வியாழன், 1 மார்ச், 2018

வாயில் என்ன பக்கோடாவா?

அமித்ஷா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டது சரியல்ல.
சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டரில் வழக்கை நடத்திய விதத்திலேயே ஏராளமான முறைகேடுகள் இருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி அபய் திப்சே கூறியுள்ளார்.மும்பை விசாரணை நீதிமன்றத்தால் அந்த தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில், சொராபுதீன் ஷேக், அவரதுமனைவி கௌசர் பீவி, 2006-இல் துளசிராம்பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறி, இந்த என்கவுண்ட்டர்களை அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா (இன்றைய பாஜக தலைவர்) திட்டமிட்டு அரங்கேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதுதொடர்பாக அமித்ஷா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மும்பை சிபிஐ நீதிமன்றம் வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் ‘2014 டிசம்பர் 30’ அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.எம். லோயா அறிவித்த நிலையில், டிசம்பர் 1-ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது, 48 வயது லோயா திடீரென மரணம் அடைந்தார்.இது பெரும் விவாதமாக மாறியது. நீதிபதிலோயா மரணத்திற்கும் சொராபுதீன் வழக்குக்கும் தொடர்பு இருப்பதாக லோயாவின் சகோதரி அனுராதா பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவிக்க மேலிடத்தில் இருந்து நிர்ப்பந்தம் வருவதாக உயிருடன் இருந்தபோது லோயா தங்களிடம் கூறியதாக அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர். 
அமித்ஷாவை விடுதலை செய்தால்,மும்பை நகரின் மையப்பகுதியில் பல ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட- ரூ. 100 கோடி மதிப்பிலான வீட்டுமனையை பெற்றுத் தருவதாக மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவரே பேரம் பேசியதாகவும் அவர்கள்கூறினர்.

இதனிடையே, லோயா மரணத்திற்குப் பிறகு, அவரது இடத்திற்கு வந்த நீதிபதி கோசாவி, டிசம்பர் 30 அன்று சொராபுதீன் போலிஎன்கவுண்ட்டர் வழக்கிலிருந்து அமித் ஷாவைமுழுமையாக விடுதலை செய்தபோது, லோயா மரணம் தொடர்பான சர்ச்சை மீண்டும்வலுத்தது.
நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனாவாலா, பத்திரிகையாளர் பி.ஆர். லோன் உள்ளிட்டோர் தற்போது உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராஅமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அலகாபாத் மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவரான நீதிபதி அபய் திப்சே, சொராபுதீன்போலி என்கவுண்ட்டர் வழக்கை நடத்திய விதம்குறித்து, கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணை நீதிமன்றத்திலேயே விடுவிக்கப்படுவது முறையல்ல;
அவ்வாறு விடுவித்த நீதிமன்றம், அவருக்கு (அமித்ஷாவுக்கு) பல ஆண்டுகளாக, ஏன், பிணை வழங்கப்படவில்லை? 
என்பதையும் கருத்தில் கொள்ளவில்லை. 


குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லையென்றால் அவர்களால் எளிதாகப் பிணை வாங்கியிருக்க முடியுமே, என்ற யோசனை கூட வெளிப்படவில்லை; 
இந்த விஷயத்தையெல்லாம் கடந்து, அமித்ஷாஉள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லையென்று ஒற்றை வரியில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று அபய் திப்சே குறிப்பிடுகிறார்.“சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கு குறித்து செய்தி வெளியிட ஊடகங்களை தடை செய்தது இரண்டாவது முறைகேடு”என்றும் திப்சே குற்றம் சாட்டுகிறார். 

“எந்தவழக்கும் நியாயமாக விசாரணை செய்யப்பட அதை வெளிப்படையாக நடத்த வேண்டும்; ஊடகங்கள் செய்தி வெளியிடத் தடை வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்களே வேண்டுகோள் விடுத்ததும், அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும் வியப்பளிக்கிறது” என்கிறார் அவர்.

“குஜராத் மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வழக்கு விசாரணை மாற்றப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, கடைசிவரை அதே நீதிபதி தொடர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் சொல்லப்பட்டது. 

