பன்றியுடன் விவாதம்



தமிழக தேர்தலின் இன்றைய சூழல் குறித்த கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பான இந்நிகழ்ச்சி அது. 
நேரலையகாக தந்தி  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
விவாதத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருணன் ,சீமான், பாஜக வானதி சீனிவாசன், ஆகியோர் பங்கேற்றனர். 
இதில் சீமான் விவாதம் நடந்த ஸ்டூடியோவில் அல்லாமல் வேறு இடத்திலிருந்து விவாதத்தில் பங்கேற்றார். இந்த விவாதத்தின்போது அதிமுக திமுகவை தோற்கடிப்பது தொடர்பாக நாம் தமிழர் சீமானுக்கும், அருணனுக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது. 
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை விட தான் ஒரு வாக்கு குறைந்து எடுத்தாலும் தான் அந்தக்கட்சியில் சேர்ந்துவிடுகிறேன் என்று குறிப்பிட்ட சீமான், வாய்க்கொழுப்பு அதிகமாக இருந்ததால்    கம்யூனிஸ்ட் கட்சியில் கொள்கை இல்லை என்று குறிப்பிட்டார். 
அதற்கு பதிலடியாக பேசிய அருணன் ' கட்சி ஆரம்பிக்கும் போது மார்க்ஸியம்,பெரியாரிசம் பேசினீர்கள்,சே,பெரியாற படம் போட்ட சட்டைகளை அணிந்து வந்தீர்கள்.ஆனால் அப்படியெல்லாம்  பேசிவிட்டு இப்போது இனவெறிக்கருத்து பேசுகிறீர்கள். 
நேற்றுவரை பெரியாரை கும்பிட்டுவிட்டு இன்று பெரியாரையே வசைபாடுகிறீர்கள். முருகன் முப்பாட்டன் என்கிறீர்கள்,பிராமணர்கள் தமிழர்கள் என்கிறீர்கள் நிலையாக உங்களிடம் என்ன கொள்கை இருக்கிறது' என சீமானை குறிப்பிட்டார். 
இதனால் கோபம் அடைந்த நிலையில்  ஆவேசமான சீமான், ஆபாசமாக பேசிவிட்டு 'ஏய் என்னய்யா லுசு மாதிரி பேசுற' என நேரலையிலேயே சத்தம்போட பதிலுக்கு 'நீதான்டா லுசு, யாரைப்பார்த்து லுசு ங்கிற' என அருணன் பதில் கொடுக்க மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சீமான் நிலை வரவர கவலைக்கிடமாக உள்ளது.
தினமும் ஒன்றை கொள்கை என்று பேசுகிறார்.
மற்றவர்களை மிகத்தரக்குறைவாக ஏசுகிறார்.திட்டுகிறார்.மொத்தத்தில் கட்சி நடத்தும் தலைவர் என்ற தகுதிக்கே தரமில்லாதவராக இருக்கிறார்.
காமராஜர்,அண்ணா,கலைஞர் ,எம்ஜிஆர் போன்றோர் நடத்திய அரசியலை ஒரு படி தரக்குரைவாக்கியது ஜெயலலிதாவும்,அவரது கட்சினரும் அன்றால் அசிங்கப்படுத்துவது சைமன் என்கிற சீமான்.
முன்பு குறிப்பிட்ட இனத்தை தாக்கியதற்கு விளக்கம் கேட்ட அந்த இனசங்கத்தலைவரை "ங்கோத்தா "என்று அலைபேசியில் பேசி தமிழகத்தையே அதிர வைத்தார்.
இன்று இடதுசாரி இயக்கத்தை சார்ந்த அறிஞர் ,முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர்களில் ஒருவரான பேராசியர் அருணன் அவர்களை பார்த்து "லூசு"என்று கூறும் அளவு சீமானுக்கு மனநிலை சீர்கெட்ட கலக்கத்தில் உள்ளார் .
அருணன் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை அளவு சீமானுக்கு அரசியல் அனுபவம் இருக்குமா?அரசியலை ஆராய்ந்து அருணன் எழுதிய நூல் ஒன்றை சீமான் படித்திருந்தால் கூட அவருக்கு அரசியல் அறிவும்,அனுபவமும் உண்டாயிருக்கும்.
