பாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது
இன்று தலித்தை குடியசுத்தலைவராக கொண்டுவரப்பாடுபடும் பாஜக திடீர் தலித் பாசம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.
முதல் இந்திய தலித் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் .
அப்போது கே.ஆர்.நாராயணனுக்கு பாஜக கொடுத்த ஆதரவும்,அவர் தலித் என்பதால் காட்டிய பாசமும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பாசமலர் கதை.
இந்துத்துவா மனநிலையை உடைய ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முன் மதசார்பின்றி இயங்கிய கே.ஆர்.நாராயணன் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
இந்துத்துவா மனநிலையை உடைய ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முன் மதசார்பின்றி இயங்கிய கே.ஆர்.நாராயணன் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் பதவிக்கு தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பது இது இரண்டாவது முறைதான் .
இந்தியாவின் 10ஆவது செயல்பட்ட கே.ஆர்.நாராயணன் அவர்கள் தான் முதன்முதலாக தலித் சமுதாயத்திலிருந்து தேர்வு குடியரசுத்தலைவராக செய்யப்பட்டவர்.
குடியரசுத்தலைவர் பதவி என்பது ஆளுநர் மற்றும் பிரதமர் அளவுக்கு சக்தி வாய்ந்த பதவி கிடையாது. பொம்மைதான்.குறிப்பிட்டு சொல்லப்போனால் நாம் அடிமைப்பட்ட இங்கிலாந்தை கணக்கில் கொண்டு அரச பரம்பரை அதாவது எலிசபெத் மகாராணி அளவுக்கு இந்தியர்களால்,இந்தியர்களுக்காக அடிமைப்புத்தியுடன் உருவாக்கப்பட்டதுதான்குடியரசுத்தலைவர் பதவி.
இங்கிலாந்தில் மகாராணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அவ்வளவுதான் கொண்டவர் நமது குடியரசுத்தலைவர்.
ஆனால், அப்படி வெறும் ‘ரப்பர்-ஸ்டாம்ப்’ குடியரசுத்தலைவராக செயல்பட்டவரல்ல கே.ஆர்.நாராயணன். லண்டன் பொருளியல் பள்ளியில் அரசறிவியல் பயின்றவர்.
குஜராத் கலவரத்தை தடுக்க தீவிரமாக முயன்றவர்.
குஜராஜ் கலவரத்தை பற்றி இவர் அளித்த பேட்டியை கவனிக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
இனி அன்றைய பாஜக தனக்கு அளித்த தொல்லைகளைப்பற்றி கே.ஆர்.நாராயணன் அவர்களே அளித்த பேட்டி பின் வருமாறு:
"குஜராத் கலவரத்திற்குப் பிறகு வாஜ்பாய் திறமையான முறையில் எதையும் செய்யவில்லை. குஜராத் கலவரத்தை தடுத்து நிறுத்தக் கோரி நான் அவருக்குப் பலகடிதங்கள் எழுதினேன்.
அவரிடம் இது குறித்து நேரிலும் பேசினேன்.
இராணுவத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை வழங்கியிருந்தால் குஜராத் கலவரங்கள் பெருமளவிற்கு தடுக்கப்பட்டிருக்கும் ஆனால் சட்டத்தின் கடமையை மத்திய மாநில அரசுகள் சரிவர நிறைவேற்றவில்லை.
நான் இரண்டாவது முறையும் குடியரசுத்தலைவராக வரவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். காங்கிரசும் அதற்கு ஒப்புக்கொண்டது.
அதனால் அனைத்துக்கடசிகளும் ஒரு மனதாக என்னைத்தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டும் நான் சம்மதிக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன்.
நான் மீண்டும்
குடியரசுத்தலைவராவதை பா.ஜ.க.வினர் விரும்பவில்லை.
அவர்களுடைய மறைமுக திட்டத்திற்கு (ஆர்.எஸ்.எஸ். வகுத்துக்கொடுத்துள்ள ஹிடன் அஜண்டா) நான் குறுக்கே நிற்பதாக அவர்கள் அஞ்சினர்.
பா.ஜ.க அரசுகல்வி உள்ளிட்ட பல துறைகளில் தனது ரகசியத்திட்டங்களை செயல்ப்படுத்த முனைந்தது. தங்களுடைய ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரப்ப கல்வியை பயன்படுத்துவதுதான் அவர்களுடைய அன்றைய நோக்கம்.அது இந்திய வரலாற்றையே மாற்றி இந்துத்துவா வெறியர்களை தேச பற்றாளர்களாக,தியாகிகளாக காட்டும் கல்வி திட்டம்.
முரளி மனோகர் ஜோஷி அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ் சார்பாளர்களை பல்வேறு துணைவேந்தர்களாக நியமித்த நியமனத்தில் நான் தலையிட்டு தடுத்ததை அவர் கடுமையாக எதிர்த்தார்.
என்னுடைய தலையீடு சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக ரீதியானது.
அனைத்துக்கும் மேலாக மதசார்பின்மையே என்னுடைய நோக்கமாக இருந்தது."
இன்றைய பாஜக முன்னிறுத்தும் குடியரசுத்தலைவர் வேட்பாளர் முழுக்க நனைந்த ஆர்.எஸ்.எஸ்,தொண்டர்.கல்வியை காவி மயமாக்கி நாட்டையும் காவி நிறத்தில் உலக வரைபடத்தில் காட்ட முயற்சிக்கும் பாஜகவின் இந்துத்துவா வெறிக்கு லாலு,நிதிஷ் குமார்,சந்திரசேகர்,மற்றும் அம்மா அதிமுகவும்,ஆத்தா அ திமுகவும் விழுந்தடித்துக்கொண்டு ஆதரவு தருவது நாட்டை புதைகுழிக்குள் தள்ளும் செயல்.
ஆனால் நம் காலத்தின் கட்டாயம் குற்றவாளிகளை அரசியல் தலைவர்களாக வைத்திருப்பதுதான்.
அவர்கள் தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பாஜக காலில் வீழ்ந்து ,மோடி காலை கழுவிக் குடிக்கிறார்கள்.
ஒரு கவுன்சிலை கூட வைத்திருக்காத வெறும் நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்துசெய்தி அனுப்புகிறார் பாஜக வேட்பாளர் ராம்நாத் என்றால் அவர்கள் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காக எந்த அளவும் செல்வார்கள் என்றுதானே பொருள்.
நாட்டை குட்டிசுவராக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.கார பிரதமரை வைத்திருக்கும் இந்தியாவுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரரே குடியரசுத்தலைவரா?
நாட்டை அந்த பாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது.இந்தியா இன்னொரு எத்தியோப்பியாதான்.