ஒழியத்தான் வேண்டும் ஸ்டெர்லைட்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை வந்தது முதல் தூத்துக்குடியில் மார்பகம்,தொடர்பான நோய்கள் 80% அதிகரித்துள்ளது.
புற்றுநோய் மறற மாவட்டங்களைவிட 50% அதிகமாகியுள்ளது.
தோல்வியாதிகளோ 90% அதிகம்.
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த நாசகார ஸ்டெர்லைட் தொழிற்சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி அமைக்க விடாமல் தடுத்த போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா,சசிகலா குழுமம் வேதாந்தா குழுமத்தின் பங்குங்களை வாங்கிக்கொண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க அடிக்கலே நாட்டி சிறப்பித்தார்.
அப்போதே தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டங்கள் ஜெயலலிதா அரசால் புறக்கணிக்கப்பட்டது.நசுக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் நிர்வாகமோ தன்னை எதிர்த்தவர்களைமிரட்டியது,விலைக்கு வாங்கியது.சில பகுதிகளில் சமூகநலப்பணிகள் செய்வதாக விளம்பரம்செய்து நிலை கொண்டது.
தற்போது 25 ஆண்டுகால ஒப்பந்தம் முடிந்த பின்னர் எழுந்த எதிர்ப்புக்களைவைத்து மூடாமல்.தற்போதைய ஆலையைவிட நான்கு மடங்கு பெரிய புதிய ஆலையையும் தனது நாசகார வேலைக்காக துவக்கியுள்ளது.
புதிதாக ஆலை ஆரம்பிக்கும் போது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன் பேரிலே மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி கிடைக்கும்.ஆனால் ஆளும் அதிமுக அரசோ ஸ்டெர்லைட் புதிய ஆலையை கட்டி உற்பத்தியை துவங்கும் முன்னர் பெயரளவில் ஒரு கூட்டத்தை திடீர் என்று போதுமான விளம்பரமின்றி தூத்துக்குடியில் மட்டுமல்ல எங்குமே வராத நாளிதழில் விளம்பரம் செய்து நடத்தியது.ஆனால் அதில் கூட மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவிக்க கூட்டத்தையே நிறுத்தி விட்டது.
ஆனால் புதிய அலை உற்பத்திக்கு அனுமதியும் வழங்கப்பட்டு விட்டது.
ஸ்டெர்லை அலைக்கு எதிராக 20 ஆண்டுகளாக நடக்கும் போராட்டச் செய்திகளை தினசரிகள் போடுவதில்லை.அதை செய்தியாளர்கள் அனுப்புவதும் இல்லை.
காரணம் தினசரிக்கு விளம்பரம்.செய்தியாளர்களுக்கு மாதாமாதம் கூட்டம் என்று நடத்தி உற்சாகப்பணம் வழங்கி "கவர்"செய்துவிடுகிறது.
இந்த ஆலையில் செம்பு மட்டுமல்ல சிறிதளவு,வெள்ளி,பிளாட்டினம்,தங்கம் கூட சுத்திகரிக்கப்படும் தாமிரத் தாது மணல் மூலம் கிடைக்கிறதாம்.
மேலும் ஆங்கிலப்புத்தாண்டில் பளபள நாட்குறிப்பு,இனிப்பு பெரிய கடைகளில் பொருட்கள் வாங்க பரிசுக் சீட்டு.பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடைகள் 5000 வரையிலான உறைகள்,திடீரென வெள்ளி,பிளாட்டின பதக்கங்கள்.
பிறகு எதிர்ப்பு செய்திகள் எப்படி வரும்.?
ஆனால் தொடர்ந்து துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.காரணம் நோய்கள் அதிகரிப்பு,மழை இல்லாமல் போனதுடன் தாங்க முடியா வெப்பநிலை.குளிர்காலம் கூட வெட்கை,வியர்வை தான்.
துாத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்கக்கோரியும், குமரெட்டியாபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாநகரத்திலும் சுற்று வட்டாரத்திலும் வணிகப் பெருமக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழு கடையடைப்பை நடத்தி உள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கம் உள்ளிட்டவை சார்பில் துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு நடந்தது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
துாத்துக்குடி விவிடி சந்திப்பு திடல் முன்பாக நேற்று மாலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டத்தை முன்னெடுத்த பாத்திமாபாபு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்திருந்தனர். அவர்களும் போராட்டத்தில் பேசினர்.
