கேவலத்தின் மறுபெயர்

 பாஜக

‘குஜராத் மாடல் வளர்ச்சி’ என்ற பொய்யான பிம்பத்தை கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் பரப்பி மத்திய ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பாஜக,மாநில அரசுகளை கைப்பற்ற இரண்டு வகையான கேவலமான உத்திகளை கைக் கொள்கிறது.

தேர்தலுக்கு முன்பு ஆளுநரை பயன்படுத்தி உள்வேலையை செய்வது, பணத்தை மழையாக பொழியச் செய்வது, மதவெறியர்கள், இனவெறியர்கள், சமூக விரோதிகள் என அனைவரோடும் கைகோர்ப்பது, வெறுப்புப் பிரச்சாரத்தை விதைப்பது,தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்வது என்பது பாஜக செய்யும் திருகுதாள வேலையாகும். 


இவ்வளவுக்கு பிறகும் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் விநோத கூட்டணிகளை அமைப்பது, கட்சி தாவிகளை ஊக்குவிக்க குதிரை பேரம் நடத்துவது என்பது அந்தக்கட்சி பின்பற்றும் நடைமுறையாகவே மாறியுள்ளது.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகியமாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் மேகாலயாவில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாகாலாந்திலும் இதே நிலைமைதான். நாகாலாந்து என்பிஎப் கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 

ஆனால் பாஜக ஆதரவுடன் என்டிபிபி கட்சியும் ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ளது.மேகாலயா சட்டப் பேரவைக்கு 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக இரண்டுஇடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

அந்த மாநிலத்தில் தொங்கு சட்டப் பேரவையேஅமைந்தது. சட்டப் பேரவையில் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரஸ் கட்சியைஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பதே நியாயம். ஆனால் குறுக்கு வழியில் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க பாஜக முயல்கிறது. 

ஆளுநரும் இதற்கு அனுசரணையாகவே செயல்படுகிறார்.கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற ஆட்சியமைக்க ஆளுநர் மறுத்து பாஜகவுக்கு வாய்ப்பளித்தார். 


17 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரசுக்கு வாய்ப்பளிக்காமல் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு ஆளுநர் வாய்ப்பளித்தார்.
இதைப்பயன்படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளை இழுத்துபாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மணிப்பூரிலும் குறுக்குவழியிலேயே பாஜககூட்டணி அமைத்தது. அங்கும் பாஜக கூட்டணிக்கு கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால் குதிரைபேரம் மூலம் பாஜக கூட்டணி அதிகாரத்தைஅபகரித்தது. 

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம்,ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி வெற்றிபெற்றுஆட்சியமைத்த நிலையில், நிதிஷ்குமாரை வளைத்து ஆர்ஜேடியை கழற்றிவிடச் செய்து கூட்டணி ஆட்சியில் ஒட்டிக்கொண்டது பாஜக. இந்த லட்சணத்தில் தான் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை பிடித்துவிட்டதாக மோடியும், அமித் ஷாவும் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். 

அதிகாரத்தை பிடிக்க எந்தளவுக்கு இறங்கிச் சென்றும் ஜனநாயகத்தை இழிவுப்படுத்த பாஜக தயாராக இருக்கிறது என்பதையே பல்வேறு நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

பாஜகவினரின் வெறிக் கூச்சலால் காதைப் பொத்திக்கொள்கிறது ஜனநாயகம்.

========================================================================================
ன்று,
மார்ச்-07.
  • ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1798)
  • அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)
  • பாலஸ்தீனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)
=========================================================================================


                                                 பாஜக மட்டும்தான் போட்டோஷாப் செய்யுமா என்ன?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?