இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 3 மார்ச், 2018

92ஆயிரம் கோடி வருமானம்?

னாவின் முன்னணிப் பத்திரிக்கையாகத் திகழும் ஹூரன் குளோபல், போர்ப்ஸ், ப்ளூம்பெர்க் நிறுவனங்களுக்கு இணையாக, ஒவ்வொரு ஆண்டும் ‘ஹூரன் ரிச் லிஸ்ட்’ என்ற பெயரில் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், 2018-ஆம் ஆண்டுக்கான உலகப் பணக் காரர்கள் பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. 
இதில், பெருங்கோடீஸ் வரர்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இந்தியாவில் மொத்தம் 131 கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் ‘ஹூரன் குளோபல்’ தெரிவித்துள்ளது.


இந்தியாவில் புதிதாக 31 பெருங்கோடீஸ்வரர்கள் உரு வாகியிருப்பதாக பட்டியலிட்டுள்ள அந்த நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான, கௌதம் அதானியின் சொத்துக்கள் மட்டும் கடந்த ஒரே ஆண்டில் 92 ஆயிரம் கோடி ரூபாய் (1400 கோடி டாலர்கள்) அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பால் நாட்டின் வர்த்தகச் சந்தை முழுவதுமாகச் சீர்குலைந்து இருக்கும் காலகட்டத்திலும் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது;
 அவரது தொழில், வர்த்தகம் 109 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்று ஹூரன் நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் ஹூகிவெர்ப் கூறியுள்ளார்.

மேலும் ‘ஹூரன் ரிச் லிஸ்ட்’- இல் ‘டாப் 100 பேர்’ பட்டிய லில் அதானி குழுமத்தின் தலை வர் கௌதம் அதானி 98-ஆவதுஇடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ரிலையன்ஸ் முதலாளியான முகேஷ் அம்பானி, சன் பார்மா நிறுவனத்தின் முதலாளி திலிப் சங்வி,எச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடார்உள்ளிட்டோரும் இந்தியாவின் முக்கியமான பெருங்கோடீஸ் வரர்கள் என்று கூறும் ஹூரன்,இந்தியாவில் இருந்து இடம்பெற் றுள்ள பெருங்கோடீஸ்வரர்களில் 19 பேர் பார்மா துறையைச் சேர்ந்தவர்கள், 14 பேர் ஆட்டோ மொபைல் மற்றும் உதிரிப் பாகங்கள் துறையைச் சேர்ந்தவர்கள், 11 பேர்நுகர்வோர் பொருட்கள் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறிய 31 இந்தியர்களையும் ஹூரன் பட்டியலிட்டுள்ளது. 

அவர்களில், அதிகமானோர் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஹூரன் ‘பணக்காரர்கள் 2018’ பட்டியலில், சுமார் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 694 பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

 இதில் 437 பேர் முதல் முறையாக இப்பட்டியலில் இணைந்தவர்கள்.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 2,694 பேரின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 31 சதவிகிதம் வரையில் உயர்ந்து 10.5 டிரில்லியன் டாலராக உள்ளது. 

இது உலகின் ஒட்டுமொத்த ஜிடிபி அளவில் 13.2 சதவிகிதம் ஆகும்.உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில், 2018-ஆம் ஆண்டில்சீனா புதிதாக 210 பெருங்கோடீஸ் வரர்களை உருவாக்கி மொத்தம் 819 பில்லியனர்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 
571 கோடீஸ்வரர்களுடன், அமெரிக்கா அடுத்த இடத்தில் வந்துள்ளது. 

2,694 பேர் இருக்கும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 1,508 பேருடைய சொத்து மதிப்பு கடந்த வருடம் உயர்ந்துள்ளது, 567 பேர் புதிதாக இணைந்துள்ளனர். 
363 பேர்சொத்து மதிப்பில் சரிவை சந்தித் துள்ளனர்.டாப் 3 இடங்களில் இந்த வருடம்பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 

அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பீசோஸ் சொத்து மதிப்பு 2017-இல் மட்டும் 51 டாலர் உயர்ந்து 123 பில்லியன் டாலர் என்ற அளவை அடைந்து உலகின் முதன்மையான பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

பல வருடமாக முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ், பீசோஸ்-இன் வளர்ச்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
அதேபோல் வார்ன் பட்பெட்டின் சொத்து மதிப்பும் 31 சதவீதம் வரையில் வளர்ந்து 100 பில்லியன் டாலரை தொட்டதால், பில்கேட்ஸ் 3-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், எல்விஎம்எச் நிறுவனத்தின் தலைவர் பெர்நார்ட் அமால்ட், இன்டிடெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அமான்சியா ஆர்டீகா, அமெரிக்கா மோவில் நிறுவனத்தின் கார்லொஸ் சிலிம் ஹெலு, ஆரக்கிள் நிறுவனத்தில் லாரி எலிஸன், கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ், புளூம்பெர்க் நிறுவனத்தின் மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோர் உள்ளனர். 

