செங்கடிதமும்,காவிக் கடிதமும்.
பெறுநர்
பஞ்சாப் ஆளுநர்.
ஐயா,கீழ்க்கண்ட விவரங்களைத் தங்களுடைய மேலானகவனத்திற்கு மிகுந்த மரியாதையுடன் கொண்டுவருகிறோம்.
நாங்கள், பிரிட்டிஷ் இந்தியாவின் உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் உள்ள மேதகு வைஸ்ராய் அவர்களால்பிரகடனம் செய்யப்பட்ட சிறப்பு லாகூர் சதி வழக்கு அவசரச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, பிரிட்டிஷ் நீதிமன்றமான, எல்.சி.சி. தீர்ப்பாயத்தின் கீழ் 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப் பட்டோம். எங்கள்மீது புனையப்பட்ட குற்றச்சாட்டு, நாங்கள்இங்கிலாந்து அரசர், மேதகு ஜார்ஜ் அரசருக்கு எதிராகயுத்தம் புரிந்தோம் என்பதாகும்.
நீதிமன்றம், இரண்டு அம்சங்களில் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வந்திருக்கிறது.முதலாவதாக, பிரிட்டிஷ் தேசத்திற்கும், இந்தியத்தேசத்திற்கும் இடையே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறதுஎன்பதாகும். இரண்டாவதாக, நாங்கள் அந்த யுத்தத்தில்பங்கெடுத்திருக்கிறோம் என்றும் எனவே நாங்கள் யுத்தக்கைதிகளாவோம் என்பதுமாகும்.இரண்டாவது கூற்று சற்றே எங்களைப் புகழ்வதுபோலஅமைந்திருக்கிறது.
எனினும் அவ்வாறு எங்களை நீங்கள்பாராட்டியிருப்பதால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியிலிருந்து எங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறோம்.எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஆழமாகத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த சொற்றொடர் குறிப்பிட்டுள்ளபடி உண்மையில் யுத்தம் எதுவும் நடந்திடவில்லை.எனினும், உங்கள் கூற்றின் செல்லத்தக்க தன்மையைஏற்றுக்கொள்ள எங்களை அருள்கூர்ந்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆனால், இதனைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாங்கள் அதனை மேலும் விளக்கிட வேண்டும்.இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களும் அவர்களின் இயற்கை வளங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில ஒட்டுண்ணிகளால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும்வரை அதனை ஒழித்துக்கட்டுவதற்கான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்ந்துஎதிர்காலத்திலும் நடக்கும் என்று நாங்கள் பிரகடனம் செய்கிறோம்.
அவ்வாறு சுரண்டுபவர்கள் சுத்தமான பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம், அல்லது பிரிட்டிஷ் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாகவும் இருக்கலாம்அல்லது சுத்தமாக இந்திய முதலாளிகளாகவும் இருக்கலாம்.
தங்களுடைய கபடத்தனமான சுரண்டலை இருதரப்பினரும் கலந்தோ அல்லது பூரணமாக இந்தியஅதிகார வர்க்க எந்திரத்தைக் கொண்டோ முன்னெடுத்துச் செல்லலாம். இவை அனைத்திலும் எந்தவித வித்தியாசமும் இல்லை.
உங்கள் அரசாங்கம், சில்லரைச் சலுகைகள் மற்றும்சமரசங்கள் மூலமாக, இந்திய சமூகத்தின் உயர் அடுக்குத் தலைவர்களை திருப்திப்படுத்தி, சமரசம் செய்து, அவர்களை வென்றிருக்கக் கூடும். அதன் மூலமாக போராடும் சக்திகளிடையே ஒரு தற்காலிக அறநெறிப் பிறழ்வை ஏற்படுத்தி இருக்கக் கூடும். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.போராட்டக்களத்தினூடே, இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணிப் படையினரால், புரட்சிக் கட்சித்தனித்து விடப்பட்டபோதிலும், அதைப்பற்றி எங்களுக்குக்கவலை இல்லை.
எங்கள் மீது தனிப்பட்டமுறையில் இரக்கத்தைக் காட்டிடும் தலைவர்களுக்காகத் தனிப்பட்டமுறையில் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். எனினும், விடுதலைஇயக்கத்தில் முன்னின்று போராட்டத்தில் ஈடுபட்ட வீடற்றவர்களுக்காகவோ, எதுவுமற்ற பெண் தொழிலாளர்களுக் காகவோ, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டசமயத்தில் எதுவுமே கூறாது மவுனம் சாதித்தது குறித்தும்எங்களுக்குக் கவலை இல்லை.
