வராக்கடன் எனும் அட்டைப்பூச்சி,

பல்லாண்டு காலமாக வங்கிகளுக்கு மிகப் பெரும் சவாலாக அமைந்துள்ளது வராக் கடன் என்ற பிரச்சனை. 1991களிலிருந்து வங்கி களுக்கு திரும்ப செலுத்தப்படாத கடனுக்கு “செயல்படாத சொத்து” என்று செல்லமாக பெயரிடப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு அதன் பெயர் மோசமான கடன் .
இந்த வராக்கடன் வங்கித் துறையின் மொத்த லாபத்தில் கணிசமான பகுதியை விழுங்கி விடுகிறது. இது சமீப காலமாக மிகவும் அதிகமாகி லாபத்தின் பெரும்பங்கை ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சி போல் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. 
வராக்கடன் என்பது வங்கி களை நலிவுறச் செய்வதன்மூலம் நாளடைவில் வீழ்த்தி விடக்கூடிய ஆபத்து கொண்டது.
2015 மார்ச் இறுதியில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.2,79,000 கோடி. 
இதில் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளின் வராக்கடன் ரூ.74,000 கோடி; 
மற்ற பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.2,05,000 கோடி. 
மொத்த வராக்கடனில் 73 சதவீதம் வராக்கடன் ஒரு கோடி ரூபாயும் அதற்கு மேலும் கடன் வாங்கி திருப்பிக் கட்டாத வர்களால் உருவாக்கப்பட்டது என்று டி.என்.ஏ.   ஆய்வு கூறுகிறது
.2012 - 2015 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் வராக் கடனை தள்ளுபடி செய்தன. 
2012-13-ல் ரூ.27,231 கோடியும், 2013-14-ல் ரூ.34,409 கோடியும், 2014-15-ல் ரூ.52,542 கோடியும் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த தள்ளுபடியான கடனின் முழு விவரத்தை பொதுத்துறை வங்கிகள் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். அப்போதுதான் கடனை வசூல் செய்ய வாய்ப்பிருந்தும் திருப் பிக் கட்டாத பெரு நிறுவனங்களின் கடன் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரம் தெரியவரும்.
ஆரம்ப காலகட்டத்தில் வங்கிக் கடனை வசூலிக்க சிவில் நீதிமன்றம்தான் ஒரே வழி. இதனால் பெரிய பலன் எதுவும் இல்லை. பல வாய்தாக்கள் மூலமாக வழக்குகள் வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டன.
கடன்வசூல் தீர்ப்பாயம்

