கத்தார் இந்தியா
கத்தார் நாட்டை அரபு நாடுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள செய்தியை நீங்கள் சும்மா கடந்து போயிருப்பீர்கள்.ஆனால் அது உலக அளவில் பல தாக்கங்களை, கத்தார் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலக எரிவாயு தொடர்பான பொருளாதாரத்தையும் குறிப்பாக இந்திய பொருளாதாரத்தையும் அசைக்கும் என்பதை நீங்கள் யோசித்திருக்க மாட்டடீர்கள்.
1.10 கோடி மக்கள் தொகை கொண்ட கத்தாரில் பிழைக்க வந்து ஒன்றியவர்கள் வரிசையில் 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பிழைப்பு நடத்தி இந்தியாவுக்கு பணத்தை அனுப்புகிறார்கள் என்பதை கணக்கில் கொள்ளுங்கள்.
ஏற்கனவே பலநாடுகளில் இருந்து விசா காரணககாட்டி ஐ.டி .தொழிலாளர்கள் 6 லட்சம் பேர்கள் வேலையிழந்து பிறந்த வீட்டுக்கு வரும் வேளையில் இது இந்தியாவுக்கு தேவை இல்லாதது.
உலகம் முழுக்க இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதனமை நாடு கத்தார்தான்.உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து பணம் கொழிக்கும் நாடும் அதுதான்.இந்த ஒதுக்கிவைப்பால் அதன் நிலை?
இன்று.
ஜூ ன்-06.
செம்மொழி
தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.
திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.
எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுநிறைவு நாள் விழாவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.
1.10 கோடி மக்கள் தொகை கொண்ட கத்தாரில் பிழைக்க வந்து ஒன்றியவர்கள் வரிசையில் 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பிழைப்பு நடத்தி இந்தியாவுக்கு பணத்தை அனுப்புகிறார்கள் என்பதை கணக்கில் கொள்ளுங்கள்.
ஏற்கனவே பலநாடுகளில் இருந்து விசா காரணககாட்டி ஐ.டி .தொழிலாளர்கள் 6 லட்சம் பேர்கள் வேலையிழந்து பிறந்த வீட்டுக்கு வரும் வேளையில் இது இந்தியாவுக்கு தேவை இல்லாதது.
உலகம் முழுக்க இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதனமை நாடு கத்தார்தான்.உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து பணம் கொழிக்கும் நாடும் அதுதான்.இந்த ஒதுக்கிவைப்பால் அதன் நிலை?
வளைகுடா மற்றும் மத்தியக் கிழக்கு பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் சவூதி அரேபியா, தனது சக நாடு என்று கூட பாராமல்கத்தார் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
கத்தாரை தனிமைப் படுத்தும் நோக்கத்துடன் அந்நாட்டுடனான அனைத்து விதமான ராஜீய உறவுகளையும் துண்டித்துள்ளது. சவூதி அரேபியா மட்டு மின்றி, அதன் சொல்படி நடக்கும் ஐக்கிய அரபுஅமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கத்தார்உடனான உறவை துண்டித்துள்ளன.
இவர்களுடன் எகிப்தும் ஏமனும், மாலத்தீவும், இணைந்து கொண்டிருக்கின்றன.
கத்தார் உடனான ராஜீய உறவுகளை துண்டிப்பதாக சவூதியும் பிற நாடுகளும் அறிவித்தவுடனே, உலகின் மிக பரபரப்பான விமானப் போக்குவரத்தும் சர்வதேச வர்த்தக போக்குவரத்தும் நடக்கிற கத்தாருக்கு, பல்வேறு நாடுகளின் விமானங்கள் செல்வதுபெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
குறிப்பாககத்தாரிலும் வளைகுடா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
வளைகுடா மற்றும் மத்தியக் கிழக்கு பிரதேசத்தில் 70லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். குறிப்பாக கத்தாரில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே கத்தார் மீதான தடைகளும் ராஜீய தாக்குதல்களும் இந்தியாவின் பொருளாதாரத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.வளைகுடா மற்றும் மத்தியக் கிழக்கு பிரதேசத்தில் எவராலும் கேள்வி கேட்க முடியாத சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சவூதி அரேபியா முயற்சிக்கிறது.
