தேர்தலில் யார் வென்றாலும்



  கடும் மின்தடைதான் !

இந்த ஐந்தாண்டு ஆட்சிக்கலத்தில் அதற்கு முந்தைய மின் வெட்டை தவிர்க்க ஒரு சிறு மின்னுற்பத்தி நிலையம் கூட ஜெயலலிதா அரசு அமைக்கவில்லை.
அதுமட்டுமல்ல முந்தைய திமுக அரசு உருவாக்கிய உடன் குடி உட்படமின் திட்டங்களையும் கிடப்பில் போட்டது.காரணம் கருணாநிதி அதற்கு திட்டம் தீட்டியதே.
எனவே  தமிழகத்தில் மின்பற்றாக் குறை யைப் போக்கிட வெளியி லிருந்து மின்சாரத்தை மின்வாரியம் வாங்கி மின்விநியோகம் செய்கின்றது. இதற்காக பல கோடிகளை மக்கள் வரிப்பணத்தில் இருந்து இறைத்துள்ளது,மின்சாரம் வாங்குவது மட்டுமே இதற்கான காரணம் அல்ல.அதற்கு கோடிகளில் கிடைக்கும் கமிசன்தான்.
.தமிழகத்திலேயே மின்சாரம் கிடைக்கும் போது ஏன் வெளியிலிருந்து வாங்க வேண்டும். 
வெளியிலிருந்து வாங்குவ தால் மின்கம்பியிழப்பு மற்றும் தொழில் நுட்ப இழப்பு எல்லாவற்றிற்கும் மின் வாரியம் தான் வாங்கும் மின்சாரத்திற்கான செலவில் சேர்த்து மின்கட்டணத்தை செலுத்தவேண்டி வரும்.
தங்களது ஆட்சிக்காலத்தில் மின் சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வாய்ப் பிற்கான காலம் இருந்தும் தங்களுடைய அறிவிப்பிலேயே மின்சாரம் உற்பத்தி செய்துவிட்டதாக அறிவித்தவர்கள் உள்ளூர் மின்நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கோட்டைவிட்டது ஏன்? 
காரணமாகத்தான்.
ஒன்று வெளியி லிருந்து மின்சாரம் வாங்கினால் கிடைக்க வேண்டியது கிடைக்கும். 
இரண்டு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் உற்பத்தி நின்று போகும்பொழுது அதன் உதிரி பாகங்கள் வாங்குவதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சென்றால் அதிலும் 20 சதவீதம் செலுத்த வேண்டியவர்களுக்கு செலுத்திட வேண்டும்.
அதற்காகத்தான் மின்வாரியம் உள்ளூர் மின்சாரத்தை பற்றி கவலை கொள்ளவில்லை.இங்கே மார்ச் மாதம் அரசுத் தரப்பில் கிடைத்த விபரத்தை பார்த்தாலே அது தெரியும். 
தமிழகத்தின் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்நிலையங்கள் எண் ணூர் 450மெகாவாட், தூத்துக்குடி 1050 மெகாவாட், மேட்டூர் 840சதவீதம், 600 மெகாவாட், வடசென்னை 630சதவீதம் 600 மெகாவாட் ஆக மொத்தம் 4660 மெகாவாட். 
எரிவாயு மின்சாம் 516 மெகா வாட், நீர் மின்சாரம் 2224 மெகாவாட். 
மத்திய அரசு 5429மெகாவாட் தனியார் மற்றும் சுயதேவை மின் உற்பத்தி வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் அனைத்தும் சேர்த்து 18521மெகாவாட் என மின் தொகுப்பில் உள்ளது.
இந்த மார்ச் 3ஆம் தேதியன்று அரசின் விநியோகத்தகவல்படி 3.03 கோடி யூனிட்டுகள் செலவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் மட்டும் 6 கோடி யூனிட்டுகள் ஆகும். இதற்கு நாம் கொடுக்கும் விலை அதிக மாகும். வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் தமிழகம் வந்துசேரும்போது ஒருயூனிட் விலை எட்டு ரூபாய்க்கும் மேலாகி விடும்.