விவிடி சிக்னல் முதல் வ.உ.சி.,கல்லுாரி வரையிலும் நீண்டதுாரம் மக்கள் கூடியதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
தாங்கள் செய்தியை வெளியிடாவிட்டாலும் இவ்வளவு கூட்டமா என்பதுதான் ஊடகங்களின் வியப்பு.
வேறு வழியின்றி இந்த போராட்டம் செய்தியானது.
ஆனால் தினகரன் போன்ற நாளிதழ்களில் ஒரு தொழிற்சாலைக்கு எதிராக என்ற அளவில்தான் செய்தி.ஊடகங்கள் யாருக்காக?
இப்படி செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்பால் மக்களுக்கு எப்படி நம்பகத்தன்மை வரும்.?
மேலும் இதற்கு முன்னான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களை நமத்துப்போக ,திசைமாற்றி விட்ட பெருமை தமிழகத்தில் சில அரசியல் வாதிகளுக்கு உண்டு.
அதில் ஸ்டெர்லைட் எதிராக வழக்குத்தொடுத்து தானே வாதாடி ஸ்டெர்லைட்டுக்கு வெற்றியைத்தேடித்தந்த ஒரு தலைவரின் கட்சி தாய்க் கட்டித்தையே ஸ்டெர்லைட்தான் கட்டிக்கொடுத்ததாகவும்.அதனால் வேறு எவரும் வழக்குத்தொடர்ந்து வென்று விடக்கூடாது என்று தானே ஓட்டை வாதங்களால் வழக்கைத்தொடர்ந்து அதை ஊற்றி முடியதாகவும் தூத்துக்குடி மாநகரில் பேச்சு உலவுகிறது.
யாரையாவது அரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமானால் இவர் ஒப்பந்தம் எடுத்து அவருக்கு ஆதரவாக இயங்கி அவரை ஒழித்துக்கட்டி விடுவார் என்பதுதான் இவருக்கு அரசியல் களத்தில் உள்ள நல்ல பெயர்.
அவர் இந்த வெற்றி பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவு தரவருவதாகக் கூறியிருப்பதுதான் போராட்டக்காரர்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.
========================================================================================

தமிழ்நாடு அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்திய நிலத்தை, நில உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒப்படைக்க வேண்டும். ஸ்டெர்லைட் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி முழு அடைப்பு போரட்டம் நடந்தது.
இவர்களுக்கு ஆதரவாக நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கம் உள்ளிட்டவை சார்பில் துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு நடந்தது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
துாத்துக்குடி விவிடி சந்திப்பு திடல் முன்பாக நேற்று மாலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டத்தை முன்னெடுத்த பாத்திமாபாபு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்திருந்தனர். அவர்களும் போராட்டத்தில் பேசினர்.
விவிடி சிக்னல் முதல் வ.உ.சி.,கல்லுாரி வரையிலும் நீண்டதுாரம் மக்கள் கூடியதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
தாங்கள் செய்தியை வெளியிடாவிட்டாலும் இவ்வளவு கூட்டமா என்பதுதான் ஊடகங்களின் வியப்பு.
வேறு வழியின்றி இந்த போராட்டம் செய்தியானது.
ஆனால் தினகரன் போன்ற நாளிதழ்களில் ஒரு தொழிற்சாலைக்கு எதிராக என்ற அளவில்தான் செய்தி.ஊடகங்கள் யாருக்காக?
இப்படி செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்பால் மக்களுக்கு எப்படி நம்பகத்தன்மை வரும்.?
மேலும் இதற்கு முன்னான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களை நமத்துப்போக ,திசைமாற்றி விட்ட பெருமை தமிழகத்தில் சில அரசியல் வாதிகளுக்கு உண்டு.
