தில்லாலங்கடியாக எண்ணும் பேஸ்புக் .
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் என பல தளங்கள் இருந்தாலும் ஃபேஸ்புக்தான் நாம் அதிகம் பயம்படுத்தும் தளமாக விளங்குகிறது. ஒரே ஒரு குறைபாடு மட்டும்தான் அந்தத் தளத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை தடுத்துவருகிறது. அது- 'சர்ச்' ஆப்ஷன். இதை களையவும் திட்டங்கள் வகுத்து வருகிறது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக் தன் கிளை நிறுவனங்கள் மேல் தன் ஆதிக்கத்தை செலுத்தாமல் அவற்றை சுதந்திரமாக செயல்பட வைக்கிறது.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஒக்குலஸ் போன்றவை எல்லாம் தத்தமது தனித்திறமைகளோடு விளங்குகின்றன.
இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.
கூகுள் தன் கிளை நிறுவனங்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சித்து வரும் வேளையில் அதற்கு நேர்மாறான பாதையில் நடை போடுகிறது ஃபேஸ்புக்.
இப்படி ஒரே குடையின் கீழ் நிறுவனங்களை கொண்டுவரும்போது வெளிப்பார்வைக்கு கூகுள் டெக் உலகின் அரசன் போல காட்சியளித்தாலும் நிஜம் அதுவல்ல.
ஃபேஸ்புக்தான் டெக் உலகின் ரியல் சாம்ராட். ஃபேஸ்புக்கில் பயனாளிகள் தாங்களாக முன்வந்து தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்கிறார்கள்.
இதனால் கூகுளை விட பயனாளிகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறது ஃபேஸ்புக்.
கூகுளின் வசம் ஒரு சமூக வலைதளம் கூட இல்லாத நிலையில் ஃபேஸ்புக் மெல்ல மெல்ல கூகுளின் பிரம்மாண்டத்தை அரிக்கத் தொடங்கியிருக்கிறது.
2005-ல் ஆண்ட்ராய்ட் என்ற ஸ்டார்ட் அப்பை மட்டும் வாங்காமல் போயிருந்தால் நாம் இன்று பார்க்கும் கூகுள் வேறுமாதிரி இருந்திருக்கும்.
2005-ல் ஆண்ட்ராய்ட் என்ற ஸ்டார்ட் அப்பை மட்டும் வாங்காமல் போயிருந்தால் நாம் இன்று பார்க்கும் கூகுள் வேறுமாதிரி இருந்திருக்கும்.
ஜிமெயில்தான் கூகுளின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை.
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வசதி அது.
ஜிமெயிலின் மூலம் கூகுளின் பிற பலங்களான மேப், காலண்டர், டாக்ஸ் ஆகியவற்றையும் பயன்படுத்த முடியும். தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை 12 பில்லியன் பயனாளிகளை சென்று சேர்ந்திருக்கிறது கூகுள்.
ஆனால் இந்த எண்ணிக்கையை வெறும் 50 ஊழியர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம் ஆறே ஆண்டுகளில் எட்டிவிட்டது.
கடந்த மாதம் தன் ஒரு டாலர் சந்தா முறையை கைவிட்டது வாட்ஸ் அப். இப்போது தன் பயனாளிகளை வாட்ஸ் அப் மூலம் வர்த்தக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் தூண்டுகிறது. ஜிமெயிலில் வரும் சம்பந்தமேயில்லாத பெரிய பெரிய வர்த்தக மெயில்களுக்கு எல்லாம் இனி வேலை இல்லை. க்ரியேட்டிவிட்டிக்கு தான் இனி இடம் இங்கே.
