உங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ?

மோடி அரசு முனைந்து செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு அவதியைத்தருவதாகவும்,அழிவைத்தருவதுமாகத்தான் அமைகிறது.
ஆதார் எண்ணை மோடி அரசு வந்தபின்னர் கட்டணக்கழிப்பறை செல்வதற்கு கூட இணைக்க வேண்டிய நிலை.
ஆதார் அட்டை பாதுகாப்பில்லை.தனிமனிதரின் தகவல்களைத் திருடுகிறது என்றால் அப்படி எல்லாம் இல்லை.மிகப்பாதுகாப்புடன் உள்ளது.

10 அடி அகல சுவர் உள்ள அறையில் பாதுகாக்கப்படுகிறது என்று ஆதார் அமைப்பு கூறுகிறது.ஆதார் ரகசியம் பாதுகாக்கப்படும் கணினி தகவல் சேமிப்பு அமைப்பில்(சர்வர்)இருந்து கணினி மூலமாகவே திருடப்படுகையில் சுவரும்,இயந்திரத் துப்பாக்கியும் என்ன  பாதுகாப்பைத்தரும்.
ஜனவரி மாதம்தான் 500 ரூபாய் செலவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக தெரிவித்திருந்தது ஒரு நாளிதழ். அதை மறுத்த தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அந்த செய்தியை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் மீதும் நாளிதழ் மீதும் காவல்துறையில் புகார் அளித்தது. 
இதோ ஏர்டெல் நிறுவன வங்கி தனது ஏர்டெல் அலைபேசி சிம் அட்டை வாங்க ஆதார் என்னைத்தந்தவர்கள் விபரங்களைத்திருடி செய்த திருவிளையாடலைப்  பாருங்கள்.நம் ஆதார் தகவல்களை   மத்திய அரசு என்ன லட்சணத்தில்  பாதுகாக்கிறது என்பது உங்களுக்குப் புரியும்.
  டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கைபேசி வழியாக பண பரிவர்த்தனைகளை செய்யும்படி ஊக்குவிப்பதற்கு வங்கிகள் செயலிகளை (ஆப் (APP) அறிமுகப்படுத்தின. 
மக்கள் கார் முதல் காய்கறி வரை வாங்குவதற்கு App மூலமே பணம் செலுத்தலாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
மேலும், வங்கித் துறையில் தனியார் கார்ப்பரேட்டுகளை அனுமதிக்கும் தாராளமய கொள்கையின் ஒரு பகுதியாக புதிய கார்ப்பரேட் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 
அப்படி அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் மொபைல் சேவை வழங்கி வந்த ஏர்டெல். ஏர்டெல் வங்கி சேவையில் கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர் காசோலை மூலமாகவோ, வேறு வங்கிக் கணக்குகளிலிருந்தோ, தனது ஏர்டெல் கணக்கில் பணத்தை போட முடியும்.
ஆனால், தொலைபேசி கட்டணத்துக்கும், இணைய கட்டணத்துக்குமே நம்ப முடியாத ஏர்டெல்-ஐ நம்பி பணத்தை போடுவதற்கு பலர் தயாராக இல்லை. 
மேலும், பல வணிக வங்கிகளும் App மூலமாக பண பரிமாற்ற வசதியை தர ஆரம்பித்தன. எனவே தனது வங்கி சேவைக்கு வாடிக்கையாளர்களை புதிதாக சேர்ப்பதற்கு ஏர்டெல் ஒரு வழியை கண்டுபிடித்தது.
மொபைல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது ஆதார் மூலம் அனைத்து தகவல்களையும் இணைக்கும் மோடி அரசின் திட்டத்தின் ஒரு பகுதி. 
அந்த கட்டாயத்தின் கீழ் தமது ஆதார் எண்ணை, தமது ஏர்டெல் மொபைல் எண்ணுடன் இணைத்திருந்த வாடிக்கையாளர்களை ஏர்டெல் குறிவைத்தது.