இதே காலத்தில் தமிழகத்தில் மின்உற்பத்தி செய்யாமல் முடக்கி வைத் திருக்கும் மின்நிலையங்கள் அதன் மின்உற்பத்திதிறன் என்ன பார்ப்போம்.தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் ஏழில் நான்கிடமிருந்து கடந்த ஒரு வருடகாலமாக மின்சாரம் என்பது வாங்க வில்லை. 
அதற்கு காரணம் மெரிட் அன்ட் டெஸ்பாட்ச் ஆர்டர் அடிப்படையில் அதிக விலையாக இருப்பதன் காரணமாக வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது.அந்த நான்கு மின்நிலையத்தின் நிறுவுதிறன் 543 மெகாவாட் ஆகும். இதன்ஒப்பந்தக் காலம் இன்னும் முடியவில்லை.
 அடுத்து ஒரு தனியார் மின்நிலையம் பேசின்பாலத்தில் உள்ளது. அது ஜீஎம்ஆர் மின்நிலையம், அதன் நிறுவுதிறன் 196 மெகாவாட் ஆகும். இதன் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டது.
இம்மின்நிலையங்கள் மின்உற்பத்தி இல்லாமல் மூடிக்கிடக்கிறது. அடுத்து மின்வாரியத்திற்கு சொந்தமான மின்நிலை யங்கள் தன் முழு மின்உற்பத்தி திறனை வெளிப்படுத்தாமல் உள்ளதன் மின்அளவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் அனல் மின்நிலையம் 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யாமல்மிகையாக மின்சாரம் தமிழகத்தில் உள்ள தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
ராமநாதபுரத்தில் உள்ள வழுதூர் எரிவாயு மின்நிலையம் 187மெகாவாட்டில் 80 சதவீதம் மட்டும் உற்பத்தி என கணக்குஎடுத்துக்கொண்டால் ஒரு நாளில் 35.5 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தி செய்திருக்கவேண்டும். 
ஆனால் உற்பத்திசெய்தது இருபது லட்சம் யூனிட்டுகள் மட்டுமே ஆகும்.தமிழக மின் வாரியத்திற்கு சொந்தமான கோவில் களப்பால் மற்றும் குத்தாலம் எரிவாயு மின்நிலையங்கள் 40 லட்சம்யூனிட்டுகள். உற்பத்தி செய்து இருக்கவேண்டும். 
அதற்குப் பதிலாக 20 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே உற் பத்தி செய்துள்ளது. 
மேட்டூர் அனல் மின்நிலையத்தின் 600மெகாவாட் மின்நிலையம் தனது முழு மின் உற் பத்தியை செய்யாமல் 410 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியை செய் கின்றது. 
அது தனது முழுமையான மின்உற்பத்தியை செய்தால் அதன் மூலம்கூடுதலாக ஒரு 50லட்சம் யூனிட்டுகள் கிடைக்கும். 
இப்படி தமிழகத்தின் மின்வாரி யத்திற்கு சொந்தமான மின்நிலையங்கள் எண்ணூர் அனல்மின்நிலையத்தை தவிர இதரவைகள் இயங்கினால் தற்போது கிடைப்பதைக் காட்டிலும் கூடுதலாக 2 கோடி யூனிட்டுகள் கிடைக்கும்.
டீசல்விலை குறைவாக உள்ள நிலையில் இந்த ஆட்சி வந்ததிலிருந்து மூடி வைத்துள்ள தமிழக மின்வாரியத் திற்கு சொந்தமான பேசின் பாலம் மின் நிலையம் 120மெகாவாட் இயக்கினால் ஒரு 20 லட்சம் யூனிட்டுகள் தினம் கிடைக்கும்.
தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூடிவைத்துள்ளதை இயக்கினால் அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் 2 கோடி யூனிட்டுகள்.
