விவசாயிகளும் அரசியல் அ(வி)பசாரங்களும்
“விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமானால், மாநில அரசு தள்ளுபடி செய்துகொள்ளட்டும்.
இதைப் பற்றி இதற்கு மேல் பேச எதுவும் இல்லை” என்று உறுதியான மொழியில் சொல்லிவிட்டார் நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
உங்களுக்கெல்லாம் எப்படி என்று தெரியவில்லை... எனக்கு அவரது சொல்லாடல்களைக் கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ‘அட... எவ்வளவு கறாரான ஒரு கடன்காரரை நமது நிதி அமைச்சராகப் பெற்றுள்ளோம். நாட்டின் பொருளாதாரத்தின் மீது அவருக்கு எவ்வளவு அக்கறை... விவசாயிகள் செத்தால் என்ன... கூட்டம் கூட்டமாக நிலத்தைக் கைவிட்டுப் பெருநகரங்களுக்குப் புலம்பெயர்ந்தால் என்ன... எனக்கு தேசம்தான் முக்கியம்... வளர்ச்சிதான் முக்கியம்’ என்ற நிதி அமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.
நிச்சயம் தேசம் வளர்ந்துவிடும் என்று எண்ணக் கோட்டைகளை எழுப்பிக்கொண்டிருந்தபோதுதான், கார்ப்பரேட் கடன் தள்ளுபடி தொடர்பான பாழாய்ப்போன தரவுகள் என் கண்ணில்பட்டன. அதை மட்டும் பார்த்திருந்தால்கூட, தேசத்தின் வளர்ச்சிக்காக இந்தத் தள்ளுபடி என்று நானும் கடந்துசென்றிருப்பேன். துரதிர்ஷ்டமாக நம் தேசத்தின் பொருளாதார அறிஞர்களின் பேச்சுகளையும் படிக்க நேரிட்டது.
அதன் விளைவாகத்தான் இதை எழுத நேரிட்டுவிட்டது.

“கார்ப்பரேட் கடன்களும்... விவசாயக் கடன்களும்!”
கடந்த ஐந்து ஆண்டுகளில்... அதாவது, 2011 - 2016 (காங்கிரஸ் - பி.ஜே.பி) வரையிலான காலகட்டத்தில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனான ஏறத்தாழ நான்கு லட்சம் கோடி ரூபாய் கடன்கள் போக்கெழுதப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் மட்டும் பெருநிறுவனங்களின் போக்கெழுதப்பட்ட தொகை ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
தோராயமாக இந்தப் பதினைந்து ஆண்டுக் கணக்குகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஆண்டுக்கு 0.93 லட்சம் கோடி பெருநிறுவனங்களின் கடன்களைப் போக்கெழுதி உள்ளது இந்திய அரசாங்கம்.
அதானிக் குழுமத்தின் மொத்தக் கடன் மட்டும் 72,000 கோடி ரூபாய்க்கும் மேல்.
சர்வதேச பொருளாதார அமைப்பு 2008-ம் ஆண்டு தரவுகளைக் கொண்டு ஓர் அறிக்கையைத் தயார் செய்தது.
அதன்படி, அந்த ஆண்டில் வாராக்கடனாகத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை 52,500 ரூபாய். அதாவது, 20-க்கூட தாண்டாத பெருநிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாயைப் பொக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தக் கடன் 52,500 கோடி ரூபாய்.

விவசாயிகளின் கடன் குறித்து பேசிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர், அருந்ததி பட்டாச்சாரியா, “தொடர்ந்து விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்துகொண்டே இருந்தால், மொத்த வங்கிக் கடன் ஒழுங்கும் கெட்டுவிடும்'' என்று பதறுகிறார்.
அப்படியானால், பெரு நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்தால், வங்கி ஒழுங்கு கெடாதா... என்று உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? கொஞ்சம் பொறுங்கள். அதற்கு நம் பொருளாதார வல்லுநர்கள் பதில் வைத்திருக்கிறார்கள்.
அப்படியானால், பெரு நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்தால், வங்கி ஒழுங்கு கெடாதா... என்று உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? கொஞ்சம் பொறுங்கள். அதற்கு நம் பொருளாதார வல்லுநர்கள் பதில் வைத்திருக்கிறார்கள்.
