அமைச்சர்கள் நீக்கம் பின்னணி ?
தமிழக அமைச்சரவையில் இருந்து பலமுறை அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய நீக்கம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா. புதன்கிழமை அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் நீக்கப்படுவது புதிதல்ல. 2011 ஆம் ஆண்டு மேமாதம் புதிய அமைச்சரவை பொறுப் பேற்றது முதல் கடந்த நான்கே முக்கால் ஆண்டு களில் தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை அமைச் சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஓருமாதத்தில் நீக்கப்படும் இரண்டாவது அமைச்சர் சின்னையா ஆவார்.
பால்வளத்துறை அமைச்சராக இருந்தபி.வி.ரமணா கடந்த மாதம் 20ஆம் தேதி அமைச் சரவையில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்பதை ஊடகங்களே சொல்லிவிட்டன.
அதனை யாரும் மறுக்கவுமில்லை.
அமைச்சரவையில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்கள் ஏன் சேர்க்கப்பட்டார்கள் என்பது முதல்வர் ஜெய லலிதாவுக்கே வெளிச்சம். சின்னைய்யா நீக்கத் தையும் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் 24 முறை தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டது.
அதிமுக அரசின் சாதனைப் பட்டியலில் இதுவும் ஒன்று.வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படையாக அறிந்து கொள்ளமுடிந்தது. ஆட்கள் நியமனம் தொடர்பாக அவரது துறையை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு அமைச்சர் நிர்பந்தம் அளித்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
பல்வேறு கட்சிகள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்திய பின்னரே அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்.
பின்னர் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆனால் மற்ற அமைச்சர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பதை முதலமைச்சரும் சொல் வதில்லை. ஆளும் கட்சியினரும் கேட்பதில்லை. கேட்கவும் முடியாது. அவரவர் பதவியைப் பாது காத்துக்கொள்வதே அக்கட்சியில் பெரும்பாடாக இருக்கும். அவ்வளவு ‘ஜனநாயகம்’ அங்கே நிலவு கிறது.
ஒவ்வொரு அமைச்சர் நீக்கப்படும் போதும் அவர்கள் நீக்கம் தொடர்பாக ஊடகங்களில் பலசெய்திகள் உலவுகின்றன. ஆனால் அந்த செய்திகள்அனைத்தும் உண்மைதானா?
அமைச்சர் டி.கே.எம். சின்னையா பலகோடி ரூபாய் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் தாம்பரம் நகராட்சி யில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளில் அவருக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படு கிறது.
அதேபோல் முன்பு பால்வளத்துறை அமைச்ச ராக இருந்த மாதவரம் மூர்த்தி தனியார் பால் நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கியதாகவும் ஆவின்பாலில் நடைபெற்ற முறைகேட்டில் அவருக் கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் பலமுறை நீக்கப்பட்டபோது ஆசிரியர் நியமனத்தில் முறை கேடு நடைபெற்றதால் தான் நீக்கப்பட்டனர் என்று பேசப்பட்டது.
எனவே இதுவரை அமைச்சர்கள் நீக்கப்பட்டதற் கான காரணத்தை மாநில அரசு நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்.
முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் அமைச்சர்கள் நீக்கப்பட்டனர் என்று கூறப்பட்ட செய்திக்கு பெரும்பாலும் மறுப்பு இல்லை.
ஆனால் அமைச்சர்களின் முறைகெடுகள் குறித்து இதுவரை எந்த சட்டபூர்வமான விசாரணைகளும் இல்லை.அதன் மூலம் கட்சி மேலிடம் இந்த முறைகேடுகளில் பலன் அடைந்துள்ளது தெரியவருகிறது.அதில் பங்கு பெற்றதினால் இந்த அமைச்சர்களை சட்டப்பூர்வமாக விசாரித்தால் தங்கள் பங்கும் வெளிவந்து மாட்டிக்கொள்வோம் என்பதாலேயே இவை பதவி பறிப்புகளுடன் நின்று விடுகிறது.ஆனால் அடித்த கோடிக்கணக்கான கொள்ளைகள்?
எனவே அந்த முறைகேடு அனைத்தும் உண்மை என்றாகிவிடுகிறது. இப்படிப்பட்டவர்களின் ஆட்சி அகற்றப்படவேண்டியது அவசியம் தானே.
இது மட்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அரசு இல்லையா?