மேடையிலேயே இன்று ஒன்றும் மறுநாள் ஒன்றுமாக பேசும்,அநாகரிகமாக பேசும் சைமனுடன் பொய் வாதிட்டது அருணன் போன்ற தரமிக்க எழுத்தாளர்களுக்கு,அரசியல்வாதிகளுக்கு இழுக்கான ஒன்று.
உலக அரசியல் கொள்கைகளை விமர்சிக்கும் அளவு உயர்வான மார்க்சியவாதி உள்ளூர் ஈழ அரசியல் வியாபாரியுடன் பேசுவது தனது தரத்தை தானே தாழ்த்திக் கொள்வதுதானே.பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அதுவரை தன்னை தமிழர்கள் பாதுகாவலராக நியமித்துள்ளதாகவும் கூறி புலம் பெயர் தமிழர்களிடம் பிச்சை எடுத்து சொகுசு காரில் அரசியல் செய்யும் சீமான் ஒரு தமிழக அரசியல் வியாதி.
தரம் தாழ்ந்த அரசியல் வியாதி சைமனுடன் வாதிட்டது அருணன் செய்த தவறுதான்.சீமான் என்ற சைமன் மீது தவறில்லை.
பன்றியுடன் நடை பயணம்,விவாதம் மேற்கொண்டால் சக்தி நம் மீது தெரிக்கத்தானே செய்யும்.
சீமான் வார்த்தை தடித்து உதிர்க்கத் தயாராகிறார் என்பது புரிகிறது. பார்த்துக் கொண்டிருந்த நமக்கு அவரின் அடுத்த வார்த்தைகள், நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அதனைத் தடுப்பதற்கு கொஞ்சமும் முயலவில்லை ரங்கராஜ் பாண்டே.
=======================================================================================
இன்று,
மார்ச்-02.
  • இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)
  • யாஹூ நிறுவனம் தொடங்கப்பட்டது(1995)
  • மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1956)
  • டெக்சாஸ், குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)

=======================================================================================
2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பெரிய அளவில் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறது. 
ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் கூறப்படவில்லை. உணவுப் பொருள்கள் தொடர்பாக அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் கொண்டுவரப்படும் என்று அரசு அறிவித்திருப்பதன்மூலம் இது வெறும் கண்துடைப்பேயாகும். இவ்வாறு வேளாண் விளைப்பொருள்கள் சந்தைப்படுத்துதலில் தனியார் வேளாண் நிறுவனங்களே ஊக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன. 
இது விவசாயிகளின் வாழ்வில் கடுமையான துன்ப துயரங்களை ஏற்படுத்தும்.மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளின் தற்கொலைகள் 26 சதவீதம் அதிகரித்திருக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்திட பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை. வேளாண் உற்பத்திச் செலவினத்தைவிட 50 சதவீதம் அதிகம் விலை நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று பாஜக தன் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது.
 ஆனால் அதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. 
வேளாண் உணவுப்பொருள்களைக் கொள்முதல் செய்ய இணையவழி கொள்முதல் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருப்பதன் மூலம் பெரும் வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் பயனடைவார்களேயொழிய, விவசாயிகளின் நலன்களை அது காத்திடும் என்று கூறமுடியாது.
நாட்டில் சுமார் 55 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பையும், மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதத்தினருக்கு வாழ்வாதாரங்களையும் அளிப்பது வேளாண்துறையாகும். 
மத்திய அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடன்களை 1.6 லட்சம் கோடி ரூபாய்தள்ளுபடி செய்திருக்கக்கூடிய அதே சமயத்தில் விவசாயிகள் வாங்கிய கடனில் ஒரு ரூபாயைக்கூட தள்ளுபடி செய்ய முன்வரவில்லை. 
இது அரசாங்கத்தின் உண்மையான வர்க்க பாசத்தை காட்டி இருக்கிறது. எனவே இவ்வாறு விவசாயிகள் விரோத பட்ஜெட் குறித்து கிளர்ச்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்திட தன் கிளைகள் அனைத்திற்கும் அறைகூவல் விடுக்கிறது.
============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?