தேசத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியம், “இப்படித்தான் முதலாளித்துவம் வேலை செய்யும். நீங்கள் பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தொடர்ந்து அவர்களை மன்னிக்க வேண்டும்.
பெருநிறுவனங்களை இப்படிக் காப்பது ஊழலுக்கும்... ஒட்டுண்ணிப் பொருளாதாரத்துக்கும் வழிவகுக்கும்.
ஆனால், நமக்கு வேறு வழியில்லை” என்கிறார்.
தொடர்ந்து அவர்களை மன்னிக்க வேண்டும்.
பெருநிறுவனங்களை இப்படிக் காப்பது ஊழலுக்கும்... ஒட்டுண்ணிப் பொருளாதாரத்துக்கும் வழிவகுக்கும்.
ஆனால், நமக்கு வேறு வழியில்லை” என்கிறார்.
அதாவது, பெருநிறுவனங்கள் தொடர்ந்து செய்யும் தவறுகளை மன்னிக்க வேண்டுமாம்... அரசின் தவறான கொள்கைகளுக்குப் பலியாகி, கடனாளி ஆகும் விவசாயிகளைக் காக்கக் கூடாதாம்.. இந்த நீதி... இந்தியாவின் நீதி அச்சுறுத்துகிறது.
“விவசாயக் கடன்களும்... நமது புரிதலும்”
கார்ப்பரேட் எத்தனை பேருக்கு வேலை வழங்குகிறது... இந்தியாவின் பொருளாதாரம், அந்நியச் செலாவணியை உயர்த்துகிறது.. அவர்களுக்குக் கடன் வழங்கினால்தான் என்ன... கடன் தள்ளுபடி செய்தால்தான் என்ன...?
- இது, எதார்த்த இந்திய மனதின் புரிதல் மற்றும் கேள்வி.
- இது, எதார்த்த இந்திய மனதின் புரிதல் மற்றும் கேள்வி.
இதே கேள்வியை அண்மையில் இயற்கை வேளாண் அறிஞர் பாமயனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது முன்வைத்தேன். அவர் சொன்னது இதுதான், “எங்கள் ஊரில் ஒரு விவசாயி, தன் வேளாண் நிலத்தில் ஏறத்தாழ 20 பேருக்குத் தினமும் வேலைவாய்ப்பு தருகிறார்.
அவரது முதலீடு 20 லட்சம் ரூபாய்தான்... ஆனால், பல லட்சம் கோடி வரிச் சலுகைகள், உள்கட்டமைப்பு வசதிகள், பல லட்சம் கோடி கடன், பின் அதனைப் போக்கெழுதுதல்... இவை அனைத்தையும் அனுபவித்து, பெரு நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கின்றன?
கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு கோடி ரூபாய் செலவு செய்து ஒரு நபருக்குக் கடன் வழங்கி இருக்கிறது. இது முட்டாள்தனமாகத் தெரியவில்லையா...” என்று கேள்வி எழுப்பினார்.
இதையேதான் சூழலியல் செயற்பட்டாளர் பியூஷும் தன் தோட்டத்தில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். மறைந்த வேளாண் செயற்பாட்டாளர் சிவசாமியும் இதையேதான் ஒரு சந்திப்பின்போது சொன்னார்.

வேளாண்மையில் லாபம் வராது என்பது உண்மையென்றால், நம் பெரு நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஏக்கரில் ஆப்ரிக்காவில் விவசாயம் செய்வது ஏன்..?
வேளாண்மை என்பது வாழ்வியல் என்றெல்லாம் கவித்துவமாகப் பேசாமல், பொருளாதாரரீதியாகக் கணக்கிட்டால்கூட உண்மையில், வேளாண்மை லாபம் தரக்கூடியதுதான்... தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கக் கூடியதுதான்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் முடமாக்கிவைத்திருப்பது நமது அரசாங்கமும், அதன் கொள்கைகளும்தான்!
நன்றி:விகடன் தளம்.
இன்று,
ஜூன்-22.
