"கிழிஞ்சது போ.இதைத்தான் பத்து ஆண்டுகளா சொல்லிக்கொண்டுதானே இருக்கிறீர் .ஒரு பொன்னாடை காசு வீண்."
"சரி.அப்படியே மோடி யிடமே கொடுங்கள்.விவசாயிகள்,தொழிலாளர்களைத்தான் பார்க்க நேரம் கிடையாது.நடிகை,நடிகர் என்றால் உடனே நேரம் தருவார்.நாம் போவோம்.கொடுப்போம்."
"அவசரம் வேண்டாம் மோடி இந்தியாவில் இருக்கும் போது ,நதிகளை இணைக்கும் போது முதல் ஆளா போய் கொடுப்போம்.
விளங்கும்.இரண்டுமே நடக்கப்போவது இல்லை.அதை சொல்லி நீரும் கோடி ரூபாய் கொடுக்கப்போவது கிடையாது.
தேவையே இல்லமால் சால்வை,கார் பெட்ரோல் செலவு.
அய்யாக்கண்ணு ,மற்ற விவசாயிகளும் நடிகர் ரஜினி காந்துக்கு டாட்டா போட்டுவிட்டு வெளியேறுகிறார்கள்.
இதுதான் உண்மைக்கதை.
ஆனால் அய்யாக்கண்ணு தானே போய் சந்தித்து கோடி ரூபாயை கேட்டதாக மீசை மண்ணை தட்டி விட்டுக்கொள்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரஜினிக்கு பி.ஆர். பாண்டியன் கேள்வி
"மோடி தலைமையிலான மத்திய அரசு, நதிகளை தேசியமயமாக்க தயாராக இல்லை.ஆனால் நடிகர் ரஜினிகாந்தும்,அய்யாக்கண்ணும் நாடகமாடுகிறார்கள் . "
என தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அது குறித்து பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"காவிரி நீர் தமிழகம் வருவதை தடுத்து, அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு மறுக்கிறது; காவிரி நீர் கேட்டதால் தமிழன் சொத்துக்கள் சூரையாடப்பட்டது.
தீ வைத்து கொளுத்தப்பட்ட போதும் வாய் திறக்காத ரஜினி 1 கோடி கொடுத்து நதிகளை இணைக்கப் போறாராம்.காவிரி பிரசினை தமிழம் கொழுந்து விட்டு எறிந்த போது அனைத்து தரப்பினரும் போராடிய போது நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கன்னடர் என்ற முறையில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த ரஜினி மக்களிடம் எழுந்த தனக்கு எதிரான விமர்சனங்களுக்கா க தனியே உண்ணாவிரதம் என்ற நாடகம் நடத்தி ஒருகோடி ரூபாய் தருவதாக சொன்னார்.
அதன் பின்னர் இதை பற்றியே பேசாமல் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாயை திறக்காமல் இருக்கிறார் ரஜினி.தற்போது அரசியலில் குதிப்பதால் அப் பேட்சை மறு ஓலிப்பதிவு செய்கிறார்.அதையும் விவசாயிகள் சங்கம் நம்புகிறதா?"என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அதே அறிக்கையில், "அய்யா அய்யாக்கண்ணு அவர்களே, காவிரியில் அணை கட்டாதே என்று ரஜினியை வாய் திறக்க சொல்லுங்கள்.
நதிகள் இணைப்பதை அப்புறம் பார்க்கலாம் காவிரி நீரின்றி தமிழகம் இல்லை அதை விடுத்து விளம்பரத்திற்காக காவிரி போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம்"
சமூக ஆர்வலர் மற்றும் வழக்குரைஞர்,திமுகழக செய்தி தொடர்பாளர். கே.எஸ். ராதாகிருஷ்ணன், அவர்கள், “மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! “ என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவை உங்களுக்காத்தருகிறோம்.
“ரஜினிகாந்த் ,சிம்பு , லாரன்ஸ் , . பாலாஜி , நயன்தாரா , விஜய் , சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, கவுதமன்… இப்படி நடிகர்கள் இயக்குனர்கள் என திரை நட்சத்திரங்கள் பலர் போராட்டத்தில் அக்கறையோடு அரிதாரம் பூசிகொண்டார்கள் .
கோடம்பாக்கம் என்ற புண்ணியஸ்தலத்தில் இருந்தாலே ஆசிர்வாதம் தருகின்றவர்கள் என்று நம்மில் பலர் நம்புகின்னறனர் .இவர்கள் ஏதோ தமிழ்நட்டு மக்களுக்கு தியாகங்களும் , பணிகளும் ஆற்றியவர்கள் போல சிலிர்த்து கொள்கின்றனர் .
கேவலமாக இருக்கின்றது… நாடு எங்கே செல்கிறது?
ரஜினிகாந்த் சம்மந்தமாக ஒரு வேதனையான ஒரு விடயத்தை சொல்ல வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தனியாக ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்.