உங்கள் அகிம்சைக் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்ற விதத்தில் இந்த நாட்டின் விடுதலைக்காக, தங்கள் கணவன்மார்களை இழந்து, சகோதரர்களை இழந்து, தங்கள் உயிருக்குயிராய் நேசித்த எண்ணற்றவர்களை இழந்து வீர மரணம்எய்திய பெண்களைப்பற்றி உங்கள் தலைவர்கள் ஒருவார்த்தை கூட கூறாதது மட்டுமல்ல, உங்கள் அரசாங்கம்அந்தத் தியாகிகளையெல்லாம் சட்டத்திற்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்தியதைப்பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை.உங்கள் ஏஜண்டுகள் எவ்வித அடிப்படையுமின்றி அவர்கள் குறித்தும், அவர்களின் கட்சிக்குக் களங்கத்தைஏற்படுத்த வேண்டும் என்ற விதத்திலும், அவதூறை அள்ளி வீசியபோதிலும் எங்களுக்குக் கவலை இல்லை.
யுத்தம் தொடரும்அது பல சமயங்களில் பல வடிவங்களை எடுத்திடும். சில சமயங்களில் வெளிப்படையாக இருக்கும்.
சில சமயங்களில் மறைந்திருக்கும். இப்போது முழுக்க முழுக்க கிளர்ச்சி அடிப்படையானதாக, இப்போது வாழ்வா சாவா என்கிற வீரம் செறிந்த போராட்டமாக நடக்கிறது.எங்கள் போராட்டம் அமைதி வழியிலானதா அல்லதுஇரத்தம் சிந்தக்கூடியதா, எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்களைச் சார்ந்தே இருக்கிறது.
உங்களுக்கு எது விருப்பமோ அதைத் தெரிவு செய்திடுங்கள். ஆனால், சிறிய அளவிலான மற்றும் அர்த்தமற்ற தத்துவங்களை எல்லாம் சுமந்துகொள்ளாமல் இந்த யுத்தம் எவ்வித சமரசமுமின்றி தொடரும்.
சோசலிசக் குடியரசை நிறுவும்வரை, இப்போதுள்ளசமூக அமைப்பை முற்றிலுமாக மாற்றி அமைக்கும்வரை,மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும்வரை மனித குலம் உண்மையான மற்றும் நிரந்தரமான அமைதியைப் பெறும் காலம் வரை இந்த யுத்தம்தொடரும்.விரைவில் நிரந்தர யுத்தம் மேற்கொள்ளப்பட்டு, நிர்ந்தரத் தீர்வு எட்டப்படும்.முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
இந்த யுத்தம் எங்களால் தொடங்கப்பட்டது இல்லை அல்லது எங்களுடனும் முடிந்துவிடாது. வரலாற்று நிகழ்வுகளும் தற்போதுள்ள சுற்றுச்சூழலும் மாற்றத்தைக் கொண்டுவருவது என்பதுதவிர்க்கமுடியாததாகும்.எங்கள் பணிவான தியாகங்கள் என்பவை தியாகிகள்ஜதின் தாஸ் மற்றும் தோழர் பகவதி சரண் மற்றும் வீர மரணம் எய்திய சந்திர சேகர் ஆசாத் ஆகியோரின் தியாகத்துடன் பின்னிப்பிணைந்தவைகளாகும்.எங்கள் விதியை நிர்ணயம் செய்வது தொடர்பாக, நீங்கள் எங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்என்று தீர்மானித்தால், (நிச்சயமாக அதை நீங்கள் செய்வீர்கள்.) அது தொடர்பாக ஒருசில வார்த்தைகள் கூற எங்களை அனுமதியுங்கள். உங்கள் கைகளில் அதற்கான அதிகாரம் இருக்கிறது.
அதிகாரம் படைத்தவனே உலகில் நீதிமானாவான். “வல்லவன் வகுத்ததே சரி” என்கிற பழமொழி எங்களுக்குத் தெரியும். அதைத்தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்கள் வழக்குநடத்தப்பட்ட லட்சணமே அதைத் தெளிவாகக் காட்டும்.உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக யுத்தம் நடத்தினோம் எனவே யுத்தக் கைதிகளாக இருக்கிறோம் என்பதைச்சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே அவ்வாறே எங்கள்மரணமும் அமைந்திட வேண்டும் என்று விரும்புகிறோம். அதாவது, நாங்கள் தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.உங்கள் நீதிமன்றம் சொல்லியிருப்பதை நீங்கள்உண்மையில் புரிந்துகொண்டிருக்கிறீர்களா என்பதுநீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமைந்திருக்கிறது.