===========================================================================================
கொழுப்பு அதிகமான தேங்காய் என்னை?
வேளாண்மை என்பது வாழ்வியல் என்றெல்லாம் கவித்துவமாகப் பேசாமல், பொருளாதாரரீதியாகக் கணக்கிட்டால்கூட உண்மையில், வேளாண்மை லாபம் தரக்கூடியதுதான்... தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கக் கூடியதுதான்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் முடமாக்கிவைத்திருப்பது நமது அரசாங்கமும், அதன் கொள்கைகளும்தான்!
நன்றி:விகடன் தளம்.
அரிசி தேவை இல்லா டிஜிட்டல் இந்தியா
===========================================================================================இன்று,
ஜூன்-22.
- பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
- சுவீடன் தேசிய கொடி உருவாக்கப்பட்டது (1906)
- கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
- புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
கொழுப்பு அதிகமான தேங்காய் என்னை?
தேங்காய் எண்ணெயில் அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் அது கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தேங்காய் எண்ணெய் நம் உடலுக்கு நல்லது என்று விற்பனை செய்யப்படுகிறது; மேலும் சிலர் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு சாட்சூரேடட் எனப்படும் மிகுதியான பிற கொழுப்பைக் காட்டிலும் நல்லது என்றும் சிலர் கூறுவர்.
இருப்பினும் இதை நிருபிக்க தகுந்த ஆய்வுகள் இல்லை என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆரோக்கியமானதா?
பன்றி கொழுப்பு போன்ற விலங்குகளின் கொழுப்புகள் உடலுக்கு தீங்கானதாகவும், தாவர எண்ணெய்களான ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
மிகுதியான கொழுப்பு ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. இருப்பினும் அதை அனைவரும் ஒப்புக் கொள்வதில்லை.
மிகுதியான கொழுப்புள்ள உணவுகளை உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படக் கூடும் அல்லது இதய நோயும், பக்கவாதமும் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
அமெரிக்க இதய கூட்டமைப்பின் படி, தேங்காய் எண்ணெயில் உள்ள 82 சதவீத கொழுப்பு மிகுதியான கொழுப்பாக கருதப்படுகிறது. இது வெண்ணெயில் உள்ள 63 சதவீதம், மாட்டுக் கொழுப்பில் உள்ள 50 சதவீதம் மற்றும் பன்றிக் கொழுப்பில் உள்ள 39 சதவீதம் ஆகியவற்றைவிட அதிகமாகும். மேலும் பிற மிகுதியான கொழுப்பைப் போல் இதுவும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிலர் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு ஆரோக்கியமானது என்று சொல்கிறார்கள் ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
மக்கள் தாங்கள் உண்ணும் மிகுதியான கொழுப்பை குறைத்து கொண்டு அதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தலாம் என அமெரிக்க இதய கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
உணவுப் பொருட்களின் மேல் உள்ள லேபல்களில் மிகுதியான கொழுப்பின் அளவு குறிப்பிட்டிருக்கும்.
ஆனால் சமச்சீரான உணவில் கொழுப்பும் இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொழுப்பை முற்றிலுமாக தவிர்க்க கூடாது. உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, இ ஆகியவற்றை கிரகிக்க கொழுப்பு தேவைப்படும்.
கொழுப்பை குறைப்பது மட்டும் இதய ஆரோக்கியதிற்கு போதுமானது அல்ல. கொழுப்பை குறைத்து அதற்கு பதிலாக நாம் என்ன உண்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மிகுதியான கொழுப்பிற்கு பதிலாக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாமல் குறைந்த கொழுப்பு, முழு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனின் இதய அறக்கட்டளையின் விக்டோரியா டெய்லர் தெரிவிக்கிறார்.
மொத்த உணவை கருத்தில் கொண்டே உணவில் எந்த ஒரு மாற்றமும் நடைபெற வேண்டும்.
பாரம்பரிய மத்திய தரைக்கடல் உணவுகளில் அதிகபடியான காய்கறிகளும், ஆலிவ் எண்ணெயும் மற்றும் மிதமான அளவுகளில் புரதம் இருக்கும். எனவே கொழுப்பின் அளவை குறைப்பது மட்டுமின்றி அது இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கும். என்கிறார் விக்டோரியா.
