தேடிகள் தரும் தேவையற்ற அறிவிப்புகளைத் தடுக்க

இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் அனைத்துமே, அவற்றில் இயங்கும் இணைய தளங்கள், அவை குறித்த அறிவிப்புகளை (notifications) நமக்குக் காட்டிட அனுமதி அளிக்கின்றன. 
அதற்கேற்ற வகையில், பிரவுசர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

நீங்கள் ஏதேனும், செய்தி மற்றும் வர்த்தக ரீதியிலான இணைய தளங்களைப் பார்க்கையில், உடனே ஒரு பாப் அப் விண்டோ காட்டப்படும். 

“இந்த தளத்திலிருந்து எந்த தகவலையும் நீங்கள் காணத் தவறாமல் இருக்க வேண்டுமென்றால், நாங்கள் எங்கள் அறிவிப்புகளை உங்களுக்குத் தருகிறோம். தரட்டுமா?” என்று அதில் கேள்வி இருக்கும். பதிலாக “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என ஒரு பதிலுக்கான பட்டனும், “சரி” என்று ஒரு பட்டனும் இருக்கும். 
“சரி” என நீங்கள் தேர்ந்தெடுத்தால், நாள் ஒன்றுக்கு அடிக்கடி சில புதிய தகவல்கள் குறித்த நோட்டிபிகேஷன்கள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 

இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பிரவுசர்கள் காட்டும் பாப் அப் தகவல்களையே தடுத்துவிடலாம். 

அதனை எப்படி தடுப்பது என இங்கு பார்க்கலாம்.

கூகுள் குரோம்:
இந்த பாப் அப் கட்டச் செய்தியினை கூகுள் குரோம் பிரவுசரில் தடை செய்திட, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும். குரோம் பிரவுசரை இயக்கி, மேலாக, வலது மூலையில் கிடைக்கும் மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். 
கிடைக்கும் கீழ் விரி மெனுவில், 'Settings' தேர்ந்தெடுக்கவும். 
இங்கு கிடைக்கும் பட்டியலில் கீழாக உள்ள, “Show Advanced Settings” என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Privacy என்ற பிரிவில், “Content Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும், Notifications என்ற பிரிவில், கீழாகச் சென்று, “Do not allow any site to show notifications” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

இதனைத் தேர்ந்தெடுத்து அமைத்த பின்னர், ஏற்கனவே நீங்கள் அனுமதி கொடுத்த இணைய தளங்களிலிருந்து அறிவிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும். 
இதற்கு “Manage Exceptions” என்பதில் கிளிக் செய்து, அதில் நீங்கள் அனுமதி அளித்துள்ள இணைய தளங்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம். 

அதில் தரப்பட்டுள்ள அனுமதியை, நீங்கள் விரும்பினால் ரத்து செய்திடலாம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்கு மட்டும் இத்தகைய அறிவிப்புகள் தருவதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும் என எண்ணினால், இந்த “Manage Exceptions” என்ற பிரிவிற்குச் சென்று, அதற்கான அனுமதியைத் தரலாம். 

பயர்பாக்ஸ்: 
பயர்பாக்ஸ் பிரவுசர், அனைத்து நோட்டிபிகேஷன் வசதியையும் தடுக்க, வழக்கமான தன் Options விண்டோவில் வசதி ஏற்படுத்தவில்லை. இதனை ஏற்படுத்த, நீங்கள் the hidden about:config page. என்னும் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். 


பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதில் உள்ள முகவரி கட்டத்தில், about:config என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அது பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கத்தினையே பாதிக்கும் என்று செய்தி வரும். அங்கு காட்டப்பட்டுள்ள “I accept the risk” என்பதில் கிளிக் செய்து தொடரவும். 
இங்கு கிடைக்கும் தேடல் கட்டத்தில், “notifications” என டைப் செய்திடவும். 

பின்னர், dom.webnotifications.enabled என்ற ஆப்ஷன் கட்டத்தில் டபுள் கிளிக் செய்திடவும். இது, அந்த செட்டிங் அமைப்பினை “false” என மாற்றும். 

அதாவது, வெப் நோட்டிபிகேஷன்ஸ், இனி பயர்பாக்ஸ் பிரவுசரில், உங்கள் பயன்பாட்டில் இருக்காது என்று பொருள். 
இந்த மாற்றம், அனைத்து இணைய தளங்களிலிருந்தும் நோட்டிபிகேஷன்கள் வருவதைத் தடை செய்துவிடும். எனவே, ஒன்றிரண்டு இணைய தளங்களிலிருந்து மட்டும் நோட்டிபிகேஷன் கிடைக்கட்டும் என விரும்பினால், அது இங்கே நடக்காது. 

எட்ஜ் பிரவுசர்:
 மைக்ரோசாப்ட் வழங்கும் எட்ஜ் பிரவுசரில், இணைய தளங்கள் நோட்டிபிகேஷன் அளிக்க, விண்டோஸ் 10 ஆண்டுவிழா மேம்படுத்தலில் வசதிகள் அளிக்கப்பட்டன. 
இருப்பினும், நோட்டிபிகேஷன்களை மொத்தமாக நிறுத்துவதற்கு நமக்கு எந்த வழியையும், மைக்ரோசாப்ட் தன் எட்ஜ் பிரவுசரில் தரவில்லை. எனவே, இணைய தளங்கள் நம்மை நோட்டிபிகேஷன் அனுப்பவா என்று கேட்பதைத் தடுக்க முடியாது. 

