நோயுடன் வாழும் கலை?




கார்ப்பரேட் சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் உலக கலாச்சார விழா மோடியின் ஆசியுடன் இனிதே நடந்து முடிந்தது.
விழாவை கண்டு களிக்க இயலாதவர்கள் தற்போது அந்த விழா நடந்த இடத்திற்கு சென்று பார்வையிடலாம்.

 இப்போது பார்வையிடுவோர், சிறுநீர் குளம், மலக்கழிவு சதுப்பு நிலம், குப்பைக் மலை இவற்றுடன் அங்கு வீசும் புனிதமான  துர்நாற்றத்தை உணர்ந்து ரசிக்கலாம்.

வரும் போது பிரசாதமாக நோய்களையும் அவரவர்[உடல்] தகுதிக்கு ஏற்ப பெற்று வரலாம்.

வாழும் கலையின் மகத்துவத்தை வாழ்வில் பெறலாம்.

யமுனை நதியின் நீர்பரப்பு பகுதியில் மிகப்பிரம்மாண்டமாக கண்கவர் மெகா விழா கடந்த மார்ச் 13 அன்று நிறைவடைந்தது. 

உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் வெளிநாட்டவரும் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆன்மீக போகிகள் [?]திரட்டப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் நோய்தொற்றுமளவிற்கு அங்கிருந்து சிறுநீர் தேக்கத்தினாலும் கழிவுப் பொருட்கள் குவியலினாலும் அப்பகுதியைச் சுற்றிலும் துர்நாற்றமும் நோய்க்கிருமிகளும் பரவி வருகின்றது.
தில்லி-நொய்டா பறக்கும் பாலத்திற்கு செல்லும் நுழைவாயில் அருகில் மிகவும் சிறிய அளவிலான 15 தற்காலிக கழிவறைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.
128 நாடுகளிலிருந்தும் மற்றும் நமது நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கில் நபர்கள் பங்கேற்ற மூன்று நாள் விழாவிற்கான திட்டமிடலில் கழிவறைகளுக்கான ஏற்பாடு இல்லாததால் யமுனை நதிக்கரையும், யமுனை நதியின் நன்னீரும் லட்சக்கணக்கானவரின் சிறுநீரால் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

நிகழ்வு நடைபெற்ற வளாகத்தைச் சுற்றிலும் சிறுநீர் தேக்கியுள்ளது. 

அப்பகுதியின் சூழலே  கெட்டுபோய் ஈரநிலமாய் மாற்றமடைந்துள்ளது.
இந்த விழாவிற்கான பிரம்மாண்ட ஏற்பாட்டினையொட்டி ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் அழிக்கப்பட்டு நதியின் நீர்ப்பரப்புக்கு கேடு விளைவிக்கப்பட்டதையொட்டி, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் ஆரம்பக்கட்ட இழப்பீட்டு தொகையாக ரூ.5 கோடியை அபராதமாக விதித்தது.வாழும் கலை அமைப்பின் நிறுவனரான கார்ப்பரேட் சாமியார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பகிரங்கமாக இந்த அபராதத் தொகையை கட்டமாட்டேன் திமிராக என அறிவித்தார். 

இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் இந்த மெகா விழாவிற்கு மத்திய மோடி அரசு நேரடியாக ஆதரவளித்தது.

ராணுவத்தினரை அனுப்பி கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தியது. 

இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் பசுமைத் தீர்ப்பாயம் இழப்பீட்டுத் தொகையில் முதல் தவணையாக ரூ.25லட்சத்தை கட்டிய பின்னர்தான் நிகழ்ச்சியை துவங்க அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது. 

ஆனாலும் அந்த உத்தரவையும் உதாசீனப்படுத்திவிட்டு கடந்த 11ந்தேதி மெகா விழா துவங்கியது. இதில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்துக்களின்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது முழுமையான சேதம் குறித்தும் சுற்றுச்சூழலு ஏற்பட்ட கேடு குறித்தும் மதிப்பிட நீர்வள ஆதார செயலாளர் சசிஷேகர் தலைமையில் 3 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

குவிந்து கிடக்கிற பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் பறவையினங்களுக்கு மரண விருந்தாக மாறியுள்ளது. இதனால் பல்லுயிரினங்களுக்கும் கேடு ஏற்படும். அப்பகுதி மக்களுக்கு நோயுடன் வாழும் கலைதான் மிச்சமாக ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கில் ஸ்ரீஸ்ரீ முத்திரை குத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிரசுரங்கள், பிளக்ஸ் போர்டு, கட்டுமான கழிவுகள், ரசாயனப் பொருட்கள் குவிந்துகிடக்கின்றன.

டஜன் கணக்கில் பரவலாக குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்றும் குப்பைக் காரணமாக அங்கு இதுவரை வாழ்ந்து வந்த பறவையினங்கள் வேறு இடம் மாறியுள்ளன.