எங்கள் மரணத்தை நிறைவேற்றிட ராணுவத்துறையிலிருந்து ஒரு பிரிவை அனுப்பி வைத்திட ஆணை பிறப்பிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்; விரும்புகிறோம்.
தங்கள்,
- பகத்சிங்.
மேலே உள்ளது சிறையில் இருக்கையில் தோழர் பகத் சிங் வெள்ளை அரசுக்கு எழுதிய கடிதம்.
இதே போல் இன்னொருவரும் வெள்ளை அரசு தன்னை சிறையில் அடைத்த போது கடிதம் எழுதியுள்ளார்.
அவர் வி.டி.சாவர்க்கர்.இன்றைய பாஜக முன்னோடி.அவர் எழுதிய கடிதம் தான் தனக்கே தெரியாமல் விடுதலை கேட்கும் கூட்டத்தில் சேர்ந்து விட்டதாகவும்.மகாராணியார் தன்னை அருள்கூர்ந்து மன்னித்து வெளியே விடுமாறும் எழுதிய வீரமிக்க கடிதம் காரணம் அவர் இப்போது வீர சாவர்க்கர் என பாஜகவினரால் கொண்டாடப்படுகிறார்.
இது போன்ற வீரக்கடிதங்கள் வெள்ளை அரசுக்கு 16 முறை எழுதி புரட்சி செய்து மன்னிப்பு வாங்கி வெளியே வந்தார் சாவர்க்கர்.
“:இனிமேல் சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபடமாட்டேன், மனப்பூர்வமான மன்னிப்புக் கடிதம் எழுதி எனது
குடும்பத்தார் ஒரு சாட்சிக்கடிதத்துடன் வழங்குகிறேன் என்று
எழுதித்தரவேண்டும், அப்படித் தந்தவர்களுக்கு உடனடியாக சிறையிலிருந்து
விடுதலை செய்ய பிரிட்டீஷ் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது" என்று அந்தமான் சிறையில் வெள்ளைஅரசு அறிவிக்கை ஓட்டுகிறது.
அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த 460 சிறைக்கைதிகளில்வெறும் 7 பேர் மட்டுமே மகாராணியாருக்கு மன்னிக்க வேண்டி காலில் வீழ்ந்து கதறி கடிதம் எழுதிக்கொடுத்து அந்தமான்
சிறையிலிருந்து விடுதலையானார்கள்.
ஈடுபடமாட்டேன், மனப்பூர்வமான மன்னிப்புக் கடிதம் எழுதி எனது
குடும்பத்தார் ஒரு சாட்சிக்கடிதத்துடன் வழங்குகிறேன் என்று
எழுதித்தரவேண்டும், அப்படித் தந்தவர்களுக்கு உடனடியாக சிறையிலிருந்து
விடுதலை செய்ய பிரிட்டீஷ் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது" என்று அந்தமான் சிறையில் வெள்ளைஅரசு அறிவிக்கை ஓட்டுகிறது.
அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த 460 சிறைக்கைதிகளில்வெறும் 7 பேர் மட்டுமே மகாராணியாருக்கு மன்னிக்க வேண்டி காலில் வீழ்ந்து கதறி கடிதம் எழுதிக்கொடுத்து அந்தமான்
சிறையிலிருந்து விடுதலையானார்கள்.
அதில் சாவர்கரும் ஒருவர். “பாரத் மாதாகி ஜெய்” என்பதற்கு என்ன வலிமை உண்டு என்பது புரிந்திருக்குமே.
அன்று அவர் பிரிட்டன் காலில் விழுந்தார்.அவர் வாரிசுகள் அமெரிக்காவின் காலடியில் கிடக்கிறார்கள்.
எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 1931 மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங் மற்றும் அவரது இரு தோழர்கள் தியாகி ராஜகுரு, தியாகி சுகதேவ் லாகூரில் பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார்கள்.
பகத்சிங் தன்னைத் தியாகப்படுத்திக் கொண்ட சமயத்தில் அவருக்கு வயது வெறும் 23தான். இன்னும் வாழ வேண்டிய காலம் மிக அதிகம் இருந்த சமயத்திலும்கூட, பகத்சிங், தன்னுடைய குடும்பத்தாரும், தன்னை மிகவும் நேசித்தவர்களும் விரும்பியபோதிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கருணை எதிர்பார்த்து கடிதம் எதுவும் எழுத மறுத்துவிட்டார்.