அதில் ஸ்டெர்லைட் எதிராக வழக்குத்தொடுத்து தானே வாதாடி ஸ்டெர்லைட்டுக்கு வெற்றியைத்தேடித்தந்த ஒரு தலைவரின் கட்சி தாய்க் கட்டித்தையே ஸ்டெர்லைட்தான் கட்டிக்கொடுத்ததாகவும்.அதனால் வேறு எவரும் வழக்குத்தொடர்ந்து வென்று விடக்கூடாது என்று தானே ஓட்டை வாதங்களால் வழக்கைத்தொடர்ந்து அதை ஊற்றி முடியதாகவும் தூத்துக்குடி மாநகரில் பேச்சு உலவுகிறது.
யாரையாவது அரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமானால் இவர் ஒப்பந்தம் எடுத்து அவருக்கு ஆதரவாக இயங்கி அவரை ஒழித்துக்கட்டி விடுவார் என்பதுதான் இவருக்கு அரசியல் களத்தில் உள்ள நல்ல பெயர்.
அவர் இந்த வெற்றி பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவு தரவருவதாகக் கூறியிருப்பதுதான் போராட்டக்காரர்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ்
முகநூலில் சுபகுணராஜன்
அம்மா ஜெ ‘அருளால்’ குஜராத்திலிருந்தே ‘சூழலுக்கே பேராபத்து ‘ என விரட்டப்பட்டும் தமிழ்நாட்டில் சுகமாக களமிறங்கிய ‘ வேதாந்தா’ குழுமக் கம்பெனி அது. 91-96 ஆட்சியில் இறங்கி அடித்த ‘ஆட்டையில்’வந்திறங்கிய கம்பெனி. வேதாந்தாவுக்கு ஏஜென்ட் வேலை பார்த்தது முரளி மனோகர் ஜோஸி எனக் கிசு கிசு உண்டு.
2000ல் தூத்துக்குடி யூனிட்டுக்கும், தொடர்ந்து அதன் இன்னொரு யூனிட்டான டையூ டாமன் , சில்வாசா( தாத்ரா & நாகர் கா வேளி),வுக்கும் கலால் வரி தணிக்கை தொடர்பில் போயிருக்கிறேன்.அந்தத் தணிக்கை “ஆடிட் 2000” அல்லது “ Canadian Audit “ என்ற புதிய முறையில் நடந்தப்பட்டது . அதாவது அதுவரை தணிக்கை கம்பெனி கணனிகள் மற்றும் ஏடுகளில் இருக்கும் கணக்குகளைக் கொண்டு மட்டும் நடத்தப்படும் இந்த ஆடிட் 2000ல் கூடுதலாக அதன் பிரசிடென்ட் துவங்கி ஜுனியர் மேனேஜர் வரை பலரையும் ‘ நேர்காணல்’ செய்து கம்பெனி ஆபரேசன் ப்ரோபைல் உருவாக்க வேண்டும்.
கிடைத்த வாய்ப்பை விட முடியுமா? அதிலும் “ இந்துத்துவா “ ப்ராஜெக்ட் அடிப்படை நிதி தரும் மூலாதாரமான நிறுவனம் என அப்போதே ‘ பேசப்பட்டது’ . எனவே ஒரு ஒலிப்பதிவு சாதனத்தோடு ( அது அந்த ஆடிட் ல் அனுமதிக்கப்பட்டிருந்தது) களமிறங்கினேன். தூத்துக்குடியில் துணைத் தலைவர் சிக்கவில்லை, சில்வாசா போனோம். அது குஜராத்தை ஒட்டிய யூனியன் பிரதேசம்( நம்ம பாண்டிச்சேரி போல) .அங்கே இருந்த உருக்காலைதான் மூடப்பட்டு , நமக்கு ‘ நச்சாக ‘ கொடை வழங்கப்பட்டிருந்தது. அம்மையாருக்கு சுளையாக முதலில் வந்த “நூறு C” அதில்தான் எனப் பேசப்பட்டது. நாங்கள் போன போது சில்வாசாவில் , தூத்துக்குடியில் இருந்து போகும் ‘காப்பர் பார்கள்’ அங்கே, மதிப்புக் கூட்டு பொருளுற்பத்தியில் ( wires and copper equipments)பயன்படுத்தப்பட்டு, ஏற்றுமதியானது. அதாவது நச்சு தூத்துக்குடிக்கு, லாபம் சில்வாசாவுக்கு.
