தோல்வியான தங்க சேமிப்புத்திட்டம்.




உள்நாட்டில் பயன்படுத்தாமல் உள்ள சுமார் 20 ஆயிரம் டன் தங்கத்தை மறுசுழற்சிக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்டதுதான் தங்க சேமிப்புத்திட்டம். 

பொதுமக்களிடமிருந்து இதை வெளியே கொண்டு வருவதன் மூலம், உள்நாட்டு தங்க தேவையை இறக்குமதி செய்யாமலேயே சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. 

இதில் டெபாசிட் செய்யும் தங்கத்துக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும் என்றும் அறிவித்தது.
 இதில் பெறப்படும் தங்கம் உருக்கி கட்டியாக்கி பாதுகாக்கப்படும். 

இதனால் இந்த திட்டம் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை.

இந்த திட்டத்துக்குள் இந்தியாவில் உள்ள கோயில்களில் புழக்கத்தில் இல்லாத நகைகளையும் கொண்டு வந்துவிட வேண்டும் என முயற்சி செய்தது மத்திய அரசு. இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் மட்டும் 1,000 டன்னுக்கும் மேலாக தங்க நகைகள் உள்ளன. 

இதில் முதற்கட்டமாக மும்பையில் உள்ள மிகப் பழமையான கோயிலான சித்தி விநாயகர் கோயிலின் நகைகளில் குறிப்பிட்ட அளவுக்கு டெபாசிட் செய்ய கோயில் அறங்காவலர் குழு முடிவெடுத்தது. 
கடவுள் நம்பிக்கையோடு மக்கள் அளிக்கும் காணிக்கைகளை முதலீடு செய்யக்கூடாது என்று ஒருபக்கம் எதிர்ப்பு எழுந்தாலும், இந்த டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி தொகையைக் கொண்டு பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ள முடியும் என்கிற வாதமும் எழுந்தது.

உலக அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோயில்களில் ஒன்றான திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் 7 டன் தங்க நகைகளை வைத்துள்ளது. 

“மக்களின் கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் டெபாசிட் செய்யப்படும் தங்கத்தை உருக்கக்கூடாது. மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடுகிறார் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இயக்குநரான சாம்பசிவ ராவ்.
 தங்கத்தை உருக்காமல் திரும்ப கொடுத்தால், இந்தியா முழுவதும் உள்ள கோயில்களின் தங்கத்தை இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும் என்று இவர் யோசனை கூறியுள்ளார்.
கடந்த மாதத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் 1.3 டன் தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1.75 சதவீத வட்டிக்கு குறுகிய கால டெபாசிட்டாக மூன்றாண்டுக்கு டெபாசிட் செய்துள்ளது. அடுத்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1.25 சதவீத வட்டிக்கு 1.4 டன் தங்கத்தை டெபாசிட் செய்ய உள்ளது. 

ஏற்கெனவே செய்த டெபாசிட்டுகள் முதிர்வு காலத்தை நெருங்கியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
200 ஆண்டுகள் பழைமையான மும்பை சித்தி விநாயகர் கோயில் இந்த மாத இறுதியில் 44 கிலோ தங்கத்தை முதலீடு செய்ய இருந்தது. 

நீண்ட கால டெபாசிட்டில் தங்கம் உருக்கப்படும் என்பதால் குறுகிய கால முதலீட்டை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்த கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் நரேந்திர முரளி ராணே தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு தங்கம் திரும்ப வேண்டும். தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருப்பதால், தங்கத்திலிருந்து நாங்கள் அதிக பலன் பெறுவோம். 
குறைந்த ஆதாயத்துக்கு தங்கத்தை வைப்பதை எங்களது பக்தர் களும் எதிர்ப்பார்கள் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிடமும் வரவேற்பில்லை, கோயில்களில் உள்ள தங்கத்தையும் திட்டத்துக்குள் கொண்டு வர முடியவில்லை. 

இதனால் இந்த திட்டம் வெற்றிபெறவில்லை என்கிற பேச்சும் உருவாகியுள்ளது. தங்கத்தை உருக்காமல் மறு சுழற்சி செய்ய முடியாது. 

மறு சுழற்சி கொண்டு வர முடியவில்லை என்றால் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. 
=====================================================================================
இன்று,
மார்ச்-29.
அயர்லாந்து அரசு 2004-ம் ஆண்டுவேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்த முதல் நாடு என்ற பெயரை அயர்லாந்து பெற்றது.

* 1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார். 
* 1831 - துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது. 
* 1849 - பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது. 
* 1857 - சிப்பாய் கலகம். 
. * 1879 - ஆங்கிலோ-சூலு போர்: 
 * 1886 -  கோக  கோலா மென்பானத்தைத் தயாரித்தனர் .
=====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?