=========================================================================================
7 ஆயிரம் கோடிஆட்டையை போடும்விஜய் மல்லையா.
வங்கிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாத விஜய் மால்யாவின் கிங் பிஷர் நிறுவனத்தின் மீது யாரும் புகார் அளிக்கஎந்த வங்கியும் இதுவரை முன் வரவில்லை என சிபிஐ இயக்குனர் அனில் சின்ஹா கூறியுள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில் பேசிய அனில் சின்ஹா,
"2004 -2012 காலகட்டத்தில் விஜய் மால்யாவின் கிங் பிஷர் நிறுவனம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தவில்லை,வட்டியும் கட்டவில்லை .
"2004 -2012 காலகட்டத்தில் விஜய் மால்யாவின் கிங் பிஷர் நிறுவனம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தவில்லை,வட்டியும் கட்டவில்லை .
7 ஆயிரம் கோடிஆட்டையை போடும் விஜய் மல்லையா. |
இந்த மோசடி தொடர்பாக புகார் அளிக்க எந்த வங்கியும் முன்வரவில்லை. 2015ம் ஆண்டில் சிபிஐ, தானாக முன் வந்து அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இதுபோன்ற அரசுத்துறை வங்கிகள் செயல்பாடுகளால் அரசு வங்கிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்.
2009ம் ஆண்டில், 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்திய வங்கிகளின் வாராக்கடன், தற்போது மூன்று லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.காரணம் பண முதலைகளாக உள்ள பெருந்தொழில் அதிபர்களுக்கு வாழ் பிடிக்கும்,மக்கள் பணத்தை வராக் கடனாக அள்ளி விடும் சில வங்கி அதிகாரிகள் அரசியல்வாதிகள்தான்.இனியும் வராக் கடன் குறித்த விசாரணையை தாமதப்படுத்தினால், கடன் செலுத்தத் தவறியோர், பணத்துடன் நாட்டை விட்டுத் தப்பித்து விடுவார்கள்" என்றும் எச்சரித்தார்.
இன்று,
மார்ச்-04.
1665: இரண்டாவது ஆங்கில- டச்சு யுத்தம் ஆரம்பமாகியது.
1861: ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பிரிட்டனில் முதலாவது ட்ராம் வண்டிகள் அறிமுகமாகின.
1975: சார்ளி சாப்ளினுக்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் சர் பட்டம் வழங்கப்பட்டது.
1977: கிழக்கு ஐரோப்பாவில் பூகம்பத்தால் 1500 இற்கும் அதிகமானோர் பலி.
1980: ஜிம்பாப்வேயில் ரொபர்ட் முகாபே முதலாவது கறுப்பின ஜனாதிபதியானார்.
=======================================================================================
உலகப் புகழ் பெற்ற "டைம்"இதழின் [3 மார்ச் 1923]முதல் அட்டைப் படம்.இந்த முதல் இதழைப் படிக்க ஆசையா?அட்டைப் படத்தை சுட்டுங்கள்.
=========================================================================================
கருணாநிதியை "தள்ளு வண்டி தாத்தா " என்று நக்கலடித்ததால் கிடைத்த பரிசு அமைச்சர் பதவி ?
விஜயபாஸ்கர் பின்னணி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.
கடந்த 2001ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியிலும், 2011ல் விராலிமலை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், கடந்த 2011க்குப் பிறகு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது.
சட்டசபையில்பத்தோடு ஒன்றாக சாதாரண எம்.எல்.ஏவாக அமர்ந்திருந்த விஜயபாஸ்கர், தனக்கு பேச வாய்ப்பு கிடைத்த போது, ஓரு கதை சொன்னார்.
‘தீபாவளி பட்டாசு வாங்க இரண்டு பேர் கடைக்குப் போறாங்க. அங்கேயிருந்த பட்டாசுக் கடை பேரு திருக்குவளை. அங்கே ஒரு ராக்கெட் வெடி இருந்தது. அதோட பேரு 2ஜி ராக்கெட். விலை, 176. ‘இது எப்படி வெடிக்கும்?'னு கேட்டாங்க. ‘இது கூட்டு ராக்கெட். இத இங்கே பத்த வெச்சா.. ஜோடியா பறந்து போயி திகார் ஜெயில்லதான் வெடிக்கும்!' என சொன்னார் கடைக்காரர். வேற கடைக்குப் போறாங்க. அந்தக் கடைக்குப் பேரு கோயம்பேடு பயர் ஒர்க்ஸ். இந்தக் கடையை மச்சான் இன்சார்ஜ்ல விட்டுட்டு ஓனர் ரவுண்டுக்குப் போயிட்டார்''.