ஏர்டெல் பேமண்ட் வங்கி 
 தலைமைச் செயல் அலுவலர் – சசி அரோரா.
இதற்கிடையில், டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக அனைவரும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று கெடு விதித்தது, மோடி அரசு. புதிய வங்கிக் கணக்குகளை தொடங்குவதற்கு ஆதார் எண் அவசியம் என்று வலியுறுத்த ஆரம்பித்தன வங்கிகள். 
ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அவர்களது வங்கி சேவைகள் முடக்கப்படும் என்று தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் நச்சரிக்க ஆரம்பித்தன. (இப்போது ஆதார் திட்டத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சொல்வது வரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.)
இப்போது, வங்கிக் கணக்கு ஆரம்பிக்க ஆதார் எண் அவசியம் (போதுமானது), மொபைல் எண்ணுடனும் ஆதார் எண் இணைப்பு என்ற இரண்டையும் சேர்த்து பாருங்கள்.
வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு தேவையான ஆதார் எண்ணையும், கணக்குடன் இணைப்பதற்கான மொபைல் எண்ணையும் தன் கட்டுப்பாட்டில் பெற்ற ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் ஏர்டெல் வங்கிக் கணக்கை தொடங்கி விட்டது. 
இந்த வாடிக்கையாளர்கள் தமது சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக இணைத்திருந்த வங்கிக் கணக்கை மாற்றி ஏர்டெல் வங்கிக் கணக்கை இணைத்து விட்டது. 
இதற்கும் ஆதார் எண்ணும், தொலைபேசி எண்ணும் தன் கட்டுப்பாட்டில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டது. இந்த வாடிக்கையாளர்களின் சமையல் எரிவாயு மானிய பணம் அவர்களது ஏர்டெல் வங்கிக் கணக்குக்குள் போகத் தொடங்கியது.
இவ்வாறாக வாடிக்கையாளருக்குத் தெரியாமலேயே அவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அவரது பணத்தையும் அந்த கணக்குக்கு திருப்பி விட்டிருக்கிறது ஏர்டெல். 
இவ்வாறாக 31 லட்சம் கணக்குகள் மூலம் ரூ 190 கோடியை திசை திருப்பியுள்ளது அம்பலமானது.
இந்த மோசடியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஆதார் எண்ணை தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைத்துடனும் இணைப்பது நம் வாழ்க்கையை மூக்கணாங்கயிறு போட்டு கார்ப்பரேட்டுகள் கட்டுப்படுத்துவதற்கான வழி என்பதைத்தான்.

