கடவுளின் இருப்பு எங்கு?

ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளைப் பற்றி சொன்னது என்ன? 
அறிவியல் ஆய்வுகள்  பார்வையில் கடவுள் என்று ஒன்று உள்ளதா ? 
என்ற கேள்விகளுக்கு பலமுறை அறிவியல் ஆய்வுகள் மூலம் அறிவியலாளர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் கடவுள் என்பது நம்பிக்கைதான்.அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என்றுதான் பதில் கூறி வருகிறார்கள்.அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளதால் அது தொடர்பான ஆய்வுகளை பெரும்பாலும் செய்வதில்லை.செய்தாலும் இல்லை என்ற முடிவை வெளியே கூறுவதில்லை.
ஆனால் உலகப்புகழ்ப் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது கருத்துகளை பகிரங்கமாக சொல்வதுடன் தானும் கடைசிவரை கடவுள் மறுப்பாளராக,இடதுசாரி கொள்கையாளராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.


 பிரிட்டனை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் 'கருந்துளை மற்றும் சார்பியல்' சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர். கடந்த சிலதினங்களுக்கு முன்  தனது 76-ஆவது வயதில் மரணமடைந்தார்

விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்ய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருந்தார் அவர். 
கடவுளின் இருப்பு, பூமியில் வாழும் மனிதர்களின் முடிவு மற்றும் வேற்று கிரக மனிதர்களின் (ஏலியன்களின்) இருப்பு போன்ற முக்கியமான விடயங்களின் மீது விஞ்ஞானத்தின் கோணத்தில் இருந்து அவர்கள் சொன்ன கருத்துகள் வித்தியாசமானவை.
இதுபோன்ற கடுமையான கருத்துகளுக்காக மத அமைப்புகளிலிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார் ஹாக்கிங்.
'தி கிராண்ட் டிசைன்' என்ற புத்தகத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளின் இருப்பை நிராகரித்தார்.
ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடிப்பதைப்பற்றி பேசும்போது, நமது சூரிய மண்டலத்தின் சமன்பாடு மற்றும் கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.
நமது சூரியனை சுற்றாமல் வேறொரு சூரியனை சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய கிரகம் 1992ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு உதாரணத்துடன் புதிய கண்டுபிடிப்பு பற்றி ஹாக்கிங் கூறியது இதுதான்: "ஒரு சூரியன், பூமி மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான தூரம், சூரியனின் நிறை என நமது சூரிய மண்டலத்தின் வானியல் கூட்டமைப்பு தற்செயலானது என்பதையே இந்த கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மனிதர்களை மகிழ்விப்பதற்காக பூமி கிரகம் மிகவும் கவனமாக இருந்ததை நம்புவதற்கு தேவையான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை."
பிரபஞ்சம் உருவாவதற்கு காரணம் ஈர்ப்புவிசை விதியே என்று அவர் திடமாக தெரிவித்தார்.

ஹாக்கிங்  "ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்பு திடீரென்று நிகழும் வானியல் நிகழ்வுகள்தான், இதற்கு கடவுளின் அவசியம் தேவையில்லை."என்று  பகிரங்கமாகவே கடவுள் இருப்பை பற்றி அது வெறும் நம்பிக்கைதான் என்று கூறியுள்ளார்.
ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இந்த கருத்துக்கு கிறித்துவ மத குருக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
பிரபஞ்சத்தின் வேறு கிரகங்களில் ஏலியன்கள் இருப்பதாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங், அதுபற்றி எச்சரிக்கையும் விடுத்தார்.
'பிரபஞ்சத்தில் வாழ்வு' தனது புகழ்பெற்ற உரையில், மனிதர்களும், ஏலியன்களும் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்பது பற்றிய தனது கருத்தை ஹாக்கிங் கூறியிருந்தார்.
இந்த மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி கூறுகிறார், "பூமியில் மனிதர்கள் உருவான காலம் நேரம் சரி என்றால், பிரபஞ்சத்தில் பூமி போன்ற வேறு பல நட்சத்திரங்கள் இருக்க வேண்டும், அவற்றில் பல பூமி உருவாவதற்கு ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கும்."