அமெரிக்காவின் நேரடி கைக்கூலியாக இப்பிர தேசத்தில் செயல்பட்டு வரும் சவூதி அரேபியா, ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு அமெரிக்காவின் தூண்டுதலோடு முழுமையான நிதி உதவி யும் ஆயுத உதவிகளும் செய்து, தீராத உள்நாட்டு யுத்தங்களுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த ரகசியமாகும்.
அண்டை நாடான ஏமனிலும் சவூதி அரேபியா மிகக்கொடூரமான தாக்கு தல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக ஈரானும், இதர சில நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்தப் பின்னணியில், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகள் ஒரே அணி சேர்க்கையில்தான் இருக்கின்றன என்ற போதிலும், அவ்வப்போது கத்தார் அரசு, வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை சுயேட்சை யான நிலைபாடுகளை எடுத்து வருகிறது. இது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்ப்பையும் சவூதி அரேபியாவையும் எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த மே 21 அன்று சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க - அரபு ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு அரபு நாடுகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
இதை நளினமாக மறுக்கும் விதத்தில் கத்தார் அரசு ஒரு கருத்தினை வெளிப்படுத்தியது.
மே 23 அன்று கத்தார் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அந்நாட்டு மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் - தானி கூறியதாக வெளியான செய்தியில், ‘’ஈரான் என்பது உலகின் ஒரு முக்கியமான இஸ்லாமிய சக்தி; அந்த சக்தியை நிராகரித்துவிட்டு அல்லது மறுத்துவிட்டுப் போக முடியாது; அரபு பிரதேசத்தில் ஈரான் பெரும் சக்தி; இந்தப் பிரதேசத்தின் அரசியல் நிலைத்தன்மைக்கு அந்த சக்தி அவசியமானது; அதற்கு எதிராகச் செல்லும் நோக்கம் எமக்கு இல்லை" என்று கூறப்பட்டிருந்தது.
இது அரபு நாடுகள் அனைத்திலும் பரபரப்பாக எதிரொலித்தது.
மேலும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க த்திற்கு ஆதரவாகவும் கத்தார் மன்னரின் செய்தியில் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது. இதனால் சவூதி அரேபியா ஆத்திரம் அடைந்தது.எனினும் அடுத்த நாளே கத்தார் மன்ன ரின் அதிகாரப்பூர்வ செய்தியில் இதற்கு மறுப்புதெரிவிக்கப்பட்டது.
கத்தார் அரசின் இணை யதளங்கள் ஊடுருவப்பட்டு தவறான செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் விளக்கம் தரப்பட்டது. ஆனால் அதை சவூதி அரேபியாவோ அல்லது அதன் எஜமானனான அமெரிக்காவோ ஏற்கவில்லை. அரபு பிரதேசத்தில் ஈரானுக்கு ஆதரவாக கத்தாரின் நிலைபாடு ‘தடம் மாறுகிறதோ’ என்ற சூழல், மேற்கண்ட செய்திகளால் எழுந்துள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக கத்தார் மாறினால் அது உலகப்பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வளைகுடா பிரதேசத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதன்மை வகிக்கும் நாடு கத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே தனிநபர் வருமானம் மிகமிக அதிகம் கொண்ட மிகப்பெரும் பணக்கார நாடு கத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.மத்தியக் கிழக்கு பிரதேசத்தை மைய மாகக் கொண்டு நடக்கும் உலக அரசியலில் ஈரான் - ரஷ்யா - துருக்கி - சீனா - வெனிசுலா என பெட்ரோலிய வளமும் அரசியல்பலமும் கொண்ட நாடுகளின் அணிசேர்க்கை யும் அதற்கான முயற்சிகளும் நடந்தவண்ணம் உள்ளன.
மறுபுறத்தில் இப்பிரதேசம் முழுவதையும் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் சவூதியும் முயற்சிக்கின்றன.
