தரம் குறை போலி ,‘பதஞ்சலி’
போலி சாமியார் ராம்தேவின்,‘பதஞ்சலி’ நிறுவனத் தயாரிப்புக்கள் தரமற்றவை என்பதால், அத்தயாரிப்புக்களை சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு, நேபாள நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
‘மைதா கலப்பில்லாத பிஸ்கட்’, ‘இயற்கையான பானங்கள் இருக்கும் போது பாக்கெட் பானங்கள் எதற்கு?’,
‘இயற்கைக்கு உதவுங்கள்... பசுக்கள் இறைச்சிக் கொட்டில்களுக்கு செல்வதை தவிருங்கள்’... என்றுறெல்லாம் டி.வி. விளம்பரத்தில் ராம் தேவ், அவரது நிறுவனத்திற்காக அவரே தோன்றி கூறுவார்.
ஆனால், ‘பதஞ்சலி’ நிறுவனத் தயாரிப்புக்கள் தரமற்றவை என்று ஒவ்வொரு முறையும் ஆய்வுகள் சொல்கின்றன.
உத்தர்கண்ட் மாநிலத்தில் ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலில் ‘பதஞ்சலி’யின் 40 சதவிகிதப் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும், பொருட்களின் தரம் குறைவாக இருக்கிறது என்றும் இந்திய அரசாங்கமே கூறியது.
பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ்ஆகிய பொருட்கள் தரமற்றவைஎனவும், இதில் 31.68 சதவிகிதம் அந்நிய நாட்டு மூலப்பொருட்கள் கலந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ‘பதஞ்சலி’யின் ஆம்லா ஜூஸ் குறித்து எழுந்தசர்ச்சையால் ராணுவ கேன்டீன்களில் அவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாநில பரிசோதனையிலும் பதஞ்சலியின் சில பொருட்கள் தர பரிசோதனையில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகின்றன.
இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகியும் வருகின்றன.ஆனால், ‘பதஞ்சலி’ நிறுவனத் தயாரிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவோ, அதன் மோசடி விளம்பரங்களைத் தடை செய்யவோ மத்திய பாஜக அரசு ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மாறாக, ராம் தேவை ஒரு ராஜகுரு போல, அரசு நிகழ்ச்சிகள் பலவற்றிலும் முக்கிய விருந்தினராக அழைத்து, பிரதமர் மோடி அவரை முன்னிறுத்தி வருகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக குஜராத்தில் பதஞ்சலி பொருட்களை அடுக்கி வைக்க அங்குள்ள காந்தி நினைவிடத்தை கிடங்காக பயன்படுத்திக்கொள்ள பாஜக அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில்தான், பதஞ்சலியின் 6 பொருட்களை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு நேபாள நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதஞ்சலியின் ஆம்லா சூரணம், திவ்ய கஸ்ஹர் சூரணம், திரிபலாசூரணம், அஷ்வகந்தா உள்ளிட்ட 6 மருத்துவப் பொருட்களை தரமற்றவை என்றும்அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆக இந்த போலி சாமியார்,யோக குறு பாபா ராமதேவ் குறுகிய காலத்தில் 50000கோடிகளுக்கு மேல் எப்படி தனது ஆசிரமம் என்ற பெயரிலான நிறுவனத்துக்கு சேர்த்தார் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மோடி ஆடசி முடிவதற்குள் இந்தியாவையே பட்ட போட்டு எடுத்துக்கொள்ளும் இந்த போலி ஆயுர்வேத மருந்து நிறுவனம் பதஞ்சலி.
அடுத்து பாராளுமன்றம் கட்டிடம்தான் பதஞ்சலி பொருட்கள் வைக்கும் கிடங்காக மாறப்போகிறது?
பிரதமர் மோடி வெளிநாடுகளிலேயே இன்ப சுற்றுலாவில் இருப்பதால் அவருக்கு இடப்பிரசனை இல்லை.
மற்ற மக்களவை உறுப்பினர்கள்தான் பாவம்.கூட்டம் நடத்த இடம் தேடணும்.
இன்று,
ஜூன்-25.
- உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது(1967)
- இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை அறிவிக்கப்பட்டது (1975)
- குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)
- உலகப்புகழ் பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்தார்.(2009)
==========================================================================================
1946 விடுதலை பெற்ற ஆண்டு நடைபெற்ற இந்திய சகோதரர்களின் மத வெறி சண்டையில்(இந்து-முஸ்லீம்) ஒரு வங்க கிராமத்தின் நிலை.
இந்த மதவெறி மோதலில் வென்றது எந்த கடவுள் ?
ஆனால் உண்மையில் தோற்றது மனிதம்.