ஆப்பிளுக்கு அடி!
நாட்டின் பாதுகாப்பை விட கார்ப்பரெட்களின் வியாபாரம் தான் முக்கியம்.
இது அமெரிக்கா மற்ற போதித்த பாலபாடம்.
ஆனால் இன்று அதே மாட்டிக் கொண்டு முழித்து விழித்துக்கொண்ட நடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில், கடந்த டிசம்பர் 2ம் தேதி(02-12-2015) நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ரிஸ்வான் பரூக், தஷ்பீன் மாலிக் தம்பதியினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்.
22 பேர் காயமடைந்தனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இருவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் நடந்த அன்று, சான் பெர்னார்டினோ நகருக்கு அருகே உள்ள ஒரு ஏரிக்கு அருகில் இந்த தம்பதியினர் திரிந்து கொண்டிருந்ததை சிலர் பார்த்தாக தகவல் கிடைத்தது.
எனவே தங்களைப்பற்றிய ஆவணங்களை அந்த ஏரிக்குள் அவர்கள் வீசியிருக்கலாம் என கருதிய புலனாய்வுத்துறையை சேர்ந்த நீச்சல் வீரர்கள், ஏரிக்குள் இறங்கி தேடினர்.
இதனையடுத்து பரூக்கின் ஆப்பிள் 5-சிஐபோன் கண்டெடுக்கப் பட்டது.
ஐபோனில் உள்ள தகவல்களை பெற அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., முயற்சி செய்தது.
ஆனால் ஐபோனுக்குள் ஊடுருவுவது சிரமமாக இருந்தது, தகவல்தேடும் முயற்சியில் சின்ன தவறு நடந்தால் கூட தகவல்கள் அழியும் அபாயம் இருந்தது.
வேறு வழியின்றி எப்.பி.ஐ., ஆப்பிள் நிறுவன உதவியை நாடியது.
ஆனால் தங்கள் தயாரிப்பின் பாதுகாப்பு என்று கூறியும்.ஐபோன் வியாபாரம் பாதிக்கும் என்று கூறி , ஐபோனுக்குள் ஊடுருவி தகவல்கள் தான் தேடித்தரவும் அதற்கான சாப்ட்வேரை அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறைக்கு தரவும் ஆப்பிள் நிறுவனம் மறுத்து விட்டது.
இந்த நாட்டின் பாதுகாப்புக்காக ஒரு தீவிரவாதியின் தகவல் தொடர்பை விசாரணைக்காக தர மறுத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இதே சமுக வலைத்தள பகாசுர நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்களும் ஆதரவு தந்தன.
14 அப்பாவி மக்களை விருந்துக்கு அழைத்து திட்டமிட்டு கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பின்புலம் அறிய ஒத்துழைக்க மறுத்த ஆப்பிள் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்தது.
தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பயங்கரவாதியின் ஐபோனுக்குள் ஊடுருவ ஆப்பிள் நிறுவனத்தின் உதவி தேவையில்லை என எப்.பி.ஐ., அறிவித்துள்ளது.
மேலும் பயங்கரவாதியின் 5-சி ஐபோனில் வெற்றிகரமாக ஊடுருவி தகவல்கள் பத்திரமாக பெறப்பட்டதாகவும், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருதாகவும் எப்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்துடனான அமெரிக்க அரசின் சட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும் பாதுகாப்பு நிறைந்த ஆப்பிள் ஐபோன்களில், அந்நிறுவன உதவியின்றியே அமெரிக்க அரசு ஊடுருவியது, ஆப்பிள் பயன்பாட்டாளர்களிடையே அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பை விட தங்கள் பொருளின் பாதுகாப்பையே முக்கியமாக கருதிய ஆப்பிள் நிறுவனத்துக்கு இது ஒரு பலத்த அடி.
அமெரிக்க அரசு முதலிலேயே கேட்டுக்கொண்ட போது ஆப்பிள் நிறுவனம் அந்த ஐபோனில் உள்ளத் தகவல்களை கண்டறிந்து உதவியிருந்தால் இந்த ஆப்பிள் ஐபோன் பாதுகாப்புக்கு நம்பகத்தன்மை போயிருக்காது.
நாட்டின் பாதுகாப்புக்கு உதவிய பெருமையும் கிடைத்திருக்கும்.எப்.பி.ஐ.ஆப்பிள் ஐபோனில் ஊடுருவும் மென்பொருளை கண்டு பிடிக்கவும் தேவையே இருந்திருக்காது.
ஆக சர்வ வல்லமை பொருந்திய எப்.பி.ஐ.யே தங்கள் காலில் விழுந்து கெஞ்சியது என்ற வியாபார பெருமையை பெற நினைத்த ஆப்பிளுக்கு இது சரியான அடி.அதுமட்டுமல்ல ஐபோனின் உள்ளே ஊடுருவ மென்பொருள் கண்டு பிடிக்க யாராலும் முடியாது என்ற இறுமாப்புக்கும் பலத்த அடி.இனி ஆப்பிள் பாடு,ஹாக்கர்கள் பாடு.
========================================================================================
மார்ச்-30.
- ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்டது(1858)
- தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்(1709)
கின்னஸில் இடம்பெற்ற
பி.சுசீலா
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் பி.சுசீலா. பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.
பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாட வைத்தார். 1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னை கண் தேடுதே…’ பாடல்களால் பிரபலமடைந்தார்.
பி.லீலா, எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி போன்ற பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பின்னணி உலகில் இந்த இளம் பாடகியின் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. தனித்தன்மை வாய்ந்த தன் குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் ஹிட் பாடல்களை அளித்த இந்த இசையரசியின் ஆட்சி, அரை நூற்றாண்டுகள் தொடர்ந்தது.
1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம்.சவுந்திரராஜன், கன்னடத்தில் பி.பி.நிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. குறிப்பாக, டி.எம்.சவுந்திரராஜனுடன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.
தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
5 முறை தேசிய விருதுகள், பத்மபூஷன் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில அரசு விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து வந்தார். தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பி.சுசீலா இசைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவரின் இத்தகைய நீண்ட இசைப் பயணத்தையும், சாதனையையும் பாராட்டும் விதமாக அவருக்கு கின்னஸ் கவுரவம் கிடைத்துள்ளது.
அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற அவருடைய சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரம் அளித்துள்ளது. 1960 முதல் இன்றுவரை பி.சுசீலா 17,695 பாடல்களைப் பாடியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------