கழிவுகளை அகற்றுவது குறித்து பிவிசி இந்தியா நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டது. 
ஆனால் அந்த நிறுவனம் இதுவரை  குப்பைக் கழிவுகள் அகற்றவில்லை. ஒரு குடிநீர் வெற்றுப்பாட்டிலை கூட அது அகற்றவில்லை.

இந்த கழிவுகளையும் பாட்டில்களையும் அருகிலுள்ள தலித் குடியிருப்புகளிலிருந்து ஏராளமான குழந்தைகள் பொறுக்கி வருகின்றனர்.ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த ஏற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதாக ரவி அறிவித்திருந்தார். ஆனால் விழா முடிந்த அடுத்த நாள் மட்டும் வெறும் 50 பேர்கள் பெயருக்கு சுத்தம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

போபாலில் இருந்து வந்திருந்த கட்டுமான நிறுவனம் பிரம்மாண்டமான மேடை அமைப்பை செய்திருந்தது. அந்த கட்டுமானப் பொருட்களும் மக்காத மீண்டும் பயன்படுத்த முடியாத கழிவுப் பொருட்களும், பரவிக் கிடக்கின்றன.பிவிசி பிளாஸ்டிக் நிறுவனத்தின் பிளக்ஸ் பேனர்களும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர் வெம்லென்டுஜா தெரிவித்துள்ளார். 


அப்பகுதியின் சூழலியல் முற்றிலும் சீர்கெட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்களை பயன்படுத்துவதாக சொல்லிவிட்டு முப்பது முதல் 50 வரை மட்டுமே வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் இப்பணியில் இருந்துள்ளனர் என்ற உண்மை விபரமும் வெளிவந்துள்ளது. 

இதுகுறித்து கார்ப்பரேட் சாமியார் ரவி சங்கரிடம் கேட்டதற்கு பெங்களூரிலிருந்தும், புனேவிலிருந்தும் 200 தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதாக  கூறியுள்ளார்.இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

உண்மையில் விவசாயிகளுக்கோ உடமைகளை இழந்த அப்பாவி ஏழை மக்களுக்கோ எவ்வித இழப்பீட்டையும் வழங்காமல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் அரசியலமைப்பையும் மதிக்காமல் மோடியின்இந்து  ராஜ்ஜியத்தில் மெகா நிகழ்ச்சியை நடத்தி மெகா நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சுகாதாரக்கேட்டையும் ரவிசங்கரின் மாநாடு உண்டாக்கியுள்ளது.

இந்த அனைத்து அரசு விதிகளையும் மீறிய  அசிங்க வாழும் கலை மாநாட்டில் இந்திய குடியரசுத்தலைவர் பினாப் முகர்ஜி கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிய நிலையிலும்  நாட்டின் பிரதமர் மோடி கலந்து கொண்டிருப்பது மிக அசிங்கமான முன்னுதாரணம்.

ஆனால் மோடி வாய் கிழிய நாட்டிபற்றியும் ஒழுக்கம் பற்றியும் பேசிக்கொண்டே அதற்கு எதிர்மாறாக நடந்து கொண்டிருக்கிறார்.

7000கோடி விஜய்மல்லையா கடனை வராக்கடனாக கூற வைக்க முயன்றவர் நீதிமன்ற தீர்ப்பால் அவரை வெளிநாட்டுக்கு போக வைத்து விட்டு பிடி வாரண்டை பிறப்பிக்கிறார்.

2500 கோடி வராக்கடன் அதானிக்கு 20000 கோடிகள் கடனை கொடுக்க ஸ்டேட் வங்கியை கட்டாயப்படுத்தி மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.

எஸ்ஸார் குழுமம் தொழில் வளர்ச்சிக்காக நிரலில் இல்லாத பாகிஸ்தானில் திடீரென இறங்கி பேச்சு நடத்துகிறார்.ஆக முறைகேடுகளை மற்றவர்கள் செய்ய நாட்டின் பிரதமரே வழி காட்டுகிறார்.

இந்த மோடி மஸ்தான் ஆட்சியில் சாமியார்களாக அதுவும் பணக்கார சாமிகளாக  இருந்தால் போதும் சகல அதிகாரங்களும் முறைகேடுகளையும் பெற முடியும் என்பது இதன் மீண்டும் மூலம் நிரூபணமாகியுள்ளது.

வாழும் கலைக்கு தேவையான சிறுநீர் குளம்.