நிறுவனங்கள் தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாட்ஸ் அப்பை பயன்படுத்தத் தொடங்கும் காலம் தூரத்தில் இல்லை. வாட்ஸ் அப்பில் இருக்கும் இன்னொரு வசதி நாம் அனுப்பிய தகவலை மறுமுனையில் இருப்பவர் படித்துவிட்டாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
இதுவும் வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். ஃபேஸ்புக் மெசஞ்சரும் இந்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படும். அதனால் வாட்ஸ் அப், மெசஞ்சர், ஸ்லாக் ஆகியவற்றுக்கு நடுவே மாட்டிக்கொண்டு திணறுகிறது ஜிமெயில்.
வைனை விட இன்ஸ்டாகிராமிற்கு அதிக பயனாளிகள் இருக்கிறார்கள். வளரும் நாடுகளில் அந்த தளம் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
எளிமையான ஒரு தளம் என்பதால் அனைவரின் ஏகோபித்த ஆதரவும் இன்ஸ்டாவுக்கே. அது போக, ஃபேஸ்புக்கின் துணையும் இருக்கிறது. இந்தக் காரணங்களால் வைனிலிருந்து இன்ஸ்டாகிராமிற்கு மாறி வருகிறது இளைய தலைமுறை.
ஐ-போனில் தன் சர்ச் பாரை தக்க வைக்க கூகுள், 1 பில்லியன் டாலர் தந்தது நினைவிருக்கிறதா? காரணம், ஆப்பிள் பயனாளிகளை கவர்வதுதான்.
எளிமையான ஒரு தளம் என்பதால் அனைவரின் ஏகோபித்த ஆதரவும் இன்ஸ்டாவுக்கே. அது போக, ஃபேஸ்புக்கின் துணையும் இருக்கிறது. இந்தக் காரணங்களால் வைனிலிருந்து இன்ஸ்டாகிராமிற்கு மாறி வருகிறது இளைய தலைமுறை.
ஐ-போனில் தன் சர்ச் பாரை தக்க வைக்க கூகுள், 1 பில்லியன் டாலர் தந்தது நினைவிருக்கிறதா? காரணம், ஆப்பிள் பயனாளிகளை கவர்வதுதான்.
அதேபோல் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராம் படங்களை பயன்படுத்த ட்விட்டருக்கு பணம் தரவேண்டும். இதன்மூலம் ஸ்னாப்சாட் செயலி மட்டுமே களத்தில் போட்டிக்கு நிற்கும். (ஸ்னாப்சாட்டை முடக்க ஃபேஸ்புக் கொண்டுவந்த ஸ்லிங்சாட் வெற்றி பெறவில்லை) கூகுளின் வர்த்தக பலங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கிற்கும் உள்ளது.
சொல்லப்போனால் கூகுளால் செய்ய முடியாதவை எல்லாம் ஃபேஸ்புக்கால் செய்யமுடியும்.
ஆல்பபெட்டின் வேலையே வருமானத்தை பெருக்குவதுதான் என்பதால் ஃபேஸ்புக் வேகம் எடுப்பதை தவிர்க்க முடியாது.
சொல்லப்போனால் கூகுளால் செய்ய முடியாதவை எல்லாம் ஃபேஸ்புக்கால் செய்யமுடியும்.
ஆல்பபெட்டின் வேலையே வருமானத்தை பெருக்குவதுதான் என்பதால் ஃபேஸ்புக் வேகம் எடுப்பதை தவிர்க்க முடியாது.
மெசஞ்சர் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் முறையில் செயல்படுவதால் வீசாட் செயலிக்கு போட்டியாக விளங்குகிறது.
இப்போதே நீங்கள் மெசஞ்சர் மூலம் உபேர் டாக்ஸி புக் செய்யலாம்.
சில குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ளலாம். இதிலிருந்தே ஃபேஸ்புக் கூகுளை குறி வைப்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்போதே நீங்கள் மெசஞ்சர் மூலம் உபேர் டாக்ஸி புக் செய்யலாம்.
சில குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ளலாம். இதிலிருந்தே ஃபேஸ்புக் கூகுளை குறி வைப்பதை புரிந்து கொள்ளலாம்.
