கின்றன. 

ஆனால், மருந்துகளின் விஷயத்தில் ஒரு பிரச்சனை நோயாளிகளுக்கு மருந்துகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இல்லை. நுகர்வோருக்கு தான் நுகரும் பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கு மருந்துகள் விஷயத்தில் மட்டும் உரிமை இல்லை. மருத்துவர்கள் தான் எந்த மருந்து தேவை, எத்தனை நாள் சாப்பிட வேண்டும், எந்தக் கம்பெனியுடைய மருந்தைச் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரை செய்வது...

இந்த சூழ்நிலையில் மருந்துக் கம்பெனிகள் பலவிதங்களிலும் மருத்துவர்களைக் கவர்ந்து தங்களுடைய ப்ராண்டு மருந்துகளின் ஒரு குவியலை அவர்களுக்குக் கொடுத்து அவற்றையே நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யச் சொல்கிறார்கள். 

இவ்வாறு செய்யும் போது பல சமயங்களிலும் தன்னைக் கவர்கின்ற மருந்துக் கம்பெனிகளுடைய மருந்துகளை அவை விலை அதிகமானதாக இருந்தாலும் அவற்றையே நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.கோடி கோடியாக லாபம் ஈட்டும் பன்னாட்டுக் கம்பெனிகள் உற்பத்தி செய்யும் பல வகையான மருந்துகள் அதே தரத்தோடு செலவு குறைந்த வழியில் இந்தியாவில் சிறிய மருந்துக் கம்பெனிகள் தயார் செய்கின்றன.

மருத்துவர்கள் மருந்துகளுடைய ப்ராண்டு பெயர்களை எழுதித் தருவதன் மூலம் நோயாளிகள் விலை அதிகமான பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் தயாரிக்கும் மருந்துகளை வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது பொதுவாக நிலவிவரும் ஒரு புகார் ஆகும். 

பொதுவான பெயருடன் வரும் மருந்துகள் எல்லா நோய்களுக்கும் தயாரிக்கப்பட வேண்டும். 
அவற்றின் தரமும் உறுதி செய்யப்பட வேண்டும். மருந்துகளின் விலையைக் குறைக்க இது வழிவகுக்கும். அரசுத் துறையிலேயே மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு விலை குறைவாக விற்கப்படவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது. 

இன்று ஒவ்வொரு சிறிய உடல் நலக் குறைபாட்டுக்கும் கூட ஏராளமான மருந்துகள் சந்தையில் சுலபமாகக் கிடைக்கின்றன.

இவ்வாறு பல மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதும், அவை எல்லாம் சந்தைப்படுத்தப்படுவதும் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் தான் தயாரிக்கப்பட்டவையா என்று உறுதி செய்ய எந்த ஒரு முறைமையும் இங்கே இல்லை.நம் நாட்டில் ஆயிரக்கணக்கான மருந்துக் கம்பெனிகள் இருக்கின்றன. 
காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகிற பாராசிட்டமால் அல்லது நுண்ணுயிர்க்கொல்லியான (antibiotic) மருந்தான அமாக்ஸ்சிலின் போன்ற மருந்துகள் இந்தியாவில் நூற்றுக்கணக்கான ப்ராண்டுகளில் கிடைக்கின்றன. 

சில கம்பெனிகள் ப்ராண்டு பெயர் இல்லாமலேயே மருந்துகளை உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்புகின்றன.

அவற்றில் எதில் உண்மையில் அமாக்ஸ்சிலின் இருக்கிறது என்று மிக சரியாக சொல்வதற்கு இந்தியாவில் ஒரு சரியான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இப்போது விற்பனைக்குக் கிடைக்கின்ற பொதுப்பெயருடன் இருக்கும் மருந்துகளுடைய தரத்தை உறுதி செய்வதற்குரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். 

