இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 14 மார்ச், 2018

கை கொடுக்கும் டிஜிட்டல் வாழ்க!

பொய்யான நபர்க(ஃபேக் ஐடிக்க)ளால் டுவிட்டரில் அதிகம் பின்தொடரப்படும் தலைவர்களில் உலகளவில் நமது பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலிடத்தில் அமெரிக்க அதிபர்  டிரம்ப் உள்ளார்.டிரம்பை பின் தொடர்பவர்களில் 37% போலிகள்.ஆனால் அதிலும் நம் மோடி அவரை விஞ்சி விட்டார் மோடியை பின் தொடர்பவர்களில் உண்மையான கணக்கு உள்ளவர்கள் வெறும் 40%மட்டுமே.
போலிகள் 60%.காரணம் டிஜிட்டல் பிரதமர் அல்லவா .
 பிரம்மனால் படைக்கப்படாமல் பாஜகவின் தொழில் நுட்பக்குழுவினால்  உருவாக்கப்பட்டு  பூமியில் உலாவருபவர்கள்தான்  இந்த 60%.
அசல்களை விட போலிகள் 20% அதிகம்.
நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளங்களின் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பவர். எந்தவொரு கருத்தையும், இரங்கலையும் அல்லது வாழ்த்தையும் அவர் ட்விட்டர் வழியாக பதிவிட்டே உலகிற்கு வெளிப்படுத்துவார். கமல்ஹாசன் டுவிட்டரில் இருந்து அரசியலுக்கு வந்தார் என்றால் மோடி அரசியலில் இருந்து டுவிட்டர் சென்று அரசியல் நடத்த்துகிறார்.
குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அல்லது டிஜிட்டலாக சமூகத்தோடு இணைந்திருப்பது மிகவும் எளிதாகவும், வசதியாகவும் இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார்.
காரணம் நாம் சொல்லும் பொய்களை அதில் தடுக்க ஆட்கள் இராது.பொய் உணரப்பட்டால் இப்பதிவை நீக்கி விடலாம்.அட்மின் தவறாகப் பதிந்து விட்டார் என்று சொல்லிவிடலாம்.அதுதானே பாஜக பாணி. 


பிரதமர் மோடியை ட்விட்டரின் வழியாக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 40.3 மில்லியன் என்று பெருமையடித்துக்கொண்டார்கள்.ஆனால் 60% பேர்கள்   பாஜகவின் தொழில் நுட்பக்குழுக்களால் படைக்கப்பட்ட அரூபங்கள்போலிக்கணக்குகள்(  ஃபேக் ஐடிக்கள்).இதுவும் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கணக்கு.இது இன்னமும் அதிகரிக்கலாம் என்று கூறுகிறது ட்விப்லோமசி எனும் டுவிட்டர் சார்பு நிறுவனம். 
உலக  அளவிலான இந்தப் போலிகள்  தகவல் பட்டியலில் பிரதமர் மோடியே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.முகநூலில் எத்தனை பேர்கள் பிரம்மனால் படைக்கப்படாமல் பாஜகவினால் உருவாக்கப்பட்டு  பூமியில் உலாவருபவர்கள் என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.
 அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது 47.9 மில்லியன் ஃபாலோவர்களில் 37% போலிக்கணக்குகளைக் கொண்டிருக்கிறார். போப் பிரான்ஸிஸ், பெனோ நீட்ட் மற்றும் மன்னர் சல்மான் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாவம் ஒருபுறம் பழிகள்  அட்மின்புறம் .
மோடி பின்பற்றுபவர்கள் அரூபங்கள் என்றால் தமிழக பாஜக தலைவர் டிஜிட்டல் திருவிளையாடல் வேறு வகை. 


நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 
ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு மெயில் மூலம் கட்சியில் இணைந்ததற்கானத் தகவல் அனுப்பப்படும். 
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் இணைந்தாக, இமெயில் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ``கமல் தற்போது அவரின் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார். நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு சிரிப்பீர்கள்... மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள். 
அந்த இமெயிலில் ‘நான் நாம் ஆனோம். இன்றிலிருந்து எங்கள் கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண் இதுதான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
என் மெயில் ஐ.டி. எப்படி இவர்களுக்குக் கிடைத்தது?. 
உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, கிடைக்கும் இமெயில் முகவரிக்கெல்லாம் கமல் அழைப்பு அனுப்புகிறார். இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யான கட்சி நடத்தி வருகிறார். கையில் கிடைக்கும் இமெயில் ஐடிக்கு எல்லாம் மெயில் அனுப்புகிறார்’ என்று கமலை கலாய்த்து இடைவிடாமல் நக்கலாக சிரித்தார் தமிழிசை. 
`இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல் அனுப்பப்படும்’ என்று  மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கெனெவே விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தங்கள் இணையதளத்தில் செல்போன் எண், இமெயில் மற்றும் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட விவரங்களை அளித்து தமிழிசை பதிவு செய்ததற்கான புகைப்பட ஆதாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டது.
 பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை அவரது இணைய இணைப்பில் இருந்தே  தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது. 
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
``ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த  பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது .  அதுவரை ... பதிவு செய்தமைக்கு நன்றி’’ 
என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
ஹெச்.ராஜாவின் அட்மின் ஃபேஸ்புக் பதிவைப் போல் ஒருவேளை இதுவும் தமிழிசையின் அட்மின் கமல் கட்சியில் இணைவதற்காகப் பதிவு செய்திருப்பாரே? என்று கூறி நிருபர்களும் இணைய வாசிகளும் தமிழிசையை  கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.  
பாஜகவினர் டிஜிட்டல் இந்தியா, குஜராத் வளர்சியில் இருந்து போட்டோஷாப் ,டுவிட்டர்,முகநூல் என்று உலகமே சிரிக்கும் அளவு வளர்ந்துள்ளது மீம்ஸ் போடுபவர்களுக்குத்தான் விருந்து. 
உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ?
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ... பதிவு செய்தமைக்கு நன்றி

ஆக தங்கள் கட்சிக்கு மிஸ்ட் கால் மூலம்  ஆள் சேர்த்தது பற்றி நக்கலடித்தவர்களை சமாதானம் செய்யவோ ,கமல்ஹாசனை கிண்டலடிக்கவோ தமிழிசை தானே மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்து கொண்டு பின்  அனுமதி இல்லாமல் கமல் ஆட்களை அவராகவே சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்று ஊடகங்களில் அசிங்கம் செய்ய எண்ணி தமிழிசை செய்த வேலை இது என்று தெளிவாகிறது.காரணம் அவரது இணைய இணைப்பில் இருந்து உறுப்பினர் சேர்க்கை வேண்டுகோள் வந்தது என்பதற்கு ஆதாரத்தை மக்கள் நீதி மய்யம் வைத்துள்ளது.
இனி என்ன செய்யலாம்?
ராஜாவைப்போல் தன் அட்மின் தனக்குத் தெரியாமலேயே கமல்ஹாசன் கட்சியில் சேர்த்து விட்டதாக புலம்பலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
" நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். 
இந்த பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது.
மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது... 
மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது. 
ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். 
வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது... 
நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன்... அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் " 
 -ஸ்டீபன் ஹாக்கிங்       
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று(14.03.2018) காலை காலமானார். அவருக்கு வயது 76.குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு,உள்ளிட்டவற்றை உருவாக்கியவர் இவர்.கடவுள் துகள் என்ற ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பில் இவரின் எண்ணங்கள் முக்கியத்துவம் பெற்று செயல்படுத்தப்பட்டது. 
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார்.
இவ்வுலகின் மிகசசிறந்த சிந்தனையாளர்கள் திருவள்ளுவர்,கார்ல் மார்க்ஸ்,அல்பிரட் ஐன்ஸ்டின்,பெரியார் வரிசையில் வரும் பகுத்தறிவு அறிவியலாளர் 
ஸ்டீபன்ஹாக்கிங்.

========================================================================================
ன்று,
மார்ச்-14.


  • இயற்பிய அறிஞர்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)
  • மாமேதை  கார்ல் மார்க்ஸ் இறந்த தினம்(1883)
  • கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறந்த தினம்(1932)
  • ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் ஒருவர் முதன் முதலாக பயணித்தார்(1995)

"கார்ல் மார்க்ஸ்"
உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை . 
போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர் .
ஜெர்மனியில் மே - 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . 
மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது ..
தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .
கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .
எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .
பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . 
பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .
ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர் .
எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .
வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார் . இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு
பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள் .
அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை -மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.

அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .
பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;"பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை !"என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,
பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .
ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . 
காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .
சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது .'
                                                                                                                                      - பூ.கொ.சரவணன்
 ========================================================================================