மெசஞ்சர் கூகுள் சர்ச்சை விட இன்னும் துல்லியமானதாக இருக்கும். தேவையற்ற பக்கங்கள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும்.
உங்கள் தேடுதலை எளிமையாக்கி உதவி செய்ய ஒரு டிஜிட்டல் அசிஸ்டென்ட்டும் செயல்படும்.
உங்கள் தேடுதலை எளிமையாக்கி உதவி செய்ய ஒரு டிஜிட்டல் அசிஸ்டென்ட்டும் செயல்படும்.
ஆனால் கூகுள் அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர இந்த வசதிகள் எல்லாம் பத்தாது. மளிகை சாமான்கள் வாங்க, போக்குவரத்துகளை ஏற்பாடு செய்ய என அனைத்திற்கும் மெசஞ்சர் பயன்பட்டால் எப்படி இருக்கும்?
இதற்கெல்லாம் ஃபேஸ்புக் நிறைய உழைக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஃபேஸ்புக் நிறைய உழைக்க வேண்டும்.
ஃப்ரீ பேஸிக்ஸ் திட்டத்தை ஃபேஸ்புக் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதன் நோக்கமே இதுதான். WWW என்பதை மாற்றி தன் ஆதிக்கத்தை செலுத்தம் முயற்சிதான் இது.
இணையத்தின் ராஜாவாக தான் மட்டுமே இருக்கவேண்டும் என நினைக்கிறது பேஸ்புக் .
செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள், படங்கள், மெசேஜ்கள் என அனைத்தும் தன் வழியே மட்டும் தான் மக்களின் பார்வைக்கு வரவேண்டும்,தர வேண்டும் என விரும்புகிறது.
=========================================================================================
இந்திய ராணுவமா?
கூலி , கொத்தனார்களா?
=========================================================================================
இணையத்தின் ராஜாவாக தான் மட்டுமே இருக்கவேண்டும் என நினைக்கிறது பேஸ்புக் .
செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள், படங்கள், மெசேஜ்கள் என அனைத்தும் தன் வழியே மட்டும் தான் மக்களின் பார்வைக்கு வரவேண்டும்,தர வேண்டும் என விரும்புகிறது.
இந்திய ராணுவமா?
கூலி , கொத்தனார்களா?
கார்ப்பரேட் சாமியாரின் வாழும் கலை அமைப்பிற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
எனினும் யமுனை நதிக்கரையில் ரவிசங்கர் உலக கலாச்சார திருவிழா நடத்த தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே ரவிசங்கர் நடத்தும் நிகழ்ச்சிக்கு ராணுவத்தை பயன்படுத்தியது தொடர்பாக மோடி அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
உலக கலாச்சார திருவிழா என்ற பெயரில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் யமுனை நதிக்கரையில் விழா ஒன்றை நடத்துகிறார்.
இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டை ரவிசங்கர் ஏற்படுத்தி வருவதாக எழுந்த புகாரையடுத்து, விழாவில் பங்கேற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார்.
வேறு வழியின்றி மோடியும் ஒதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் முதல் கட்ட அபராதமாக வாழும் கலை அமைப்பு ரூ.5 கோடி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் விழாவை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு உரிய பரிசீலனை இல்லாமல் அனுமதியளித்த தில்லி வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ.5 லட்சமும் ,தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ. 1லட்சமும் அபராதம் விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இவ்வாறு முறைகேடாக நடத்தப்படும் இவ்விழா ஏற்பாடுகளில் பாலம் அமைக்க இந்திய ராணுவத்தை அந்த பணக்கார சாமியார் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
தனியார் வேலைக்கு ,அதுவும் அரசு விதி முறைகளை மீறிய,அபராதம் விதிக்கப்பட்ட பணிக்கு ராணுவம் எப்படி பயன்படுத்தப்பட்டது.?
அதற்கு அனுமதியளித்தவர்கள் யார்?
அதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுக்க குரல்கள் எழுந்துள்ளது.
=========================================================================================
இன்று,
- ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் குடியேற்ற நாடானது(1893)
- அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
- பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
- யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)
லட்சம் ரூபாய் கடன் வாங்கி கட்ட தாமதமானால் வீட்டை ஏலம் விடும் வங்கிகள்,விவசாயக்கடன் வாங்கி கட்ட தாமதமான விவசாயியை தாக்கி கடனை கேட்ட வங்கி அலுவலர்கள் இந்த 9000 கோடிகள் மோசடி குற்றவாளி விஜய் மல்லையா மீது மட்டும் தடவல் நடவடிக்கை எடுப்பது ஏன்?அவன் வெளிநாடு தப்பிய பிறகு தடை கேட்டு வழக்கு தொடுக்கும் மர்மம் என்ன?கொடிகளில் உங்களுக்கு கையூட்டு கொடுத்தானா இந்த குற்றவாளி?
கீழ்க்கண்ட சொத்துக்களை கைப்பற்ற திராணி இருக்கிறதா மோடி அரசுக்கும்,வங்கிகளுக்கும்.
தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் வட கொரியாவை அமெரிக்காவும்,தென் கொரியாவும் தான் சீன்டிக்கொண்டே இருப்பதாகத்தெரிகிறது.
நாடுகளிடையே சுமூக நிலையை உண்டாக்க வேண்டிய ஐ.நா.வோ அமெரிக்காவின் கைக்கூலியாக வட கொரியாவை பொருளாதாரத் தடை என்று இம்சித்து வருகிறது.
வட கொரியாவை சீண்ட அங்கு தனி மனித மீறல்கள் நடப்பதாக இவைகள் சொல்லுகின்றன.அமெரிக்காவில் இல்லாத மனித உரிமை மீறல்களா?
அப்படியே இருந்தாலும் வட கொரிய மனித மீறல்கள் பற்றி அங்கிருந்து எதிர்ப்பு குரல்கள் வந்துள்ளதா?
அல்லது உலக நாடுகள் ஐ.நா, தலையிட வட கோரிய மக்கள் ஆட்சிக்கு எதிராக வேண்டுகோள்கள் வைத்தார்களா?
ஏன் இந்த மூவரும் வட கொரியாவை சீண்டுகிறார்கள்.வட கொரியா தன்னை கம்யூனிஸ்ட் நாடு என்று அறிவித்துக்கொண்டது முதல் காரணம்.மற்றைய நாடுகளை வட கொரியாவுக்கு உதவ விடாமல் இருந்தும் அந்நாட்டு இன்னமும் அமெரிக்காவை சரணடை யாத கோபம் .
அமெரிக்காவுக்கு வட கொரியா இன்னொரு வியட்நாம் ஆகப்போகிறது.
ஆனால் இனி உண்டாகும் போர்கள் அணு ஆயுதத்தின் மீதுதான் நடக்கும்.
வட கொரியா அணு மற்றும் ரசாயன ஆயுதங்களை வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் அதிபர் கிம் ஜோங் உன் தனது தாய் மாமாவையே தனக்கு எதிராக செயல் பட்டதாக கூறி நாய்களை விட்டு கடித்து,கொதறி கொலை செய்த கொடூர மனப்பாங்கு உள்ளவர்.அவர் அணு ஆயுதங்களை பயன் படுத்தப் போவதாக வெறும் பூச்சாண்டி காட்டி வருவதாகத்தேரியவில்லை.
அதனால் உலக நாடுகள் அனைத்துக்கும் ஆபத்துதான்.
அமெரிக்கா,தென் கொரியா,ஐ,நா க்கள் வட கொரியாவையே கண் கொத்திப்பாம்பாக தங்கள் அமைதிப்பணியை பார்த்தாலே போதும் வட கொரிய அச்சுறுத்தல் மறைந்து விடும்.
====================================================================================