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் 'வாழும் கலை' நிகழ்ச்சி யமுனை நதிக்கரையில் நடைபெற்றபோது. அந்நிகழ்ச்சியில் பாலம் அமைக்கும் பணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்டு ராணுவ வீரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 
அக்கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு :

மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடிஜிக்கு, எல்லையில் இருந்து இக்கடிதம் எழுதும் என்னை தேச துரோக வழக்கில் உள்ளே தள்ளி உதைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஜம்முவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெய் கிசான் ஜெய் ஜவான் என முழங்கிய மதிப்பிற்குரிய மோடி ஜி ஆட்சியிலும் என்னோடு ஒன்றாக உண்டு உறங்கி காவல் காத்த தர்மேந்தர் பாகிஸ்தானால் கொல்லப்படுகிறான். பசவப்பா எனும் ஆகச்சிறந்த வாலிபால் ப்ளேயர் இடுப்பில் சுடப்பட்டு கிடக்கிறான்.

அரசியல் மற்றும் அதானியின் பொருளாதார சூழ்நிலை பொருட்டு நட்பு பாராட்டலாம் தப்பில்லை என்றால் ஜெய் ஜவான் பிரச்சாரம் ஏன் என உள்மனது கேட்கிறது மோடி ஜி. போகட்டும், சாகத்தானே உடை தரித்தீர்கள் ஆயுதம் பெற்றீர்கள் என உங்கள் உள் மனது சொல்லலாம். ஆச்சர்யம் என்னவெனில் ரவி சங்கரின் 'வாழும் கலை' இந்திய ராணுவத்தில் எப்போது இணைந்தது என்பதுதான். 

“‘வாழும் கலை' ரவிசங்கர் யமுனை நதியில் நடத்தும் நிகழ்ச்சிக்கு இந்திய ராணுவத்தினர் பாலம் போட பணிக்கப்பட்டுள்ள செய்தி பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு தனியார் நிறுவன ஆடம்பர நிகழ்ச்சிக்கு ஏன் இந்திய ராணுவத்தை பயன் படுத்த வேண்டும்?”

கழுத்தளவு நீரில் எல்லையோரம் காவலுக்கு சென்றவன் என்ற அடிப்படையில் கேட்கிறேன். பாலங்கள் யமுனை நதியில் தினவெடுத்து திரியும் 'வாழும் கலை' நிகழ்ச்சிக்கு அவசியமா இல்லை எல்லையிலா?
வாழும் கலை இருக்கட்டும் சாகும் கலையை விதர்பா முதல் இந்தியா முழுமைக்கும் எப்போது கற்று கொடுத்தீர்கள் மோடிஜி?
நீங்கள் ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகமாகி உள்ளதாம் கவனீத்தீர்களா ஜி?
யமுனையில்தான் அந்த நிகழ்ச்சி நடக்க வேண்டுமா என்ன?
பரந்த பாலைவனம் நிறைந்த ராஜஸ்தானில் இல்லாத இடமா?
வாழும் கலையை அந்த விரிந்த வெளியில் கற்று கொடுக்கலாமே மோடிஜி. 


அத்தனை மன வலிமை இருக்கிறதா என்ன வாழும் கலை வல்லவர்களுக்கு?
இந்த பாலம் கட்டும் பணிக்கு ராணுவத்திற்கு பணம் கொடுத்ததாக சப்பை கட்டலாம். நீதிபதிகளின் உள்ளாடை துவைக்க அரசுப்பணியாளர், ஆபிசர்களின் சூ பாலிஸ் போட சிப்பாய்கள், வாழும் கலை ரவிசங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம், அதானிக்கு அக்ரிமென்ட் போட்டு கொடுக்க ஒரு பிரதமர், அற்ப விசயத்துக்கு ஐந்து முறை கடிதம் எழுதும் அமைச்சர், கார்பரேட் தியேட்டரில் பாட்டு பாடி ஆட்டம் போட காங்கிரஸைப் போலவே ஒரு கையாலாகாத அரசு... வாரே வாவ்!!

இளமையை, வாழ வேண்டிய வாழ்வை தொலைத்து கரைந்து நிற்கும் இராணுவத்தினரின் பெயரில் தேசபக்தி முகமூடியில் ஓட்டரசியல் செய்தது போதும் மோடிஜி. கண்ணையாக்கள் பல்கலைக்கழகங்களில் மட்டும் இல்லை. படைகளிலும் உண்டு. அவர்கள் கல்வியோடும் நாங்கள் ஆயுதங்களோடும் தனித்தனியே இருக்கிறோம் மோடி ஜீ.. எங்களை இணைத்துக்கொண்டிருக்கிறிர்கள் நீங்கள். சுக்ரியாஜி. ஜெய் பீம்! லால் சலாம்!!

======================================================================================
இன்று,
மார்ச்-18.
  • மங்கோலியாவில் ஆண்கள் மற்றும் படைவீரர்கள் தினம்
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1850)
  • அல்ஜீரியா விடுதலை போர் முடிவுக்கு வந்தது(1962)
  • வணிக உரிமைகள் வழங்கும் உடன்பாட்டில் ஹவாய், அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது(1874)

=======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?