பெரும்பாலோனோர் அன்றாடம் பயன்படுத்தும் தேடல் தளமான கூகுளில் ஆதார் மூலம்   தனிநபர் தகவல்கள் கசிந்திருக்கின்றன.  
 முன்பெல்லாம் ஆதார் தகவல் கசிந்திருப்பதை நிரூபிக்க முயற்சி செய்பவர்கள் அந்தத் தகவல்களை அடைவதற்கு மூளையை சற்று கசக்க வேண்டியிருந்தது. 
ஆனால் இந்த முறை அதிகமாக மெனக்கெடாமல் சும்மா ஒரு கீ வேர்டை தட்டினாலே தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறது கூகுள். 
"Mera Aadhaar meri pehchan filetype:pdf " என்று கூகுளில் தேடினால் ஆதார் தகவல்கள் தென்படவே அதிர்ந்து போனார்கள் இணையவாசிகள். 
ஆதார் டேட்டாபேஸில் இருந்து நேரடியாக இல்லாமல் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தும் பிற நிறுவனங்கள் மூலமாக இந்தத்  தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 
pdf பார்மெட்டில் புகைப்படம், இருப்பிடத் தகவல், ஆதார் எண் என முழுமையான தகவல்கள் அதில் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட மூன்று இணையதளங்களில் இருந்துதான் அதிக அளவில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆதார் திட்டத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பை
 உருவாக்கிய நந்தன் நீலகேணி
ஒருவர் ஆதார் எண்ணை கைபேசியுடனும் வங்கிக் கணக்குடனும் இணைக்கும் போது அவரது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளையும், கைபேசியின் இடம் அறியும் தொழில்நுட்பம் மூலம் அவரது பயண விபரங்களையும், ஒரு கார்ப்பரேட் நிறுவனமோ அரசோ கண்காணித்து தெரிந்து கொள்ள முடியும். 
நாட்டின் 120 கோடி மக்களின் இத்தகைய விபரங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் வசம் போய், அவர்கள் மக்களை தம் விருப்பப்படி ஆட்டுவிக்க முடியும். 
இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக முடியும்.
ஏர்டெல் செய்த மோசடியின் அளவு ரூ 190 கோடியாக இருந்தாலும், இது ஆதார் என்ற வெடிகுண்டின் நாசவேலை சாத்தியங்களை கோடிட்டு காட்டும் பனிப்பாறையின் விளிம்பு மட்டுமே.
உதாரணமாக, இனிமேல் சிறுநீரகம் தானம் செய்பவர்களின் ஆதார் எண்ணை சரி பார்த்து, அவரது தொலைபேசியில் ஒப்புதல் பெற்று விட்டால் சட்டரீதியாக அவரது அனுமதி பெறப்பட்டு விட்டதாக கருதப்படும் என்று ஒரு சட்டத்தை அரசு இயற்றி விடுவதாக வைத்துக் கொள்வோம். 
அதன்படி, சில லட்சம் குடிமக்களின் ஆதார் எண்+தொலைபேசி எண் விபரங்களை கைப்பற்றும் எந்த சிறுநீரக திருட்டு கும்பலும் சட்ட பூர்வமாக யாருடைய சிறுநீரகத்தையும் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்று விடும்.
இறக்குமதிக்கான LOU என்ற வசதியில் இருந்த ஓட்டையை பயன்படுத்தி ரூ 12,000 கோடிக்கும் மேல் ஆட்டையை போட்ட நீரவ் மோடி போன்ற முதலாளிகளின் நாடு இது. 

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல்வேறு சேவைகளி் சேர்க்கைகளை பயன்படுத்தி ஏர்டெல் போன்று நூற்றுக் கணக்கான ஓட்டைகளை கண்டுபிடித்து மக்கள் தலையை மொட்டை அடிக்க இந்திய ‘தொழில் முனைவர்கள்’ காத்திருக்கிறார்கள். 
நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.
ஆனால், மோடி அரசோ, ஏர்டெல் செய்த இந்த முறைகேட்டை ஏதோ சட்ட ஒழுங்கு பிரச்சனை போல பார்த்து சொற்ப தொகை அபராதம் மட்டும் விதித்துள்ளது. 
டஜன் கணக்கில் தனியார் கார்ப்பரேட்டுகளை வங்கி தொடங்கி நடத்த அனுமதிப்பதை ரத்து செய்யவோ, ஆதார் எண்ணை அனைத்துடனும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவதையோ நிறுத்தவில்லை.
அரசுதான் ஆதார் எண்ணை மக்கள் மீது திணித்தது. எரிவாயு மானியத்துடனும், வங்கிக் கணக்குடனும், வருமான வரி கணக்குடனும் இணைக்கும்படி கட்டாயப்படுத்தியது. 
எனவே, இந்த ஊழலுக்கும் இனிமேல் நடக்கவிருக்கும் மோசடிகளுக்கும் ஆதார் திட்டத்தை முரட்டுத்தனமாக திணித்த மோடி அரசும், ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்திய முந்தைய மன்மோகன் சிங் அரசும், அதை அமல்படுத்த உதவிய இன்ஃபோசிஸ் நந்தன் நீலகேணியுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இப்போதாவது நாம் விழித்துக் கொண்டு ஆதார் என்ற மக்கள் விரோத திட்டத்தையும், அதை கட்டாயமாக புகுத்தும் மோடி அரசின் அடக்குமுறையையும் எதிர்க்க வேண்டும்.
500 ரூபாய் செலவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் ஆதார் தகவல்களைப் பெறலாம் .
  =====================================================================================  
ன்று,
மார்ச்-31.
  • ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)
  • ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)
  • மால்ட்டா விடுதலை தினம்(1979)
  • முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)
======================================================================================

                                                            செவ்வாய் தோஷம்.?



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?