சித்திரை வெயில்,

கோடை துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரிக்கிறது. 
அப்படியானால்  பங்குனி,சித்திரை கோடை வெயில் எப்படி இருக்கும் என்பதை, நினைத்துப் பார்த்தாலே எலும்புத்தண்டிலேயே  வியர்க்கிறது. 
ஒவ்வொரு ஆண்டும் நாம் கூறும் வார்த்தைகள்."இந்த ஆண்டு இப்போவே இப்படி சுட்டேரிக்குதே ,ஏப்ரல்,மே அவ்ளோதான்.இது வரைக்கும் இந்த அளவு வெப்பம் இருந்ததில்லை.'

இந்த வார்த்தைகள் சமீப காலமாக மாறவில்லை.

காரணம் ஒவ்வொரு ஆண்டும் உள்ளபடியே சூரிய வெப்பம் அதிகரித்துதான் வருகிறது.
வேறு வழி இல்லை.
நாம்தான் காலத்துடன் ஒன்றிடடப் பழகிக்கொள்ள வேண்டும்.

மரங்களை வெட்டித் தீர்ப்பதால்தான் வெக்கை ,மழையின்மை.நம்மை வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொல்லும் அரசுதான் தேசிய நெடுஞ்சாலைகள் போடுவதாகக் கூறி சாலையோர மரங்களை வெட்டித்தள்ளி விட்டது,விட்டுக்கொண்டும்  வருகிறது.

வெட்டிய மரங்களுக்குப்பதிலாக புதிதாக மரங்களை நடச்சொல்லும் அரசு, தான் சாலையோரம் வெட்டிய மரங்களுக்கு பதிலாக இதுவரை ஒரு மரமாவது நட்டி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

அசோகருடன் சாலைகளில் மரம் நாட்டிய அரசுகள் காலம் போய்  விட்டது.

இன்றுவரையிலான  முதல்வர் ஜெயலலிதா  பிறந்த நாளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 6லட்சம்,10 லட்சம் மரங்களை நட்டி வளர்ப்பதாக சொல்லி இரண்டு மூன்று செடிகளை கையில் மண்படாமல் வெள்ளி சாந்து கரண்டி மூலம் மண்ணை அள்ளிப்பொடுவதாக படங்கள் வந்தது.

ஆனால் மரங்கள் எங்கும் வரவில்லை.
படங்களில் வந்த செடிகள் கூட இரட்டை இலை விட்டதோடு வாழ்க்கையை முடித்துக்கொண்டது போலும்.

கோடை வெயிலைக்கண்டு பயந்தாலும் நாம் வாழ்க்கை நடத்தாமல் இல்லை.வெளியே  அலையாமல் இருக்கப் போவதும் இல்லை.இருக்கவும் நம்மால் முடியாது.வாழ்க்கைப்பாட்டை கவனிக்க வேண்டுமே?

இந்த கடும் வெயிலை,கோடையின் தாக்கத்தை குறைக்கும் வழிகளைத்தான் நாம் பார்க்க வேண்டும் .
அதைப்பற்றி பார்க்கலாம். 

கடும் வெயில் காலத்தில், உடலுக்கு பாதிப்பு வராமல் தடுக்க குளிர்ச்சியான பானங்களை அடிக்கடி அருந்த வேண்டும். 
அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 
வெயிலில் அலைவோரின் சருமம், பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும்.
சூரியக்கதிர்கள் சருமத்தை கடுமையாக பாதிக்கின்றன. 


சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக, சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகி விடுகிறது. 

இப்படி கருமையான சருமத்தை, வெளுக்க வைக்க, கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்துகிறோம். 

ஆனால் அதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். 

இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்கும்; சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். 

* அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர்… குறிப்பாகப் பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்பதனப் பெட்டியில் உள்ள ‘ஜில்’ தண்ணீர் ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே திருப்தி தரும். அது உண்மையிலேயே தாகத்தை தணிக்காது.

* தர்பூஸ், அன்னாசி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்ச், திராட்சை ஆகிய பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைத் தரும்.

* வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைகோஸ் போன்றவை அடங்கிய சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது.

* உப்புக் கலந்த எலுமிச்சை ஜூஸ், நீர்மோர், இளநீர் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்பானங்கள்.

* சர்க்கரையும் முட்டையும் கலந்த பால், ஜெல்லி, மில்க் ஷேக்ஸ் போன்ற இனிப்புகள் தேவையான ஊட்டச் சத்துகளை வழங்கும்.

