ராஜேஷ் பிள்ளை தரும் எச்சரிக்கை?
யாரேனும் இளம் வயதில் திடீர் மரணம் அடைந்தால்
‘தம், தண்ணின்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு இப்படி ஒரு முடிவா?’
என்று பலரும் அங்கலாய்த்துக் கொள்வார்கள்.
மது மற்றும் புகைப் பழக்கம் மட்டுமல்ல... நமது தவறான உணவுப் பழக்கமும் உயிர்கொல்லியாக மாறிவிடும்.
இதற்கு மலையாள திரைப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மரணமே எடுத்துக்காட்டு.
மூளைச்சாவில் உயிரிழந்த ஹிதேந்திரனின் இதயத்தை குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் தேனாம்பேட்டையிலிருந்து முகப்பேருக்கு எடுத்துச் சென்று வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
இந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இவர் மலையாளத்தில் இயக்கிய திரைப்படம் ‘ட்ராஃபிக்’.
இப்படம்தான் ‘சென்னையில் ஒரு நாள்’ என தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. ப்ரீ ஸ்கூல் தொடங்க நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ளும் சிக்கலை அடிப்படையாக வைத்து இன்றைய கல்வி முறை குறித்தான பார்வையையும் முன் வைத்து ‘மிலி’ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படி தொடர்ச்சியாக தனது படங்களில் சமூக அக்கறையை முன் வைக்கும் ராஜேஷ் பிள்ளைக்கு மது மற்றும் புகைப்பழக்கம் கிடையாது.
ஆனால், படப்பிடிப்பின் போது உணவு எடுத்துக் கொள்ளாமல் குளிர்பானங்களையும் ஜங்க் உணவுகளையுமே உட்கொண்டு வந்திருக்கிறார்.
இதன் விளைவு அவரது கல்லீரலை பாதித்து இறுதியாக உயிரையே எடுத்துக் கொண்டது.
உலகநாயகன் கமல்ஹாசனின் நண்பர் இவர்.இவருக்கு இறுதி மரியாதை செலுத்திய கமல்ஹாசன் "எத்தனையோ முறை ராஜேசை இந்த பெப்சி,கோககோலா போன்ற குளிர்பானங்களை குடிக்கும் பழக்கத்தை கைவிட கூறியுள்ளேன் .
ஆனால் அவர் அதற்கு அடிமையாகி இன்று தனது உயிரையே அதற்கு விலையாகக் கொடுத்துள்ளார்.இளநீர் அதிகம் கிடைக்கும் மலையாள நாட்டில் இது மிக மோசமான பழக்கம்.இதை பார்த்தாவது இந்த மென்பொருள் போதைக்கு அடிமையானவர்கள் திருந்த வேண்டும் " என்று வருத்ததுடன் கூறினார்.
ஷாப்பிங், சினிமா, மால்கள் என எங்கு போனாலும் குளிர்பானங்களை வாங்கிப் பருகுவதை பலரும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மதுவகை அல்லாத பானம் என்பதாலேயே Soft drinks என்று குளிர்பானங்களைச் சொல்கிறார்கள்.
ஷாப்பிங், சினிமா, மால்கள் என எங்கு போனாலும் குளிர்பானங்களை வாங்கிப் பருகுவதை பலரும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மதுவகை அல்லாத பானம் என்பதாலேயே Soft drinks என்று குளிர்பானங்களைச் சொல்கிறார்கள்.
ஆனால், மதுபானங்களைவிட அதிக ஆபத்து கொண்டவை இந்த குளிர்பானங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவரான ஜோதிபாசு சொல்வதைக் கேட்போம்...
‘‘நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் இயக்கத்துக்கும் தேவையில்லாத ஓர் உணவுப்பொருள் இந்த குளிர்பானங்கள். Nutritive value என்று எந்த சத்துப்பொருட்களும் இதில் இல்லை.
‘‘நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் இயக்கத்துக்கும் தேவையில்லாத ஓர் உணவுப்பொருள் இந்த குளிர்பானங்கள். Nutritive value என்று எந்த சத்துப்பொருட்களும் இதில் இல்லை.
தேவையற்ற கலப்படங்கள்தான் நிறைய இருக்கின்றன. ஒரு நாளில் 3 டீஸ்பூனுக்கு மேல் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஒரு குளிர்பான பாட்டிலில் மட்டுமே 7 டீஸ்பூன் வரை சர்க்கரை இருக்கிறது.