மிகுதியான கொழுப்பிற்கு பதிலாக நிறைவுறா கொழுப்பை உணவில் எடுத்துக் கொள்ளலாம். வெண்ணெய்க்கு பதிலாக எண்ணெயை பயன்படுத்துதல், அவகேடோ, எண்ணெய் மிகுந்த மீன், கொட்டைகள் மற்றும் விதைகளை உண்ணலாம். மிகுதியான கொழுப்பை கொண்ட கேக்குகள், பிஸ்கட்ஸ் மற்றும் சாக்லெட் , கொழுப்பு மிகுந்த இறைச்சி ஆகியவற்றை தவிர்க்கலாம் என்று அறிவுரை கூறுகிறார் விக்டோரியா.
கொழுப்பை குறைக்க செய்யக்கூடியவை
- பொறித்தல் அல்லது வறுத்தலுக்கு பதிலாக வேக வைத்து உண்ணலாம்.
- சமைப்பதற்கு முன்பு இறைச்சியில் உள்ள கொழுப்பையும், தோலையும் நீக்கலாம்.
- எண்ணெயை குறைத்து பயன்படுத்தலாம்.
நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு
கொலஸ்ட்ரால் என்பது சில உணவுகளில் இருக்கும் ஒரு கொழுப்பான பொருள்.
குறைந்த அழுத்த லிப்போ புரத கொலஸ்ட்ரால் உடலுக்கு கெடுதியை விளைவிக்கும்; அது ரத்தக் குழாயின் சுவர்களில் படிந்து கொண்டு அது அடைப்பை ஏற்படுத்தும் அதன் விளைவாக இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை வர வாய்ப்புகள் உள்ளன.
உயர் அழுத்த லிப்போ புரத கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லதாக கருதப்படுகிறது. ஏனென்றால் குறைந்த அழுத்த கொலஸ்ட்ராலை இது கல்லீரலுக்கு கொண்டுச் சேர்க்கிறது. அதிகப்படியான நல்ல கொலஸ்ட்ரால் சிறிதளவு கெட்ட கொலஸ்ட்ரால் என்ற விகித்தில் இருக்க வேண்டும்.

அமெரிக்க குழப்பத்தால் தேங்காய் எண்ணையை ஒதுக்கி விடாதீர்கள்.இது நம்முடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகால சமையலில் உபயோகத்தில் உள்ளது.
அமெரிக்க ஆய்வுகளின் முடிவுகள் பல கர்ப்பரேட்களின் வியாபாரத்தை ஒட்டியே அமையும்.
கார்ப்பரேட்கள் தங்கள் தயாரிப்பைத்தள்ள ,மக்கள் தலையில் கட்ட நம்"பதஞ்சலி "போல் எவ்வளவு கீழாகவும் போவார்கள்.
சுத்தமான கலப்படமில்லா செக்கெண்ணெய்யை உபயோகியுங்கள் அது நம் உடல் நலத்துக்கு போதுமானது.
கொழுப்பு உடலுக்கு கெடுதல் என்கிற இன்றைய மருத்துவத்தில் தான் கொழுப்பை அதிகமாக உடலில் கொண்டுவாருங்கள் என்கிற பேலியோ காரர்களும் அதிகரித்து வருகிறார்கள்.அவர்களும் ஆய்வு முடிவு என்றுதான் சாகிறார்கள்.
முன்பு இந்தியாவில் அமேரிக்கா,இங்கிலாந்து நாட்டு தொழிலதிபர்கள் நிலக்கடலை உடலுக்கு கெடுதல்.பித்தத்தை அதிகரித்து நோய்களை உருவாக்கும் என்று தங்கள் முந்திரி,வாதுமை பருப்புகள்தான் நல்லது என்று விற்பனை செய்தார்கள்.கடலை எண்ணையை வீட்டா ஆலிவ் என்னையே சிறந்தது என்றார்கள்.
ஆனால் இன்று நிலக்கடலை வாதுமை,பிஸ்தா பருப்புகளை விட ஊட்டம் நிறைந்தது என்பது நிரூபணமாகி உள்ளது.