ரஜினிகாந்த் நதிநீர் பிரச்னையில் அக்கறை கொண்டிருக்கிறார் என்றும், நதி நீர் இணைப்பில் உண்மையில் ஆர்வமாயிருக்கிறார் என்றும் நான் நம்பியிருந்தேன்.
கங்கை ,கிருஷ்ணா , காவிரி ,வைகை , தாமிரபரணி , நெய்யாறோடு தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் போராடி அதற்கு சாதகமான தீர்ப்பை பெற்றிருந்த நேரம். அந்த உத்தரவு நகலை கடிதக் குறிப்புடன் ரஜினிக்கு அனுப்பி வைத்தேன் அத்துடன் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை… நதி நீர் இணைப்பில் அக்கறை கொண்டவர் என்று நம்பி தகவலுக்காக மட்டுமே அவருக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால்… அந்த தீர்ப்பு நகலை கூட பிரித்து படித்து, “ தீர்ப்பு நகல் கிடைத்து” என்று ஒருவரிகூட எழுதவில்லை ரஜினிகாந்த். இவர் எப்படி இதயம் சுத்தியோடு நதிநீர் பிரச்சினையை ஆதரிப்பார்?
இதே தீர்ப்பு நகலை தலைவர் கலைஞரிடமும்,ஏ.பி.ஜே அப்துல் கலாமிடம் 2012ல் வழங்கியபோது தலைவர் கலைஞர் அவர்கள் இது பெரிய விசயம்யா!என்று சொல்லி நதிநீர் இணைப்பு குறித்து அவருடைய அறிக்கையில் என்னை குறிப்பிட்டு இருந்தார் .அப்துல் கலாமோ நீங்கள் நாட்டுக்கு நல்ல பணியைசெய்துள்ளீர்கள் என்று தட்டிக்கொடுத்தார்.
இந்த பெருந்தன்மை ரஜினியிடம் இல்லையே…. அப்படியானால் நதி நீர் இணைப்பு என்பது எல்லாம் வெற்றுப் பேச்சுத்தானா ?.
இத்தனைக்கும் ரஜினி என்னை அறியாதர் அல்ல.
1998ம் ஆண்டு. அவர் நடித்த படையப்பா திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டார்கள். படம் வெளியாக இரண்டு மூன்று நாட்களே இருக்கின்றன.
படம், தணிக்ககைக்கு (சென்சார்) வருகிறது. அப்போது திரைப்பட தணிக்கைத்துறை உறுப்பினர் .(censor bord member )களில் நானும் ஒருவவன்..
கே.எஸ். ஆர்.
அந்த படம் தணிக்கைக்கு வருகிறது. சகக உறுப்பினர் ஜெயா அருணாசலம் அவர்கள், படையப்பா படத்தை பார்த்துவிட்டு, “நீலாம்பரி பாத்திரமும் வசனமும் ஜெயலலிதாவை குறிப்பதாக இருக்கிறது . அந்த பகுதிகை நீக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது அரசியல் ரீதியாக கொந்தளிப்பு நிலவிய காலகட்டம் வேறு. ஆனால் ஜெயா அருணாசலம் அவர்களின் கருத்தை நான் கடுமையான குரலில் ஆட்சேபித்தேன். இதனால், சென்சார் அதிகாரியும் அந்த காட்சிகள் நீக்க தேவையில்லை என்று கூறினார்.
அப்போது மிக பதட்டமாக இருந்த காலம் . இதை குறித்து தணிக்கை குழுவின் ஆவனங்களை பார்த்தாலே தெரியும்.
நீலாம்பரி குறித்த காட்சிகளை நீக்க வேண்டும்” என்பது சென்சாரின் முடிவாக இருந்தால், படையப்பா படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும். என் உரத்த கருத்தால், அந்த பிரச்சினைகளில் இருந்து படையப்பா தப்பித்தது.
இந்த செய்தி தினமலர் சென்னைபதிப்பில்வெளியாகி இருந்தது .இதற்க்காக எனக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இப்படி என்னையும் ரஜினிக்கு தெரியும். தவிர, அவரே நதிநீர் பிரச்சினையில் ஆர்வமாய் இருப்பதாய் சொல்லி வருகிறார்.
கே.எஸ்.ஆர். பதிவு அப்படியே:-
ஆனால் முப்பது வருடங்கள் போராடி, நதிநீர் இணைப்புக்காக நான் பெற்ற அரிய தீர்ப்பை அவர் பொருட்படுத்தவே இல்லை.
எல்லாமே வேஷம்.
ஹூம்… மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! வாழ்க ஜனநாயகம் !!
தீதும்நன்றும்பிறர்தரவாரா!”
– இவ்வாறு சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக துப்பு துலக்கினர் இந்நிலையில், திடீர்திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் (32) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை நாகேந்திரன்விரைவில் கைது செய்யப்பட உள்ளார். கொலையின்...