முத்துக்குமாரசாமிக்கு அநீதி?


வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் இருந்து, முன்னாள்அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விடுவித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை வேளாண்மைத்துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி. 
கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ம்தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். 

முத்துக்குமாரசாமி
வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட 7 பேரிடம் தலா ரூ. 1.75 லட்சம் வீதம் பணம் வசூலித்து தருமாறு, அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் வற்புறுத்தியதால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார்.

முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியவர்களை தண்டிக்க வேண்டும் தற்பொதைய காவல்துறை விசாரணை அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கும் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்  என்று ஒருமித்த மக்கள் குரல்  எழுந்தது.

அதைத்தொடர்ந்து, வேறு  வழியின்றி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.

ஆனால் வழக்கு ஜெயலலிதா  பொறுப்பில் உள்ள  சி.பி.சி.ஐ.டி.க்கே  மாற்றப்பட்டது. அக்ரி கிருஷ்ண மூர்த்தி மீது முதலில் லஞ்சம் கேட்ட  வழக்கு பிரிவுகளிலேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டதுடன், அவரது தனி உதவியாளர்கள் மற்றும் வேளாண்துறையில் ஓட்டுநர் பணி பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் செவ்வாயன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். 

முத்துக்குமாரசாமி தற்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து,அரசு ஊழியர் சங்கங்கள், திமுக ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகள், சமூக சங்கங்கள் ,குடியிருப்போர் அமைப்புகள் ,நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்தே வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 
உள்ளூர் அதிமுக பிரமுகர்களும் விசாரிக்கப்பட்டனர்.

ஆனால் சிபிசிஐடி விசாரணை நடுநிலையுடன் இராது என்று அப்போது எதிர்ப்புகள் வந்தாலும் ஜெயலலிதா அரசு அவைகளை புறந்தள்ளியது.சிபிசிஐடி பிரிவும் தமிழக அரசு கையில்தான் உள்ளது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என்றே பணத்தை நெருக்கடி செய்து கேட்டுள்ளார்.

அந்த மேலிடம் கையில் உள்ள சிபிசிஐடி விசாரணை எந்த திசையில் இருக்கும் என்பதை சின்ன குழந்தை கூட சொல்லி விடுமே.

அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இவ்வழக்கில் தனக்கு நேரடியாக சம்மந்தமில்லை; 
எனவே, வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டுமென அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் போட்ட பெட்டிசனை விசாரித்த நீதிமன்றம், சொத்தையான சிபிசிஐடி சாட்ட்சியங்க்கள் மூலமாக அவரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

முத்துக்குமாரசாமியின் கொலை வழக்கிற்கு நீதி கிடைக்குமா? 

என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக மக்களிடம் இருந்த நிலையில், அச் சந்தேகத்தை உண்மையாக்கி அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அரசுத் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பு உண்டு என வாதிட்டதாக செய்திகள் உள்ளன. 

அப்படியிருந்தும் நீதியரசர் என்பவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விடுவிக்க முக்கிய காரணம் ,ஆட்சி செய்வோர் அறிவுரை,சிபிசிஐடி விசாரனையில் உள்ள ஒரு சார்பு ஆகியவைதான் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

சிபிஐ விசாரணை என்றால்தான் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள்  கிருஷ்ணமூர்த்தி,அவர் கூறிய மேலிடம் ஆகியோர் வெளிப்பட முடியும்.

இதைத்தான் சிபிசிஐடி விசாரணைக்கு ஜெயலலிதா உத்திரவிட்டதில் இருந்து சொல்லி வருகிறோம்.

ஆனால் சதாசிவம் போன்ற சிலரை  வைத்தே எல்லா விசாரணைக்குழுக்களையும் அமைக்கும் ஜெயலலிதா ஆட்சி அதை கண்டு கொள்ளவில்லை.

இனியாவது புதிதாக வரும் ஆட்சியாளர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆவன செய்ய வேண்டும்.

உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து இது போன்ற நேர்மையான அரசு அலுவலர்கள் அருகிப் போகாமல் செய்ய வேண்டும் .
====================================================================================
இன்று,
மார்ச்-09.
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் ஜான் பென்னிகுவிக் நினைவு தினம்  (1911)
  • எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது (1919)
  • பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது(1959)
  • சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது(2006)



====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?