அப்போது, விண்மண்டலத்தில் உயிரியல் வாழ்வு ஏன் நமக்கு புலப்படவில்லை? வேற்று கிரகங்களில் வசிக்கும் யாரும் ஏன் இதுவரை பூமிக்கு வரவில்லை, பூமியை கைப்பற்ற முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? பறக்கும் தட்டுகளில் (Unidentified flying object, UFO) களில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை. பூமி, வேற்று கிரகவாசிகளுக்கும் முற்றிலும் திறந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன், இது அநேகமாக நமக்கு நன்மையளிக்கூடியதாக இருக்காது" என்று அவர் தெரிவித்தார்.
"பிரபஞ்சத்தில் உயிரினங்களின் இருப்பை ஆராய்வதற்காக, "சேடி" (search for extra-terrestrial intelligence (SETI)) என்ற திட்டம் முதலில் செயல்பட்டது. இதன்படி, ஏலியன்களிடம் இருந்து செய்திகளை பெறுவதற்கு வசதியாக ரேடியோ அலைகள் ஸ்கேன் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்து சென்றிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பணத் தட்டுப்பாட்டின் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது."
"ஆனால், இந்த முறையில் பெறும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும், அறிவியலில் இன்னும் சற்று முன்னேற்றம் அடையும்வரை காத்திருக்க வேண்டும், தற்போது இருக்கும் நிலையில் நாம் ஏலியன்களை சந்திப்பது என்பது, அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் மற்றும் கொலம்பஸ் இடையிலான சந்திப்பின் நவீன வடிவமாக இருக்கும். கொலம்பஸை சந்தித்த செவ்விந்தியர்களுக்கு நன்மை எதுவும் ஏற்பட்டதாக எனக்குக் தோன்றவில்லை. 
"மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன், மனிதகுலத்தை காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்.'என்று ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
மனித இனம் அழிவதற்கு அது தானே உருவாக்கியபல அழிவுகளில் முதன்மை  ஆபத்துக்களா அணு ஆயுதப்போர், புவி வெப்பமாதல் , மரபணு மாற்றி அமைக்கப்பட்ட காய்கறிகள்மற்றும் வல்லரசுகள் உருவாக்கி வரவும் மரபணு மாற்ற  வைரஸ்கள் ஆகிய மூன்று காரணிகளை  குறிப்பான ஆபத்துக்களாக ஹாக்கிங் கூறியுள்ளார்.
அதுதான் உண்மையான காரணம்  என்பதை இன்று உலகில் மனிதர்கள் சந்தித்துவரும் நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.
====================================================================================
ன்று,
மார்ச்-19.


  • நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
  • புளூட்டோவின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
  • சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
  • இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)
  • தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மரணம்(1998)
  • அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவு (2002)

கேரள மாநிலத்தின், முதலாவது முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.விடுதலை பெற்ற  இந்தியாவில், காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. 

இ.எம்.எஸ்., என அழைக்கப்படும், ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிபாட், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில், 1909, ஜூன், 13ல் பிறந்தார்.


1967ல், இரண்டாவது முறையாக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று, முதல்வராக பொறுப்பேற்றார். 

1934ல், காங்கிரசின் இடதுசாரிகளை ஒன்றிணைத்து  சோஷலிச காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். 
அக்கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலராக, 1934 -- 1940 வரை இருந்தார்.
கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, 1960 -- 1964 மற்றும், 1970 -- 1977ல் பணியாற்றியவர். எழுத்தாளரான இவர், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். 
பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இ.எம்.எஸ்.தனது பங்காக கிடைத்த அக்காலத்திலேயே கோடிக்கணக்கான மதிப்புள்ள  சொத்துக்களை   கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடையாகக் கொடுத்தவர்.
1998 மார்ச், 19ல், காலமானார். 
======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?