புனிதப் போர்வை தரும் புனிதர்?
பிரதமர் நரேந்திர மோடி அமைதி தூதுவர் போல பேசுகிறார்.
இன்று,
மார்ச்-21.
======================================================================================
சீன ஆப்களினால் இந்தியாவுக்கு ஆப்பு?
சீனாவில் உருவாக்கப்பட்ட நாம் பயன்படுத்தும் 41அலைபேசி செயலிகளில் (மொபைல் ஆப்) உளவு பார்க்கும் வைரஸ்களுடன் இருப்பதால் சீனா விரும்பும் நாட்டின் மீது, 'சைபர்' தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிகை விடுத்துள்ளது.
இந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப்களில், சீனாவில் உருவாக்கப்பட்ட பிரபலமான வெய்போ, விசாட், ஷேர்இட், யு.சி.நியூஸ், யு.சி.பிரவுசர், பியூட்டி பிளஸ், நியூஸ் டாக், டி.யு.ரிகார்டர், சி.எம்.பிரவுசர் உள்ளிட்ட 41 செயலிகள் (மொபைல்ஆப்) உள்ளன.
இந்த மொபைல் ஆப்கள், ஆப்பிள் மொபைல் போனின், ஐ.ஓ.எஸ்., இயங்குதளத்திலும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை.
இவற்றில் உளவு பார்க்கும், 'மால்வேர்'கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த மால்வேர்கள், சம்பந்தப்பட்ட செயலியை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை, சீனாவில் உள்ள, 'சர்வர்' எனப்படும் பிரதான கம்ப்யூட்டருக்கு அனுப்பும்.
அதனால் அதை பயன்படுத்துவோரின் அந்தரங்கம்,பண வரவு செலவு போன்றவை கண்காணிக்கப்படும் அபாயம் உள்ளது.மால்வேர் வைரஸினால் அலைபேசி எந்த நேரமும் முடக்கப்படும் அபாயமும் உள்ளது.
இந்த செயலிகளைப் பயன்படுத்தும் அரசு அதிகாரிகள் அலைபேசி மூலம் பிற நாடுகள் மீது, 'சைபர்' தாக்குதல் எனப்படும், மென்பொருள் வழி தாக்குதலை எளிதாக சீனா தொடுக்க முடியும் என்பதால் இந்தியா போன்ற நாடுகளுக்கு சைபர் தாக்குதல் அபாயமும் உள்ளது.
========================================================================================
தனியார் மிருகசாலையில் இருந்த "சுடான்" என்ற காண்டாமிருகம் மட்டுமே உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமாக இருந்தது.
படத்தில் காணப்படும் அதுவும் இறந்து விட்டது.ஆண் வெள்ளை காண்டாமிருகம் இப்போது உலகில் இல்லை.
உலகில் வெள்ளை காண்டாமிருகம் சகாப்தமும் முடிவுக்கு வருகிறது.
நாட்டு மக்களின் நலனில் அக்கறையுள்ளவர் போல பேசுகிறார்.
மக்கள் ஒற்றுமை நாட்டுக்கு அவசியம் என்று கூறுகிறார். ஆனால் அதற்கு நேர் எதிராகவே நடந்துகொள்கிறார்.
அதுதான் அவரது குருபீடமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் கபடச் செயல்பாடு.
அதன் சேவகரான பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மீர் தர்காவின் சந்தன கூடு விழாவை ஒட்டி புனிதப் போர்வை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவை தான் நாட்டின் அடிப்படைத்தத்துவமாகும்.
சூபி தத்துவமும் அதில் ஒன்றுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பல்வேறு கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் கொண்ட இந்தியாவில் இப்போதுள்ள நல்லிணக்கம் எப்போதும் தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் சொல்வது போல நடப்பது அவருக்கேபிடிக்காத கொள்கையல்லவா?
2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அவர் சொன்னது எதையுமே அவரது அரசு செய்யவில்லை என்பது நாடு கண்டறிந்து கொண்ட கண்கூடான உண்மை.
அதுமட்டுமின்றி பசுவை பாதுகாப்போம் என்று கூறிக்கொண்டு அவரது கட்சியின் துணைஅமைப்புகள்.
பல்வேறு பெயர்களில் செயல்படும் பரிவாரங்கள், முஸ்லிம் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை பாதகச் செயல்களில் ஈடுபடுவதை அவர் கண்டு கொள்வதுமில்லை; கண்டிப்பதும் இல்லை.
அதனால் மக்களின் அதிருப்தி அதிகரித்தது.
அதன்பிரதிபலிப்பு தான் அவரது கட்சி ஆட்சி நடக்கும்உ.பி.யில் முதல்வர், துணை முதல்வர் ராஜினாமாசெய்த நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில்அவர் நிறுத்திய வேட்பாளர்கள் தோல்வியடைந்தது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும் சமயத்தில் அதன்முன்னோட்டம் போல இந்த தோல்வி அமைந்ததுகண்டு மோடியும் அவரது சகா அமித்ஷாவும் அதிர்ச்சியடைந்தனர்.
அதிலிருந்து மீள்வதற்காகவே சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நண்பர் வேடம் தரித்து ஆஜ்மீர் தர்காவுக்கு புனிதப் போர்வை வழங்கியிருக்கிறார் மோடி.
அவரது பிரதிநிதியாக ஆஜ்மீர் சென்ற முக்தர் அப்பாஸ் நக்வி, பயங்கரவாதம் என்பது இஸ்லாமுக்கும் மனித குலத்துக்கும் பொதுவான எதிரியாகும்.
நாட்டின் அமைதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு பாடுபடுகிறது என்று கூறியிருக்கிறார்.
அதாவது பாஜக அரசு பயங்கரவாதிகளையே வேட்டையாடுகிறது என்றுமத்திய அரசின் செயல்பாடுகளுக்கு வக்காலத்துவாங்கியுள்ளார்.
இது மாறாதையா மாறாது மணமும்குணமும் மாறாது என்பதையே காட்டுகிறது.மதவெறியூட்டுவதே பிறவிக்குணமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவா கும்பல்களின் நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை குலைப்பதும் அமைதியை மயான அமைதியாக்குவதும் தானே.
அதைத்தானே தற்போது அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில்தான் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறி ‘ராமராஜிய யாத்திரை’ என்ற பெயரில் வன்முறையாத்திரையை நடத்திக் கொண்டிருக்கிறது விஸ்வஹிந்து பரிஷத்.
இந்த நிலையில் பிரதமரின் அமைதி, நல்லிணக்கச் செய்தி வெறும் நடிப்பன்றி வேறென்ன?
எந்த மதவெறியையும் எதிர்த்து நிற்கும் தமிழ்நாட்டில் பாபர்மசூதி கட்ட கோரி நடக்கும் வடமாநில இந்து மதவெறிக்கும்பல் வன்முறை ரதத்தை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.
=====================================================================================மார்ச்-21.
- உலக காடுகள் தினம்
- உலக இலக்கிய தினம்
- பஹாய் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது(1844)
- டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது(1917)