இந்த நான்கு மின்நிலையங்களிடமிருந்து மின்சாரம் வாங்கவில்லை என்றாலும் அம்மின் நிலையங்களுக்கு நிலைக்கட்டணம் என்ற மூலதனத்தின் தொகையை அளித்துக் கொண்டிருக்கின்றது மின்சார வாரியம். 
ஏன் மூடி வைத்துள்ள மின்நிலையத்திற்கு கட்டணம் செலுத்திட வேண்டும். 
இது என்ன கொடுமை, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை முதலாளி களிடம் நோகாமல் எடுத்துக் கொடுக்கும் அவலம் தமிழகம் தவிர வேறு எங்கும் நடக்காது.
ஒப்பந்த காலம் முடிந்த தனியாருக்கு சொந்தமான ஜீஎம்ஆர் மின்நிலையம் அரசே ஏற்று இயக்கினால் அதன் முலம் 40 லட்சம் யூனிட்டுகள் கிடைக்கும். 
இப்படி தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் மட்டும் 3 கோடி யூனிட்டுகள் ஆகும்.சுயதேவை மின்நிலையங்களின் உற்பத்தி 866 மெகாவாட் உள்ளது. அதற்குத்தேவையான எரிபொருள் தமிழக அரசுகொடுத்தால் மின்சாரம் 2 கோடி யூனிட்டுகள் கிடைக்கும். 
தமிழகத்தில்உள்ள சிறு புனல் மின்நிலையங்களின் உற் பத்தி 90 மெகாவாட் அளவிற்கு உள்ளது. 
அதன் இயக்கத்தை ஒப்பந்தக்காரர்களிடம் (அவுட் சோர்சிங்) அளித்து உள்ளதால் எந்த மின்நிலையமும் மின்உற்பத்தி செய்யவில்லை. 
அம்மின்நிலையங்கள் பழுதுபட்டால் மட்டும் மின்வாரியம் கவனிக்க வேண்டுமாம்.
ஆக வெளியிலிருந்து வாங்கும் மின்சார அளவிற்கு தமிழகத்தில் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளதை தவிர்த்துவிட்டு தமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றவேண்டும் என்பதற்காக வெளி யிலிருந்து மின்சாரத்தை வாங்குகின்றனர்.
இதில் ஆட்சியாளர்களுக்கு பலன் இருக்கின்றது.
இது போக காற்றாலை மின்சாரம் வந்தால் லாபம்.தமிழக மின்சார வாரியம் வெளியி லிருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவு நாளொன்றுக்கு 6 கோடி யூனிட்டுகள் ஆகும்.இதுவும் நீண்டகால ஒப்பந்தம், இடைக்கால ஒப்பந்தம், குறுகிய கால ஒப்பந்தம் என்ற அடிப்படையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கினாலும் மின் சாரத்தை கொண்டுவருவதற்கு ஏற்படும் மின்கம்பி இழப்பு மற்றும் தொழில்நுட்ப இழப்பு எல்லாம் இருக்கும். 
தமிழகத்தில் உள்ள மின்உற்பத்தியை வாங்கினால் இந்த இழப்பு குறையும்,
தமிழகத்தில் உள்ள மின்நிலையங்களை இயக்கிட ஏதாவது ஏற்பாடு இருந்ததா?ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் இருப்பதை முடக்கிவிட்டு தங்களது நலனுக்காக மின்வாரியத்தை கடனாளி யாகவே வைத்திருப்பதில் முன்னணியில் நிற்கின்றார்கள்.
 தேர்தலுக்காக அவசர அவசரமாக புதிய மின்திட்டங்களை அறி வித்து காணொளி காட்சி முலம் திறந்து வைத்து அதன் அடிக்கல் நாட்டப்பட்ட கற்கள் மட்டும் நிற்கவைக்கப்பட்டுள்ளன.
உப்பூர் அனல் மின்நிலையம் அமைத்திட ரூ.12,498 கோடி மதிப்பீட்டில் பிப்.2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
எண்ணூர் அனல்மின்நிலையம் 800 மெகாவாட் சூப்பர் கிரிடிகல் அனல் மின்நிலையம் மார்ச் முதல் வாரத்தில் அறி விக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே சினிமாவில் வரும் காட்சிகள் போல் மின்சாரம் வந்து விடுமா? 