அப்போது தான் படிப்பறிவு இல்லாத நம் நாட்டு ஏழை கிராமப்புறத்து மக்கள் ஆரோக்கியமாக வாழ வழி பிறக்கும்.
                                                                                                                                                                              நன்றி: விஞ்ஞானச் சிறகு 
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
  •  ரத்தம் வழங்குதல் 
அறுவைச் சிகிச்சையின் போதோ, விபத்தின் போதோஅல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம்தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். 
சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்த இரத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). 
ஆனால் கிடைக்கப் பெறுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே. இரத்தம் மனிதனின் வாழ்க்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. 
ஒவ்வொரு நாளும் 38,000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை. பெரும் பாலும் தேவைப்படும் பிரிவு டீ ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இவர்களில் பலருக்கு இரத்தம் தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போதுதினமும் தேவைப்படும். ஒரு ஒற்றைக்கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.


இரத்த தானம் செய்பவர் 18 வயதுநிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம். இரத்த ஹீமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்பவரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்கவேண்டும். ஆண், பெண் இருபாலரும்இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
 எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. 
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப்படுத்தி இருத்தல் கூடாது.

இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன்நலன் மேம்படுவதற்கும் உதவுகிறது.தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றுகண்டறியப் பட்டுள்ளது.

ஹீமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்ததானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.இரத்த தானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்கவைக்க வேண்டும் அல்லது கால் களுக்கு இடையில் தலையணை வைத்தவாறு அமர வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விட முடியும்.

ஒவ்வொரு நாளும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.
 மேலும் பிரசவ பெண்களுக்கு மற்றும் குழந்தைகள் இருதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக அறுவைச் சிகிச்சை போன்றவைகளுக்காக நாள் தோறும் இரத்தம் தேவைப்படுகிறது. எனவே நாம் இரத்த தானம் செய்தால் மட்டுமே அவர்களின் உயிர்களைக் கப்பாற்ற முடியும்.இரத்த தானத்தால் ஏற்படும் நன்மைகள்இரத்த தானத்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

இரத்த தானத்தினால் புதிய இரத்தம்உடலில் தோன்றி உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும். அதிக இரத்த அழுத்தம் உடையோர் இரத்த தானம் செய்வதால் இரத்த அழுத்தம் குறைந்து இருதயம் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். இரத்த தானம் செய்வதால் அதிக இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.

இரத்த தானம் என்பது வியாபாரம்ஆகி விடாமல், அரிய வகை ரத்தம்சேமிக்கப்பட வேண்டியது அவசியம்.அதற்கேற்ப அரசு மருத்துவமனைகளில் ரத்த வங்கி உருவாக்க வேண்டும். அதில், கூடுதலாக வசதி ஏற்படுத்த வேண்டும். மனித உயிரை தக்கசமயத்தில் காக்க மருந்து, டாக்டர், செவிலியர்கள் உதவினாலும், அவர்களது உடலுக்கு ஏற்ற ரத்தத்தின் பங்கு மிக முக்கியம். 

பெரும் விபத்து,அவசரச் சிகிச்சை, பிரசவம், தலையில்பலத்த காயம் உள்ளிட்ட உடனடியாக செய்து முடிக்க வேண்டிய அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தத்தின் தேவை மிக மிக அவசியமானது.ஒருவரின் ரத்தம் மற்றவர் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றும். ரத்ததானம் செய்வதால் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இரத்த தானம்பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ந் தேதி இரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 இதைப் பயன்படுத்தி சாதி, மதம், இனம், மொழி கடந்து ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் இரத்த தானம் செய்வோம். உயிரைக் காப்போம்.
                                                                                                                                                                                             - ஐ.வி.நாகராஜன்
                                               மோடி அரசின் மாட்டு சட்டம் வந்த பின்னர் இதுதான் நிலை.
==========================================================================================
ன்று,
ஜூன்-14.
புரட்சி தலைவர் சேகுவேரா பிறந்த நாள் (1928)
  • உலக வலைப்பதிவாளர் தினம்
  • உலக  ரத்தம் வழங்குதல் தினம்
  • உலகின் முதல்  வான் ஆய்வு மய்யம் பாரிசில் அமைக்கப்பட்டது(1962)


===========================================================================================



இவனுங்க ஆத்தா டான்சியில போட்ட கையெழுத்தே எனதில்லைனு சொன்ன மாதிரி.. திருட்டு பயலுங்க..






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?