ஆனால், இந்த வழக்கில் முதல் நீதிபதியின் பதவிக்காலம் முடியும் முன்பே லோயா நியமிக்கப்படுகிறார்” என்பதை நினைவுகூரும் திப்சே, “இந்த விஷயத்தில்முதல் நீதிபதி ஏன் மாற்றப்பட்டார்? என்பதும் தெளிவுபடுத்த வேண்டும்” என்கிறார்.

நிறைவாக, நீதிபதி லோயாவின் மரணம் பற்றி பேசியுள்ள அவர், “அந்த மரணம் இயற்கையானதா இல்லையா என்று எதுவும்சொல்ல மாட்டேன். 
எனினும், அதில் சில சந்தேகங்கள் உள்ளன; பல சட்ட வல்லுநர்கள் இதில் விசாரணை கோருகின்றனர். எனவே அதைதெளிவுபடுத்த ஒரு விசாரணை வேண்டும்” என்றும் முடித்துள்ளார்.

நீதிபதி லோயாவின் செல்பேசி அழைப்புகளின் பதிவுகளையும் ஆராய வேண்டும்.செல்பேசி அழைப்புகள் லோயா திடீர் மரணத்துக்குப்பின் ஆய்வு  செய்யப்படவே இல்லை.
அவை இதுவரை காவல்துறையால் ஏன் ஆய்வு செய்யப்படவில்லை,அல்லது ஆய்வு செய்து அந்த அறிக்கையை இணைக்கவில்லையா?இணைக்கவில்லை என்றால் ஏன் ? என்று  பல சந்தேகங்களை கொண்டுவருகிறது. என்று அபய் திப்சே கூறியுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொதுத்துறை வங்கிகளை கபளீகரம் செய்யும்கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியல் நீண்டுகொண்டேவருகிறது. 
ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு மோசடி வெளிவந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் கட்சிகளின்ஆசியோடு கூட்டு மோசடியில் ஈடுபட்டிருப்பதும்அம்பலமாகியிருக்கிறது.விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ. 3,695 கோடி கடன் வாங்கி விட்டு கம்பி நீட்டியிருப்பவர் குட்கா நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரி. இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசின் சிறந்த ஏற்றுமதியாளர் விருதைபெற்றவரும், பாஜகவிற்கு எப்போதும் நெருக்கமாகவும் இருப்பவராவார். 
குப்தா குடும்பம் ரூ.3500கோடி, ஏர்செல் ரூ.1500கோடி, கீதாஞ்சலி ஜெம்ஸ்நிறுவனம் ரூ.1251 கோடி, ஆர்.பி.இன்போசிஸ்டம் ரூ.515 கோடி, சிம்பாஹோசி சர்க்கரை ஆலை ரூ.150 கோடி என பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பவர்கள் மீது அரசே வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த பட்டியல் இன்னும் நீளும். 
கூடிய விரைவில்அதானியும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போதாது என்று, 9500 நிதி நிறுவனங்கள் ஆபத்தானவை என மத்திய நிதி அமைச்சகமே அறிவித்திருக்கிறது. 
‘’நான் தின்னவும் மாட்டேன்; தின்ன விடவும்மாட்டேன்’’ என்பதே தாரக மந்திரம் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

ஆனால் நடப்பது என்னவோ எல்லாம் தலைகீழாக இருக்கிறது. 
அமித்ஷா மகன் 50000 ரூபாயில் ஒருவரிடத்தில் 80 கோடிகள் சம்பாதித்ததன் மர்மத்தைப்பற்றி,தேடப்படும் மோசடி குற்றவாளி நீரவ் மோடியுடன்  வெளிநாட்டில் படம் எடுத்துக்கொண்டது போன்றவைப் பற்றி   இதுவரை தின்ன விடா பிரதமர் வாயை திறக்கவில்லை.
வாயில் என்ன பக்கோடாவா என்ற கேள்விதான் எழுகிறது.
பொதுமக்களின் பணத்தை கார்ப்பரேட்கள் மோசடி செய்து தின்பது மட்டுமல்ல, வெளிநாடு சென்று தின்று கொழுத்து, கூத்தும் கும்மாளமும் போடுகின்றனர். 
ஆனால் அந்த மோசடிக் கும்பல்களோடுதான் எப்போதும் மோடி விமானத்தில் பறக்கிறார். அது குறித்த விபரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டால் இது மோடிஅரசின் ரகசியம் என்கின்றனர். 