பின்னர் கடன் வசூல் தீர்ப்பாயம் என்ற விரைவு நீதிமன்றம்உருவாக்கப்பட்டது. 
இதனால் கடன் வசூல் செய்வதில் சற்று முன்னேற்றம் காணப் பட்டது. இந்த விரைவு நீதிமன்றங்களை உரு வாக்குவதற்கே வங்கி ஊழியர் இயக்கம் மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கத்திலும், போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டியிருந்தது.
ஆனாலும், இதிலும் ஏராளமான பிரச் சனைகள் தோன்றின. வழக்கு தொடுப்பதற்கு வசதியாக எல்லா முக்கிய நகரங்களிலும் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படவில்லை. 
மொத்த வராக்கடனில் மூன்றில் ஒரு பங்குஉள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அதன்தலைநகரமான மும்பையில் மிக நீண்டகால தாமதத்திற்கு பிறகே இது அமைக்கப் பட்டது. ரூ. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கடன்சம்பந்தப்பட்ட வழக்கு மட்டுமே இந்தத்தீர்ப்பாயத்தில் தொடுக்கப்படும்.
 தேவையானஅடிப்படை வசதிகள்கூட இந்நீதிமன்றங் களுக்கு செய்து தரப்படவில்லை. 2000 வழக்குகளுக்கு ஒரு நீதிபதி மட்டுமே நியமிக் கப்பட்டார். 
இதனால் “விரைவு” என்ற வார்த் தை அர்த்தமற்றதாகிவிட்டது. மேல்முறை யீட்டு நீதிமன்றம் இந்தியா முழுவதும் ஆறேழு நகரங்களில் மட்டுமே அமைக்கப்பட்டன. இதன் காரணமாக வசதி படைத்த கடனாளிகள் மேல்முறையீட்டுக்கு செல்லும்போது வங்கி களால் தொலைதூரத்திலிருந்து வழக்கு நடத்த முடியவில்லை.
1991-க்கு பிறகு புதிய தனியார் வங்கிகள்துவக்கப்பட்ட பின்னணியில், அவ்வங்கி களும் வராக்கடன் பிரச்சனையை சந்திக்க நேரிட்ட காரணத்தினால், 2002ஆம் ஆண்டு சர்ஃபாசி என்ற புதிய சட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்கள் ஏதாவது சொத்துஅடமானம் வைத்திருந்தால், நீதிமன்றத்தை அணுகாமலேயே அந்த சொத்தை விற்று கடனை வசூலித்துக் கொள்ளும் ஏற்பாடு இச்சட் டத்தின்மூலம் உருவாக்கப்பட்டது. 
இச்சட் டத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே இச்சட்டம் அமலுக்கு வந்தது.இச்சட்டம் ஓரளவு பலனளித்து வருகிறது. ஆனாலும், பெரு நிறுவனங்கள் நீதிமன்றங் களை அணுகி வங்கியின் இத்தகைய நடவ டிக்கைகளுக்கு சுலபமாக தடையாணை பெற முடிகிறது. 
இச்சட்டம் மூலமாக சாதாரண, நடுத்தர கடனாளிகளிடமிருந்து மட்டுமே கறாராக வசூல் செய்ய முடிகிறது.சர்ஃபாசி சட்டத்தின் ஒரு பகுதியாக சொத்துமறுசீரமைப்பு நிறுவனம்என்பது ஏற்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு இருக்கும். 
ஆனால், அதன் நிர்வாகம்தனியார் கைகளிலேயே இருக்கும். வங்கிகளல் லாத நிதி நிறுவனங்கள் போல அவை செயல்படும்.
இவை வங்கிகளிடமிருந்து வராக்கடனை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொண்டு, கடனை வசூல் செய்து எடுத்துக் கொள்ளுமாம்.
“இந்த ஏற்பாட்டில் வெளிப்படைத் தன் மையே கிடையாது. 
வராக்கடனின் மொத்த தொகை என்ன? 
அவற்றின் தன்மை என்ன?
எவ்வளவு தள்ளுபடி? 
சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் பெறும் லாபத்தின் பங்கீடு என்ன?
” இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, “வங்கிகளி டம் இல்லாத எந்த சிறப்பு அம்சம் இந்நிறு வனங்களிடம் உள்ளன? 
அவை மட்டும் எதைக் கொண்டு கடன் வசூல் செய்யும்? அவற் றால் முடியுமென்றால் வங்கிகளால் ஏன் முடியாது” என்பதே பிரதான கேள்வி.
பேட் பாங்க்
2016 ஜனவரி 2ஆம் வாரத்தில் வராக் கடனை வசூலிக்க “பேட் பாங்க்” என்ற ஒரு வங்கியை உருவாக்கலாம் என்ற ஆலோசனையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய வங்கிகள் உள்ளனவாம். 
1988-ல் அமெரிக்காவில்தான் முதன்முதலில் இத்தகைய வங்கி உருவாக்கப்பட்டதாம். இவ்வங்கி, வணிக வங்கிகளிடமிருந்து வராக் கடனை வாங்கி வசூல் செய்யுமாம்.“
பேட் பாங்க், மோசமான ஆலோசனை” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகிறார். 
“தனியார் வங்கிகள் மூலமான வராக்கடன் என்றால் இந்த ஏற்பாடு வேலை செய்யும். அரசு முதலீடுசெய்ய வேண்டிய அரசு வங்கிகள் என்றால் இதனால் பயனில்லை.
 மேலும், இது யாருக்கு சொந்தமாக இருக்கும்? 
யார் நிர்வகிப்பார்கள்? 
என்பது பற்றிய தெளிவு வேண்டும்” என்கிறார் ரகுராம் ராஜன்.
ரூ. 4 லட்சம் கோடி வராக் கடன்வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித் துறை நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக் கையை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதில் 2016 ஏப்ரல் மாதம் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.4 லட்சம் கோடியை எட்டிவிடும் என்று கணித்துள்ளது.“எல்லா கடன்களையும், குறிப்பாக வசதி இருந்தும் வேண்டுமென்றே திருப்பி செலுத் தாத கடனாளிகளின் கடனை தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; ஆய்வறிக்கை 6 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்;
 ரிசர்வ் வங்கி எல்லா பெரிய கடன் களையும் கண்காணிக்க அதிகாரம் படைத்தகுழுக்களை நியமிக்க வேண்டும்; கடனை திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் கம்பெனி களை வங்கிகள் கையிலெடுக்க வேண்டும்; வேண்டுமென்றே திருப்பிக் கட்டாத கம்பெனிகளின் நிர்வாகத்தை கட்டாயமாக மாற்றிட வேண்டும்; 
ஒவ்வொரு வங்கியும்அதிக அளவில் கடன் வாங்கி வேண்டு மென்றே திருப்பிக் கட்டாத முதல் 30 கடனா ளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்; 
அவர்களின் பெயர்களை இனியும் ரகசியமாக வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை;
இதற்கு தகுந்தாற்போல் ரிசர்வ் வங்கி தங்களுடைய வழிகாட்டும் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்...” போன்ற பல பரிந்துரைகளை இந்நிலைக் குழு பரிந்துரைத் துள்ளது.
-சி.பி.கிருஷ்ணன்
ஆனால் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளியிட்டுள்ள ‘இந்திர தனுஷ்’ கொள்கைஅறிவிப்பில், வேண்டுமென்றே கடனை திருப் பிக் கட்டாதவர்களுக்கு மேலும் வங்கிக்கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

அவ்வாறு வங்கிகள் கொடுக்கக்கூடிய கடனு க்கு கூடுதலாக ஒதுக்கீடுசெய் தால் மட்டுமே போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய கொள்கை உடைய மத்திய நிதியமைச்சகம் நிதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை அப்படியே ஏற்குமா?பெரு நிறுவனங்களால் ஏற்படும் வராக் கடனை வசூலிக்க வலுவான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வங்கி ஊழியர் இயக் கம் நீண்டகாலமாக போராடி வருகிறது. வங்கி களை காப்பாற்றுவதற்காக பல வேலை நிறுத்தங் கள் உட்பட போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

-சி.பி.கிருஷ்ணன்
.கட்டுரையாளர்:
பொதுச்செயலாளர்,இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் -
 தமிழ்நாடு.
========================================================================================
இன்று,
மார்ச்-03.
  • இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)
  • போஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது(1992)
  • சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது(1938)








========================================================================
================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?