பகத்சிங் காலனிய ஆட்சியாளர்களுக்குக் கடைசியாக எழுதிய மனுவில் (இதனை அவருடைய உயில் என்றும் கூறலாம்), “உண்மையிலேயே வெள்ளையர் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் - அதாவது காலனிய ஆட்சிக்கு எதிராக யுத்தம் புரிந்தார் என்று என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டின்கீழ் உண்மையாக இருப்பார்களேயானால், என்னைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, சுட்டுக் கொல்லுங்கள்” என்று எழுதியிருந்தார்.
மேலும் அந்த ஆவணமானது, இந்தியா குறித்து அவர் கொண்டிருந்த ஒரு தெளிவான பார்வையை முன்வைத்தது. அதில் அவர் நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் மீது பிரிட்டிஷார் அல்லது இந்திய “ஒட்டுண்ணிகள்” மூலம் ஏவப்படும் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய செயற்குழுவில் ‘தேசியவாதம்’ என்கிற சொல்லை உயர்த்திப்பிடித்திருக்கிற இந்த சமயத்தில், பகத்சிங் தேசியவாதம் குறித்து தேசப்பற்றுடனும் கொள்கையுடனும் கூறியுள்ள அணுகுமுறையை, பாஜகவின் “இந்துத்துவா” கொள்கையின் மூளையாக விளங்கிய வி.டி. சாவர்க்கரின் அணுகுமுறையுடன் ஒப்பிடுவது பொருத்தமானதாக இருந்திடும்.
1911இல் அந்தமான் செல்லுலர் சிறையில் தன்னுடைய புரட்சிகர நடவடிக்கைகளுக்காக அடைக்கப்பட்டிருந்த வி.டி.சாவர்க்கர், தன்னுடைய 50 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்கிய ஒருசில மாதங்களுக்குள்ளேயே தன்னை விடுவித்திட வேண்டும் என்று கோரி பிரிட்டிஷாருக்கு மனு எழுதிய நபராவார்.
பின்னர் மீண்டும் 1913இலும் மற்றும் பல சமயங்களிலும் அந்தமானிலிருந்து இந்தியாவிற்குள் உள்ள சிறை ஒன்றுக்கு 1921இல் இறுதியாக மாற்றப்படும் வரைக்கும், அதன்பின் 1924இல் கடைசியாக விடுவிக்கப்படும் வரைக்கும் பல தடவை அவர் மனுக்கள் சமர்ப்பித்திருந்தார். அவற்றில் அவர், “என்னைப் போகவிடுங்கள்; சுதந்திரத்திற்கான போராட்டத்தை நான் கைவிட்டு விடுகிறேன். காலனிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சாவர்க்கருக்குத் தற்போது வக்காலத்து வாங்குபவர்கள், அவர் கூறிய உறுதிமொழிகள் அனைத்தும் ஓர் உத்தி என்று கூறிப் பிதற்றுகிறார்கள்.
அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு, அவர் வெள்ளையருக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு இணங்க, சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகியே இருந்தார்.
உண்மையில், அவர் முஸ்லீம் லீக்கின் இரு தேசக் கொள்கையின் மற்றொரு வடிவமாகத் திகழ்ந்த தன்னுடைய “இந்துத்துவா” பிரிவினைக் கொள்கை மூலம் பிரிட்டிஷாருக்கு உதவிக் கொண்டிருந்தார்.
1913இல் வி.டி.சாவர்க்கர் அனுப்பிய கடிதத்தின் சாராம்சம்... ஒரு அடிமையின் சாசனம்.
ஆனால், பகத்சிங் அனுப்பிய கடிதம், முதலாளித்துவ- ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை சாசனம்.
========================================================================================
இன்று,
மார்ச்-23.மக்கள் புரட்சியாளர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கிலிடப்பட்டார்கள்.(1931)
- உலக வானிலை தினம்
- பாகிஸ்தான் குடியரசு தினம்(1956)
- தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
நம்நாட்டை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு போர்க்குனமிக்க போராட்டங்களால் குலைநடுக்கத்தை ஏற்படுத்தியவர் பகத்சிங். இருட்டில் தவித்த நம் நாட்டிற்கு இவர் ஒரு விடிவெள்ளி. ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது, 11 வயதே நிரம்பிய பகத்சிங் தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணைப் பார்த்து தன்னை உணர்வூட்டிக் கொண்டார். நாட்டு விடுதலையை லட்சியமாக வரித்துக் கொண்டார். அன்றிலிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியானார் பகத்சிங்.
========================================================================================
பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா ? இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் .
இயற்கையான வழியில் முடி உதிர்வதை போக்கும் சில வழிகள் ...,
பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி அந்த சாறை தலை முடியில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு அலச வேண்டும்.வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.
தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்த சாறை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது அறவே நிற்கும்.