இதில் முதல் 10 இடங் களில் வந்துள்ளவர்களில் 7 பேர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்.
பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில், கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் 15 சதவிகித அளவிற்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

 கடந்த ஆண்டு 152 ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கை இந்தப் பட்டியலில் 184 ஆக உயர்வும் கண்டுள்ளது.டாப் 100 பேர் கொண்ட பட்டியலில் புதிதாக 19 பேர் இணைந்துள்ள னர். 
இவர்களின் பெரும்பாலானோர் சீன ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். 
இந்த 19 பேரில் ஒரேயொரு இந்தியர் இடம்பெற்றுள்ளார். 

அவர் கௌதம் அதானி.2017-ஆம் ஆண்டில் பணம் சம்பாதிப்பதற்கான முதன்மைத் துறையாக தொழில்நுட்ப துறை இருந்துள்ளது. 
ரியல் எஸ்டேட், உற்பத்தி, முதலீடு ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித் துள்ளன.

2017-ஆம் ஆண்டில் உலகளவில் செய்யப்பட்ட ஆய்வில் உற்பத்தி மற்றும் உணவு - குளிர்பான துறையின் வளர்ச்சியும் மிகவும் வேகமானதாக இருந்துள்ளது என்று ஹூரன் ஆய்வு தெரிவிக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
8 ஆயிரம் இந்தியர்களின் வேலையைப் பறிப்பு.

இந்தியாவில் புதிய தலைமுறை இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக, தகவல் தொழில்நுட்பத்துறை இருந்து வருகிறது. 

படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பு,ஓரளவுக்கு நல்ல ஊதியம் என்பதே இதற்கு காரணம்.ஆனால், அண்மைக் காலமாகவே தானியங்கிமயம் மற்றும் விசா போன்ற பிரச்சனைகளால் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, தங்களதுஊழியர்களின் எண்ணிக்கையைப் படிப்படி யாகக் குறைந்து கொண்டே வருகின்றன.இந்நிலையில், காக்னிசண்ட் நிறுவன ானது, தனது கிளைகளில் பணியாற்றிய இந்தியர்களில் 8 ஆயிரம் பேரை வேலையிழப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சேவைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான காக்னிசண்ட் இந்தியாவிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. 


இந்நிறுவனம் அண்மையில் அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்தில் தனது ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
அதில், ‘2017-ஆம் ஆண்டின் முடிவில் எங்களது நிறுவனக் கிளைகளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்; இதில், இந்தியாவில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேரும், வட அமெரிக்காவில் 50 ஆயிரத்து 400 பேரும், ஐரோப்பாவில் 13 ஆயிரத்து 800 பேரும், இதர நாடுகளில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 800 பேரும் பணியாற்றுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் (2,60,200) இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் பணியாற்றினர். 
இந்நிலையில் 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 
அதேநேரம், வட அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டில் 47 ஆயிரத்து 500 பேர் பணியாற்றிய நிலையில், 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல, ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது.காக்னிசண்ட் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 8,000 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளது. 
இந்திய வரலாற்றில் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள அதிகபட்ச பணிநீக்கம் இதுவாகும். 
அதேநேரம் வட அமெரிக்காவில் அதிக வேலை வாய்ப்புகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

=====================================================================================
ன்று,
மார்ச்-03.
  • சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது(1938)
  • இந்தியா-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)
  • போஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது(1992)
======================================================================================
                                                        எத்தனைப் பேர்கள் உயிரை எடுத்ததோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனம் திருந்திய RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

சுதீஷ் மின்னி.
    கேரளத்தில கண்ணூர் மாவட்டத்திலுள்ள தலசேரி தாலுகா கண்டங்குந்நு கிராமத்தில் ஆயித்தரை என்ற இடத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
  ஆரம்பக் கல்வியை ஆயித்தரை மம்பறம் பள்ளியிலும் தொடர்ந்து பல்வேறு கல்வி நிலையங்கள் மூலம் மேல்படிப்புகளையும், கணிதத்தில் முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார். திருமணம் ஆகவில்லை. தந்தை: பொனோன் ஸ்ரீதரன், தாய்: மின்னி சுலோச்சனா மூத்த சகோதரர்: மின்னி சந்தோஷ்.
   RSS-ன், ஒருங்கிணைந்த ஆரம்பப் பயிற்சி, முதல்வருட சங்க பயிற்சிப் பிரிவு, இரண்டாம் கட்ட சங்க பயிற்சிப் பிரிவு முதலிய பயிற்சிகளைப் பெற்ற பின் சங்கத்தின் தத்துவப் பிரிவான “சாணக்கியா” வில் சுமார் 7 வருடங்கள் ஊழியராக செயலாற்றினார். நாக்பூரிலிருந்து விஷேச பயிற்சி பெற்றிருக்கிறார். ஆர்.எஸ்எஸ் பரிவாரத்தின் இயக்கங்களில் ஒன்றான “சுதேசி சயின்ஸ் மூவ்மென்ட்” ன் தலைமையில் நடக்கும் வேதகணித பயிற்சியை இரண்டரை வருடத்தில் முடித்தார். அந்த இயக்கத்தின் மாநில வேதகணித பயிற்சியாளராக செயல் பட்டார். ஒரு வருடம், “பால கோகுலம்” அமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவராக செயல்பட்டார்.
  “ஈஸி மேத்ஸ்”(Easy Maths) என்ற தலைப்பில் இந்திய கணித சாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இப்போது சங் பரிவார் அமைப்புகளிலிருந்து வெளியேறி சி.பி.ஐ.எம்-ல் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