கேட்கும்போது, நமக்கு நோட்டிபிகேஷன் வேண்டாம் என்ற நிலையை, “No” கிளிக் செய்வதன் மூலம் அமைத்துக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு இணைய தளத்திற்கும் நாம் தான் “No” கொடுத்து தடுக்க வேண்டும். 

ஆப்பிள் சபாரி
ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி பிரவுசரில், இணைய தளங்கள் நோட்டிபிகேஷன் குறித்து பாப் அப் செய்திகளை வழங்க தடைகளை விதிக்க வழி தருகிறது. 
இந்த விருப்பத்தேர்வை அமைக்க, Safari > Preferences என்று செல்லவும். கிடைக்கும் விண்டோவின் கீழாக “Notifications” என்னும் டேப் இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உள்ள “Allow websites to ask for permission to send push notifications” என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை எடுத்துவிடவும். 
நீங்கள் ஏற்கனவே சில இணைய தளங்களுக்கு அனுமதி அளித்திருந்தால், அந்த தளங்கள், தங்கள் அறிவிப்புகளை உங்களுக்கு அளித்து வரும். அவற்றை நிறுத்த, இந்த விண்டோவிலேயே வசதி தரப்பட்டுள்ளது. 
தடை செய்த இணைய தளத்திலிருந்து, அறிவிப்புகளைப் பெற விருப்பப்பட்டால், வெப் பிரவுசர் செட்டிங் சென்று, நோட்டிபிகேஷன் ஆப்ஷனை மாற்றலாம்.
=======================================================================================
ன்று,
ஜூன்-13.

  தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்  பிறந்த தினம்(1909)
  • ஐ.நா.,வின் 8வது பொதுச் செயலாளர் பான் கி மூன் பிறந்த தினம்(1944)
  • சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1955)
  • இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்(1978)
  • பயனியர் 10, சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது(1983)


இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் 

இ.எம்.எஸ்., என அழைக்கப்படும்  ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிபாட், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில், ஏலங்குளம் என்ற கிராமத்தில் 1909 ஜூன் 13ல் பிறந்தார். 
1934ல், காங்கிரசின் ஓர் அங்கமாக, சோஷலிச காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர் அதுதான் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலராக, 1934 - 1940 வரை இருந்தார்.
கேரள மாநிலத்தின் முதலாவது முதல்வர் என்ற பெருமைக்குரியவர் இ.எம்.எஸ்,சுதந்திரம் பெற்ற இந்தியாவின்  முதல் காங்கிரஸ் கட்சி அல்லாத (கம்யூனிஸ்ட்) முதல்வரும் இவர்தான். 

1967ல், இரண்டாவது முறையாக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று, முதல்வராக பொறுப்பேற்றார். 
கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, 1960 - 1964 மற்றும், 1970 - 1977ல் பணியாற்றியவர். எழுத்தாளரான இவர், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். 
1998, மார்ச் 19ல், காலமானார். 
தனது பங்காக வந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கிய ஏ.எம்.எஸ், கம்யூனிஸ்ட் கட்சி வழங்கிய முழு நேர ஊழியருக்கான ஊதியத்தை வைத்தே வாழ்ந்த பொதுவுடமை தியாகி.
========================================================================================
ஈறுகள், பற்களின் பாதுகாப்புக்கு நமக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள்களைக்கொண்டே ஆரோக்கிய பற்பசை  தயாரிக்கலாம். இனி பற்பசை  எப்படி தயாரிப்பது என்பதைப் பார்ப்போம். 
திரிபலா, திரிகடுகம், திரி ஜாதகம் ஆகிய மூன்றின் கலவையே சிறந்த மருத்துவக் குணம் நிறைந்த இயற்கையான பற்பசை  உகந்தது. 
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவை.
 திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவை.
 திரி ஜாதகம் என்பது லவங்கப் பட்டை, லவங்க பத்திரி, ஏலக்காய் ஆகிவற்றின் கலவை. 
இக்கலவைகளில் உள்ள இந்த ஒன்பது பொருள்களையும் சம அளவு எடுத்துக்கொண்டு, பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியைத் தேனுடன் சேர்த்துக் குழைத்து பற்பசையாக பயன்படுத்தலாம்.
திரிபலா
திரிபலா, ஈறுகளில் ரத்தப்போக்கைக் குறைக்கும். பற்களை, ஈறுகளுடன் வலுவாக பிணைத்திருக்க உதவும். 
பற்சிதைவு நோய்க்கு சிறந்த நிவாரணி.
திரிகடுகம், உமிழ்நீர்ச் சுரப்பை நன்றாகச் சுரக்கவைக்கும். 
கன்னங்களின் நொதிகளைத் தூண்டும்.
திரிஜாதகம், வாய் துர்நாற்றத்தைப் போக்கி நறுமணம் கொடுக்கும்.

தேன், வாய் மற்றும் ஈறுகளில் உள்ள புண்களை ஆற்றும்.
========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?