பேசு தலைவா பேசு!



இன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.
இந்தியா சென்னையில் கூடி 
உன் பணி பற்றி பேசுகிறது....


நீ என்றன் பள்ளிக்கூடம் -
            சிந்தை தெளியாப் பருவத்துச்
            சிறுவனாய்ப் படித்தேன் உன்னை
            உயர்கல்வித் தளத்தில் கூட
            உன்னைத்தான் படித்தேன் 
            அப்போதே எனது
            திசைகளைத் தீர்மானித்த
            தொலைதூர வெளிச்சம் நீ
            தொடமுடியா விண்மீன் நீ!
நீ என்றன் பள்ளிக்கூடம்
            இலக்கியம் எப்படி எழுதுவதென்றும்
            மேடையில் எப்படிப் பேசுவதென்றும்
            வாதம் புரியும் வகைஎது என்றும்
            வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன்
நீ என்றன் பள்ளிக்கூடம் -
            பத்து ஆண்டுகள் உன்
            பக்கம் இருந்தேன்
            பார்த்துக் கொண்டிருந்ததாய்ப்
            பலரும் கருதினர்
            படித்துக் கொண்டிருந்தேன்
            தலைவா உன்னை!
நீ என்றன் பள்ளிக்கூடம் -
            ஆண்டுகள் பலவாய்ப் படித்தும் கூட
            ஆரம்பப் பாடமே முடியவில்லை
            தோண்டத்  தோண்டச்
            சுரக்கும் ஊற்று நீ
நீ என்றன் பள்ளிக்கூடம் -
            இப்போது ஏன் இந்த மௌனப் பாடம்
            ஏங்கும் தமிழினம் பார்த்திடு தலைவா
            உன் குரல் கேட்க
            குவிந்திருக்கின்றன
            கோடான கோடிக் காதுகள்
            எத்தனை கோடிச் சொற்கள் இருந்தென்ன
            'உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'
            என்னும்
            ஒற்றைத் தொடருக்கு ஈடாகுமா அவை?
            பேசு தலைவா பேசு
            உன் நாவை அசை --- எங்கள்
            கண்ணீரைத் துடை!  
                                                                                                                                         - சுப.வீரபாண்டியன்
முதல்வராக இருந்தபோது கலைஞருடன் கவிஞர் வைரமுத்து, அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் காரில் சென்றுகொண்டிருந்தனர். 
காரில் உட்காரும்போது, வைரமுத்துவின் ஜிப்பா நுனியின் மீது டி.ஆர். பாலு உட்கார்ந்துவிட்டார். கருணாநிதியின் சி.ஐ.டி. காலனி வீடு வந்ததும், காரில் இருந்து வைரமுத்து முதலில் இறங்கினார். எனவே, அவரின் ஜிப்பா சற்று கிழிந்துவிட்டது. 
டி.ஆர்.பாலுவால்தான் ஜிப்பா கிழிந்தது என்பதை அறிந்த கருணாநிதி, ''இனிமே மத்திய அமைச்சர் பாலு, என்ன கிழிச்சார்னு யாரும் கேட்க முடியாது'' என்று சொல்ல, அந்த இடமே சிரிப்பலையில் ஆழ்ந்தது.




எம்.ஜி.ஆர். முதல்வராக அமர்ந்திருக்க, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை அடக்க முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறைந்தபாடில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். 
அதன்பின் எழுந்தார் கலைஞர்  "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். 
ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் நான்தானே" என்று சொன்னதும், அதுவரை அமளியுடன் காணப்பட்ட பேரவை சிரிப்பொலியால் அதிர்ந்தது. 






சட்டமன்றத்தில் ஒருமுறை, அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி., தனது துறைமீது பதிலளித்துப் பேச எழுந்தபோது, முதலமைச்சர் கலைஞர்  அவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுத்தனுப்பினார். அதில் 'அயிரை மீன் அளவுக்கு மட்டும்  பேசவும்' என்று எழுதியிருந்தார். 


============================================================================================
ன்று,

ஜூன்-03.


  • திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த தினம்(1924)

  • நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது(1965)

  • மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)
==============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?