இந்த மோதலின் அடுத்த கட்டமாகத்தான் கத்தார் மீதான தள்ளிவைப்பு தாக்குதல்கள்.
கத்தார் மீதான இந்த அரபு நாடுகள் பின்னணியில் உள்ள அமெரிக்கா கத்தாருக்கு காட்டிய பயம் போதும் என்ற நிலையிலும்,அதனிடம் உள்ள எரிவாயு பற்றிய பாசத்திலும் இந்த பிரசனையை பேசித்தீர்த்துக்கொள்ள யோசனை வழங்கி தனது வழமையான கட்டப் பஞ்சாயத்தை துவக்கி விட்டது.
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் - தானி யுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் |
போர்பஸ் இதழ் உலகின் 15 பணக்கார நாடுகளின் பெயரை வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடுதான் முதலிடம்.
கத்தார் செல்வச் செழிப்புடன் திகழ்வதற்கு காரணம் அந்நாட்டின் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும்தான் காரணம்.
கத்தார் நாடுதான் 2022-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியையும் 2020 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த உள்ளது.
உலகின் பணக்கார நாடுகள் வரிசையில்,
லக்சம்பர்க்குக்கு 2-வது இடமும் சிங்கப்பூருக்கு 3-வது இடமும் பெற்றுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்ஹாங், சுவிஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடம் பணக்கார 15 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
சர்வதேச நிதியம் வெளியிடும் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு மதிப்பின் அடிப்படையில் பணக்கார நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன.
கத்தார் செல்வச் செழிப்புடன் திகழ்வதற்கு காரணம் அந்நாட்டின் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும்தான் காரணம்.
கத்தார் நாடுதான் 2022-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியையும் 2020 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த உள்ளது.
உலகின் பணக்கார நாடுகள் வரிசையில்,
லக்சம்பர்க்குக்கு 2-வது இடமும் சிங்கப்பூருக்கு 3-வது இடமும் பெற்றுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்ஹாங், சுவிஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடம் பணக்கார 15 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
சர்வதேச நிதியம் வெளியிடும் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு மதிப்பின் அடிப்படையில் பணக்கார நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன.
=============================================================================================
ஜூ ன்-06.
- தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
- சுவீடன் தேசிய தினம்
- ஒய்.எம்.சி.ஏ., லண்டனில் அமைக்கப்பட்டது(1844)
- குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு, நியூசவுத்வேல்ஸில் இருந்து பிரிக்கப்பட்டது(1859)
செம்மொழி
தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.
திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.
எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
“நிறைவு நாள் விழாவில், தமிழுக்காக சில அறிவிப்புகள் வெளியிடப்படும்; அவை இன்னொரு பட்ஜெட் போல் இருக்கும்’ என, ஏற்கனவே முதல்வர் கலைஞர்கருணாநிதி அறிவித்து இருந்தார். அதைப்போலவே, சில அறிவிப்புகளை வெளியிட்டதுடன், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விழாவில், முதல்வர் கலைஞர் பேசியதாவது:
"இம்மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
நான் பக்கத்திலே நிதி அமைச்சர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவர் சொன்னதை செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். முன்கூட்டிய நான் அவைகளை பேச்சோடு பேச்சாக இரண்டுநாளைக்கு முன் அறிவித்தது போன்று நிதிநிலை அறிக்கை போல் தயாரித்துள்ளேன்.
நிதிநிலை அறிக்கை போல என்றுதான் சொன்னேன் பயந்து விட வேண்டியது இல்லை. அதற்கான நிதி உதவியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். வலதுபுறத்தில் பிரணாப்பும், இடதுபுறத்தில் சிதம்பரமும் இருக்கும் போது நிதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை.
ஐந்து நாட்களாக கோவையில் எழுச்சியுடன் நடந்த மாநாடு நிறைவு விழா காண்கிறது. ஐந்து நாட்களும் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ் என்றே இருந்தது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி.