இப்படி கருணாநிதியைத் ‘தள்ளு வண்டி' என்று' என்றெல்லாம் விஜயபாஸ்கர் பேசிய பேச்சுக்கு சிரித்து ரசித்த ஜெயலலிதா மறுநாளே அவரை சுகாதாரத்துறை அமைச்சராக்கிவிட்டார்.
புதுக்கோட்டையில் மாவட்ட செயலாளராகவும் கட்சியில் அசைக்க முடியாக சக்தியாக வலம் வந்த விஜயபாஸ்கர் இப்போது மாஜி மாவட்ட செயலாளர். காரணம், கட்சியில் சீனியர்களை மதிக்காமல் இருந்ததும், பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமூகத்தினரை பகைத்துக்கொண்டதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
சி.விஜயபாஸ்கர் |
அதன் பின்னர், 2013ல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான கங்கையம்மாள் மற்றும் அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோரை சாதி பெயரை சொல்லி திட்டியதோடு அவதூறாகப் பேசினார் என்பது புகார். "ஏற்கெனவே என்னை திருச்சியில் எதிர்த்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். உன்னை எல்லாம் ஒரு நிமிடத்தில் காணாமல் செய்துவிடுவேன்" என்று மிரட்டியதோடு அவர்களை கட்சியை விட்டே கட்டம் கட்ட வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தரையர் சமுதாய மக்கள் அமைச்சரைக் கண்டித்து புதுக்கோட்டையில் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விஜயபாஸ்கர், இது சிலரின் திட்டமிட்ட சூழ்ச்சி, அதில் என்னை சிக்க வைக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். அப்போதே அமைச்சர் பதவியோ, கட்சிப்பதவியோ பறிபோகும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தப்பிவிட்டார்.அப்போது இவரை காப்பாற்றிய ஜெயலலிதா இப்போது பதவியைப் பறிக்கக் காரணம் இரு நாட்களில் தேர்தல் அறிவிக்கப்படுவதுதான்.முத்தரையர் சங்கங்களில் உள்ள பலர் திமுகவில்சேர்ந்ததும்,ஆதரவு தெரிவிப்பதும்தான்.ஆனால் காலம் தாழ்த்தி எடுத்த ஜெயலலிதா முடிவு வாக்குகளை வாங்கித்தருமா என்பது 90% ஐயம்தான்.காரணம் தேர்தலுக்காத்தான் இந்த அதிரடி என்று முத்தரையர் மக்கள் பகிரங்கமாகவே பேசுகின்றனர்.
இதனால் தேர்தலில் புதுக் கோட்டை மாவட்டத்தில் அதிமுக வுக்கான வாக்கு சரியக்கூடுமென உளவுப் பிரிவு மூலம் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இது ஒருபுறம் இருக்க அரசு கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதில் மற்ற குவாரிகளுக்கு பகிர்ந்தளிக்காமல் அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களின் குவாரிகளில் இருந்துதான் வாங்க வேண்டுமென நிர்ப்பந்தித்தார் என்று கூறப்படுகிறது. அரசு ஒப்பந்தங்களை இவரே ஆள் நியமித்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர், பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்ததற்காக பாராட்டுக்களை பெற்றாலும் உட்கட்சி மோதலால் பலரின் அதிருப்தியை சம்பாதித்து வைத்துள்ளாராம்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெருக்கமாக இருந்து பலமுறை பதவியை காப்பாற்றிக் கொண்டார் விஜயபாஸ்கர். பன்னீர்செல்வத்துக்கு வலது கரம்போல செயல்பட்டு வந்ததாராம் . தற்போது அவருக்கு வேண்டிய ஆட்கள் காலி செய்யப்பட்டு வரும் நிலையில், விஜயபாஸ்கரின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுகவில் மன்னார்குடியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களையும் புறக்கணித்து வந்தாராம். இதுகுறித்து ஆலங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசிய கூட்டமும் நடந்ததாம். இதன் விளைவாகவே அமைச்சர் பதவியில் கைவைக்காமல், கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே, அவரது எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அந்த அளவிற்கு பலரின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளார். இந்தமுறை விஜயபாஸ்கருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.
==================================================================================================