சமீபத்தில் ரூ.19ஆயிரம் கோடி வரை பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து தற்போது வெளிநாட்டில் ஜாலியாக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரும், முகேஷ் அம்பானியின் உறவினருமான நீரவ் மோடி.பணமதிப்பிழப்பு குறித்து பிரதமர் அறிவிக்கும்சில மணி நேரத்திற்கு முன்பு ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.90 கோடியை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். 

நரேந்திர மோடிக்கு மட்டுமே தெரிந்த பணமதிப்பிழப்பு செய்யும் நடவடிக்கை, அவர் அறிவிப்பதற்கு முன்பு நீரவ் மோடிக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

அதுமட்டுமல்ல, 2016 ஜூலை 26ஆம் தேதி முதல்நீரவ் மோடியின் முறைகேடுகள் குறித்து 42முதல் தகவல் அறிக்கைகள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. 
இவை தெரிந்திருந்த நிலையிலும், டாவோசில்பிரதமர் கூட்டிய தொழில் அதிபர்கள் கூட்டத்திற்கு நீரவ் மோடியை வரவழைத்து பிரதமர் மோடியும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து தனது நெருக்கத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்பே நீரவ் மோடி இந்தியாவை விட்டுதப்பியதாக அறிவிக்கப்பட்டது. 

நீரவ் மோடிதப்பிய அனைத்து ரகசியங்களும் நரேந்திர மோடிக்கே அத்துப்படி. 
ஆனாலும் நீங்கள் நம்பியே ஆக வேண்டும் பிரதமர் மோடி ஊழலுக்குஎதிரானவர் என்று.
======================================================================================
ன்று,
மார்ச் -01.


  • தென்கொரியா விடுதலை தினம்
  • ரியோ டி ஜெனிரோ நகரம் அமைக்கப்பட்டது(1565)
  • திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த தினம்(1953)
  •  நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்(1910)
  • ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(2002)

தி.மு.க., தலைவர் கலைஞர் மு.கருணாநிதி- -- தயாளு அம்மாள் தம்பதியின் மகனாக, 1953 மார்ச், 1ல், ஸ்டாலின் பிறந்தார். 
பள்ளி மாணவர் பருவத்தில், தன் நண்பர்களை இணைத்து, 1967 -- 68ல், 'கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.,' என்ற அமைப்பை, முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார்; 
அதன் மூலம், அரசியல் வாழ்க்கையை துவக்கினார்.
ஆரம்ப காலத்தில், பல முறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்து உள்ளார். 
1975ல், மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையாகத் தாக்கப்பட்டார்.இவருடன் சிறையில் இருந்த சிட்டிபாபு போலீசாரின் தாக்குதலில் பாதிப்படைந்து உயிரிழந்தார் என்றால் ஸ்டாலின் மீதான தாக்குதல் எந்த அளவு கொடூரமாக இருந்திருக்கும் என்பதை உணரலாம்.இன்றும் அதன்பாதிப்பிற்காக சிகிச்சை எடுத்துதான் வருகிறார்.
இளைஞர் அணி செயலர், துணைப் பொதுச் செயலர், பொருளாளர், செயல் தலைவர் என, படிப்படியாக கட்சி பதவிகளில் உயர்ந்தார், ஸ்டாலின்.சென்னை மாநகர மேயராக இரு முறை பதவி வகித்தார். பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின், 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார்.
உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தவர். 
தற்போது, சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். 
=======================================================================================
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"உச்சநீதி மன்ற நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு   ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேன்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. 
ஆனால், அதை நடைமுறைப்படுத்த இயலாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

 காவிரிப் படுகையை ஒரு எண்ணேய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணைப் போகும் விதமாகப் பேசுவதும், நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. 
சட்டத்தின் ஆட்சியை நடத்த, அரசு தவறுகிற போதெல்லாம் நீதி மன்றங்களை நாடுகின்றோம். 
நீதி மன்றங்களின் தீர்ப்பையும் அரசு செயல்படுத்த மறுத்தால் நீதி கேட்டு எங்கே செல்வது? 
யாரிடம் முறையிடுவது? 
என்கிற உணர்வு தோன்றுமானால் அது குடியரசுக்கும், நீதி அமைப்பிற்கும் பெருமை சேர்க்காது. 
எனவே, உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதித்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை ஆறு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும்"  
                                                                                                                                            -கமல்ஹாசன் 
=========================================================================================.