"நமோ ஆப்"பு.
பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய‘நமோ ஆப்’ என்கிற ஆண்ட்ராய்ட் செயலி,22 வசதிகளை இயக்குவதற்கு அனுமதி கேட்பதன் மூலம், அந்த ‘ஆப்’ வைத்திருப்பவர்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முகநூல் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களைத் திரட்டி ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ என்ற நிறுவனத்திற்கு வழங்கி, கடந்த அமெரிக்கத் தேர்தலில் டிரம்புக்கும், அதேபோல இந்தியத் தேர்தலில் பாஜக-வுக்கும் சாதகமாக செயல்பட்டதாக கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பின்னணியிலேயே தற்போது ‘நமோ ஆப்’ தொடர்பாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, இ-மெயில் அனுப்பவும், அதற்கு உடனடியாக பதில் தகவல் பெறவும் வசதியாக, ‘நமோ ஆப்’ என்கிற செயலி சேவை தொடங்கப்பட்டது.
இந்த ‘ஆப்’பை பொதுமக்கள் ப்ளே ஸ்டோரில்இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
இதை பயன்படுத்தி நேரடியாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் பெற முடியும் என்றும், பல்வேறு நலத்திட்டங் களுக்கு இந்த செயலி பெரிதளவில் உதவிகரமாக இருக்கும் என்றும், முக்கிய நிகழ்வுகள்மற்றும் நாட்டு நடப்புகள் என அனைத்தையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்றும்மத்தியில் ஆளும் பாஜக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது அந்த செயலி மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்த ‘ஆப்’பைத் தர விறக்கினால், பயனாளர்கள் போனில் இருக்கும் 22 வசதிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்பதாகவும், வேறு எந்த அரசு மற்றும் தனியார் ஆப்பிலும், இந்த அளவிற்கு அனுமதி கேட்கப்படுவ தில்லை என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
பயனாளர் இருக்கும் இடம், அவரது அந்தரங்க தகவல்களை பார்க்கும் வசதி, போனில் பதியப்பட்டிருக்கும் எண்களை கையாளுதல் என 22 வசதிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்பதன் மூலம் பலமுக்கியத் தகவல்களை இந்த செயலி மூலம் திருடமுடியும் என்று மென்பொருள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஹேக்கர் ஒருவர் இந்த ‘ஆப்’ குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டில், இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களின் பெயர், புகைப்படம், பாலினம் போன்ற ரகசியகுறிப்புகள் அனைத்தும் அவர்களின் சம்மதம்இல்லாமலேயே http:n.wzrkt.com என்னும்மையத்தளத்தை சென்றடைவதாக குறிப் பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த தகவல்கள் அனைத்தும்பயனாளர்களின் அனுமதி இல்லாமல் விற்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
‘நமோ ஆப்’ குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்; நமோ ஆப்மூலம் பெறப்படும் தகவல்கள் யாவும் மூன்றாம்தரப்பு பகுப்பாய்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், தகவல் திருட்டு போன்ற செயல்களில் பாஜக எப்போதும் ஈடுபடாது எனவும் பாஜக தகவல் தொடர்பு நிர்வாகி அமித் மால்வியா கூறியுள்ளார்.
ஆனால் முகநூலில் தகவல்களைத்திருடிய கேம்பிரிட்ஜ் நிறுவனம் அமெரிக்கா அதிபர் டிரம்ப்,மற்றும் நரேந்திட மோடி(யின் பாஜக வு)க்காகவும் தாங்கள் பணியாற்றி முகநூலில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளது.
நமோ செயலியில் ஒவ்வொரு பயனாளரும், தங்கள் தகவல்களைக் கொடுத்து பதிவு செய்தவுடன், பயனாளர் பயன்படுத்தும் செல்போன் குறித்த தகவல்கள், புகைப்படம், பாலினம் மற்றும் இ-மெயில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்ட ஓர் இணையதளத்துடன் பகிர்ந்து வருகிறது. இது அந்தப் பயனாளர்களின் அனுமதியின்றியே நடந்து வருகிறது.
அந்த இணையதளம் கிளவர் டாப் என்ற அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமானது.