கார்பனேட்டட் டிரிங்ஸ், ஏரியேட்டட் டிரிங்ஸ் என்று சொல்லும் அளவுக்கு குளிர்பானங்களில் அடங்கியிருக்கும் ரசாயன வாயுவின் அளவும் அதிகம்.
இந்த கார்பனேட்டட் வாயுதான் செரிமானம் ஆனது போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்குகிறது. குடலின் ஒரு பகுதியில் நகர்ந்து வேறு பகுதிக்கு உணவு சென்றுவிடுவதால் ரிலாக்ஸான உணர்வு வயிறுக்குக் கிடைக்கிறது.
இந்த கார்பனேட்டட் வாயுதான் செரிமானம் ஆனது போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்குகிறது. குடலின் ஒரு பகுதியில் நகர்ந்து வேறு பகுதிக்கு உணவு சென்றுவிடுவதால் ரிலாக்ஸான உணர்வு வயிறுக்குக் கிடைக்கிறது.
Peristaltic movement in oesophagus என்று இதைச் சொல்வோம். முறையாக செரிமானம் ஆகாததால் இன்சுலின் தேவை அதிகரிப்பதுதான் கடைசியில் நடக்கும்.
வெயிலில் அலைந்துவிட்டு வருகிறவர்களுக்கு தண்ணீர்தான் முதலில் தேவை.
வெயிலில் அலைந்துவிட்டு வருகிறவர்களுக்கு தண்ணீர்தான் முதலில் தேவை.
அதற்குப் பதிலாக குளிர்பானத்தைக் குடித்து தாகம் தணிப்பது தவறான விஷயம். வெயிலில் அலைந்து வந்தவுடன் உடனடியாக சக்தி தேவை என்பதாலும் குளிர்பானங்களை விரும்புகிறார்கள். உண்மையில் எந்த சத்துகளும் இல்லாத Empty calories இவை என்பதை நாம் கவனிப்பதில்லை.
இந்த கலர் பானங்களில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை உடனடி சக்தியைக் கொடுக்கிறது என்பது உண்மைதான்.
இந்த கலர் பானங்களில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை உடனடி சக்தியைக் கொடுக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், உடலின் தேவைக்கு அதிகமான சர்க்கரையின் அளவை செரிமானமாக்க இன்சுலினும் அதற்கேற்ற அளவு தேவைப்படுமே.
இந்த தலைகீழ் முரண்பாட்டால்தான் நீரிழிவு நோய்க்கான பெரிய சாத்தியமாக குளிர்பானங்கள் மாறிவிடுகின்றன. உடல் உழைப்பு குறைந்த இன்றைய தலைமுறை அதிக பருமனோடு இருப்பதற்கான முக்கிய காரணங்களில் குளிர்பானங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு’’ என்றவரிடம், குளிர்பானத்தில் இருக்கும் வேதிப் பொருட்களின் கலவை பற்றிக் கேட்டோம்.
‘‘நிறத்துக்காக கலரிங் ஏஜென்டுகள் சேர்க்கப்படுவது பலருக்கும் தெரிந்திருக்கும். சமீபகாலமாக கொய்யாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களின் சுவை கொண்ட குளிர்பானங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அந்தப் பழங்களுக்கும் இந்த குளிர்பானங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. It contains no fruit pulp என்று அவர்களே குறிப்பிட்டிருந்தாலும், நாம் அதை கண்டுகொள்வதில்லை.
மாம்பழத்தின் சுவையைப் போலவே ஒரு குளிர்பானம் இருக்க வேண்டுமென்றால் Esters என்கிற செயற்கையான வேதிப்பொருட்களின் மூலமே அந்த மாம்பழச் சுவையை உண்டாக்க முடியும். இதோடு, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பிரசர்வேட்டிவ்களாகவும் நிறைய வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை எதுவும் நல்லது கிடையாது.

இவற்றை உடல் ஏற்றுக் கொள்வதும் இல்லை.
இந்த குளிர்பானங்கள் எந்த அளவுக்கு சுகாதாரமாக தயாரிக்கப்படுகின்றன, பேக் செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறிதான்.
