இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

போலிச் செய்திகள் உலா.

 டுவிட்டர் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள்தான் மிக விரைவாக மக்களை சென்றடைகிறது.
டுவிட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
 மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், போலிச் செய்திகளை மறு அனுப்பு செய்யும்  பாட்கள் (bots) எனப்படும் மென்பொருள்களைவிட மனிதர்களே அதிக எண்ணிக்கையில் மறு அனுப்பு( ரீ-ட்வீட்)தல்  செய்துள்ளது  தெரியவந்துள்ளது.

போலிச் செய்திகள் படிப்பதற்கு ஒருவித  உணர்வை அளிப்பதால் அவை படிப்பதற்கும், பகிரத்  தூண்டுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதில் அரசியல்,மருத்துவம்  சார்ந்த போலிச் செய்திகளே முதல் இடங்களை  பெற்றிருக்கின்றன.
அடுத்ததாக புனையபட்ட கதைகள், தொழில், தீவிரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கை பேரிடர்கள் பற்றிய போலிச் செய்திகள் பரவலாக வலம் வருகின்றன.
 இந்த ஆய்விற்குரிய தரவுகளை தனது தளத்தில் இருந்து  ட்விட்டர் நிறுவனமே அளித்திருந்தது.
டுவிட்டர்  "தங்கள் தளத்தில் வரும் பொது உரையாடலுக்கு அளிக்கும் பங்களிப்பை பரிசோதனை செய்யும் முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டுவருவதாக" தெரிவித்துள்ளது.
போலிச் செய்திகள் பெரும்பாலும் புதுமையானதாக,விறு,விறுப்பாக  இருப்பதால், அவற்றை பகிர்வதற்கு மக்கள் விரும்புகின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பாஸ்டன் நகர மாரத்தான் போட்டியின்போது ஏற்பட்ட குண்டுவெடிப்புக்குப்பின் டுவிட்டரில் அது பற்றி பகிரப்பட்ட செய்திகளை கண்டு வியப்பு,அதிர்ச்சியும் அடைந்ததாலேயே ட்விட்டரை  முதன்மையான தகவல் ஆதாரமாக கொண்டு இந்த ஆராய்ச்சியை தொடங்கினோம்" என்று ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
 சமூக வலைதளங்களில் படித்து வரும் பெரும்பாலான விடயங்கள் புரளிகள் மற்றும் போலிச் செய்திகள் என்பதை கண்டறிந்ததாலேயே இந்த ஆய்வுக்கு ஸ்நோப்ஸ் மற்றும் அர்பன்லெஜெண்ட் உள்ளிட்ட ஆறு உண்மை கண்டறியும் நிறுவனங்கள் உதவியதால் பெரிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 இந்த ஆராய்ச்சி தொடர்பான முடிவுகளில்கீழ்க்காணும் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உண்மை செய்திகளைவிட போலிச் செய்திகள் 70 சதவீதம் அதிகளவில் ரீ-ட்வீட் செய்யப்படுகிறது.
1500 பேரை சென்றடைவதற்கு போலிச் செய்திகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட ஆறு மடங்கு அதிக நேரத்தை உண்மையான செய்திகள் எடுத்துக்கொள்கின்றன.
உண்மையான செய்திகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர்களால் பகிரப்படுவது அரிதாக இருக்கும் நிலையில், மிகவும் பிரபலமான போலிச் செய்திகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரால் பகிரப்படுகிறது

தான் பகிரும் செய்தி சரியானதோ அல்லது தவறானதோ என்று பார்க்காமல் மற்றவருக்கு தெரியாத செய்தியாக இருந்தால் அதை பகிர்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்.
பகிர்வதற்குரிய வகையிலான சிறந்த செய்தியாக இருக்கும்பட்சத்தில் அதன் உண்மைத்தன்மையை பற்றி பகிருபவர் அதிகம் கவலைப்படுவதில்லை.
2016இல் நடந்த விபத்துக்கு ரத்தம் தேவைப்படுவதை ஒருவர் டுவிட்டரில்  பதிந்துள்ளார்.அச்செய்தி இரண்டாண்டுகளாகியும் இன்னும் டுவிட்டரில் மறு அனுப்புதலில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது என்பது வேடிக்கையான நிகழ்வு.இந்நிகழ்வே தங்களுக்கு வரும் செய்தியின் உண்மைத்தன்மையை கண்டு கொள்ளாமல் அதை கண்ணை மூடிக்கொண்டு டுவிட்டரில் பிறருக்கு அனுப்புகிறார்கள் என்பதை காட்டுகிறது.
மக்கள் எந்த வதந்தி சிறந்ததாக உள்ளதென்று பார்க்கிறார்களே தவிர, அதன் உண்மைத்தன்மையை பற்றி கவலைப்படுவதில்லை.
இன்றைய தகவல் தொழில் நுட்பக்காலத்தில் மக்கள்  செய்திகளால் நிரம்பியுள்ளனர் . எனவே, ஒரு செய்தி பலரது கவனத்தை பெறவேண்டுமெனில் அது மிகவும் வியப்பளிக்கும் வகையிலோ அல்லது வெறுக்கத்தக்க வகையிலோ இருக்க வேண்டும் என்பதையே அச்செய்தியை அனுப்புவர்கள் எண்ணுகிறார்கள் தவிர அச்செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
 அனாமதேய குறுஞ்செய்தி  சராஹாசெயலி.நீக்கம் ?
நமக்கு வந்த செய்தியை  யார்  அனுப்பினார்கள்  என்ற தகவலை வெளியிடாது அனுப்பிய குறுஞ்செய்தியை மட்டுமே  படிக்க முடியும் என்கின்ற அனாமதேய வசதியை  கொண்டதுதான் சராஹா ஆப் என்ற செயலி .
அதாவது மொட்டைக்கடிதாசி பணியை செய்யும் செயலி.
 தற்போது அந்த செயலியை  கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் நீக்கியுள்ளன.
 இந்த  செயலி  இளைஞர்கள் பயன்படுத்துவதற்கானது,தரமானது  அல்ல என அதன் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

