ஊழலை சொல்லு,,,ஊத்தி மூடு.!
பொதுத்துறை வங்கிகளில் ஊழல் கள் நடைபெறுகிறது என்றால் அவைஎதிர்காலத்தில் அவ்வாறு நிகழாமல் தவிர்ப்பதற்கான முறையில், அவற்றைமுறையாக ஒழுங்குபடுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமே தவிர, அதையே காரணமாகக் கூறி அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்த்திட அரசாங்கம்திட்டமிடக்கூடாது.
ஏனெனில் தனியார்வங்கிகளின் ஊழல்கள் என்பவைஇவற்றைவிட மிகவும் மோசமானவைகளாக இருந்திருக்கின்றன என்பதே வரலாறாகும் என்று நாட்டிலுள்ள பொருளாதார அறிஞர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாட்டிலுள்ள பொருளாதார மேதைகளான பிரபாத் பட்நாயக்,சி.பி.சந்திரசேகர், ஜெயதி கோஷ், வெங்கடேஷ் ஆத்ரேயா, அமியா குமார் பக்சி,அமித் பாதுரி, ஜேஎன்யு பேராசிரியர்கள் விகாஷ் ராவல், பிரவீண் ஜா, ரோகித், அடுல் சூட், ரவி ஸ்ரீவஸ்தவா, பிஸ்வஜித் தார், உத்சா பட்நாயக் மற்றும் முன்னாள் நிதிச் செயலாளரும் திட்டக் கமிஷன் உறுப்பினருமான எஸ்.பி. சுக்லா, திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் அபிஜித் சென், ஸ்க்ரோல் இணைய இதழ் ஆசிரியர் சி.ராம் மனோகர் ரெட்டி,ஸ்டாடிஸ்டிகர் கமிஷன் முன்னாள் தலைவர் பிரோனாப் சென், கல்யாணி பல்கலைக் கழக பியாஸ்தேவ் தாஸ் குப்தா, அகமதாபாத் வளர்ச்சி மாற்றுக்கான மையத்தின் இயக்குநர் மற்றும் பேராசிரியரான இந்திரா ஹிர்வே, கொல்கத்தா ஐஐஎம் பேராசிரியர் சுசில் கன்னா உட்பட62 பேர் கையொப்பம் இட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:“பொதுத்துறை வங்கிகளின் ஊழல்கள் நடைபெறுவதற்கு மிக முக்கியமானகாரணம் அவற்றை முறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காததேயாகும்.
இது அனைத்து வங்கிகளையுமே பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
எந்த வழியிலாவது கொள்ளை லாபம் ஈட்டவேண்டுமென்கிற கார்ப்பரேட்டுகளின் வெறித்தனமே இவ்வாறு பொதுத்துறை வங்கிகளில் மோசடி செய்து வங்கிகளின் பணத்தைமிகப்பெரிய அளவிற்குச் சூறையாடுவதற்கு இட்டுச் சென்றிருக்கின்றது.
வங்கிகள் மக்களுக்குச் சேவைசெய்ய வேண்டும் என்ற இலட்சியத்தோடுதான் தனியாரிடம் இருந்த வங்கிகள்தேசியமயமாக்கப்பட்டன.
ஆனால் அந்த குறிக்கோள் இன்னமும் முழுமையான அளவில் வெற்றிபெறவில்லை. அதற்காக வெகுதூரம் செல்ல வேண்டியநிலையில் இருக்கிறோம்.வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபின், கிராமப்புறங்களில் ஏராளமான கிளைகள் தோற்றுவிக்கப்பட்டன.
அவற்றின்மூலம் விவசாயிகளுக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் பிரிவினருக்கும் கடன்கள் அளிக்கப்பட்டன.
ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்மாறான விதத்தில் தனியார் வங்கிகள் பெரும் புள்ளிகளுக்கு மட்டுமே கடன்கள் அளித்து வருகின்றன.வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொண்டு திருப்பிச் செலுத்தாது மோசடிசெய்திடும் கார்ப்பரேட்டுகளின் பெயர் களை வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் ஏற்க மறுத்துவருகிறார்.
பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளில் ஊழல்கள் செய்வது மிகவும் எளிதாகும். இதற்கு மிகவும் சரியான உதாரணம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இயங்கி வந்த தனியார் வங்கிகளாகும். இவற்றின் மோசமான நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2008-09 ஆம் ஆண்டின் மிகப்பெரிய நிதிநெருக்கடிக்கு இட்டுச் சென்றன.
இதன்காரணமாக அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் கருவூலத்திலிருந்து நிதியை அளித்து அவற்றைத் திவால் நிலைமைகளிலிருந்து காப்பாற்றின.
தற்போது நமது நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் ஏற்பட்டிருக்கிற ஊழல்களுக்கும் மற்றும் வங்கிகள் எதிர் கொண்டுவரும் பல்வேறு வகைகளிலான இழப்புகளுக்கும் கார்ப்பரேட்டுகள் இவ்வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்தொகைகளைத் திருப்பிச் செலுத்தாமல்அவற்றை செயல்படா சொத்துக்களாக மாற்றி வருவதே காரணங்களாகும்.
இவை நம் அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கின்றன. ஆனால் இதற்காக, இதையே காரணமாகக் காட்டி,இவ்வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திடக் கூடாது.
இன்றைய தினம் நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியாக இருந்து வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்பட்டுள்ள ஊழலுக்கு பிரதான காரணம், வங்கித்துறையை போதுமான அளவிற்கு முறைப்படுத்தாததேயாகும்.
இதுஅனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.இதில் வேடிக்கை, வினோதம் என்னவென்றால் இவ்வாறு பொதுத்துறை வங்கிகளில் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவந்த மோசடிப் பேர்வழிகளே, இப்போது இவ்வங்கிகளை முழுமையாகத் தங்களிடம் தாரைவார்த்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருப்பதுதான்.
பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் துறை வங்கிகளின் செயல்பாடுகள், ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் மிக எளிதாக வழிவகுக்கக்கூடிய விதங்களில் அமைந்திருக்கின்றன. இதற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இயங்கிய தனியார் வங்கிகள் மிகச்சரியான உதாரணங்களாகும்.
இவைகொள்ளை லாப வெறியை மட்டுமேகுறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால் வங்கித்துறையில் ஏற்படும் இடர்காப்பீடுகள் குறித்து இவை பெரியதாகஅலட்டிக்கொள்வதில்லை. இதனால்தான் அவை 2008-09ஆம் ஆண்டில்மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்தித்தன.
இவற்றை அந்தந்த நாடுகளில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படியாவது வங்கிகள் செயல்குலைந்து மூழ்குவதிலிருந்து அவற்றைத் தடுத்திட வேண்டும் என்பதற்காக, தங்கள் கருவூலத்திலிருந்து பெரும் நிதி உதவியைஅளித்து அவற்றைக் காப்பாற்றினார்கள்.
இந்தியாவில் வங்கிகள் 1969 இல்தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பு, சராசரியாக 35 தனியார் வங்கிகள் ஒவ்வோராண்டும் தோல்வியைச் சந்தித்தன.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.1990களில் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் கடைப்பிடிக்கப் பட்ட பின்னர், தனியார்வசம் இயங்கி வந்த குளோபல் டிரஸ்ட் வங்கி, டைம்ஸ் வங்கி, செஞ்சூரியன் வங்கி ஆகியவை இழப்புகளை சந்தித்ததன் காரணமாக, பொதுத்துறை வங்கிகளுடன் அவை இணைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டன.
தற்போதும்கூட பல தனியார் வங்கிகள்செயல்படா சொத்துக்கள் காரணமாகஎன்ன செய்வது என்று தெரியாது விழிபிதுங்கி திண்டாடிக் கொண்டிருக்கின்றன.