உலகமொழியாகத் திகழும் ஆங்கில மொழியில் முதல் எழுத்து வடிவம் கி.பி.,7ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஜெர்மன் முதல் வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டு; பிரெஞ்சு 9ம் நூற்றாண்டு; ரஷ்யாவின் பழமையான எழுத்து வடிவம் கி.பி.,10 நூற்றாண்டு;
லத்தீனில் இருந்து பிறந்த இத்தாலி மொழி 10ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது. ஆனால், கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழின் முதல் எழுத்து வடிவ தொல்காப்பியம் கிடைத்துள்ளது. அதுமுதல் இன்று வரை சாமானியர் முதல் ஆன்றோர் சான்றோர் வரை வாழும் மொழியாகவும்,வரலாற்று மொழியாகவும் உள்ளது.
காதல், வீரம் இரண்டும் தமிழர்களின் இரு முக்கிய உணர்வுகள்.அதனை சங்கப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. “குழந்தைப் பருவத்தில் தனது தாயாருடன் மணலில் அழுத்திய விதை முளைத்து புன்னை மரமாக எனக்கு முன் தோன்றியதால்,இம்மரம் என் அக்கா ஆகும் என் அன்னை சொன்னார். அக்காள் முன் உன்னோடு காதல் மொழி பேச கூசுகிறது வேறிடம் சொல்வோம் காதலனே என்றாள், மங்கை ஒருத்தி சங்க இலக்கியத்தில். இதனை “விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி’ என்ற நற்றிணைப்பாடல் கூறுகிறது.
ஒரு குழந்தை இறந்தால் கூட விழுப்புண் படாமல் இறந்து விட்டதே என வருந்தி வளாõல் பிளந்து புதைத்த வீரத்தை “குழவி இறப்பினும் ஊண்தடி பிறப்பினும்’ என்ற புறநானூற்று பாடல் கூறுகிறது. “பிறப்பொக்கும்’ என வள்ளுவ மொழிப்படி சமதர்ம சமுதாயத்தை தமிழர்கள் பின்பற்றினர்.
கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் தமிழர்களோடு வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். பொள்ளாச்சி, வெள்ளகோவில் உள்ளிட்ட கொங்கின் பல்வேறு பகுதிகளிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தே ரோமர்கள் கொங்குநாட்டுடன் வாணிபத்த் தொடர்புகொண்டிருந்தனர். ஜாவா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் கடல்வழி வாணிபம் மேற்கொண்டுள்ளனர். தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக அறநெறி, வாழ்வியல் நெறிமுறைகளைக் கொண்டுள்ளது செம்மொழியான தமிழ் மொழி. தமிழ் வளர்க்க பாடுபட்டவர்களை இந்த நேரத்தில் நினைவுர வேண்டும். ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், போப், செம்மொழி என நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளை அச்சுவடிவம் பெறச்செய்த உ.வேச.சா., சி.வை., தாமோதரம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதியார், பாரதிதாசன், இலங்கை தனிநாயகம் அடிகள், வ.ஐ.., சுப்பிரமணியம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்ற அனைத்து சான்றோர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். செம்மொழித் தமிழை எதிர்காலத்தில் அறிவியல் தமிழாக கட்டிக் காப்போம் என உறுதி ஏற்போம்.
செம்மொழி மாநாடு தொடர்பான கலந்தாய்வில் சிவத்தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நான் கூறியது போன்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
அறிவிப்புகள்:
* தமிழகத்தில் ஐந்து இடங்களில் மரபணு பூங்கா நிறுவப்படும். அதற்கு எம்.எஸ்., சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.
* இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிவார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுமேயானால், செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாகஅறிவிக்க வேண்டும், என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என, 2006ம் ஆண்டு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை தாமதிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சமஸ்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவது போன்று, தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
* இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே, இந்திய அரசு அமைக்க உள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
* கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டம் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு திட்டமிட வேண்டும்.
* தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
* தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு “கணியன் பூங்குன்றனார்’ விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். முதல்கட்டமாக விழா மேடையில் விருது வழங்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.
* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.
* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.
* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.
* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.
* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.
* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது
* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.
* கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.
* தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
* அறிவியல் தமிழை மேம்படுத்த கம்ப்யூட்டர், மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இவற்றுக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கலைஞர் கூறினார்.
.