இந்த குளிர்பானங்கள் எந்த அளவுக்கு சுகாதாரமாக தயாரிக்கப்படுகின்றன, பேக் செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறிதான்.
அதன் எதிரொலிதான் குளிர்பானத்தில் கரப்பான்பூச்சி இருக்கிறது, பல்லி கிடக்கிறது என்று அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
முறையாக குடிநீரை சுத்திகரிக்காததால்தான் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிக் கலப்பும் வருகிறது. குளிர்பானமாக பிராசஸ் செய்யும்போது தண்ணீரில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளின் அடர்த்தி இன்னும் அதிகமாகிவிடுகிறது.
‘‘குளிர்பானங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குத் தொண்டையில் தொற்றுகள் உருவாவது, வயிற்றுவலி போன்ற சின்னச்சின்ன தொந்தரவுகளில் ஆரம்பித்து, இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற இடங்களில் அழற்சி கூட ஏற்படலாம்.

இதுவே நாளடைவில் பெரிதாகி உணவுப்பாதையில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகிறது.
உலகமயமாக்கலின் விளைவாக பல வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவுக்குள் வந்திருக்கின்றன. வெளிநாட்டு உணவுப்பொருட்களை அரசு தவிர்க்க வேண்டும் என்று சொல்வதைவிட, அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறது என்ற காரணத்துக்காகவே நாம் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லையே?’

.இந்த குளிர்பானங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க சில வழிமுறைகள் :
‘‘ஒரு உணவு நம் உடல்நலனுக்கு சரிவராது என்றால் முன்பு அதை நம்மால் நிறுத்திவிட முடிந்தது. இப்போதோ எந்த உணவையும் நம்மால் உடனடியாக நிறுத்த முடிவதில்லை.
‘‘ஒரு உணவு நம் உடல்நலனுக்கு சரிவராது என்றால் முன்பு அதை நம்மால் நிறுத்திவிட முடிந்தது. இப்போதோ எந்த உணவையும் நம்மால் உடனடியாக நிறுத்த முடிவதில்லை.
அந்த அளவுக்கு போதைப் பொருள் போல தன் கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருக்கின்றன நவீன உணவுகள்.
குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரையின் கார்பன் வடிவமும், நம்முடைய டி.என்.ஏ. கார்பன் வடிவமும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறது என்பதையும், இதனால் குழப்பம் ஏற்படுகிறது என்பதையும் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதனால் என்ன பிரச்னைகள் வரும் என்பது இனிமேல்தான் தெரியும்.
இதுபோல யாரவது குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனங்களே ஆய்வுகள் நடத்தி இது நல்ல குளிர்பானம்தான் என்று சொல்வதும் உண்டு.
இதுபோல யாரவது குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனங்களே ஆய்வுகள் நடத்தி இது நல்ல குளிர்பானம்தான் என்று சொல்வதும் உண்டு.
இவற்றிடம் இருந்து நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு விஷயத்தைக் கவனித்து பாருங்கள்... ஆரோக்கியமான, நம் நாட்டு உணவுகளை சாப்பிடும்போது குளிர்பானம் குடிக்க வேண்டும் என்று பெரும்பாலும் தோன்றாது.
ஒரு விஷயத்தைக் கவனித்து பாருங்கள்... ஆரோக்கியமான, நம் நாட்டு உணவுகளை சாப்பிடும்போது குளிர்பானம் குடிக்க வேண்டும் என்று பெரும்பாலும் தோன்றாது.
பீட்சா, பர்கர், பப்ஸ், பாப்கார்ன் என்று பேக்கரி உணவுகளையோ, துரித உணவுகளையோ சாப்பிடும்போதுதான் குளிர்பானங்கள் வேண்டும் என தோன்றும்.
அதனால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வது இதிலிருந்து தப்பிக்க ஒரு நல்ல வழி.
அதனால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வது இதிலிருந்து தப்பிக்க ஒரு நல்ல வழி.
ஃபேஷன், ஸ்டைல் என்று நினைத்துக் கொண்டு பணத்தையும், உடல்நலத்தையும் கெடுப்பதற்குப் பதிலாக ஃப்ரூட் ஜூஸோ, இளநீரோ, மோரோ குடிக்கலாம்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இவைகள் அதிகமாக உபயோகிக்கப் படுகிறதே அங்கு என்ன பாதிப்பை உண்டாக்கியுள்ளதா?என்று சிலருக்கு புத்திசாலித்தனமான கேள்வி எழலாம்.