கட்ரினா கொலின்ஸ் என்பவர்  தனது 13 வயது மகளுக்கு சராஹா செயலி மூலம்  தொடர்ந்து இனம் தெரியாத நபர்கள்  குறுஞ்செய்திகள்அனுப்பி துன்புறுத்துவதாக  குற்றஞ்சாட்டி இருந்தார். 
"உன் மகள் தற்கொலை செய்து கொள்வார்" என்றும், மோசமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி செய்திகள் வருவதாகவும் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் வாழும் கொலின்ஸ், Change.org என்ற வலைதளத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். 
"சராஹா செயலி மிக்வும் மோசமான செயலி.அதன் மூலம் மக்களுக்கு ஒரு பயனும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.இச்செயலி மக்கள் மனநிலையை கெடுக்கிறது.தவறான நபர்கள் அனுப்பும் செய்திகளால் இதை பயன் படுத்தும் இளைஞர்கள் பயமும்,பதட்டமும் அடைவதுதான் நடக்கிறது.மனஅழுத்தத்தை மட்டுமே இச்செயலி தருகிறது. எனவே  கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த சராஹா செயலியை நீக்க வேண்டும் "என்று  கோரியிருந்தார். 
இவருக்கு ஆதரவாக "சராஹா ஆப் செயலி மிகவும் தொந்தரவு அளிப்பதாகவும் அதை நிக்க வேண்டும் என்றும்   4 லட்சத்து 70 ஆயிரம் பேர்  ஆதரவு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டது.
"இது போன்ற  செயலிகள் நீக்கம்  குறித்து கருத்து தெரிவிப்பது வழமை இல்லை" என கூகுள் நிறுவனம் அறிவித்தது .
ஆனால் ஆப்பிள் நிறுவனம் இச்செயலியை நீக்கியது தொடர்பாக எந்தக் கருத்துமே  தெரிவிக்கவில்லை.
சராஹா செயலியின் தலைமை நிர்வாகி செயின்-அலாப்தின் தாஃபிக் "இரு பெரிய நிறுவனங்கள் தங்கள் செயலியை நீக்கியது துரதிஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார்.
அரபு மொழியில் சராஹா என்றால் "நேர்மை" என்று பொருள். ஆக்கப்பூர்வமான நேர்மையான கருத்துகளை பெறுவதே இதன் நோக்கம். 
சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செயலி, ஆப்பிள் ஸ்டோரில் கடந்த ஜுலை மாதத்தில் 30 நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலியாக இருந்தது.
அறிமுகமான  உடனேயே உலகெங்கிலும் 300 மில்லியன் பயன்பாட்டாளர்களை சராஹா செயலி பெற்று வியக்க வைத்தது.
ஆனால் சராஹா செயலி  வெளியான ஒரு வருடத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டது.இன்று முக்கிய அலைபேசி செயலிகள் வழங்கும் நிறுவங்களான கூகுள்,ஆப்பிள் இதை நீக்கி விட்டன.இதனால் 90% 
பயன்பாடு இராது.
பெயரிடப்படாமல்  அனாமதேய குறுஞ்செய்தி அனுப்பும்  முதல் செயலி சராஹா அல்ல. இதற்கு முன் சீக்ரெட் என்ற செயலி வந்து இதேபோல் பலத்த எதிர்ப்பால்  பெரும் சர்ச்சைக்குள்ளான  2015ஆம் ஆண்டு மூடப்பட்டது. 2013ஆம் ஆண்டு பல்வேறு இளம் வயதினர்  தற்கொலை செய்து கொண்டதற்கு ask.fm என்ற தளம்தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டு ,அதுவும் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
=====================================================================================
ன்று,
மார்ச்-11.
  • அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது(1861)
  • ரஷ்ய தலைநகர் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவிற்கு மாறியது(1918)
  • பாகிஸ்தான் அணுஆயுத சோதனை நடத்தியது(1983)
======================================================================================