* மோர் கலந்த பழைய சாதத்தை ஊறுகாய் மற்றும் வெங்காயத்துடன் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சியையும் இயற்கைச் சத்தையும் கொடுக்கும்.

* ஆரஞ்ச், தர்பூஸ், பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை ஆகிய பழங்களின் அறுசுவை பானம் உடல் நலத்துக்கு நல்லது.

கோடை காலத்தில் சூட்டைக் கிளப்பும், சாப்பிடக் கூடாது என சொல்லப்படு உணவுகள் குறித்த கட்டுக் கதைகளும் உண்மைகளும்…

* பப்பாளி சூட்டைக் கிளப்பும் பழம் என்பதால் அதை இளம் பெண்களும் கருவுற்றிருக்கும் தாய்மார்களும் உண்ணக் கூடாது.

உண்மை: பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துகள் இருக்கின்றன. பப்பாளி எந்த விதத்திலும் கருவை பாதிக்காது.

* மாம்பழம் உடல் சூட்டைக் கிளப்பும் என்பதால் சாப்பிடக் கூடாது.

உண்மை: உண்பதற்கு முன் மாம்பழத்தைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்ட பிறகு சாப்பிடலாம். ஏதேனும் பிரச்னை இருந்தால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம், சரியாகிவிடும்

* குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்க்ரீம் சளியை ஏற்படுத்தும்.

சளிக்குக் காரணம் வைரஸ் கிருமிகள். குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளி ஏற்படாது. குளிர்ந்த உணவு அல்லது நீர் ஒவ்வாமை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் ஏற்படும்.

* கோடை காலத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

தண்ணீர் அருந்துவது அவரவர் இருக்கும் சூழலைப் பொறுத்தது. வெயிலிலும் சூரிய வெப்பத்திலும் அலைபவர்கள் உடலின் தேவையைக் கருத்தில் கொண்டு தேவையான 1 அல்லது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்கலாம். வெப்பம் குறைந்த அல்லது குளிர்சாதன அறையில் இருப்பவர்களுக்கு மேற்கண்ட தண்ணீர் அளவு தேவைப்படாது.

 இயற்கை மாஸ்க்
 
தயாரிப்பது எப்படி?  

எலுமிச்சை சாற்றில், 2 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்த பின், முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும். 

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்

இந்த பேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவையும் அதிகரிக்கும். அதற்கு, 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து குழைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்த பின், கழுவ வேண்டும். 


ஓட்ஸ்: 
இது ஒரு நேச்சுரல் ஸ்க்ரப்பர். இந்த ஸ்க்ரப்பர் தயாரிக்க, சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து முகத்தில் தடவி, மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின் முகத்தை கழுவிய பிறகு, வைட்டமின் இ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும். 


எலுமிச்சை சாறு மற்றும் உப்பு 

எலுமிச்சை ஒரு சிறப்பான பிளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில், சிறிது உப்பு சேர்த்து கலந்து குளிக்கும் போது, இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை அகலும். 


வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். 


இதனால், சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும். 
கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் கூட நீங்கும். சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். 


அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து பின், குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். 
====================================================================================
இன்று,
மார்ச்-13.
1781: வில்லியம் ஹேர்செல் என்பவர் யுரானஸ் கிரகத்தை கண்டுபிடித்தார்.

1955: நேபாள மன்னர் திரிபுவன் இறந்தார்.
 யுரானஸ்
1809: சுவீடனில் நான்காம் கஸ்டோவ் மன்னர் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

1881: ரஷ்யாவில் இரண்டாம் அலெக்ஸாண்டர் மன்னர் வெடிகுண்டு வீசப்பட்டு இறந்தார்.

1940: ரஷ்ய – சீன யுத்தம் முடிவுற்றது.

1957: கியூப ஜனாதிபதி படிஸ்டாவை கொல்வதற்கு மாணவ புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் தோல்வியுற்றது.

1988: உலகின் மிக நீளமான கடலடி சுரங்கப்பாதை ஜப்பானின் அமோரி தீவுக்கும் ஹக்கோடேட் தீவுக்கும் இடையில் திறக்கப்பட்டது.

1992: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 500 பேர் பலி.

1997: நிமிர்ந்த நிலையில் நடந்த மனிதனின் மூன்றரை லட்சம் வருடங்கள் பழைமை வாய்ந்த காலடித்தடம் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.
=====================================================================================








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?