தற்போதுள்ள வங்கி விதிமுறைகளின்கீழ் வங்கிகளில் ஏற்படும் நெருக்கடிகளை தனியார் வங்கிகளைவிட, பொதுத்துறை வங்கிகள் எளிதாக சரி செய்துவிடும்.
வங்கிகளின் நெருக்கடியை சமாளித்திட மத்திய நிதி அமைச்சர் உடனடியாகச் செய்யவேண்டிய காரியம், நாட்டிலுள்ள வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாத மோசடிபேர்வழிகளின் பெயர்களை வெளிச்சத் திற்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
வங்கிகளின் விதிமுறைகளை மேலும் கறார்ப்படுத்தி, அவை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
மாறாக, பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், அது நிலைமைகளை மேலும் மோசமாக்கிடுவதற்கே இட்டுச் செல்லும்.
இவ்வாறு பொருளாதார அறிஞர்கள் மோடி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
=====================================================================================
இன்று,மார்ச்-05.
- ஈரான் தேசிய மரம் நடுதினம்
- இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்தது(1964)
- ஐரோப்பாவின் முதல் விமானமான குலோஸ்டர் மெட்டர் பறக்க விடப்பட்டது(1943)
- பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்தது(1824)
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில்தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது வருத்தம் அளித்தபோதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய கருத்து ஆறுதல் அளிப்பதாகஅமைந்தது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனவே விதண்டாவாதம் செய்த மோடி அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து வருகிறது.
கடுமையான வற்புறுத்தலுக்குப் பிறகு காவிரி நீர் பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அதிமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்தியது.
இந்தக் கோரிக்கைகளை பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்காமல் பிரதமர் மோடி இழுத்தடித்து வருகிறார்.
ஆனாலும் மத்திய பாஜக அரசின் சேவகர் களாகவே மாறிவிட்ட மாநில அதிமுக அரசின் அமைச்சர்கள் இதை வெளிப்படையாக கூற மறுத்து சமாளிக்க முயல்கின்றனர். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினை அழைத்து மாற்றுவழிக்காக சமாதானப்படுத்துகிறார் முதல்வர் பழனிசாமி .
தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்காவிட்டால் சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக முடிவுஎடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார்.
ஆனால் அவரே பிரதமர் அவ்வாறு சந்திக்க மறுக்கவில்லை என்றும் முட்டுக்கொடுக்கிறார். தமிழகத்திற்கு அநீதி இழைப்பதையே பிரதமர் மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார். நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் மோடிக்கு தமிழக விவாசாயிகள்,மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க நேரம் கிடைப்பதில்லை.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கூட மதிக்க அவர் தயாராக இல்லை. தமிழக மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கிற வேலையை மோடி அரசு செய்து வருகிறது.
இந்தப் பின்னணியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்சனை யில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும், சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையோ, இறுதித் தீர்ப்பையோ கர்நாடக மாநிலம் ஒருபோதும் பின்பற்றியதில்லை.
சேமிக்க முடியாத உபரிநீர் மட்டுமே தமிழகத்திற்கு உரியது என்ற மனநிலைதான் கர்நாடகத்திடம் உள்ளது.
கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் மோடி தமிழகத்தைவிட இப்போதைக்கு கர்நாடகம்தான் முக்கியம் என்று கருதலாம்.
ஆனால் இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதை உணர்ந்து அனைவரும் இணைந்து குரல் கொடுப்பது அவசியம் ஆகும்.
பிரதமர் மோடியை சந்திக்காமல் அமைசசர் நிதின்கட்காரியை சந்திக்க மோடி அறிவுறுத்தியதால் அவரை சந்திக்கலாம் என்கிறார் முதல்வர்.
கட்காரி யார்?"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது.அது தேவையில்லாதது"
என்று சென்னை விழாவுக்கு வந்த போது செய்தியாளர்களிடம் கூறியவர்.
அவரையே சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டினால் அது நடக்குமா?பகுத்தறிவு உள்ள மனிதர்கள் அதைச செய்வார்களா என்ன?