மற்றைய நாடுகளில் அங்குள்ள அரசுகள் ரசாயனங்கள்,சேர்மானங்கள் போன்றவற்றில் தரக்கட்டுப்பாட்டை மிகக் கடுமையாக மக்கள் ஆரோக்கியத்துக்கு என சரி பார்க்கின்றன.கோக கோலோ குடித்து ஒருவர் உடல் நலம் பாதிக்கப் பட்டதென்று குற்றச்சாட்டை எழுப்பினால் கோக கோலோ நிறுவனம் மீதி கடும் நடவடிக்கை அரசால் எடுக்கப்படும்.கோடிகளில் நிவாரணத்தொகை அபராதமாக விதிக்கப்படும்.
ஆனால் இந்தியாவில் மேகி நூடூல்ஸ் அபாயம் என்று தடை விதித்து பின்னர் அத்தடை நீக்கப் பட்டுள்ளது.நீக்கியதற்கான காரணம் மக்களுக்குத்தெரியுமா.விசத்தன்மை பொருள் இப்போது இல்லையா மேகியில்.இதற்கு அரசு துணுக்களவாவிலாவது விளக்கம் தந்துள்ளதா?
இந்திய அரசுக்கு அந்நிய நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் செய்ய வேண்டும் .அதற்காக என்ன சலுகைகளையும் தருவதாக மோடி நாடு,நாடாக சொல்லி வருகிறார்.பின் அவர்கள் கோக கொலோவில் வில் பாலிடாலை கலந்தால் கூட கண்டு கொள்வார்களா என்ன?
இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் கோக கோலோ ,பெப்சி போன்றவைகளில் அதிக அளவு துத்த நாகம்[ஷிங்]கலந்துள்ளது என்றும் ,கழிப்பறைகளை கழுவ மட்டுமே உதவும் தரத்தில்தான் உள்ளது என்றும்.அமெரிக்காவில் உள்ள சோதனை சாலை அறிக்கையே கொடுத்துள்ளது.ஆனால் அதை பற்றி இந்திய அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை.காரணம் அந்நிய மூலதனம்.அதனால் ஆள்வோர்களுக்கு கிடைக்கும் ஆதாயம்.
குளிர்பானங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குத் தொண்டையில் தொற்றுகள் உருவாவது, வயிற்று வலி போன்ற சின்னச்சின்ன தொந்தரவுகளில் ஆரம்பித்து இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற இடங்களில் அழற்சி ஏற்படும். இதுவே நாளடைவில் பெரிதாகி உணவுப்பாதையில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகிறது.

-ஞானதேசிகன்
நன்றி:குங்குமம் டாக்டர்,
இயக்குனர் ராஜேஷ் பிள்ளை |
ஏலக்காய்
வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய்.
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய், அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும், எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகாலிப்டஸ், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக, அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.
குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால், இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்த பொடியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினால், வாந்தி உடனே நின்று விடும்.
இப்போதெல்லாம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களால்,குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்கிறது. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கும், ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது.
நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்த புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே சரியாகி விடும்.
மன அழுத்த பிரச்னை உள்ளவர்கள், "ஏலக்காய் டீ' குடித்தால், இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத்தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது, வெளிவரும் நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும், மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு, ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும்.
அதேநேரம், சிலர் நறுமணத்துக்காக ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்வர். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும்.
இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.
விக்கலால் அவதிப்படுவோர், இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்த கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
வாயுத்தொல்லையால் அவதிப்படுவோர், ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்த பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும்.
உணவு உட்கொள்வதற்கு முன், இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத் தொல்லை உடனே நீங்கி விடும்.
=======================================================================================
இன்று,
மார்ச்-16.
- மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்க ஆதரவு அளித்தது(2006)
- திரவ எரிபொருளால் இயங்கும் முதல் ஏவுகணை மசாசுசெட்சில் செலுத்தப்பட்டது(1926)
- இஸ்ரேல், ஜெரிகோ நகரை அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்தது(2005)
- முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது(1942)
=======================================================================================