    “நிமிடத்திற்கு நாற்பது தடவை பாரதத்திலுள்ள எல்லா கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எதிரிகளென்று கூறித் திரிபவர்கள் எவ்வாறு மதசார்பற்றவர்களாக ஆவார்கள்?
    வட இந்தியாவில் ஜாதிய வாதம், மேல்ஜாதி ஆதிக்கம் ஆகியவைகளின்  மூலம் ஒவ்வொரு தலித்தையும் அவர்களது மனைவி மற்றும் மகள்களையும் காமக் கொடூரத்திற்கு இரையாக்கும் போது, நாக்பூரிலுள்ள அரண்மனையிலிருந்து வெடிச்சிரிப்பை வெளிப்படுத்தும் இவர்கள் இந்துமதச் சீர்திருத்தத்தை எப்படி உருவாக்க முடியும்?
    ஒரு வாழ்க்கை அனுபவத்தை எழுதி சமூகத்தின் முன்னால் சமர்ப்பிக்குமளவு, நான் மகத்தான நபரல்ல. யாரும் என்னை உதாரணமாகக் கொள்ளவும் முடியாது. ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் (RSS) என்னும் இயக்கத்தின் நரகச் சுழியில் குழந்தைப் பருவத்தையும், இளமையையும் பாழடித்த ஒரு சாதாரண இளைஞன் தான் நான்.

    ஆகாயத்தில் அதிசயம் நிகழ்த்தி, காவியின் ஒளிப் பிரவாகத்தைத் உருவாக்கும் அஸ்தமன சூரியனின் நிறத்தைக் கண்டு, அக்காட்சியே ஒவ்வொரு இந்துவின் பிறவிப்பயன் என்றும், அந்நிறத்தை இதயத்தில் உள்ளிருத்தி, “ஒவ்வொரு சுயம் சேவகனும் தன்னைத்தானே மாறி அந்நிறத்தை தனது வாழ்கையின் பகுதியாக்க வேண்டும்” என்ற வெற்று வார்த்தைகளைக் கேட்டு, செயல்படப் புறப்பட்டு, நரகத்தீயில் வாழ்க்கையின் நீண்ட 25 வருடங்களை யாகம் செய்த சாதாரண இளைஞன் நான்.
    எனது கனவுகளையெல்லாம் அந்த “பகவ பாதகை” (காவிக்கொடி என்பதற்கு சங் பரிவார் மொழியில் இப்படிக் கூறப்படுகிறது)  முன்பு சமர்ப்பித்த நான், அந்த அரக்கத் தனத்திலிருந்து மீண்டு மனிதாபிமானத்தை நோக்கித் திரும்பும் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறேன்.
    ஒரு மறுசிந்தனையின் பகுதியாக இருக்கும் எனது இந்த அனுபவங்களின் ஒவ்வொரு பக்கத்தையும் நீங்கள் வாசிக்க வேண்டும். அத்தகைய வலிமிகுந்த அனுபவங்களை அடையும் பொருட்டு, யாருடைய இளமையும் வழிதவறி,  அந்த அனுபவத்தை நோக்கிச் சென்றடையக் கூடாது.
    ஆயிரக்கணக்கான சதியினாலான குழிகள் நிறைந்த அந்த டிராகுலாவின்  பொறியில் சிக்கிவிடக் கூடாது. அவ்வாறு நடக்காமல் தடுப்பதற்கான காவலாளிகளாக நீங்கள் இருக்கவேண்டும்.
    எந்த ஒரு தாயின் சோகம் நிறைந்த பரிதாபக் குரலும் இம்மண்ணில் உரக்க கேட்கக் கூடாது…. சகோதரிகளின் கதறல்கள் கேட்கக்கூடாது. பிஞ்சுக் குழந்தைகள் அனாதைகள் ஆகக் கூடாது. இதுவே இனி எனது லட்சியம்.
    சரியான பாதையைக் கண்டறிந்து போராட உறுதியேற்ற வீரன் நான். 
இந்த பாதையிலிருந்து திசை மாறிவிட மாட்டேன்.  
உலகைத் தலைகீழாக புரட்டிபோடும் வல்லமையுள்ள தத்துவஞானமும் அதன் நல்லாசான்களும் காண்பித்த பாதையினூடே செங்கொடி ஏந்தி ஒரு தோழராக சி.பி.ஐ.எம்-முடன் செயல்படுவேன் என்ற உறுதிமொழியோடு…”
-சுதீஷ் மின்னி
(முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியர்)


தமிழில்: சதன் தக்கலை
================================================================================================