கோடையில் கடுமையான மின்பற்றாக்குறைதான் வரும்.
தேர்தலில் யார் வென்றாலும் கண்டிப்பாக கடும் மின்தடைதான் அவர்களை வெல்லும்.
=======================================================================================
இன்று,
மார்ச்-17.
  • இத்தாலிய பேரரசு அமைக்கப்பட்டது(1861)
  • ரப்பர் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டது(1845)
  • கலிபோர்னியம் என்ற 98வது தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1950)
  • அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது(1958)

=======================================================================================
சொத்து விவரங்களை ஜெ. மறைத்தது ஏன்?

முதல்வர் ஜெயலலிதா தனது சொத்து விவரங்களை மறைத்தது ஏன்? 
என்று கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா கேள்வி எழுப்பினார். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகள், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் பொருந்தும் என்பது ஜெய லலிதாவுக்கு தெரியாதா? என்றும் அவர் கேட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதம் உச்சநீதி மன்றத்தில் கடந்த பிப்ரவரி 23-ஆம்தேதி துவங்கியது.
கர்நாடக அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்கள் தமது இறுதி வாதத்தை எடுத்துரைத்தார். 
அதைத்தொடர்ந்து கர்நாடக அரசுத் தரப் பின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான பி.வி. ஆச்சார்யாவும் செவ்வாயன்று இவ்வழக்கில் ஆஜராகி இறுதி வாதத்தை முன்வைத்தார்.கர்நாடக உயர்நீதிமன்றம் எந்த ஒரு அடிப்படைக் காரண மும் இல்லாமல் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்திருப்ப தாகவும், கிருஷ்ணானந்த் அக்னி ஹோத்ரி வழக்கை காரணம் காட்டி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது என்றும்அவர் கூறினார். 
மேலும், மாதம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றஜெயலலிதாவால் எப்படி ரூ. 1 கோடி சொத்துக் குவிக்க முடியும்? என்றுகேள்வி எழுப்பிய ஆச்சார்யா, சட்டத் துக்கு புறம்பாக குவிக்கப்பட்ட சொத்துக்கு வருமான வரி தாக்கல் செய்தால், அவை சட்டப்பூர்வமான சொத்துக்களாக மாறிவிடாது என்றும் தெரிவித்தார்.
அப்போது, ஜெயலலிதா தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்ற மொத்தக் கடன்கள் எவ்வளவு என் பதை புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அப்படி தாக்கல் செய்யவில்லை எனில் வழக்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது சிரமம் என்றும் குறிப்பிட்டனர்.
இதனடிப்படையில், புதனன்று ஜெயலலிதாவின் கடன் விவரங் களை விரிவாக கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தாக்கல் செய்தார். 
தொடர்ந்து இவ்வழக்கில் வாதத்தை எடுத்து வைத்த அவர், 1996-ல் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், 1998-ம் ஆண்டுதான் வருமான வரியை ஜெயலலிதா தாக்கல் செய்தார்; சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கும் வரையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆருக்கு சந்தா வசூலிக்கும் திட்டம் என்பது எதுவும் இல்லை;
அதன்பிறகே சந்தா வசூலிக்கப்பட்டுள்ளது; 
அதேபோல தம்முடைய பிறந்த நாளன்று தொண்டர்களிடம் இருந்து ரூ. 2.15 கோடி பரிசுப் பொருட்கள் வந்ததை ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டார்; 
ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றமோ (நீதிபதி குமாரசாமி) பரிசுப்பொருட்கள் ரூ. 1.5 கோடிதான் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது;
 ஜெயலலிதா தரப்பின் கடன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் வருமானமாக மதிப்பீடு செய்தது முழுவதும் தவறானதாகும்; 
கடன்களை எப்படி வருமானமாக கருத முடியும்? 
என்றும் ஆச்சார்யா கேள்விகளை எழுப்பினார். 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?