இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 22 மார்ச், 2016

கூட்டு மருந்து, கெட்ட மருந்து?

இன்றுவரை மருந்துக்கடைகளில் புழக்கத்தில் இருந்த 340 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு  தடை விதித்துள்ளது.,
இவைகளில் பல கூட்டு மருந்துகள் ஆபத்தை விளைவிப்பவை.அவை உலக நாடுகள் பல வற்றில் ஏற்கனவே தடையில்தான் உள்ளது.இதுவரை இவைகளை கண்டும்,காணாமல் இருந்த மத்திய அரசு திடீரென வேறு பல கூட்டு மருந்துக்களையும் சேர்த்து தடை விதித்துள்ளது.மருந்து விற்பனையாளர்கள்-தயாரிப்பாளர்களிடையே எதிப்பை கிளப்பியிருக்கிறது.
குறிப்பிட்ட விகிதத்தில் சிலவகை மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, கூட்டு மருந்து- மாத்திரைகளாக விற்கப்படுகின்றன. 
இவற்றில் பல, அவை தயாரிக்கும் நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு நன்கு மனதில் பதிந்துவிட்ட பிராண்டு பெயர்களால் ஆனவை. குறிப்பாக விக்ஸ் ஆக் சன் 500.இது பக்க விளைவுகள் உண்டாக்கும் என்று தெறிந்தும் இதுவரை சும்மா இருந்த அரசு  திடீர் தடையை தந்துள்ளது.இம்மாத்திரைகளுக்கு விக்ஸ் தயாரிப்பு நிறுவனம் செய்த விளம்பரம் அதிகம்.
ஜலதோஷமா இதைச் சாப்பிடு, உடல் வலியா இந்த மாத்திரையை எடுத்துக்கொள், குளிர்க் காய்ச்சலா இதுதான் நிவாரணி என்ற அளவுக்கு இவை பிரபலமாகிவிட்டன. 
ஆனால், ஒரேயொரு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள்கூட, தேவையின்றி பிற நோய்களுக்கான நோய்முறி குணமும் கொண்ட மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவது தேவையற்றது மட்டுமின்றி, நோய் எதிர்ப்புச் சக்தியையும் நாளடைவில் போக்கிவிடும்.
பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள்தான் இந்தத் தடையால் பெரிதும் வியாபாரத்தை இழக்கப்போகின்றன. 
எனவே, அவையும் அவற்றால் பயன் அடைபவர்களும் இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்க்கின்றனர். சுமார் ரூ. 4,000 கோடி மதிப்புள்ள மருந்து - மாத்திரை வர்த்தகம் வீணாகிவிடும் என்பது அவர்களுடைய ஆதங்கம்.
இவர்கள் இங்கு இந்தியாவில் தயாரிக்கும் பல மருந்துகள் உலக நாடுகள் பலவற்றால் தடை செய்யப்பெற்ற அபாயகரமான பக்க விளைவுகள் கொண்டவை.
இது போன்ற அபாயகரமான மருந்துகளை தயாரித்து இந்தியாவில் விற்று மக்கள் உயிருடன் விளையாடி கொள்ளை லாபம் அடித்த மருந்து நிறுவனங்கள் மத்திய அரசின் இந்த தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்து தற்காலிக தடையாணையும் பெற்றுள்ளன.
அந்த பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு தங்கள் கல்லாவிற்கு தங்க முட்டையிடும் வாத்து கையை விட்டு போய் விடுமோ என்ற பயம்.
அவர்களுக்கு தங்கள் மருந்தை வாங்குபவர்களுக்கு தலைவலி போவதுதான் முக்கியம்.எதிர் விளைவாக வயிற்று வலி வந்தால் என்ன?வயிற்றில் புற்று நோய் வந்தால்தான் என்ன?அவர்களுக்கு தேவை இந்திய மக்கள் பணம்.தலைவலியை போக்குவதாகத்தானே விளம்பரம் செய்தோம்.போயிற்று அல்லவா?புற்று நோய் பற்றி வரும் என்றோ,போகும் என்றோ சொல்லவே இல்லையே நாங்கள்.இதுதான் அவர்கள் வாதம்.
உண்மையிலேயே மக்களுக்கு இவை தீங்கை விளைவிக்கும் கூட்டு மருந்துகள் என்றால், இத்தனை ஆண்டுகள் மத்திய அரசு சுகாதாரத் துறை இவற்றை  ஏன் அனுமதித்தது? நீதிமன்றக் கேள்வி இதுதான்.
இப்போது மட்டும் 340 வகை கூட்டு மருந்துகள் தீங்கானவை என்ற முடிவுக்கு வந்தது எப்படி? 
எஞ்சிய கூட்டு மருந்துகள் நன்மை தருபவையா, இன்னும் ஆய்வுகள் முடியவில்லையா? 
இவை மக்களுடைய மனங்களைக் குடையும் கேள்விகள். 
இந்தக் கூட்டு மருந்துகள் பெரும்பாலும் பொருத்தமற்றவை, பயனற்றவை, சமயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகிறது.
அதேசமயம், ஒரு நோய்க்கு அல்லது நோய் அறிகுறிக்கு ஒற்றை மருந்தைவிட கூட்டு மருந்து நல்ல பலன் அளிக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். 
காசநோய், மலேரியா, எச்.ஐ.வி. நோய்த்தொற்று, எய்ட்ஸ் போன்றவற்றுக்குக் கூட்டு மருந்துகளே பரிந்துரைக்கப்படுகின்றன. 
எனவே, மக்கள் உட்கொள்வதற்குப் பாதுகாப்பான, அவசியமான, பயனுள்ள கூட்டு மருந்துகள் தொடர்பான பட்டியலை அரசே வெளியிட வேண்டும். 
மத்திய அரசு தனியாகவும் மாநில அரசுகள் தனித்தனியாகவும் மருந்து உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கும் முறையைப் பொதுவான முறைக்கு மாற்ற வேண்டும். 
மருந்து ஆய்வாளர்கள் தங்களுடைய பணிக்குரிய பயிற்சிகளை அவ்வப்போது மேம்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.