அமெரிக்காவில் 5 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் பிரசாரத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இந்தியாவைச் சேர்ந்த பாஜக உட்பட்ட அரசியல் கட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மோடியின் ஆப் சேகரித்த பிறர் விபரங்கள் மூலம்தான் அவரை பின் தொடரும் லட்சக்கணக்கான தொடர்பவர்கள் போலியாக உருவாக்கப்பட்டு மோடியின் செல்வாக்கு மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மூலம்தான் மிஸ்ட்கால் உறுப்பினர் சேர்க்கை,வாட்ஸஅப் ,டிவிட்டரில் 60% போலிக்கணக்குகளில் மோடியை புகழ்ந்தது எல்லாம் பாஜகவின் தகவல் தொழில் நுட்ப அணி செய்தது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இந்த விவகாரத்தை வைத்து பிரதமர் மோடியை ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
‘ஹாய்.., என் பெயர் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமர். என்னுடைய அதிகாரப்பூர்வ ’ஆப்’பில் உங்களை பதிவு செய்து கொண்டால் உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பர்களின் கம்பெனிகளுக்கு தந்து விடுவேன்.
மோடி ஆப்பின் மூலம் இந்தியர்களின் ரகசியங்கள் மூன்றாவது நபர்களுக்கு போய் சேருவது தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்துவரும் இந்திய ஊடகங்களின் பாராமுக நடவடிக்கைகளையும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
"மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த செய்தியை எப்போதும் போல் ஊடகங்களில் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து புதைத்ததன் மூலம் மிகப்பெரிய காரியத்தை செய்து வரும்
மக்களுக்கான நடுநிலை ஊடகங்களுக்கு நன்றி’ என்றும் ராகுல் கோபத்துடன் ஊடகங்களை கண்டித்துள்ளார்.
=====================================================================================
உங்கள் விருது வேண்டாம்.
சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் முதலாவது குற்றவாளிமறைந்த ஜெயலலிதாவின் தோழியும் இராண்டாவது குற்றவாளியுமான சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஜிபி எச்.சத்திய நாராயணா ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றுக்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. சசிகலாவுக்கு தனியாக சமையலறையும், சமையலரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டை கூறியவர் அன்றைய சிறைத்துறை ஐஜியாக பணியாற்றிய டி.ரூபா. பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா சிறையில் நடந்த இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா தேசியஊடகங்களில் முக்கிய இடம்பிடித்தார்.
சிறைத்துறையிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட ரூபா தற்போது கர்நாடக ஊர்காவல்படை ஐஜியாக உள்ளார்.
இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், ஏசியாநெட் செய்தி நிறுவனத்தின் தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் அமைத்துள்ள நம்ம பெங்களூரு பவுண்டேசனால் இந்த ஆண்டின் சிறந்த அரசு அதிகாரி என்கிற விருதுக்குகர்நாடக ஐஜி டி.ரூபா தேர்வு செய்யப் பட்டிருந்தார்.
அந்த விருதினைப் பெற மறுப்பு தெரிவித்து ரூபா கடிதம் எழுதியுள்ளார்.
விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து பவுண்டேசனுக்கு ரூபா எழுதியுள்ள கடிதத்தில்
"விருதை நிராகரிப்ப தாக தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களுடன் செயல்படும் அமை ப்புகளிடமிருந்து அரசு அலுவலர்கள் விலகி நிற்க வேண்டும்.
பாரபட்சம் இல்லாமலும், நீதியின் அடிப்படையிலும் செயல்படுவதே நல்ல அரசு அலுவலர் களை வளர்த்தெடுப்பதற்கான வழி.
பொதுமக்களின் கண்ணாகவும், முகமாகவும் அரசு ஊழியர்கள் விளங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ரூபா தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய நிலைபாடு அவசியமானது எனஅக்கடிதத்தில் தனது நிலையை தெளிவு பட தெரிவித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தரும் விருது அரசியல் உள்நோக்கத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும்.அதிலும் தேர்தல் நேரத்தில் விருதை அறிவித்து நடத்தும்விழா தேர்தல் பரப்புரை விழாவாகவே காணப்படும்.
=======================================================================================மார்ச்-27.
- உலக கலையரங்குகள் தினம்
- ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை கண்டுபிடித்தார்(1513)
- டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இடையேஅமைதி ஏற்பட்டது(1794)
- மல்தோவா, பேசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)