அங்கு நடந்த நேர்காணல் அநேகமாக எனக்கு குஜராத் முதலீட்டியத்தின் பிரமாண்ட வெளிகுறித்த இத்தணுண்டு அறிமுகத்தை ஏற்படுத்தியது. கண்டதே மிரளும்படியானதுதான் . தமிழ்நாடு டிவிஎஸ் குழுமம் , இந்தியா சிமென்டஸ் , செட்டிநாடு சிமென்ட்ஸ் போன்றவற்றின் ப்ரொபைல்ஸ் பார்த்திருக்கிறேன். அவையெல்லாவற்றையும் வழித்துப் போட்டாலும் ஒரு வேதாந்தாவிற்கு நெருங்க முடியாது. வேதாந்தாவின் இந்தியா ஆபரேஷன்ஸ் ஜுஜுபி , இந்தியாவுக்கு வெளியே அது ஒரு கடல் .
வேதாந்தா லண்டனைத் தலைமையிடமாக கொண்ட நிறுவனம் . சர்வதேச மெட்டல் விலையை தினசரியாகத் தீர்மானிக்கும் சந்தைத் தலைமையகம் அங்கேதான்.அதன் ஆட்சியாளர்கள் வேதாந்தா. வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் உலகெங்கும் வைர,தங்க, காப்பர்,அலுமினிய எனப் பலவகைச் சுரங்கங்களைக் கொண்டுள்ளது. அதன் சுரங்கங்கள் ஆஸ்திரேலியா, ரஷ்யா,உக்ரைன், ஜோர்டான்,ஆப்பிரிக்காவின் பல நாடுகள் என எங்கெங்கும் கொண்டுள்ளது.
தூத்துக்குடிக்கு அப்போது copper ore வந்தது ஜோர்டானிலிருந்து. அந்தச் சுரங்கத்தை நடத்திய கம்பெனியில் வேதாந்தாவும் , ஜோர்டன் மன்னரும் பங்குதார்ர்கள். இதேபோல் ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டுச் சுரங்கங்களிலும் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூட்டு உண்டு. இன்னும் அதிர்ச்சி வேண்டுமா என்ன?
இது வேதாந்தாவின் கதை மட்டுமல்ல. அம்பானி,அதானி உள்ளிட்ட ஒவ்வொரு குஜராத்தி பனியா( இந்து & ஜைன)பெரு முதலாளியின் கதையும்தான் . அவர்களின் பொருளாதாரம் உலகளாவியது.எப்போதும் பெரும்பாலும் இந்திய எல்லை கடந்தே இயங்குவது . இந்திய ஆட்சியாளர்கள் யார் நினைத்தாலும் அவர்களது ‘ கெண்டைக் கால் ரோமத்தைக் கூட புடுங்க முடியாது’. அதனால்தான் ‘மோடிகள் ‘ இங்கு முங்கி எங்கு வேண்டுமானாலும் எழ முடியும்.
இந்தியா ‘குஜராத்தின் காலனிதான்’. குஜராத்திகள் சர்வதேச பிரஜைகள். அதனால்தான் அவர்களின் கையாள் பிரதமர் மோடி ‘வெளிநாட்டு வங்கியிலிருந்து கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும்’ என்ற போது, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சரி, இப்போது சொல்லுங்கள் ஊடகங்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் காட்டவில்லை என்றவர்களே, பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். கொஞ்சம் பொறுங்கள், போராட்டம் தொடர்ந்தால் ஆளுக்கொரு strategy யோடு வருவார்கள்.
#Close_Sterlite
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகர்வாலின் வீட்டின் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றனர்.
மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட நிரந்தரமாக மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேட்டுக் கொண்டனர்.
===================================================================================
இன்று,
மார்ச்-25.
இன்று,
மார்ச்-25.
- கிரேக்க விடுதலை நாள்
- சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனான டைட்டானை கிறிஸ்டியான் ஹைஃன்ஸ் கண்டுபிடித்தார்(1655)
- பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1918)
- முதலாவது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954)