மருந்து தயாரிப்பு, விநியோகம், விற்பனை தொடர்பான நம்முடைய சட்டங்கள் குழப்பமானவை. விசாரணை நடைமுறை களும் காலதாமதத்துக்கே வழிவகுக்கின்றன. 
294 கூட்டு மருந்துகளைத் தடை செய்வது தொடர்பான பழைய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2007 முதல் நடந்துவருவது இதற்கு உதாரணம். 
மருந்துக் கட்டுப்பாட்டாளர் 2012-ல் 7,000 மனுக்களைக் கூட்டு மருந்துகளின் பாதுகாப்பு, பயன் குறித்து ஆய்வதற்காகப் பெற்றிருக்கிறார். 
மத்திய அரசும் நீதிமன்றங்களும் இந்த வழக்குகளைத் தீர்மானிப்பதில் அறிவியல், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. 
சுகாதாரமும் மருந்தும் ஒரே துறையின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும். ‘மருந்து தயாரிப்பு’ என்ற சுகாதார அம்சத்தையும், விலை,‘விற்பனை’ என்ற வர்த்தக அம்சத்தையும் இணைத்து நிர்வகிக்கும் வகையில் ‘தேசிய சுகாதார ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல் படுத்திட மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிலிம் நியூஸ் ஆனந்தன் 
காலமானார்.
அவருக்கு வயது 91.
இவர்தான் தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ) . 
முதன்முதலில், பிலிம் நியூஸ் பத்திரிகையில் அவர் எடுத்த திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்தன. 
இதனால் ஆனந்தன்என்ற இவர் , பிலிம் நியூஸ் ஆனந்தன் என்றே பின்னாளில் அழைக்கப்பட்டார்.
தென் இந்திய திரை வர்த்தக கூட்டமைப்பின் பத்திரிகையில் பணியாற்ற ஆனந்தனுக்கு கிடைத்த வாய்ப்பு அவருக்கு ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தது.
திரைப்பட ஸ்டூடியோக்களை வலம்வந்த ஆனந்தன் குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை திரட்டினார். 
தனது கடின முயற்சியால் 6000 படங்கள் பற்றிய அரிய தகவல்களை அவர் திரட்டினார்.
சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் இருந்தும் புகைப்படங்களை திரட்டி ஒரு பிரம்மாண்ட கண்காட்சி நடத்தினார். 
அந்த கண்காட்சி திரையுலகில் ஆனந்தனுக்கு நல்லதொரு பெயரும், பெருமையும் பெற்றுத் தந்தது.
கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.
தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. 
2003-ல் தமிழக அரசு  நிதியுதவியுடன் 1930-ம் ஆண்டு முதலான தமிழ் சினிமாக்கள் குறித்த ஒரு தொகுப்பினை ஆனந்தன் புத்தகமாக வெளியிட்டார்.
தமிழ் திரைப்படங்கள் குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களின் களஞ்சியமாக இருந்த  பிலிம் நியூஸ் ஆனந்தன் வயோதிகத்தால் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகையில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் திரைப்படத் துறையின் வரலாற்றை ஆவணமாகப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர். தமிழ் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் செலவிட்டார்.
தமிழ்த்திரையுல நடிகர்கள்,திரைப்படங்கள்,மற்றுமெந்த விபரம் என்றாலும் உடனே இவரை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
=====================================================================================
இன்று ,
மார்ச்-22.
  • உலக தண்ணீர் தினம்.

  • இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது(1993)

  • அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)

  • லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை முதன் முதலாக காண்பித்தனர்(1895)

  • ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)
 
தண்ணீர்ஐ. நா சபையின் தீர்மானத் திற்கு இணங்க 1993ஆம் ஆண்டுமார்ச் 22ஆம் தேதி  முதல் 

உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது.

நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் 

ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள்
.
 அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்.

கடந்த 1992ஆம் ஆண்டு  சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை 

வலுப்படுத்த வேண் டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக 

தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் 

கிடைக்காமல் அவதிப்படு கிறார்கள். பல கோடி 

மக்கள் நீர் 


பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். 

குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் 


எதிர்காலத்தில் 

உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.


எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் 

கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் 

உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று 

விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.


உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். 

இதில்2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறை களாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் 

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை 

உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாச டைந்து வருகிறது. ஆண்டுதோறும் 

40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப் பட்டு நீர்வள 

ஆதாரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 

குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் 

தெரிவிக்கிறது.

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரி யாசிஸ், கொக்கி புழு, தோல் 

நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள் ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி யது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் 

இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி 

நீர்மட்டத்தை உயர்த்துவோம்.


நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் 

தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபட வேண்டும் .


======================================================================================